July 29, 2008

மிமிக்ரி மூர்த்தி கோபி நகைச்சுவை – இணையத்தில்

கலக்கப் போவது, அசத்தப் போவது யாரு வகை நிகழ்ச்சிகளின் தோற்றுவாய் மூர்த்தி & கோபி பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். பல பதிவர்கள் அவர்களின் சிறப்பை கூறியிருந்தனர். சக பதிவர் டஃப் இண்டியன் அவர்களின் நகைச்சுவை ஒலிநாடா இணையத்தில் இருப்பதாக குறிப்பிட்டு அதற்கான சுட்டியையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்

இதை கிளிக்கி சிரியுங்கள்

July 26, 2008

குசேலன் முதல் திரை விமர்சனம்

சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதும் என் நண்பரின் உதவியால் நேற்று குசேலன் படம் பார்த்தேன்

சில துளிகள்

படம் முடிந்த பின்னரும் பசுபதியின் அந்த ஏக்கமான முகத்தை மறக்கமுடியவில்லை

மூன்று குழந்தைக்கு தாயாகவும், ஏழை சவரத்தொழிலாளியின் மனைவியாகவும் வரும் மீனா அதீத மேக்கப்புடன் வருவது லேசாக உறுத்துகிறது.

சந்தானம் வரும் காட்சிகள் வடிவேலின் காட்சிகளை காட்டிலும் நகைச்சுவையாக இருக்கிறது. (ஒருவேளை வடிவேலின் மேல் உள்ள அதிக எதிர்பார்ப்பு காரணமா எனத் தெரியவில்லை

இந்திய கிளியோபட்ரா என்று சொல்லும் அளவுக்கு நயன் கலக்கியுள்ளார்

ஒளிப்பதிவு சுமார் (காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஒளிப்பதிவாளரா இவர்? என்று கேட்கும் படி இருந்தது. பின்னெ டைரக்டர் அப்படி.)

பாடல் ஒ கே ரகம். வசனம் மொக்கை

ஆனால் படம் முடிந்தபின் ஒன்று தோன்றியது. இரண்டு காட்சிகளில் தான் ரஜினி நடித்துள்ளார் (பாடல், பில்ட் அப் தவிர்த்து). அந்த இரண்டு காட்சியிலேயெ ஏன் தனக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கிறது என்று புரியவைத்து விட்டார்.

உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்

தாவணியின் சக்தி


கடந்த பத்தாண்டுகளில் கலை ரீதீயாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களில் ஒரு ஒற்றுமையைக காணலாம். அது படத்தில் ஒரு முக்கிய பெண் கேரக்டர் தாவணி அணிந்திருக்கும்.

சேது – அபிதா
அழகி – மோனிகா
ஆட்டோகிராப் – மல்லிகா
பருத்திவீரன் – பிரியாமணி
சுப்ரமணியபுரம் – சுவாதி

இதுதவிர

கில்லி,சாமி,திருப்பாச்சி - திரிஷா
சண்டக்கோழி – மீரா ஜாஸ்மின்
திமிரு – ஸ்ரேயா ரெட்டி
சிவாஜி – ஸ்ரேயா

திரையரங்களுக்கு வருவோர் பெரும்பாலும் ஆண்கள் (70%). அதில் 70% 18 ல் இருந்து 35 வரை. 30 வயதை தாண்டிய ஆண்களுக்கு தாவணி மீதான மோகம் குறையாததற்கு காரணம் இருக்கலாம். இப்போதுள்ள 20+ க்கும் தாவணி மோகம் இருக்க காரணம் அது ரத்தத்திலேயே இருப்பதாலா?

July 25, 2008

கலக்கப் போவது அசத்தப் போவது - முன்னோடி: மூர்த்தி & கோபி

இப்பொழுது அனைத்து தொலைக்காட்சிகளும் மிமிக்ரி மற்றும் ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. இந்த கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது வழிகாட்டி என்று பார்த்தால்

திரை நட்சத்திரங்களான சின்னி,தாமு,மயில் சாமி,விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள். ஆனால் இவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயெ நகைச்சுவை செய்து வந்தார்கள். பெரும்பாலும் பிரபல நடிகர்களை இமிடேட் செய்துவந்தார்கள்.

80 களின் முடிவிலும்,90 களின் ஆரம்பத்திலும் இந்த துறையில் கலக்கியவர்கள் மூர்த்தி மற்றும் கோபி. இவர்கள் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்ப்பட்ட கேசட்டுகளை வெளியிட்டு சாதனை படைத்தவர்கள்.

இவர்களின் முக்கிய களங்கள்

1) அப்போது வெளியான திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை உல்டா செய்வது.

கரகாட்டக்காரன் பாடலை இவர்கள் வார்த்தையில் கேட்க வேண்டுமே
தேவர் மகன் - சேட்டு மகன்
டூயட் - இடியட்

2) திருவிளையாடல் கட்டபொம்மன் வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது

3) பிற மொழி வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது


4)தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை கிண்டலடிப்பது

அந்த நாட்களில் எல்லா மோட்டல்களிலும் இவர்கள் கேசட் தான் டாப் சேல்ஸ். இவர்கள் கேசட் இல்லாத டீக்கடை இல்லை.


இப்போது என்ன ஆனார்கள்? என்ன ஆச்சு?

1) 93 க்குப்பின் தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் மக்களுக்கு தேவையான பொழுதுபோக்கை கொடுத்துவிட்டது

2) இவர்களின் கேசட் எல்லாம் தரம் குறைந்தவை (ரூ 8). 90களில் மக்கள் நல்ல தரமான டேப் ரெக்கார்டர்களை வாங்க துவங்கியது. இவர்கள் கேசட் டெல்லி செட்டுக்குத்தான் ஏற்றது. அதுவும் இப்பொது டி வி டி காலம்

3) குடும்பத்தோடு அமர்ந்து கேட்க முடியாதது. (தொலைக்காட்சி என்றால் பரவாயில்லை. அவர்கள் ஒளிபரப்புவது. இது உன் ஆசைக்கு கேட்கிறாய்)

4)அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கண்டுகொள்ளதது

5) இதையெல்லாமா கேட்கிறாய் என்று கேலி செய்யப்படுவது.

எப்போதாவது உங்கள் பேருந்து ஒரு உருப்படாத மோட்டலில் நிற்கும் போது காதை தீட்டுங்கள். அவர்கள் உல்டா செய்த பாடல் வரிகள் உங்கள் காதில் விழலாம்