July 02, 2010

சூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா? யார் ராதா?

தமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களைக் காட்டிலும் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்துள்ளார்கள்.

நடிகர்களை எடுத்துக் கொண்டால்

எம்.ஜி.சக்கரபாணி – எம்.ஜி.ராமச்சந்திரன்

மு.க.முத்து-மு.க ஸ்டாலின் (திரைப்படம் : ஒரே ரத்தம்)

எம் ஆர் ஆர் வாசு – எம் ஆர் ராதாரவி

சந்தான பாரதி – ஆர் எஸ் சிவாஜி

சாருஹாசன் - சந்திரஹாசன் - கமல்ஹாசன்

ராம்குமார் (அறுவடை நாள்) – பிரபு

டாக்டர் ராஜசேகர் – செல்வா

பிரபுதேவா-ராஜு சுந்தரம்-நாகேந்திர பிரசாத்

சூர்யா – கார்த்தி

அஜய் கிருஷ்ணா - விஷால்

ஜித்தன் ரமேஷ் – ஜீவா


நடிகைகளை எடுத்துக் கொண்டால்


வரலட்சுமி-மாதுரி

பண்டரிபாய் - மைனாவதி

சௌகார் ஜானகி - கிருஷ்ணகுமாரி

சந்தியா - வித்யாவதி

லலிதா-பத்மினி-ராகினி

கே ஆர் விஜயா – கே ஆர் வத்சலா - கே ஆர் சாவித்திரி

ஜெயசுதா-சுபாஷினி

ராஜ்கோகிலா - ராஜ்மல்லிகா (மீனாவின் தாய்)

ஜோதிலட்சுமி - ஜெயமாலினி

ரேகா - ஜிஜி (நினைவெல்லாம் நித்யா)

ராதிகா-நிரோஷா

அம்பிகா-ராதா

இந்திரா - ராசி

கல்பனா – ஊர்வசி – கலாரஞ்சனி

அருணா – நந்தினி (ஆவாரம் பூ)

சரிதா - விஜி

பானுப்பிரியா-நிஷாந்தி

டிஸ்கோ சாந்தி – லலிதகுமாரி

என் உயிர் தோழன் ரமா – லதா

ஷகிலா - ஷீத்தல்

அனுஷா - ராகசுதா

நக்மா-ரோஷினி-ஜோதிகா

கவிதா - வனிதா - பிரீதா - ஸ்ரீதேவி (விஜயகுமார்)

சிம்ரன் – மோனல் (இதில் சில குழப்பங்களும் உண்டு,
மோனலை சித்தி பெண் என்றும் கூறுவார்கள்)

மீரா ஜாஸ்மின் - ஜெனி

ஷாலினி - ஷாமிலி
(சகோதரிகள் பட்டியல் பதிவர்கள் கிருஷ்குமார், உண்மைத்தமிழன்,இந்தியன் ஆகியோர் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நன்றிகள் பின்னூட்டத்தில் கலக்குவோர் அனைவருக்கும்).எனப் பலர் தமிழ்சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்கள். (பலர் விடுபட்டிருக்கலாம்)


இந்த வரிசையைப் பார்த்தோமென்றால்

1. சகோதரர்கள்/சகோதரிகளில் ஒருவர் எட்டிய உச்சத்தை/அடைந்த புகழை இன்னொருவர் அடைந்ததில்லை.

2. அப்படி இருவரும் சமமான இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்றால் அவர்கள் அத்துறையில் முண்ணனியில் இருந்திருக்க மாட்டார்கள்.

3. சமமான புகழைப் பெற்று முண்ணனியில் இருந்திருந்தால் அது வேறு வேறு காலகட்டமாக இருந்திருக்கும். (நக்மா – ஜோதிகா).


இந்த விதிக்கு உட்படாமல் ஒரே நேரத்தில் சம புகழை அடைந்தவர்கள் எனில் அது அம்பிகா-ராதா சகோதரிகள்தான். 80களின் துவக்கத்தில் ஸ்ரீதேவி இந்திக்கு சென்று விட, ஸ்ரீபிரியா,ஸ்ரீவித்யா குண்டாகி விட, உருவான வெற்றிடத்தை அம்பிகா,ராதா மற்றும் மாதவி ஆகியோர் நிரப்பினார்கள்.

ராதா பாயும்புலி, தூங்காதே தம்பி தூங்காதே என ரஜினி மற்றும் கமலுடன் ஏ வி எம்மின் அடுத்தடுத்த படங்களில் நடித்தால் அம்பிகா அடுத்த சுற்றில் மிஸ்டர் பாரத், உயர்ந்த உள்ளம் என்று அதே காம்பினேஷனில் கலக்குவார்.

