
சமுதாயத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் அடிக்கடி பேட்டி கொடுப்பார்கள். மசாலா படங்களைத் தவிர்த்தால் தமிழில் மீதம் இருக்கும் சில படங்களைப் பார்த்தால் இந்த எண்ணம் நமக்கும் வரும். எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்த நாட்களில் வந்த படங்களில் (வறுமையின் நிறம் சிகப்பு .... ) அப்பிரச்சினை பேசப்பட்டிருக்கும். மேலும் நான் B.A , M.A ஆனால் வேலை கிடைக்கலை போன்ற வசனங்கள் இருக்கும். அதுபோல ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால் வங்கி பணி அல்லது தனியார் நிறுவன கிளார்க் என்று இருக்கும். 90களின் மத்தி வரை வந்த படங்களில் கல்லூரி என்றாலே கலை மற்றும் அறிவியல் கல்லூரி தான். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. படித்து வேலை வாய்ப்பில்லை என்றால் இப்போது யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இப்போது அம்மாதிரி படம் எடுக்க முடியாமல் ரவுடி கதைகளாக எடுக்கறார்கள்.
இப்பொழுது மென்பொருள் துறை ஆட்சி செலுத்துவதால் திரைத்துறையும் அதை எதிரொலிக்கிறது. ( கற்றது தமிழ், யாரடி நீ மோகினி.......). அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் தான் சிலந்தி. அழகி புகழ் மோனிகாவும் அவர் நண்பிகளும் மென்பொருள் துறையினர். அவர்கள் செய்யும் sexual harassment ஆல் பாதிக்கப்பட்ட ஒருவன் பழி வாங்குவதாக கதை. நல்ல suspense உடன் சொல்லப்பட்டுள்ளது. கற்றது தமிழ் போலவே இதிலும் மென்பொருள் துறையினர் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். படத்துக்கு மைய இழையே இந்த பிரச்சினைதான். மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.

