1991ல் இந்திய
அணி அசார் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றது. உண்மையிலேயே மிக நீண்ட நாள்
சுற்றுப்பயணம். அசார், தான் அப்போது எழுதிவந்த ஒரு பத்திரிக்கை பத்தியில் கூட பிரிவுத்துயர்
எங்களை வாட்டுகிறது என்று எழுதினார். 5 டெஸ்டுகள், இந்தியா, ஆஸி, வெ இ அணிகள் பங்கேற்ற
முத்தரப்பு தொடர் அதன்பின்னர் உலககோப்பை. டெஸ்டு தொடருக்கு முன் மூன்று பயிற்சி ஆட்டங்கள் வேறு.
ஆஸ்திரேலிய கண்டத்தின்
குறுக்கும் நெடுக்கும் நம் அணிவீரர்கள் அலைக்கழிக்கப் பட்டாலும் இந்திய கிரிக்கெட்
அணி எத்திசையில் செல்ல வேண்டுமென தேர்வாளர்களுக்கு கோடிட்டு காட்ட உதவியது அந்த சுற்றுப்பயணம்.
ஸ்ரீகாந்த்,ரவிசாஸ்திரி மற்றும் கபில்தேவ் ஆகியோரிடம் இருந்த கிரீடங்கள் சச்சின் தலைக்கு
மாறியது. முத்தரப்பு தொடரின் போது மூன்று வீரர்களை
எதிர்கால சூப்பர்ஸ்டார்கள் என புகழ்ந்தது மேற்கத்திய மீடியாக்கள். சச்சின், லாரா, ஸ்டீவ்வாக்
ஆகியோர்களே அவர்கள்.
அதன்பின் வந்த
92 உலககோப்பையில் இன்சமாம் ஒரு காட்டு காட்டிய உடன் சச்சின், லாரா, இன்சமாம் என அதே
மீடியாக்கள் எழுதின.
93ஆம் ஆண்டு மார்க்வாவின்
எண்ட்ரியைத் தொடர்ந்து இன்சமாமுக்கு பதில் அவரை கொண்டாடத்துவங்கின மீடியாக்கள். பின்னர்
ஸ்டீவ்வாவ் அந்த பட்டியலில் மீண்டும் இடம் பிடித்தார்.
வாவ் பிரதர்ஸின்
ஓய்வுக்குப் பின் பாண்டிங்கை அந்த இடத்தில் வைத்தன மீடியாக்கள். லாரா ஓய்வுக்குப் பின்
அது அதிக செஞ்சுரி என்னும் பரிணாமத்தை அடைந்து சச்சின், காலிஸ், பாண்டிங் என்ற பந்தயம்
தொடங்கியது.
இப்போது பாண்டிங்
அந்த பந்தயத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அந்த மீடியா
ஹைப்பில் இருந்தவர் பாண்டிங். அதற்கு அவர் தகுதியானவர் தானா?
பாண்டிங் 95ல்
இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆன போது, டெய்லர் காப்டன். 80களின் மத்தியில் சரிந்து கிடந்த
ஆஸியை பலமாக்கி அவர் கையில்கொடுத்திருந்தார் ஆலன் பார்டர்.
அப்போது வெ இண்டீஸின்
அம்புரோஸ், வால்ஷ் ஆகியோர் தங்கள் வசந்தத்தின் பிற்பகுதில் இருந்தார்கள். வாசிம் அக்ரம்
மற்றும் வக்கர் யூனிஸும் கூட. இந்தியா, இலங்கை, இங்கிலாந்தில் நல்ல பவுலரே இல்லை. முரளிதரன்
மலர்ந்து கொண்டிருந்த தருணம் அது. அவர் மீது ஆஸ்திரேலிய அம்பயர்கள் காட்டிய காண்டு
அனைவரும் அறிந்ததே.
தென் ஆப்பிரிக்காவில்
மட்டுமே டொனால்ட்,போலக் என்ற பலமான கூட்டனி இருந்தது.
