July 05, 2011

தமிழ்சினிமாவில் கம்யூனிஸ்டுகள்

94ஆம் ஆண்டுவாக்கில் ஏதாவது திரைப்படத்திற்க்கு சென்றுவிட்டு வரும் வழியில் அம்மாவின் அறுபதடி கட் அவுட் சரிந்து விழுந்து கோமா நிலைக்கு போன திரைப்பட ஆர்வலன் ஒருவனுக்கு, திடீரென இப்பொழுது நினைவு வந்தான் அவன் எதைப் பார்த்து அதிர்ச்சியடைவான்?

அருகருகே அமர்ந்திருந்தாலும் செல்போனிலேயே பேசிக்கொள்ளும் அளவுக்கு பெருகிவிட்ட செல்போன்களைப் பார்த்தா?, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா? தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி முதல் தாலி அறுக்கும் நிகழ்ச்சி வரை வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளைப் பார்த்தா?

இதையெல்லாம் விட அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ்சினிமாவின் தற்போதைய கதாநாயகர்களின் கேரக்டரைசேஷன்கள்தான்.
முன்னெல்லாம் கதாநாயகன் காதலனாக இருப்பான் இல்லை கம்யூனிஸ்டாக இருப்பான். கதாநாயகன் என்றாலே அவன் அமைப்பை,ஆட்சியை, பண்ணையாரை, பணக்காரரை எதிர்க்க வேண்டும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதை சாம்பாரில்லிட்ட பருப்பாக வைத்திருந்தார்கள்.
இப்போது வரும் படங்களில் நாயகன் நல்ல குணங்களுடன் இருப்பதே அரிதாகி விட்டது. களவாணி, எத்தன் என கல்யாண குணங்களுடனே நாயகர்கள் வலம் வருகிறார்கள்.
எங்கள் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு எம்ஜியாரை மிகவும் பிடிக்கும். கம்யூனிஸ தத்துவங்களை திரையில் கொண்டுவந்தவர் அவர்தான் என்பார். மலைக்கள்ளன், நாடோடி மன்னன் என உதாரணங்களை அடுக்குவார் அவர். பிற்காலத்தில் சிவப்பு மல்லி படம் கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை மையமாக வைத்து வந்தது.
வசந்த பாலன் இயக்கி ஆர்யன் நடித்த ஆல்பம், சுந்தர் சி இயக்கி கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், ஜனநாதன் இயக்கிய ஈ (பசுபதி) போன்ற படங்களில் நாயகர்கள் கம்யூனிஸ்டுகளாக வலம் வந்தார்கள். ஜனநாதனின் பேராண்மையில் கம்யூனிஸத்தை விளக்கும் சில காட்சிகள் இருந்தன.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவல்யம் போன்ற பெயர்களை எல்லாம் உபயாகப்படுத்தி இருந்தார்கள்.
பல படங்களில் ஹீரோக்கள் மில் அதிபரை எதிர்ப்பார்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக. அவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. தனிக்காட்டு ராஜா படத்தில் கூட ரஜினி ஜெயப்பிரகாஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு கம்யூனிசம் போன்ற ஒன்றைப் பேசுவார். அதுகூட காதல் தோல்வியினால் அந்தப் பாதைக்கு அவர் திரும்பியிருப்பார்.

கேரளாவில் “நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” போன்று கம்யூனிஸக் கொள்கைகளின் நிறை குறைகளை அலசிய படங்கள் பல வந்துள்ளன. முரளி போன்ற நடிகர்கள் கம்யூனிஸ்டாக வாழ்ந்தும் உள்ளனர். ஆந்திராவில் கம்யூனிஸ, மாவோயிஸ கருத்துக்களின் அடிப்படையில் பல படங்கள் வந்துள்ளன. அப்படங்களின் ஹீரோயின்கள் கவர்ச்சியாய் இல்லாததால் இங்கே டப் ஆகாமல் அவற்றை நாம் பார்க்க முடியவில்லை.

அய்யா தமிழ் சினிமா உலகினரே, கம்யூனிஸ கொள்கைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் கூட வேண்டாம். நாயகன் கம்யூனிஸ சிந்தனை சற்றேனும் உள்ளவனாக சித்தரித்தும் சில படங்கள் எடுங்கள்.

