ஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தலையாயது தனியாக சினிமாவுக்குப் போக முடியாதது. அலுவலகம், வீட்டு வேலைகள் போக மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. குடும்பத்தோடு போகலாம் என்று பார்த்தால் யாரும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை.
ஆளவந்தான் படம் வெளியான அன்று எனக்கு தலை தீபாவளி. அப்படத்திற்க்கு ஏற்பட்டிருந்த ஹைப் காரணமாக காலை ஒன்பது மணிக்கே யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டேன். படப் பெட்டி வர தாமதமானதால் படம் மதியம் இரண்டுக்கு திரையிடப்பட்டு மாலை ஐந்தரைக்கு தண்டனை முடிந்தது. வீட்டிற்க்கு வந்தால் விழுந்த திட்டுக்கள் கூட உறைக்கவேயில்லை. அப்படி ஒரு சோகம், படம் நன்றாக இல்லாமல் போனதால்.
அப்படி வெறித்தனம் கொண்டிருந்த நான், மன்மதன் அம்பு வெளியாகி நான்கைந்து மாதமாகியும் பார்க்காத சோகம் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. டிவிடியில் பார்ப்பதில்லை என்ற தேவையில்லாத கொள்கை வேறு.
சமீபத்தில் உறவினர் திருமணம் ஒன்று அருகில் இருந்த சிற்றூரில் ஞாயிறன்று நடந்தது. வேண்டா வெறுப்பாக காலையில் கிளம்பி பேருந்தில் சென்று இறங்கிய போது ஒரு ஆனந்த அதிர்ச்சி. அவ்வூரில் உள்ள திரையரங்கில் மன்மதன் அம்பு.
திருமண சடங்கு ஆரம்பித்த உடனேயே நைஸாக கிளம்பி திரையரங்கிற்க்கு போய்விட்டேன்.
கமல், நீங்கள் ஹீரோயிஸ படங்களில் நடிக்க வேண்டாம். கதையின் நாயகனாக நடிங்கள். அந்த வேடம் உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சராசரி திறமையும், அனுபவமும் கொண்ட நடிகரே அதை சிறப்பாக செய்து விட முடியும் என்ற நிலையில் நீங்கள் எதற்கு?
நீலவானம் போன்ற ஜிம்மிக்ஸ் எல்லாம் எதற்கு?
ஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா?
இடைவேளையில் என்னை விட பாவமாக இருந்தவர் கேண்டின்காரர். வட்டிக்கு வாங்கி கடை வச்சிருக்கேன்யா, பாத்து செய்யுங்கயா என்று பட போஸ்டரைப் பார்த்து அவர் கதறுவது போல் ஒரு பிரமை.
வடை, டீ என எதுவும் இல்லை. கேட்டதற்க்கு, என்னிடம் இருப்பதிலேயே சின்ன கேன் இதுதான். இதில் பத்து டீயாச்சும் வாங்கி வச்சாத்தான் சூடு ஆறாம இருக்கும். அதுகூட ரெண்டு நாளா ஓடலை என்று புலம்பினார்.
வேறுவழியில்லாமல் நமத்துப்போன உள்ளூர் தயாரிப்பு பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு மீதி படத்தைப் பார்த்தேன். பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.
ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த பின் தான் தெரிந்தது, மொய் எழுதாமல் வந்தது. இம்முறையும் மனைவியின் திட்டுக்கள் உறைக்கவில்லை
16 comments:
மன்மத அம்பின் ஆர்வம் அசத்தல்
வருகைக்கு நன்றி பனித்துளி சங்கர்
கலக்கல்ண்ணேய்!
\\ஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா?\\
இது,"வலிக்கலயே, வலிக்கலயே" ரகம்.
:-)
நன்றி சரோ
நன்றி ராஜு
அண்ணே, நேரம் அனுமதித்தால் தென் மாவட்ட தேர்தல் முடிவுகளை உங்க பாணியில் ஒரு அலசு அலசலாமேண்ணே!
பார்த்து செய்யுங்க..
நீண்ட நாள் கழித்து பதிவிட்டாலும், வழக்கம் போலவே சூப்பர்.
அதுவும் அந்த தெனாலிராமன் சூடுபோட்ட பூனை உவமை அருமை (யார் கண்டது, உண்மையாகக் கூட இருக்கலாம்).
கிங் விஸ்வா
கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்
ஹோய்.., ஹோய்.., பப்பப்பப்பாஆஆஆஆஆஅ..,
ஹோய்.., ஹோய்..,
பப்பப்பப்பாஆஆஆஆஆஆ..,
மு,க, ரிடர்ன்ஸ்..,
ஹலோ பேராசிரியரே..
எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கா..? கொஞ்சம் போன் பண்ணுங்க சாமி.. பேசணும்..
பேராசிரியரே அண்ணே ;) நலமா!?
இப்படிக்கு
2வது நாள் முதல் ஷோ ஆப்பு வாங்கியன் ;)
அண்ணே நலமா?!
பதிவு பக்கம் பார்த்து எம்பூட்டு நாளாச்சு. வீட்டில் அனைவரும் நலம்தானே.
ரொம்ப நாளாச்சு.... ஒரு கமல் இப்பிடி படம் எடுக்க வேண்டியிருக்கு... உங்களை மறுபடி எழுத வைக்க... ஹ்ம்ம்ம்...
//பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.//
சூப்பர் இடுகை.... தேவையில்லாத பாத்திரங்கள், அர்த்தமற்ற நீள நீளமான காட்சிகள், எடிட்டிங் சொதப்பல்கள், மாதவ-உஷா உதூப் கொடுமைகள்.... எதைச் சொல்ல?எதை விட?
என்ன சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் ... அ.தி.மு.க மாநாடு பற்றி எழுதியது இன்னும் நினைவில் இருக்கு ...இப்ப பார்த்தீங்களா , அம்மா , காப்டன் ..எல்லாரும் வந்துட்டாங்க ... இது எப்படி போகும்ன்னு நினைக்கீறீங்க ?
Welcome Back :))
அய்யோ பாவம் :(
வாவ்.. குட் கம்பேக்.
\\ஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். \\
உங்களுக்கு வயசாகவே இல்லண்ணே..
Post a Comment