எனவே பாண்டிங்
அறிமுகமாகி பல மேட்சுகள் எந்த பிரஷரும் இல்லாமலேயே ஆடினார். வார்னே, மெக்ராத், கில்லெஸ்பி
பவுலிங்கில் மற்ற அணிகளை சாய்க்க, டெய்லர், ஸ்லாடர், வாவ் பிரதர்ஸ் பேட்டிங்கில் ஆடிவிட
வசதியான குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே நல்ல வேலை கிடைத்த அதிர்ஷ்டக்காரனாகவே
வளர்ந்தார் பாண்டிங். இவர்கள் ஆடாவிட்டாலும் பின் வரிசையில் ஹீலே வேறு.
டெய்லர் ஓய்வு
பெற்றதும் ஸ்டீவ் வாவ் கேப்டனாக, அணி இன்னும் பலம் பெற்றது. ஹெய்டன், லாங்கரின் வருகை,
கில்கிறிஸ்ட் என்ற நூறாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என
அணி அசுரபலம் பெற்றது.
மாறாக இதே சமயத்தில்
மற்ற அணிகளின் சிறந்த பவுலர்கள் ஓய்வு பெற்றார்கள். இந்த காலகட்டத்தில் ஆஸி விளையாடிய மேட்சுகள் ஐந்து நாட்கள் நடந்தால் ஆச்சரியம் என
பேசப்பட்டது. எதிர் அணி கேப்டன்கள் யாருக்கு வியூகம் வகுப்பது என திண்டாடிப் போனார்கள்.
ஆஸி முதல் பேட்டிங் என்றால் ஹைடன் லாங்கர் ஜோடி நல்ல அடித்தளம் இட்டிருக்கும். பின்
ரிக்கி வந்து ஆடிக்கொள்வார். பின்னர் வாவ், கில்லி யெல்லாம் வருவார்களே என முக்கிய
பவுலர்களை பிரஷாக வேறு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எதிர் அணி கேப்டனுக்கு.
இரண்டாவது பேட்டிங்
என்றாலோ முதலில் ஆடிய அணி பெரும்பாலும் சுருண்டிருக்கும். டீ மாரலைஸ் ஆன அணியை இவர்கள்
சுளுக்கெடுப்பார்கள்.
டெஸ்டில் ஆடும்போது
ஒரு பேட்ஸ்மேனை அவன் சந்தித்த சூழலில் எப்படி ஆடினான் என்பதை வைத்தே கணிக்க முடியும்.
ஆர்தர்டன் தெ ஆ
க்கு எதிராக அடித்த 185, ராபின் ஸ்மித், ஸ்டீவ், மார்க் வாவ் ஆகியோர் வெ இ க்கு எதிராக
அடித்த சதம், லட்சுமண் – கல்கத்தா ஆட்டம், லாரா, டிராவிட்டின் பல ஆட்டங்கள், சச்சினின்
பெர்த் டெஸ்ட் போன்றவை கடுமையான சூழலில் எடுக்கப்பட்டவை. அம்மாதிரி புகழ்பெற்ற ஆட்டங்களுக்குப்
பின்னரே அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.
ஆனால் ரிக்கி,
கன்ஸிஸ்டெண்டாக பெர்பார்ம் செய்து வந்தாரே தவிர உலகை திரும்பி பார்க்க வைக்கும் ஆட்டத்தை
(டெஸ்டுகளில்) வெளிப்படுத்தியதில்லை. 2003 உலக் கோப்பை பைனலில் இந்தியாவை பெண்டு எடுத்த
பின்னர் தான் அவர் தொடர்ச்சியாக பல சதங்கள் டெஸ்டு அரங்கில் அடித்தார். அவை எல்லாமே
பிள்ளைப்பூச்சிகளுக்கு எதிராக.
2003-07 வரையிலான
ஆஸி வெற்றிகளும் அந்த சமயத்தில் அவர் குவித்த ரன்களுமே அவரை டாப் 3 க்கு கொண்டு சென்றன.
அச்சமயத்தில் திரெட்னிங் பவுலர் என்ற வர்க்கமே மற்ற அணிகளில் இல்லை.
வெ இண்டீஸில் லாராவுக்கு
மட்டும் பிளான் பண்ணினால் போதும். இந்தியா என்றால் சச்சினுக்கு. ஆனால் ரிக்கிக்கு அப்படி
ஏதும் பிளான் பண்ணும் அளவுக்கு சூழ்நிலை அமையவே இல்லை. அப்படி அவர் ஸ்குருட்னி பண்ணப்பட்டிருந்தால் மைக்கேல் பெவனை காலி பண்ணியது போல் இவரையும் பண்ணியிருப்பார்கள்.
