June 09, 2011

ஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்

இயான் ஹீலே - பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆஸி அணியில் இருந்தும் ஒரு உலகக்கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெறாதவர். அதே போல் எந்த ஆஷஸ் தோல்வி அணியிலும் இடம் பிடிக்காதவர். நூறு டெஸ்டுகளை கடந்தும் நல்ல பார்மிலேயே இருந்தவர். எந்த ஒரு வீரரையும் புள்ளி விபரத்தால் அளவிடக்கூடாது என்பார்கள். 96ல் உலக்கோப்பையை கலக்கிய ஜெயசூர்யா எடுத்தது 300க்கும் குறைவான ரன்களே. ஆனால் 96 உலக்கோப்பையைப் பற்றி பேசினாலே அவரைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.

அதுபோலவே 88 முதல் 99 வரை ஹீலே ஆடிய டெஸ்டுகளில் பல ஆட்டங்களில் அணியை தோல்வி அடையாமல் காப்பாற்றியுள்ளார்/ வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

கடைநிலை ஆட்டக்காரர்களுடன் பலமுறை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்த 4 சதம், 22 அரை சதத்தில் பெரும்பாலானவை அணிக்குத் தேவையான போது அடிக்கப்பட்டவையே.

இதைவிட அவர் கீப்பிங் திறமைதான் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. வார்னேவின் பந்துவீச்சுக்கு அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லுவார். உண்மையிலேயே ஏதாவது சொல்வாரா அல்லது சும்மா வந்து காதைக் கடிப்பாரா என்று தெரியாது. ஆனால் பேட்ஸ்மென்னுக்கு கிலி ஏற்பட்டு விடும். சும்மாவே வார்னே பாலை விளையாட முடியாது, இதில் நம்ம வீக்னெஸ்ஸை வேற கண்டுபிடுச்சு சொல்லிட்டானோ என்று இரண்டு மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுவார்கள். (நல்ல உதாரணம் பாகிஸ்தானின் பசத் அலி).
இந்த சமயத்தில்தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அடி வெளுத்துக் கொண்டும், நன்கு கீப்பிங் செய்துகொண்டும் இருந்த கில்கிறிஸ்ட் தேர்வாளர்களின் கண்ணில் பட்டார். அவ்வப்போது ஒருநாள் போட்டிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்க தொடரில் (1997) அவர் ஒரு ஆட்டத்தில் அடித்த 77 ரன்கள், பின் தொடர்ந்த ஆட்டங்களில் அவரது வேகமான ஆட்டம் ஆகியவை ஹீலேயின் ஒருநாள் அணி இடத்தை ஆட்டம் காணச் செய்தது. அந்த காலக் கட்டத்தில் ஆஸி பல ஒரு நாள் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருந்தது, அதிரடி ஆட்டக்காரர்கள் குறைவினால். எனவே ஹீலேயின் ஒருநாள் போட்டி இடத்தை கில்லி பிடித்துக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் ஹீலேயே முதல் சாய்ஸாக இருந்தார். நன்றாகவும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் கலக்க, தேர்வாளர்கள் ஹீலேயே கழட்டிவிடத் தீர்மானித்தார்கள்.

ஹீலே ஆஸியில் ஆடிய கடைசி டெஸ்டில், ஒளிபரப்பில் ஆட்டத்தை விட அதிகம் ஒளிபரப்பப் பட்டவை ஹீலி ஆதரவாளர்களின் ஆதரவு அட்டை வாசகங்கள்தான். தேர்வாளர்களின் பிறப்பை சந்தேகப்படும் வாசகங்கள் உட்பட ஆஸ்திரேலிய போர்டை கேவலப்படுத்தும் பல வாசகங்கள் அதில் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் அசராமல் அவரைக் கழட்டி விட்டது ஆஸி போர்டு.

பின்னர் கில்லியின் அசகாய ஆட்டத்தால் அவை எல்லாம் அடங்கிப் போயின.

ஒரு அணியில் ஓர் இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது.

இப்போது இந்திய அணியிலும் இதேபோல் ஆப் ஸ்பின்னருக்கான ஓரிடத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜனின் விக்கெட் எடுக்கும் திறமை கேள்விக்குறியாய் உள்ளது (முக்கியமாய் டெஸ்ட் போட்டிகளில்).

அஷ்வின், கெய்லின் விக்கெட்டை ஐபிஎல் 4 குவாலிபையரிலும், இறுதிப் போட்டியிலும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். ஐபிஎல் 3 பைனலிலும் சச்சின் விக்கெட்டை இக்கட்டான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். சாம்பியன் கோப்பையிலும் தரமான பந்துவீச்சு.
சென்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஆனால் தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது?

19 comments:

Sukumar said...

என்னமா எழுதுறீங்க.. அப்படியே வாரம் ஒண்ணு போட்டா எப்படியிருக்கும்... வெல்கம் பேக் தல...!!!

முரளிகண்ணன் said...

நன்றி சுகுமார் சுவாமிநாதன்.

சிநேகிதன் அக்பர் said...

வணக்கம் அண்ணே, நலமா?