ராதா நான் மகான் அல்ல, ஒரு கைதியின் டைரி என ஒரே ஆண்டில் ரஜினி,கமலுடன் ஜோடி சேர்ந்தால், நான் சிகப்பு மனிதனில் ரஜினியுடனும், காக்கி சட்டையில் கமலுடனும் அம்பிகா ஜோடி சேர்ந்த படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

சிவாஜி கணேசனுடன் அம்பிகா வாழ்க்கையில் (திரைப்படம்) நடித்தால், ராதா முதல் மரியாதையில் ஜோடி சேருவார்.

ரஜினி காந்துடன் எங்கேயோ கேட்ட குரல், கமல்ஹாசனுடன் காதல் பரிசு மற்றும் மோகனுடன் இதயகோயில் என இருவரும் ஒரே நாயகனுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் தனித்தனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு.

தற்போது தமிழ்சினிமாவில் அப்படி வணிக மதிப்புடனும், நடிப்பு ரீதியாகவும் புகழ் அடைந்து கொண்டிருப்பவர்கள் சூர்யாவும், கார்த்தியும். சூர்யா அயன்,ஆதவன் மற்றும் சிங்கம் என கலக்க, கார்த்தியும் பருத்திவீரன்,ஆயிரத்தில் ஒருவன்,பையா என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இருவரது அடுத்தடுத்த படங்களும் பெரிய நிறுவனங்களால் (தற்போதைய சூழ்நிலையில்) வாங்கப் பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக சன் பிகஸர்ஸ் எந்திரனை அடுத்து தானே தயாரிக்கும் இரண்டாவது படத்தில் இருவரையும் நடிக்க கேட்டிருக்கிறார்கள் என்னும் செய்தி. இது அவர்களின் வணிக மதிப்பை உறுதிப் படுத்துகிறது.

80களின் ஆரம்பத்தில் வாலிப வயதில் இருந்தவர்களுக்குத் தெரியும் அம்பிகாவை விட, ராதாவுக்கு மவுசு ஒரு படி அதிகம் என்பது. அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி ராதா தான்.

ராதாவின் அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லையில் ராதாவை வம்புக்கு இழுத்து கார்த்திக் பாடும் பாடல் ”வாடி என் கப்பக் கிழங்கே”. இதை எழுதியவர் கங்கை அமரன். அவரிடம் இந்தப் பாடல் குறித்து ஒருவர் கேட்ட போது அவர் சொன்னது இது.

”பொதுவா கும்முன்னு இருக்குற பொண்ணுகளை கிழங்கு மாதிரி இருக்கான்னு கிராமப் புறங்கள்ல சொல்லுவாங்க, ராதாவும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க நேட்டிவ் கேரளா, கேரளாவுல கப்பக் கிழங்கு தான பேமஸ். அதுதான் வாடி என் கப்பக் கிழங்கேன்னு எழுதுனேன். என்றார்.

இது அப்போது எல்லோருடைய கருத்தும் தான்.

அம்பிகா திருமணத்துக்குப் பின் விவாகரத்து, மறுமணம், கேரக்டர் ரோல், காமெடி ரோல், சின்னத்திரை என தன் கெத்தை விட்டு விட்டார்.

ஆனால் ராதாவோ ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டதோடு சரி, மீடியாவில் இருந்து விலகி விட்டார். தற்போது தன் பெண்ணுடன் திரும்பி வந்திருக்கிறார். வேறு எதிலும் தலைகாட்டி தன் கெத்தை இறங்கிவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அக்கால இளைஞர்களின் காணாமல் போய்விட்ட கனவு தேவதையாகவே இன்னும் இருக்கிறார்.

அது போல சூர்யாவா, கார்த்தியா யார் முந்தப் போகிறார் என்பது சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

அம்பிகா,ராதாவுக்கு நிழலில் கணவராக நடித்த சிவகுமார் நிஜத்தில் சூர்யா-கார்த்திக்கு தந்தை என்பது இதில் ஒரு சுவராஸ்யமான ஒற்றுமை.

57 comments:

Raju said...

இந்த மாதிரியெல்லாம் யோசிக்க, எங்கண்ணே ரூம் போடுறீங்க..?

IKrishs said...