ஆனால் அவரை சோதனைக்கு
உள்ளாக்கியவர்கள் என்றால் மூவர். 2001ல் ஹர்பஜன், 2005ல் பிளிண்டாப், 2007ல் இஷாந்த்
சர்மா. ஆப் ஸ்டம்பிற்கு சற்றுத்தள்ளி குட் லெங்த்தில் விழுந்து உள்ளே வரும் பந்துகள்
ரிக்கிக்கி அலர்ஜி என்று தோலுரித்துக் காட்டியவர்கள் இவர்கள். என்ன அதை மெயிண்டைன்
செய்ய மற்றவர்களால் முடியவில்லை.
எனவே ஆஸி லெவல்
பிளேயிங் பீல்டுக்கு வந்தபின்பு (வார்னே, கில்லி, மெக்ராத், ஹெய்டன் ஓய்வு பெற்ற பின்)
வந்த மேட்சுகளைப் பார்த்தோமேயானால் பிரஷர் சிட்சுவேஷன்களில் பாண்டிங் அவ்வளவாக சோபிக்கவில்லை
என்றே சொல்லலாம்.
பேட்டிங்கில் அவர்
பலம் முழுவதும் பிரண்ட் புட்டில்தான். ட்ரைவ், புல் ஷாட் எல்லாமே பிரண்ட் புட்டில்தான்
இருக்கும். பேக் புட் ஸ்கொயர் கட் அவருக்கு அவ்வளவாக வராது. அவர் ஆட வந்தவுடன் பேக்புட்டிற்கு
அவரைக் கொண்டு சென்றாலே அவர் விக்கெட் எடுக்க வழி பிறந்து விடும். ஆனால் அப்படி கொண்டு
செல்ல , வியூகம் வகுக்க பவுலர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.
உங்களின் வாழ்க்கைக்காக
ஒருவர் இரண்டு செஷன் அவுட் ஆகாமல் ஆடவேண்டும் என்றால் உங்களின் மனதில் ட்ராவிட் அல்லது
ஸ்டீவ்வாக் நினைவு வரும். உங்களின் கண்பார்வை போகப் போகிறது அதற்குள் யாராவது ஒருவரின்
செஞ்சுரியைப் பார்க்கலாம் என்று சொன்னால் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் பெயர் ஞாபகம்
வரும். ஆனால் ரிக்கிக்கு இதுமாதிரி எந்த சிறப்பும் வாய்க்கப் பெறவில்லை.
ரிக்கிக்கு பிளசே
இல்லையா? என கேட்கலாம். ஏன் இல்லாமல்?
ஆஸி அணியில் அப்போது
மிடில் ஆர்டர் இடம் கிடைப்பது அரிது, ஹுசே போன்றோர்க்கு எல்லாம் கிழடு தட்டிய பின்தான்
இடம் கிடைத்தது. ஆனால் பாண்டிங் 20 வயதிலேயே உள்ளே வந்தது திறமைதான். டாஸ்மானியா அணியில்
அவர் காட்டிய கன்ஸிஸ்டென்சி அதற்கு காரணமாய் இருந்தது. அதை அவர் மிக அருமையாக உபயோகம்
செய்து கொண்டார்.
மேலும் ஆஸி எப்பொழுதுமே
பீல்டிங்கில் கம்ப்பேரடிவ் ஆக நன்கு செய்வார்கள். கேட்ச் விடுவது, காலுக்கு இடையே போர்
விடுவது எல்லாம் கிரிமினல் குற்றங்களாகவே கருதப்படும். ஆனால் அங்கும் சிலர் எக்செப்ஷனலாக
பீல்டிங் செய்வார்கள். டீன் ஜோன்ஸ் அப்படிப்பட்ட ஒருவர். அதுபோலவே ரிக்கி வந்த புதிதில் எக்செப்ஷனல் பீல்டராக விளங்கினார்.
பவுண்டரி லைனை நோக்கி ஓடும் பந்தை அவர் விரட்டி செல்வது (95 வாக்கில்) இன்னும் கண்ணுக்குள்ளேயே
நிற்கிறது.
மேலும் ஆஸி அணிக்கு
கோபமான மற்றும் ஸ்லெட்ஜிங் கேப்டன்கள் என்றால் மிகப் பிடிக்கும்.
