April 10, 2008

உலகமயமாக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகள்

உலகமயமாக்களால் இந்தியாவிற்கு நன்மையா? தீமையா? என்ற விவாதம் பல மட்டங்களில் நடந்து கொண்டு இருக்கிறது. மற்ற களங்களில் எப்படியோ குழந்தைகள் விசயத்தில் மிகப்பெரும் தீமையே.

உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கால இந்தியாவிற்கு மிகப்பெரும் சுமையாகவே மாறுவார்கள். விளம்பரங்களின் தாக்கத்தால் நமது தட்ப வெட்ப நிலைக்கு மற்றும் உடல் கூறுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நாளடைவில் நிரந்தர நோயாளியாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. விழிப்புணர்வு உள்ள பெற்றோர்களாலேயே இதை தடுக்க இயலவில்லை. இதை விட கொடுமையான விசயம் தவறான கற்பிதங்களினால் மனநலம் பாதிக்கப்படுதல். சிகப்பு நிறம் மற்றும் மெல்லிய உடல் தான் அழகு என்ற கற்பிதத்தால் பல குழந்தைகள் முக்கியமாக பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை மன வளர்ச்சி அடையுமுன் உடல் வளர்ச்சி அடைதல். இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப்பழக்கமே. HYPER ACTIVE என்று சொல்லப்படும் சராசரிக்கு மிக அதிகமான சுறுசுறுப்போடு இருக்கும் குழந்தைகள் (இவர்களால் ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியாது மற்றும் கவன குறைபாடும் இருக்கும்). இதை அதிகப்படுத்துபவை செயற்கை வண்ணங்கள்,பதப்படுத்தலுக்கு பயன்படும் வேதிப்பொருட்கள் மற்றும் கொழுப்புகள். இவை அனைத்தும் குழந்தைகள் அதிகம் உண்ணும் பொருட்களில் தவறாமல் இப்பொது இடம் பெறுகின்றன. விளம்பரங்களும் இதை உண்பதற்கு குழந்தைகளை ஊக்குவிக்கன்றன. பெற்றோர்களுக்கு புலம்புவதை தவிர வேறுவழியில்லை. இதற்கு என்ன வழி?

5 comments:

மதன் சிந்தாமணி said...

well said

முரளிகண்ணன் said...

டெஸ்ட்...

சோதனை..

சித்திரவீதிக்காரன் said...

உலகமயமாக்கல் நம் உணவு, உடை எல்லாவற்றையும் பறித்து கொண்டது. இன்றைய தலைமுறைக் குழந்தைகள் பாவம். அதிரசம், அச்சுமுறுக்கு, சீடை, தேன்மிட்டாய் போன்ற தின்பண்டங்களை எல்லாம் இப்போது கடைகளில் பார்க்கவே முடியவில்லை. நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி சித்திரவீதிக்காரன்

Francis Rajesh said...

மேல் நாட்டு கலாச்சாரத்தில் தீராத மோகம் கொண்ட நாம் அவர்களிடம் நேரம் தவறாமை, போக்குவரத்து வழிமுறை, பொது இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, கழிவறை சுத்தம், போன்ற நல்லவிஷயங்களையும் கவனித்தால் கற்றுகொண்டால் நல்லது..