அவங்களெல்லாம் அரசியலையே விளையாட்டா எடுக்க கூடியவர்கள். நாம விளையாட்டை கூட அரசியலாக்கி விடுவோம். பிறகெப்படி ?

அடிக்கடி எழுதுங்க.

முரளிகண்ணன் said...

நன்றி அக்பர். நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

Indian said...

அடிக்கடி எழுதலாமே? வேலை அதிகமோ?

Cable சங்கர் said...

vaanga vaanga

அத்திரி said...

welcome back thala

King Viswa said...

மீண்டு வந்ததிற்கும், மீண்டும் வந்ததிற்கும் ஒரு நன்றி.

//ஒரு அணியில் ஓர் இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது//

முதலில் ஹீலி & கில்க்ரிஸ்ட் விஷயம்: ஹீலி மிகவும் திறமையானவராக இருந்தாலும் அவரது ஆட்டத்திறன் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கில்க்ரிஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இக்கட்டான சூழலில் இருந்து வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். எங்கு ஹீலி டிரா செய்ய போராடுவாரோ, அங்கு கில்க்ரிஸ்ட் ஜெயிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். கில்க்ரிஸ்ட் வந்ததின் பின்னரே ஆஸ்திரேலியா அணி ஒரு முழுமையான அட்டாக்கிங் அணியாக மாறியது. டெஸ்ட் மேட்சுகளில் செகண்ட் நியூ பாலை ஒன்றுமில்லாமல் செய்ததில் கில்லிக்கு பெரும் பங்கு உண்டு. அதைப்போலவே ஒரு நாள் போட்டிகளில் மார்க் வாவுடன் இணைந்து போட்டிகளை ஆரம்பத்திலேயே ஒரு முடிவுக்கு கொண்டு வர வைத்தவர் கில்லி. (எனக்கு கில்க்ரிஸ்ட்டை அவ்வளவாக பிடிக்காது, அவர் ஒரு போலி நேர்மையாளர் என்பது என் கருத்து. அதைப்போலவே ஹீலி அவர்களின் கீப்பிங் மிகவும் பிடிக்கும்). ஆனால் ஹீலியின் விஷயத்தில் ஆஸ்திரேலிய அணி தேர்வாளர்கள் மிகவும் தாமதம் செய்து விட்டார்கள் என்பதை கில்லி முதல் டெஸ்ட் மேட்சிலேயே நிரூபித்து காட்டினார் (பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்த கவுண்டர் அட்டாக்கிங் 81 ரன்களை மறக்க முடியுமா? அல்லது கடைசி டெஸ்ட்டில் சதமடித்து முடியாத ஒரு சந்தர்பத்தை வெற்றி வழியாக மாற்றியதும் கில்லியே, of course along with Langer).

//தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது.//
அஷ்வினின் ஆடும்திறனை நான் நேரில் பிராக்டிஸ் மற்றும் போட்டிகளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டிருக்கிறேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் இன்னமும் தயாரா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

ஏனென்றால் ஒரு நாள் போட்டிகளிலேயே அவரால் இரண்டாவது சுழல் பந்து வீச்சாளரின் இடத்தை பிடிக்க முடியாத சூழலில் டெஸ்ட்டில் எப்படி அவர் முதல்நிலை சுழல் பந்து வீச்சாளராக வர முடியும்?

//எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது?//

இது ஒரு தவறான அணுகுமுறை. ஆசியைப்போல நாம் முடிவெடுக்கவே தேவை இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் இன்னமும் கேட்டிச்'ஐ கழட்டி விட்டு, பாண்டிங்கை வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா அணி பல முறை தவறான வீரர்களை அணியில் எடுத்துள்ளது. இப்போதும் சரி, பத்து ஆண்டுகளுக்கு முன்பும் சரி. உதாரணங்களை என்னால் கொடுக்க இயலும். சமீபத்தில் மைக்கேல் பீர் என்ற சுழல் பந்து வீச்சாளரை விளையாட வைத்தது முதல், 1991ல் டேமியன் மார்டினை ஒரே ஒரு இன்னிங்க்ஸ்'ஐ வைத்து கழட்டி விட்டது வரை கூற இயலும்.

King Viswa said...

சென்ற கமென்ட்டில் //முதலில் ஹீலி & கில்க்ரிஸ்ட் விஷயம்: ஹீலி மிகவும் திறமையானவராக இருந்தாலும் அவரது ஆட்டத்திறன் என்ற அளவிலேயே இருந்தது.// என்று இருப்பதை

முதலில் ஹீலி & கில்க்ரிஸ்ட் விஷயம்: ஹீலி மிகவும் திறமையானவராக இருந்தாலும் அவரது ஆட்டத்திறன் Good என்ற அளவிலேயே இருந்தது. It was never to attain Greatness, as in the case of Gilchrist.

கொடுமையான விஷயம் என்னவெனில் ஹீலியும் சரி, அஷ்வினும் சரி என்னுடைய பேவரிட் வீரர்கள். கில்லியும், பஜ்ஜியும் எனக்கு இரண்டாம் பட்சம்தான்.

முரளிகண்ணன் said...