ஸ்டீவ் வாவுக்குப்
பின் வார்னே அல்லது கில்லிதான் கேப்டனாக வருவார்கள் என எதிர்பார்த்த போது ரிக்கி வந்தது
ஆச்சரியம். (அவர்கள் இருவரும் பின் தங்கள் கெப்பாசிட்டியை ஐ பி எல்லில் காட்டினார்கள்)
ஆரம்ப கட்டத்தில்
மற்றவர்களிடம் குத்து வாங்கிய ரிக்கி (98 கல்கத்தா டெஸ்ட் முடிந்தவுடன் நடந்த பார்ட்டியில்
ஒரு பெண் கையைப் பிடித்து இழுத்து குத்து வாங்கியது பின்னர் ஆஸியில் ஒரு பாரில் பெண்ணைப்
பார்த்து சைகை காட்ட அவள் காதலன் மூக்கில் குத்தியது) பின் மற்ற அணிகளுக்கு அதை திருப்பித்தந்தார்,
முக்கியமாக ரிக்கி
பாண்டிங் கடுமையாக எந்த சூழலிலும் போராடும் டிபிகல் ஆஸி மெண்டாலிட்டி கொண்டவர். அந்த
ஜெனெரேஷனின் கடைசி பிளேயரும் அவரே. இப்போதுள்ள கிளார்க் அணியில் அந்த அளவு வெறி கொண்டவர்களை தேட வேண்டியுள்ளது.
ரிக்கி பாண்டிங்கின்
வெற்றி சொல்வது எல்லாம் ஒன்றுதான். கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து விடக்கூடாது. நமக்கு
நன்றாக வருவதை தொடர்ந்து பிராக்டிஸ் செய்து நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். பின் மற்றவை தானே நடக்கும் என்பதே அது.
25 comments:
உண்மையில் ரிக்கி ஒரு சிரந்த வீரர்தான்...
இன்றைய தருனத்தில் அவரின் கடந்த கால நினைவுகள் மிகவும் அவசியமானதொன்று
எப்போதும் போல் செம Analysis சார். விரைவில் Sachinக்கும் இப்படி ஒரு பிளாக் எழுதனும் :) :)
Super article...rare to see such deep analysis in Tamil...Hats off... :)
சில இடங்களில் மாறுபடுகிறேன்...ரிக்கி பெயர் சொல்லும் படி ஆடிய இன்னிங்க்ஸ் ஒன்றுமே இல்லை என்பது போல் உள்ளது உங்கள் பதிவு...
டைல் என்டர்ஸ் வைத்து அவர் 2005 ஆசெஸ் சீரீஸ் 3rd டெஸ்டில் ஸ்விங் பிட்சில் போட்டியை டிரா செய்ய அவர் அடித்த 156 ரன்களை என்றுமே மறக்க முடியாது. அது போன்ற இன்னிங்க்ஸ் இது வரை சச்சின் கூட ஆடியது கிடையாது.
இந்தியாவில் வேண்டும் என்றால் ரிக்கி சொதப்பி இருக்கலாம், ஆனால் ஸ்பின் ஆட தெரியாதவர் கிடையாது. இலங்கைளில் அவரின் ரெகார்ட் நன்றாகவே இருந்தது. இந்தியா தவிர்த்து ரிக்கி அணைத்து நாடுகளிலும் சேபித்து உள்ளார்..
rich rickki ponding... super article...vaalththukkal
rich rickki ponding... super article...vaalththukkal
அப்பாடா,
ஒருவழியாக ரிக்கி பாண்டிங் பற்றி சரியாக எழுதப்பட்ட ஒரு பதிவினை படிக்கின்றேன். நன்றி.
ஒரே ஒரு சிறு கரெக்ஷன்; மார்க் வாஹ் முதன்முதலில் அறிமுகம் ஆனது 1991 ஆம் ஆண்டு ஆஷஸ் போட்டியில்தான். நீங்கள் குறிப்பட்டது போல 1993இல் அல்ல. முதல் போட்டியில் அவர் ரீப்ளேஸ் செய்தது அவரது சகோதரியே என்பதும், முதல் போட்டியிலேயே அவர் சதமடித்தவர் என்பதும் உங்களுக்கு தெரிந்ததே.