தாதாக்கள், அடியாட்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய படங்களை கூட இவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லி வளரும் தலைமுறையினர் அந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சுயநலம் மிக்கவனாகவே பல ஹீரோக்களின் படங்கள் வருகின்றன. இவர்கள் தவறானவர்கள் என அவர்களிடம் நம்மால் நிறுவ முடியாது. பொது உடமை மனநிலை மிகக் குறைந்து வரும் சமுதாயத்தில் ஹீரோக்களும் அவ்வாறே ஆகிவருவது வருத்தத்துக்குரியது.

13 comments:

Dr.Rudhran said...

அதிகம் பேர் பார்க்காத ‘ஏழாவது மனிதன்’ படமும் இப்படித்தான்..மேம்போக்காக இருந்தாலும் கம்யூனிஸ அறிமுகமாக இவற்றை வைத்தும் ஆரம்பித்து வைக்க முடியும் என்பது என் அனுபவம்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி டாக்டர்

KITTU said...

HI MAAPS. VERY FINE. EPPO ERUNTHU IPPADI, SOLLLAVEILLE.

NEERODAI VERY FINE KEEP IT UP

kanagu said...

Interesting topic anna. These days movies are just seen as a form of entertainment and not as something which propagates moral values to people..

If a movie is good I think we can overlook this aspect.

Nice to seen an update after a long time anna :)

ராஜ நடராஜன் said...

பாலசந்தரின் படங்களைக்கூட கம்யூனிச வரிசையில சேர்த்துக்கலாம்.

களவாணி படத்துக்கு எல்லோரும் நல்ல விமர்சனம் சொல்லியிருந்தார்கள்.நான் ஒரே ஒரு பதிவர் விமர்சனத்துக்கு மட்டும் ஊர் சுற்றுவதோடு மட்டுமல்லாமல் எதிர்மறையாக இருப்பவனை கதாநாயகனாக காட்டுவது பற்றி விமர்சித்திருந்தேன்.

ரத்தம்,அரிவாள்,துப்பாக்கி போன்ற வன்முறைப் பொருட்களே கதையின் மையமாக நிறைய தமிழ்ப்படங்கள் வந்துள்ளது வருத்தப்பட வேண்டியதா அல்லது சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா?

சிநேகிதன் அக்பர் said...

இப்பவெல்லாம் அது வெள்ளிதிரையிலிருந்து சின்ன திரைக்கு மாறிவிட்டது அண்ணா.

தியோட்டருக்கு போய் 400, 500 ரூபாய் செலவு பண்ணி படம் பார்க்கிறவங்க இதையெல்லாம் எதிர்பார்த்து போவது இல்லை. இப்பவெல்லாம் கால் லிட்டர் ரத்தம் பீய்ச்சி அடிச்சி ஸ்கிரீனை நிறைச்சாத்தான் படம் பார்த்த திருப்தி. இன்னும் சிலதும் இருந்தாத்தான் படம் ஓடும். :)

முரளிகண்ணன் said...

நன்றி கிட்டு

நன்றி கனகு

நன்றி ராஜ நடராஜன்

நன்றி சினேகிதன் அக்பர்

King Viswa said...

கம்யூனிஸ கொள்கைகளை கம்யூனிஸ்ட்களிடமிருந்தே எதிர்ப்பார்க்க முடியாத நாட்கள் இவை. இதில் சினிமாவில் எதிர்ப்பார்ப்பது தவறு என்பது என் கருத்து.

முரளிகண்ணன் said...

நன்றி கிங்விஸ்வா

செல்வம் said...

இயக்குநர் சிம்பு தேவன் தன் படங்களில் கம்யூனிஸ்ட் அ கம்யூனிசம் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து காட்டி வருகிறார்...

என்ன கம்யூனிசம் என்ற பெயரில் IT இளைஞனைக் கிண்டல் செய்தது தான் பிடிக்க வில்லை அறை எண் 305 ல் கடவுள்

அப்புறம் முரளி..எப்படி இருக்கீங்க...பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன....

அன்புடன்

கடலையூர் செல்வம்

முரளிகண்ணன் said...

செல்வம், நல்ல நலம்.

இப்போ திருப்பூரா சென்னையா?

SIV said...

ஆல்பம் (ஆலயம்??) படத்தில் ஹீரோ கம்யூனிஸ்டு என்று கேள்வி

PRIYADHARSUN said...

achamillai achamillai & thaneer thaneer kooda kamunisum pathi pesina padangal than