August 29, 2008

பாரதிராஜாவின் மறக்க முடியாத பெண்பாத்திரங்கள்

கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த படம் எதுவும் தராவிட்டாலும் மறக்க முடியாத, மறக்க கூடாத இயக்குநர் பாரதிராஜா.

ராதிகா
ராதா
ரேவதி
ரேகா
ரஞ்சனி
ரமா
ரஞ்சிதா
ராஜஸ்ரீ
ரியா சென் போன்ற R வரிசை கதாநாயகிகளையும்

சுகன்யா,பிரியாமணி போன்றவர்களையும் தமிழுக்கு தந்தவர்.

கமலா காமேஷ், வடிவுக்கரசி மற்றும் காந்திமதி போன்றவர்களுக்கு புது பரிமானம் தந்தவர்.

இவர் படங்களில் பெரும்பாலும் பெண்கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும். இவர் உருவாக்கியதில் மறக்க முடியாதவை எனில்

1) வடிவுக்கரசி – முதல் மரியாதை
2) ராதிகா - பசும்பொன்
3) ராதா - டிக் டிக் டிக்


பாரதிராஜாவின் படைப்புகளிலேயே சிறந்த பாத்திரம் முதல்மரியாதை வடிவுக்கரசி தான் என்பது என் கருத்து. அதற்கு முன்னால் அத்தகைய குணங்களுடன் தமிழ்திரையில் எந்த பெண் பாத்திரமும் படைக்கப்படவில்லை. ஒருவனுடன் காதல்/உறவு கொண்டபின் குடும்ப கவுரவத்திற்காக இன்னொருவனை (அந்தஸ்து குறைந்தவனை) மணந்து அவனை மன சித்திரவதை செய்யும் பாத்திரம். அருமையாக நடித்திருப்பார் அவர். இப்பொழுதும் கூட பல பெண்கள் தங்கள் குடும்ப கவுரவத்திற்காக பிடித்தமில்லா ஆண்களை மணந்து தாங்களும் கஷ்டப்பட்டு துணையையும் பாடுபடுத்துவதுண்டு. அவர்களின் மொத்த பிரதிபலிப்பாக அந்த பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். நாம் இப்பொழுதும் பூங்காக்களிலும் நூலகங்களிலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நேரத்தை கொன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்களில் பலர் மனைவியின் சொல் பொறுக்க மாட்டாமல் சுற்றுபவர்களே. எல்லா பெண்களும் ராஜகுமாரனை எதிர்பார்க்கிறார்கள். பலருக்கு குமாஸ்தாக்களே கிடைக்கிறார்கள். எதிர்பார்ப்பின் ஏமாற்றம் ஆண் தளர்ந்தபின் வெடிக்கிறது. சமூகத்தின் அருமையான பிரதிபலிப்பு அந்த பாத்திரம்.

பசும்பொன்னில் ராதிகாவின் பாத்திரம் யதார்த்தத்தில் (இந்தியாவில்) இல்லாதது. ஆனால் சமூகத்திற்கு அவசியமானது. கணவனை இழந்த பெண் இன்னொருவனை மணக்கிறாள். அதனால் முதல் கணவன் மூலம் பெற்ற மகன் அடையும் வருத்தமும் இரண்டாவது கணவன் மகன்களுடன் அவனது மோதலும் அவளை வருந்த வைக்கிறது. முதல் பையனின் பாசத்துக்கு ஏங்குகிறாள். இந்தப்படத்தில் பெண்ணின் இரண்டாம் திருமணத்தை ஆதரிப்பது போல் இருந்தாலும் அதனால் நிறைய பிரச்சினைகள் வரும் என எச்சரிப்பதுபோலவே காட்சிகள் இருந்தன. இரண்டாம் திருமணம் செய்ய நினைப்பவர்களை மறைமுகமாக எச்சரிப்பது போலவே இப்படத்தின் தொனி இருந்தது. இப்படத்தின் கதாநாயகிக்கு பின்னாளில் நிஜ வாழ்க்கையிலும் இதே சூழல் நேரிட்டது.

வெளியில் கவர்ச்சி மாடலாகவும் வீட்டில் ஆச்சாரமான பெண்ணாகவும் இருக்கும் பாத்திரம் டிக் டிக் டிக் ல் ராதாவுக்கு. அம்மாதிரி இருக்க நேரிடும் பெண்ணின் உணர்வுகளை ராதா நன்கு பிரதிபலித்திரிப்பார்.