அதைப்போலவே பாண்டிங்குக்கு குடிப்பிரச்ச்னை இருந்தது. அவரை கேப்டனுக்கு தேர்வு செய்தபோது அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரே விவாதம் குடியே.
BTW, Welcome back, Sir.
//அவரது சகோதரியே என்பதும்// என்று இருப்பதை
//சகோதரரையே என்பதும் //
என்று மாற்றிப் படிக்கவும்.
பாண்டிங் ஒரு நல்ல பேட்ஸ்மேன்.. ஆனால் அசிங்கமான கேப்டன்... முந்தா நேத்தி மேட்ச் பார்த்துட்டு இருக்கறப்ப ஐயான் சேப்பல் காமெடியா ஒரு கமெண்ட் அடிச்சாப்ல.. அதாவது பாண்டிங் ரோட்ஸ விட நல்ல பீல்டருன்னும் , ரோட்ஸ விட நிறைய தடவ டேரக்ட் ஹிட் அடிச்சு ரன் அவுட் பண்ணிருக்காருன்னும்... அடேய்ன்னு இருந்துச்சு...
நன்றி சிட்டுக்குருவீன் ஆதமா
நன்றி சேது
நன்றி ராஜ்.
\\டைல் என்டர்ஸ் வைத்து அவர் 2005 ஆசெஸ் சீரீஸ் 3rd டெஸ்டில் ஸ்விங் பிட்சில் போட்டியை டிரா செய்ய அவர் அடித்த 156 ரன்களை என்றுமே மறக்க முடியாது\\
நிச்சயமாக.
தற்போது ஃபேஃப் டு பிளஸ்ஸி கூட அப்படி ஒரு ஆட்டத்தை இரண்டாவது டெஸ்டில் ஆடினார்.
ஆனால் ரிக்கியை கிரேட் என்று மக்கள் சொல்லும் போது பெஸ்ட் என்றால் ஒக்கே என்றே சொல்லத்தோன்றுகிறது
நன்றி கிங் விஸ்வா
நன்றி மதுரை சரவணன்
நன்றி க ரா
அசத்தலா அனலைஸ் பண்ணிருக்கிங்க. வேண்டுகோள் வீண் போகல :-)
நல்ல அலசல்! உண்மைதான்! லாரா,லக்ஷ்மண் டிராவிட் போல சிறந்த இன்னிங்ஸ் ஆடவில்லை பாண்டிங்! ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்!
Read it only now. Excellent review. How do you remember so much of things !!
நன்றி கே வி ஆர்
நன்றி சுரேஷ்
நன்றி மோகன்குமார்
//தான் அப்போது எழுதிவந்த ஒரு பத்திரிக்கை பத்தியில் கூட பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என்று எழுதினார்//
may be bijlani
You missed one thing
Ponting's inflated average during 2003 to 2006 was because he was playing with an illegal graphite bat
once that was detected and he was forced to switch to normal bat, he was back to normal
--
Average batsman before graphite bat
Extraordinary batsman with graphite bat
Average batsman before graphite bat
---
That's all
//டைல் என்டர்ஸ் வைத்து அவர் 2005 ஆசெஸ் சீரீஸ் 3rd டெஸ்டில் ஸ்விங் பிட்சில் போட்டியை டிரா செய்ய அவர் அடித்த 156 ரன்களை என்றுமே மறக்க முடியாது. அது போன்ற இன்னிங்க்ஸ் இது வரை சச்சின் கூட ஆடியது கிடையாது.//
That was with Graphite Bat
Give such bat to Harbhajan Singh
He will score 200
http://www.thatscricket.com/news/2006/02/17/1702ponting-bat-illegal.html
http://www.espncricinfo.com/ci/content/story/237489.html
http://www.taipeitimes.com/News/sport/archives/2006/02/18/2003293627
கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி டாக்டர்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Goof writing, I felt it was easy to read..
Ponting is a typical fighter..
Moreover once he came to know he can bat as his earlier times, he retired on time..
Ravi
www.filmbulb.blogspot.in
www.teashoptalks.blogspot.in
Goof writing, I felt it was easy to read..
Ponting is a typical fighter..
Moreover once he came to know he can bat as his earlier times, he retired on time..
Ravi
www.filmbulb.blogspot.in
www.teashoptalks.blogspot.in
Post a Comment