வழக்கம் போல வித்தியாசமான அணுகல் ..
பண்டரி பாய்,சௌகர் ஜானகி ,சந்தியா (ஜெயா அம்மா ) sisters கூட நடிகைகள் தான் என நினைக்கிறன் ..
மேலும் சில தகவல்கள் ..
பானு பிரியா - நிஷாந்தி
சிம்ரனின் இன்னொரு தங்கை popkorn இல் நடித்திருக்கிறார் .
என்யிர் தோழன் ரமாவின் தங்கை ராஜ ஸ்ரீ அல்ல , லதா என்று நினைக்கிறன் ,,
இவர் பட்டணத்தில் பெட்டி மாதிரி மொக்கை படங்களில் நடித்துவிட்டு பின்னர் serial கு வந்தவர் .
ராஜ ஸ்ரீ தங்கை TR படங்களில் நடித்தவர் .
ஜெயசுதா - முள்ளும் மலரும் படத்தில் நடித்த நடிகை (பெயர் தெரியல )
சரிதா - பைரவி (தில்லு முல்லு மற்றும் சீரியல்கள் )
மீரா ஜாஸ்மின் akka விஜய் TV சீரியலில் நடித்தவர் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

முரளிகண்ணன் said...

ராஜு, டிவிட்டரில் கலக்கி விகடனில் இடம் பிடித்ததற்க்கு இங்கேயும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

கிருஷ்குமார், வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

சரிதா வின் சகோதரி கிழக்குச் சீமையிலே படத்தில் வடிவேலுவின் இணையாக ஓடக்கார பெண்ணின் பாத்திரத்தில் நடித்தது ஞாபகம் வருகிறது.

தங்களின் தகவல்களை பதிவில் அப்டேட் செய்து கொள்கிறேன் (தங்களின் அனுமதியுடன்).

நன்றி டிவிஆர் சார்,
உங்கள் காலகட்ட சகோதர/சகோதரி கள் விபரம் இருந்தால் தெரிவிக்கலாமே?

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

கே.ஆர்.விஜயாவுக்கு இன்னுமொரு சகோதரியும் இருக்காங்க.. கே.ஆர்.சாவித்திரி. இவங்களும் நடிகைதான். இவங்களோட பொண்ணுகள்தான் நடிகைகள் அனுஷாவும், ராகசுதாவும்..!

நக்மா-ஜோதிகா-ரோஷிணியில்கூட கலப்படம் உண்டு..!

பானுப்பிரியா-நிஷாந்தி

ராதிகா-நிரோஷா

வரலட்சுமி-மாதுரி

ஜெயசுதா-சுபாஷினி

சரிதா - விஜி

இந்திரா சகோதரிகளையும் விட்டுவிட்டீர்கள்..!

கோவி.கண்ணன் said...

நல்ல தொகுப்பு மற்றும் ஒப்பிடு.

சிலம்பரசன்- குரளரசன் சூர்யா - கார்த்தி க்கு எதிர்காலத்தில் சரியான போட்டியாக இருப்பாங்க.
:)

கார்த்தி 32 அடிபாய்கிறார்.

முரளிகண்ணன் said...

அண்ணே உண்மைத் தமிழன் அண்ணே,
வாங்க.

ராதிகா-நிரோஷா ஞாபகத்திலேயே இருந்து அடிக்கும்போது மறந்திருச்சு.

அனுஷா-ராகசுதா (நித்தி) மறந்தது.

வரலட்சுமி-மாதுரி சூப்பர்ணே.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவிஜி

மொத்தமா அப்டேட் பண்ணிடுறேண்னே.

வருகைக்கு மிக்க நன்றி.

Thamira said...

கிளைமாக்ஸில் 10லிருந்து 3ஐக் கழித்தால் 7ன்னு வசூல்ராஜா மாதிரி கணக்கு போட்டிருக்கிறீர்கள். ஹிஹி.. நல்லாருந்துச்சு.

IKrishs said...

Thanks Murali..
Update pannum podhu ,marakkama unmai thamilan avargalin thagavalgalayum update seyyavum. (Nithi pugal ragasudha va pathiyum solli irukkare!)

CS. Mohan Kumar said...

ஆஹா வாங்க சார் வாங்க.. இனியாவது தொடர்ந்து எழுதுவீங்களா?

முரளிகண்ணன் said...

நன்றி ஆதி. கிளைமாக்ஸ் சும்மா லுலுலாயிக்கி.

நன்றி கிருஷ்குமார். அப்டேட் செய்துகிட்டேயிருக்கேன்.

நன்றி மோகன்குமார். நிச்சயமாக (மேட்டர் கிடைக்கும் வரை).