தொடர்ந்து பாரதிராஜா தமிழ்சினிமாவுக்கு நல்ல நடிகைகளையும், பாத்திரங்களையும் அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்

August 28, 2008

பாலபாரதி - மலர்வனம் லட்சுமி திருமண வாழ்த்து


எங்கள் அன்புக்குரிய தலை பாலபாரதியின் திருமணம் இனிதே நடந்தேறியது. மணப்பெண் பிரபல பெண்பதிவர் 'மலர்வனம்' லட்சுமி. இந்த லட்சிய தம்பதியர்க்கு பதிவுலகின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாலபாரதி அவர்களின் பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அவரின் திருமண செய்ததி பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்

சகோதரி லட்சுமிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

என்னுடைய முந்தைய பதிவை உண்மையாக்கியதற்க்கு நன்றிகள்

August 06, 2008

சந்திப்புக்கு வரவில்லை – பாலபாரதி,லக்கிலுக்,ஜியோவ்ராம்,வளர்மதி,புருனோ,பைத்தியக்காரன் அறிவிப்பு

ஞாயிறு மாலை சந்திப்பை உறுதி செய்வதற்காக நேற்று சென்னை பதிவர்களை அலைபேசியில் பிடித்த போது

நான் : தலை, சந்திப்பு

பாலபாரதி : நான் வரல்லையா

நான் : ஏன் தலை?

பாலபாரதி : கம்பெனியில டவுசரை கிழிக்கிறாங்க, வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை தான் 12 டவுசரையும் தைக்க வேண்டிஇருக்கு

நான் : 6 நாள் 6 டவுசர் தானே?

பாலபாரதி : அங்க ஒருநாளைக்கு ரெண்ட கிழிக்கிறாங்க

நான் : !!!!!!!!

நான் : லக்கி, சந்திப்பு

லக்கி : வரல்ல

நான் : ஏங்க?

லக்கி : வாரநாள்ள எல்லாம் சுட்டபழம்,பத்துபத்து மாதிரி படம் பார்க்கவும் அதிக்கு விமர்சனம் எழுதவுமே நேரம் சரியாப்போயிடுது. இதுல பின்னூட்டம், பதில் பின்னூட்டம் அப்புறம் யூத் விகடன் வேலைகள்

நான் : அதனால?

லக்கி : ஞாயிறு தான் எங்க கம்பெனி வேலையை பார்க்க வேண்டி இருக்கு

நான் : !!!!!!!!

நான் : சார், சந்திப்பு

ஜியோவ்ராம் : ம்ஹூம்

நான் : ஏன் சார்?

ஜியோவ்ராம் : தெரியாம 45 கதைன்னு சொல்லிட்டேன். பார்க்கிற ஆள் எல்லாம் மீதி கதையைக்கேட்டு ஒரே தொல்லை

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

வளர்மதி : திரைப்படம் காட்சி ஊடகம், பதிவு மொழி ஊடகம்,சந்திப்பு ஒலிஒளி ஊடகமா பன்முகத்தன்மையின் நீட்சியா இருப்பதால

நான் : அப்படின்னா நீங்க வரல்லையா சார்?

வளர்மதி : நான் வரல்லைன்னு எப்பங்க சொன்னேன், வந்தா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

புருனோ : அய்யய்யோ

நான் : என்னாச்சு?

புருனோ : அட நீங்க வேற, 6 நாளும் ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்த்துட்டு ரிலாக்ஸ்க்காக வந்தா, அங்கயும் ஒரே கன்சல்டிங். இதுக்கு மக்களுக்காவது சேவையை தொடரலாம்

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

பைத்தியக்காரன் : கண்டிப்பா வந்துர்றேன். ஆமா வளர்,சுந்தர், பாலா, லக்கி எல்லாம் வர்றாங்கல்ல?

நான் : இல்லை

பைத்தியக்காரன் : அவங்க இல்லாம எதுக்கு சந்திப்பு நடத்துறீங்க? பேசாம நீட்ஷேவையும் பூக்கோவையும் போய் படிங்க

நான் : !!!!!!!!!!!!

நொந்து போய் அதிஷாவை அழைக்க,

நான் : அதிஷா, யாரும் வரமாட்டாங்க போல இருக்கே?
அதிஷா: அமீரகம் மாதிரி பிரியாணி போட்டு, இலவச புக் டிவிடி கொடுப்பமா?
நான் : யாரு, நீயா? நீ அடைச்ச கடையில உடைச்ச சோடாவும், குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ. யாரு வருவா?

