May 15, 2012

கலகலப்பு

கடந்த ஒரு மாதமாக நான் பல உறவினர் வீடுகளுக்கு/விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. அத்தை பெண்கள், பெரியம்மா/சித்தி பெண்கள் மற்றும் மதினி, மைத்துனி வகையறாக்கள் எல்லோருமே பொதுவாக சொன்ன விஷயம்


 “இப்பல்லாம் குடும்பத்தோட பார்க்குற மாதிரியா படம் வருது, என்னேரமும் ஹீரோ குடிக்கிறான், தம் அடிக்குறான், பரட்டத்தலை, தாடியோட திரியுறான்”

 அவர்கள் கவலை அவர்களுக்கு, எல்லோருக்குமே பதின்ம வயதில் பையனோ பெண்ணோ இருக்கிறார்கள். அவர்கள் சீரியல் பார்ப்பதில்லை. விளையாடுவதில்லை. இணையம் மற்றும் அலைபேசி தான் பொழுது போக்கு. அவர்களை அழைத்துக் கொண்டு திரையரங்குக்கு போகும் போது பையன்கள் ஹீரோவையும், பெண்கள் தறுதலையை காதலிக்கும் ஹீரோயினையும் ஆதர்சமாகக் கொள்ளக் கூடாதே என்று.

 அதற்காக அவங்களை சோட்டா பீமையா பார்க்கச் சொல்ல முடியும்? என்று கேட்டேன்.

 இல்லை, ரொம்ப விரசம் இல்லாம, தலை வலிக்கிற மாதிரி சண்டை இல்லாம லைட்டா கருத்து சொல்லுற மாதிரி படம் வந்தா எல்லோரும் போய் உட்காரலாம் என்றார்கள்.


 நானும் யோசித்துப் பார்த்தேன் தேனி மாவட்டம், விருதுநகர் சந்திப்பு, மை, பச்சை என்கிற காத்து, ஒத்தவீடு, ஒத்த குதிரை, சேட்டை தனம், சங்கர் ஊர் ராஜபாளையம், பத்திரமா பாத்துக்குங்க, சூரிய நகரம், நண்டு பாஸ்கர், மாட்டுத்தாவணி எல்லாமே மதுரையைச் சுத்தின ரவுடி படம். ஒரு பாட்டு கேக்குற மாதிரி இருக்கா? ஒரு மூஞ்சியாச்சும் நினைவுல நிக்குதா?

 பருத்திவீரனையும், சுப்ரமணிய புரத்தையும் பார்த்து நம்மளை சோதிக்கிறாங்க என்று என் மனம் என்னை அறியாமலேயே புலம்பியது.

 டிஜிடல் வந்ததுக்கான விலை இது. தலைவர் கவுண்டமணி தொழிலதிபர்களை சொன்ன மாதிரி ரியல் எஸ்டேட் பண்ணவன், வட்டி வாங்கினவேன் எல்லாம் புரட்யூசர்ன்னு வந்துடுறாங்க.

 பல குடும்பங்களின் இந்த மனநிலையே ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்கும், கலகலப்புவின் வெற்றிக்கும் காரணம்.

 சென்ற ஞாயிறு கலகலப்புக்கு போயிருந்த போது 30+ பெண்களை இல்லத் தலைவிகளாக கொண்ட குடும்பங்கள் பல வந்திருந்தன. அவர்கள் மாதம் ஒரு முறையாவது படம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை தமிழ்சினிமா கொடுப்பதில்லை என்று தான் தோன்றியது.


 திரையில் கேபிளாரின் பெயர் வந்த போது கை தட்டி மகிழ்ந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். சாப்பாட்டு கடை எழுதியவருக்கு பேக் டிராப்பும் ஹோட்டலாக அமைந்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.


 ஓவியாவுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன ராசி என்று தெரியவில்லை.
 களவானியில் திண்பண்டம் வாங்க நெல் திருடுகிறார்
மன்மதன் அம்புவில் பஜ்ஜி சாப்பிடுங்கோ என்ற ஒரே ஒரு வசனம் மெரினாவில் சாப்பாடு சீதை
இதில் ஓட்டலில் பணி புரிகிறார்.

 அஞ்சலி ரம்மியமாக இருக்கிறார்

 சிவா, விமல், சந்தானம், மனோபாலா வழக்கம் போல.

 சுந்தர் சி சின்னாவில் மன்சூர், பொன்னம்பலத்தை காமெடியன் ஆக்கினார். இதில் தளபதி தினேஷ்ஷை காமெடி பீஸ் ஆக்கிவிட்டர்.

 இளவரசு மற்றும் பச்சை பெருமாளாக வரும் கான்ஸ்டபிள் சர்பிரைஸ் பேக்கேஜ்

  ரசித்த சில விஷயங்கள்

 நாய்க்கு கூகுள் என்ற பெயர்

 சந்தானம் சொல்லும் “பொண்ணுகளைப் பத்தின முக்கியமான விஷயம் எல்லாம் முறை மாமன்களுக்குத்தான் தெரியும்” வசனம். (ஒரு பதிவுக்கான அருமையான மேட்டர்)


ஒரு வருத்தம்

தோஷ நிவர்த்திக்காக அஞ்சலி ஆற்றில் இன்னும் ஒரு முறை முங்கி எந்தரித்து இருக்கலாம்.

 பல வசனங்கள் கேபிளின் பங்களிப்பு என மனதில் பட்டுக் கொண்டே இருந்தது.

 (வெட்டுப்புலி படத்தை வைத்து சந்தானம் பேசும் வசனம்) படம் நல்ல ரிலாக்சேஷன்.

 நன்றி கேபிள், நன்றி சுந்தர்.

2 comments:

Cable சங்கர் said...

நன்றி தலைவரே..

Vetri said...

Very good review