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..ரேஷ்மா & தங்கச்சி பேர் விட்டுடிங்களே :)

முரளிகண்ணன் said...

கார்க்கி, பேர தேடிக்கிட்டு இருக்கேன். கிடைச்சா சேர்த்துடுறேன்.

Indian said...

Jothilakshmi - Jeyamalini - he..he..

Indian said...

Indira - Raasi?

முரளிகண்ணன் said...

நன்றி இந்தியன். நீங்கள் குறிப்பிட்ட பெயர்களையும் சேர்த்து விடுகிறேன்.

ராசியைத்தான் துளசி என்று தவறாக எழுதிவிட்டேன். திருத்திவிடுகிறேன்.

IKrishs said...

soukar janaki - Krishnakumari (Telugu)
Pandari bai- Mynavathi
Meera jasmine - Jeni
Sandhiya - Vidyavathi (telugu)
Thanks to Google andavar...
(Andha list apparam romba length aayidumo! )

Indian said...

How did you miss the kalai kudumbam?

Vanitha/Preetha/Sredevi.

Indian said...

And Kavitha.

IKrishs said...

Sahodhara nadigargalil naam yellorum marandhuvitta combination
Kamalhassan - Charuhasan
Chandrahaasan kooda hey ram il kamal maganaaga nadithaar.
Melum Nadigar rajeshin thambiyim pudhu pudhu arthangalil nadithirukiraar.

முரளிகண்ணன் said...

நன்றி கிருஷ்குமார்
நன்றி இந்தியன்.

Indian said...

Jayashri/Suganya/Kasthoori are cousins, if that count!

Rekha Ganesan and Jiji Ganesan.

முரளிகண்ணன் said...

இந்தியன் அவர்களே,

கஸின்ஸ் சேர்த்தால் லிஸ்ட் பெரியதாக வரும் என்று நினைக்கிறேன்.

கஸ்தூரி-சுகன்யா-ஜெயஸ்ரீ கஸின்ஸ் என்பது புதிய செய்தி.

ஜெயஸ்ரீ - கஸ்தூரி சாயல் சில கோணங்களில் ஒன்று போல் இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.

மிக்க நன்றி - சுவையான தகவலுக்கு.

Indian said...

//லலிதா-பத்மினி-ராகினி//

And Sukumari (cousin).

Indian said...

Ravichandran's sons Amsavirudhan and George (half-brothers).

Indian said...

//
கஸ்தூரி-சுகன்யா-ஜெயஸ்ரீ கஸின்ஸ் என்பது புதிய செய்தி.

ஜெயஸ்ரீ - கஸ்தூரி சாயல் சில கோணங்களில் ஒன்று போல் இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.

மிக்க நன்றி - சுவையான தகவலுக்கு.
//

Thanks.
Another Bonus ....

And they are the nieces of Veenai S.Balachandar (director of Anda Naal starring Sivaji Ganesan and Pandari Bai) :)

Indian said...

There is another half-brother set.

Junior Sivaji (Ramkumar's son) - Introduced by Sivaji himself (movie Singakutti?).

Recently, there was another Junior Sivaji introduced by Sripriya. Forgot the movie name where Vivek runs the Malavika Juice center.

Apparently this kid is the son of Ramkumar as well (through his second marriage to Sripriya's sister). Hence though Sripriya projected him as Sivaji's grandson, Ramkumar and Prabhu were silent about his debut.

கோவி.கண்ணன் said...

எங்க தல பேமிலியை விட்டுட்டிங்க.

:)

ஷாலினி - ஷாமிலி

முரளிகண்ணன் said...

நன்றி கோவிஜி

நன்றி இந்தியன்

ஒரு விஷயம் கவனீத்தீர்களா? சிபிலிங்ஸ் நடிகைகளில் தான் அதிகம்.

இதுவே ஒரு பதிவுக்கான மேட்டராக இருக்கிறதே.

Indian said...

Suhasini - Anu Hassan (cousins)

IKrishs said...

Yosithu paartha Brother - Sister combination kooda irukkum bola...
Shantanu - Saranya
Radharavi - Radhika
Master prabakar- (Baby)Sumathi(Suvarilla chithirangal heroine)
Richard - Shalini
Nandu - Urvasi
(Nandu suicide panni irandhuttaar)
Alphonsa (dancer & actress) - Robert (Also a dance master)
Devayani - Nakul

Indian said...

Kajol (Minsara kanavu) & Tanisha Mukerjee (Unnaale Unnaale)

Indian said...