அதிஷா : அப்ப சிங்கை மாதிரி இலவச பின்னூட்டம்....
நான் : அங்க எல்லாம் சாப்ட்வேர் ஆட்கள். பிடுங்க ஆணி இல்லேன்னா பின்னூட்ட விளையாட்டு விளையாடுறவங்க. இந்த குரூப்பு போடுற பின்னூட்டத்தயே ரிலீஸ் பண்ணாது. இதில பரிசாம்

அதிஷா : அப்ப கோவை மாதிரி ஷாமியானா போட்டு....
நான் : நீ சொந்தமாவே யோசிக்க மாட்டியா?

அதிஷா : அப்படின்னா ஒரே வழிதான் இருக்கு. அதப்பண்ணுன்னா சென்னை என்ன, கும்மிடிப்பூண்டியில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள பதிவர்கள் வந்துருவாங்க

நான் : சீக்கிரம் சொல்லுப்பா
அதிஷா : பத்து பத்து சோனா வை சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டுறலாம். கூட்டம் அம்மிரும்
நான் : !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!


சோனா வந்தாரா?
பதிவர் கூடினரா?

10-08-08 மாலை 5-30 மெரினா வில் காண்க

நமது மலேசிய மாவீரன் டிபிசிடி இன்று மாலை மெரினாவில் பதிவர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் வருக
நேரம் : 6.30-8.30

August 02, 2008

ஐ ஐ டி பி டெக் மாணவர்கள் உண்மையிலேயே அறிவாளிகள்தானா?

நம் நாட்டில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் மிக கடினமாக கருதப்படுவது IIT J E E (Joint entrance examination for IITs) . கிட்டத்தட்ட 2 லட்சட்துக்கும் அதிகமானோர் எழுதி 2000 க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவது. எனவே நாட்டில் சிறந்த அறிவாளிகள் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும் என கருத்து நிலவுகிறது. ஆனால் கடந்த 10- 15 ஆண்டுகளாக இதில் வெற்றி பெற்று வருவோரைப்பற்றிய விமர்சனங்கள் பல நிறுவனங்களாலேயெ (campus recruitment ன் போது) வைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சிகரமாக சென்னை ஐ ஐ டியின் இயக்குனர் எம் எஸ் அனந்தும், Dean (students) இடிசாண்டி யும் இதுபற்றி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்கள். கோச்சிங் கிளாஸ் பயிற்சியாலேயெ 50% க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளே வருகிறார்கள். அவர்களிடம் raw intelligence இல்லை என இயக்குனரும், பெண்கள் அதிகாளவில் ஐ ஐ டி தேர்வில் வெற்றி பெறாததற்க்கு அவர்கள் கோச்சிங் கிளாஸ் செல்ல (பெற்றோர் தடை) முடியாததே காரணம் என டீனும் தெரிவித்துள்ளார்.


அதிகமான மாணவர்களை ஐ ஐ டிக்கு அளிப்பதின் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடம் பீகார்

ஆந்திராவில் புகழ்பெற்ற கோச்சிங் சென்டெர் ராமையா இன்ஸ்டிடுயுட். இதில் சேர ஒரு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல மையங்கள் உள்ளன என்றால் புரிந்து கொள்ளலாம்.ஐந்தாம் வகுப்பில் இருந்தே படித்தால்தான் இடம் கிடைக்கும்.

மற்றொரு காரணம் ஐ ஐ டி சிலபஸ்ஸும் இந்த ஸ்டேட் சிலபஸ்சும் ஏறத்தாழ ஒன்று.

தமிழ்நாட்டு மாணவர்கள் 5% கூட IIT B.Tech ல் இல்லை.அதிலும் சென்னையை தவிர பார்த்தால் 0.5% கூட இல்லை.

நம் மாணவர்கள் முட்டாள்களா? இல்லவே இல்லை. பின் என்ன காரணம்?

1)போதிய விழிப்புணர்வு இல்லை
2) பெற்றொரிடம் வசதி வேண்டும்
3)5 ஆம் வகுப்பில் இருந்தே பயிற்சி அளிக்க வேண்டும்
4) பள்ளிகளில் பாடத்திட்டம்
5)பள்ளி ஆசிரியர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை
6)கோச்சிங் செண்டர்கள் பரவலாக இல்லை.

இதனால்தான் மற்ற இடங்களில் இருந்து ஓரளவு அறிவு உள்ளவர்கள் கூட தொடர் பயிற்ச்சியின் மூலம் உள்ளே வருகின்றனர்

மதுரை, திருச்சி,திருனெல்வேலி அறிவிருந்தும் வரமுடியவில்லை.
இதனால் இப்பொது இந்த முறையை (format of examination) மாற்ற முயன்றுவருகின்றனர் பலர்.

நம் மாநில மக்களுக்கு நல்ல செய்தி