நன்றி இந்தியன். மீண்டும் தொடர்கிறேன்

நன்றி கேபிள்ஜி

நன்றி அத்திரி

முரளிகண்ணன் said...

நன்றி கிங் விஸ்வா

உங்கள் கருத்துடன் 90% சதவிகிதம் ஒத்துப்போகிறேன்.

ஆஸி அட்டாக்கிங் அணியாக மாறியது, ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கத்திற்க்கு கில்லியே காரணம்.

ஆனால் அந்த பாகிஸ்தான் டெஸ்ட் 81ம் பின் மூன்றாதவது டெஸ்ட் சேஸிங்கில் அடித்த சதமுமே கில்லி ஒரு ஆல் டைம் கிரேட் என்பதை எல்லோருக்கும் உணர்த்தியது. ஆனால் கில்லி டெஸ்டில் எண்டெர் ஆகும்முன் ஒரு நாள் போட்டிகளில் அப்படி ஒரு அசகாய ஆட்டத்தை காட்டியதில்லை. ஹீலேயை விட சற்று மேம்பட்டவர் (அடிப்பதில்) என்ற கருத்து மட்டும்தான் இருந்தது

அந்த சூழ்நிலையில் ஆஸீ எடுத்த முடிவு தைரியமானதுதானே?

முரளிகண்ணன் said...

நன்றி கிங் விஸ்வா

உங்கள் கருத்துடன் 90% சதவிகிதம் ஒத்துப்போகிறேன்.

ஆஸி அட்டாக்கிங் அணியாக மாறியது, ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கத்திற்க்கு கில்லியே காரணம்.

ஆனால் அந்த பாகிஸ்தான் டெஸ்ட் 81ம் பின் மூன்றாதவது டெஸ்ட் சேஸிங்கில் அடித்த சதமுமே கில்லி ஒரு ஆல் டைம் கிரேட் என்பதை எல்லோருக்கும் உணர்த்தியது. ஆனால் கில்லி டெஸ்டில் எண்டெர் ஆகும்முன் ஒரு நாள் போட்டிகளில் அப்படி ஒரு அசகாய ஆட்டத்தை காட்டியதில்லை. ஹீலேயை விட சற்று மேம்பட்டவர் (அடிப்பதில்) என்ற கருத்து மட்டும்தான் இருந்தது

அந்த சூழ்நிலையில் ஆஸீ எடுத்த முடிவு தைரியமானதுதானே?

Bruno said...

//இது ஒரு தவறான அணுகுமுறை. ஆசியைப்போல நாம் முடிவெடுக்கவே தேவை இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் இன்னமும் கேட்டிச்'ஐ கழட்டி விட்டு, பாண்டிங்கை வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். // வழிமொழிகிறேன்

Bruno said...

முரளி

கில்லி, ஹீலே அளவிற்கு நல்ல காப்பாளர், அவரை விட நல்ல மட்டையாளர் என்பதால் தேர்வாளர்களுக்கு பிரச்சனை இல்லை

--

ஆனால் இந்திய அணியை எடுத்தால், கடந்த 20 வருடங்களில், கிரண் மோரைக்கு பிறகு சிறந்த காப்பாளர் (குறைவான bye விடுவது, குறைவான catch விடுவது) என்றால் அது ராகுல் திராவிட் என்பது என் கருத்து

பார்த்தீவ் பட்டேல் போன்றவர்களை விட திராவிட் நல்ல காப்பாளர் :) :)

முரளிகண்ணன் said...

Thanks Doctor

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

கிங் விஸ்வா,

//அல்லது கடைசி டெஸ்ட்டில் சதமடித்து முடியாத ஒரு சந்தர்பத்தை வெற்றி வழியாக மாற்றியதும் கில்லியே, of course along with Langer).//

அது ஹோபார்ட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்! பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் லாங்கரும் பாண்டிங்குமே சதம் அடித்தனர்! பாண்டிங் இரட்டை சதத்தை தவற விட்டார்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பயங்கரவாதி டாக்டர் செவன்

(என்னா பேருப்பா இது?)

King Viswa said...

//என்னா பேருப்பா இது?)//

சார்,

அவரு நம்ம நண்பர்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கதைகளில் வரும் ஒரு முக்கியமான வில்லன் பாத்திரத்தின் பெயரை வைத்துக்க் கொண்டு இருக்கிறார். முக்கியமான விஷயம் - சினிமா மற்றும் கிரிக்கெட் வெறியர்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு மிக்க நன்றி கிங் விஸ்வா

அப்ப நம்மாளுங்கிறீங்க. அவருக்கு ஒர் நல்வரவைத் தெரிவிச்சுக்கிறேன்.

இப்போதான் முத்து காமிக்ஸ்லாம் வாங்க ஆரம்பிச்சுருக்கேன். சிறுவயதில் டெக்ஸ்வில்லர் மற்றும் இரும்புக்கை மாயாவி கதைகள் படித்ததுதான் ஞாபகம் இருக்கு. இப்போதான் மாடஸ்டி பிளைசி மற்ரும் கௌபாய் கதைகள் கலெக்ட் பண்ணி படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.