//Yosithu paartha Brother - Sister combination kooda irukkum bola...
//

Perhaps topic of another post :)

Indian said...

Vishal Krishna & Vikram(Ajay) Krishna (Poo Parikka Varugirom)

முரளிகண்ணன் said...

ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா கூட ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்.

அடுத்தடுத்த பதிவுகளுக்கு மேட்டர் பின்னூட்டங்களில் இருந்து கொட்டுகிறது.

Indian said...

IT Vijay & Vikranth (cousins)

Indian said...

Shobana and Vineeth are cousins.

Indian said...

//சிம்ரன் – மோனல் (இதில் சில குழப்பங்களும் உண்டு,
மோனலை சித்தி பெண் என்றும் கூறுவார்கள்)
//

Some reports indicate Monal is biological sister and was adopted by Simra's aunt. Some say she is her half-sister.

And one more sibling of Simran is Jyoti Naval (acted in PopKorn starring Mohanlal directed by Nasar).

Indian said...

//Jothilakshmi - Jeyamalini //

Vijayalalitha (Antagonist in Senthoorapoove movie) is their sister too.

And she is the aunt of Vijayshanthi.

And that makes Jothimeena and Vijayshanthi to be distant cousins? :)

Indian said...

Oh man. Enuf for the day!

முரளிகண்ணன் said...

ஆதரவுக்கு நன்றி இந்தியன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி.., அண்ணன் தம்பி அக்கா தங்கச்சிய வச்சி ஒரு கேம் ஆடிட்டுருக்கீங்க.. செம கலக்கல்.. தொடருங்கள்.. அருமை அருமை.

Cable சங்கர் said...

murali's touch..

சிநேகிதன் அக்பர் said...

பல பேர் புதிதாக தெரிந்து கொண்டேன். நன்றி அண்ணே!

கோபிநாத் said...

எப்படிண்ணே இப்படி புட்டுபுட்டு வைக்கிறங்க...ஆமா புக் ரெடியா? எப்போ வெளியிடு ;)))

பரிசல்காரன் said...

மிக வித்தியாசமான அலசல் முக. நீங்கள் ஒரு சினிமா பத்திரிகைக்கு எடிட்டராகலாம்! வலையுலக ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் என்று உங்களை பிரபல பதிவர் ஒருவர் அழைத்தது சாலப் பொருந்தும்!

பரிசல்காரன் said...

பின்னூட்டங்களை இப்பத்தான் படிச்சேன். கலக்கறாங்க.. அவர்களுக்கும் என் நன்றி!

Indian said...

ஸ்ரீதேவி மற்றும் மகேஸ்வரி.

Indian said...

வெற்றிகரமான 50-வது பின்னூட்டம்!

Indian said...

தாத்தா - மகன் - பேரன், பாட்டி - மகள் - பேத்தி என இன்னொரு தொடரைத் தொடங்கலாம்

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி கேபிள்ஜி

நன்றி அக்பர்

நன்றி பரிசல்காரன்.

கோபிநாத், நன்றியும் பிறந்த நாள் வாழ்த்துக்களும்.

இந்தியன், உங்கள் பின்னூட்டங்களின் தயவிலேயே இரண்டு மூன்று பதிவிற்க்கான மேட்டர் தேற்றிவிடுவேன். நன்றி.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

வணக்கம் நண்பா...
முதல்ல என் நன்றிய சொல்லிக்கிறேன்
...எதுக்குன்னா...
முதல்ல தமிழில் டைப் பண்ண nhm writter பயன்படுத்துங்கன்னு நீங்கதான்
சொல்லி கொடுத்தீங்க..அதுக்கப்புறம்தான்
தமிழில் அடிக்க கத்துகிட்டேன்

ரொம்ப ஆய்வு செய்து எழுதி இருக்கீங்க நல்லாயிருக்கு..
இடை வெளி அதிகம் இல்லாமல் இன்னும் நிறைய எழுதுங்க..

butterfly Surya said...

அன்பின் முரளி..
வாங்க.. வாங்க..

நலமா..?

அன்பரசன் said...

சூப்பர் அலசல் சார்

Karthick Chidambaram said...

இவ்வளவு கலை குடும்பங்களா ?

thilakkannan said...

wea623qy35a

யோசிப்பவர் said...

இந்தப் பதிவை இன்று மறுபடி படித்ததால் இந்த கமெண்ட். இப்போதைய நிலவரப்படி கார்த்தி தேற மாட்டார்னு தோணுது. ஒருவேளை தெலுங்கில் மட்டும் வேணா ஹிட்டடிக்கலாம்.