நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம்
“ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.
படம் பார்க்கும் போதே நெருடலாக இருந்த விஷயம் அப்போது விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது.
இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தோடு, பாசமாக, சக மனிதர்களைப் பற்றி அக்கறையோடு இருப்பதாகவும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக இருப்பதாகவும் காட்சிகள் அமைக்கப்படுள்ளன.
சரி ஒரு வாதத்துக்காக ஆக்ஷன் மசாலா படம் என்று சொல்லலாம் என்றால்.
ஆக்ஷன் மசாலாவின் அடிப்படைத் தத்துவம் ஒரு கெட்டவன் அல்லது கெட்டவன் ஆக்கப்பட்டவனை ஹீரோ எதிர்த்து நிற்பது. இல்லையென்றால் பேட்மேன் ஜோக்கர் மாதிரி கேரக்டர்களை எதிர்த்து ஹீரோ ஜெயிப்பது.
இங்கே காட்டப்படும் வில்லன் முதல் கேட்டகிரியாகவே காட்டப்படுகிறான். அவனை தனிமனிதனாக காட்டினால் கேள்வியே இல்லை. மதம் சார்ந்து காட்சிப்படுத்தும் போது அது முழுக்க முழுக்க தவறே.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து கொண்டும், மத வாசகங்களை பேசியும் செய்கிறார்கள்.
அப்படியென்றால் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நேரடியாக சொல்லப்படுகிறது. மற்ற திரைப்படங்களில் சில முஸ்லிம்களை நல்லவர்களாகக் காட்டி எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இங்கே அது மிஸ்ஸிங்.
எம்ஜியார், ரஜினியை 50 படங்களுக்கு அப்புறம் எந்த வித பில்ட் அப் காட்சிகளும் இல்லாமலேயே நல்லவராக ஏற்றுக் கொண்டதைப்போல
இங்கே முஸ்லிம்கள் எந்தவித ஜஸ்டிபிகேஷன் காட்சிகளும் இல்லாமலேயே கெட்டவர்களாக காட்டப்படுகிறாள். இது ஆபத்தான போக்கு.
நான் பார்க்கும் போது அருகே ஒரு முஸ்லிம் குடும்பமும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. சில காட்சிகளின் போது எழுந்த சப்தம் அவர்களை அங்கே சங்கடப்படுத்தியது.
தற்போதுஎன்னைப்போன்ற வயதில் உள்ளவர்கள் ஆக்ஷன் படத்திற்குப் போவதே சிறுவர்களின் பொழுதுபோக்கு/வற்புறுத்தல் காரணங்களுக்காத்தான். அவர்கள் இதற்கும் நிறைய அளவில் வந்திருந்தார்கள். எத்தனை சிறுவர்களின் மனதில் இந்த கேள்வி எழுந்ததோ?
படத்தில் டைட்டிலுக்கு முன் ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” என்று போட்டார்கள். எவ்வளவு பேரை மனச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள் முருக தாசரே?
தாணு மலயமாமணிக்கும், சந்தோஷ சிவனுக்கும் கூட இது உறைக்காதது ஆச்சரியமே!
சென்சார் சர்டிபிகேட்டில் ஒரு முஸ்லிம் அன்பரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பிரிவியூ தியேட்டர் ஏசியில் உறங்கியிருந்திருப்பார் போலும்.
படம் நல்ல லாஜிக்கோடு இருக்கிறது என்று வேறு சொன்னார்கள். பல இடங்களில் ஓட்டை இருக்கிறது.
அருகாமையில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்கள்/அன்பர்களிடம் மாற்று மத குழந்தைகள் தள்ளி இருக்கச் செய்யும்படி இருக்கிறது இந்தப் படம்.

8 comments:
உங்களின் நடுநிலைக்கு மிக்க நன்றி சகோதரே ....
நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக சிறு குழந்தைகள் மனதில் இந்த கேள்விகள் எழும்...
இனியாவது திரையுலகம் திருந்த வேண்டும்...
thanks for sharing your great thoughts Sir..!
மிகச்சரியாக சொன்னீர்கள் முரளிகண்ணன்.. நன்றி!
say only true be like a man
say only true be like a man
இந்தியாவின் பாதுகாப்பின் கிழிசைகளின் ஓட்டைகளில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் கோர முகத்தால் அச்சுறுத்தி வருகிறது. (அதற்கென்ன.. நமக்கு முஸ்லிம் தான் தீவிரவாதி)
ராணுவத்தின் உயர் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு, தங்கள் அஜெண்டாவை நிறைவேற்ற ஆர்.டி.எக்ஸை கொடுத்து உதவியதும், முதல் முதலாக "ஸ்லீப்பர் செல்களாக" செயல்பட ப்ரோகித் என்பவனை ராணுவத்திற்குள் ஊடுறுவ விட்டு இந்திய பாதுகாப்பிற்கே சவால் விடுகிறது இந்துத்துவ பயங்கரவாதம். (அதனாலென்ன.. நமக்கு முஸ்லிம் தான் தீவிரவாதி)
தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டும். ஒன்றை மென்மையாகவும் அல்லது மறைத்து விட்டும் மற்றொன்றை வன்மையாகவும் அல்லது வன்மத்துடனும் ஏன் காட்ட வேண்டும்?
சினிமாக்காரர்களே.. ஏனிந்த இரட்டை நிலை உங்களுக்கு.!
உண்மையானா சமூக அக்கறை உள்ளவரின் கருத்து வெளிப்பாடு. அதோடு அறிவு முதிர்ச்சியும் தெரிகிறது. நன்றி! வாழ்த்துக்கள்.
Post a Comment