தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில்
கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக நடம் ஆடக்கூடியவர்,
காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான
வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்தவர் என்று பார்த்தால் அதிலும் கமலே நம் நினைவுக்கு
வருவார்.
கமல் படம் என்று நான் தெரிந்து பார்த்த சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை ஏராளமான சண்டை காட்சிகள் நினைவுக்கு வந்து போகின்றன.
சகல கலா வல்லவனில்
ஒரு சகதி சண்டை, சிலம்பு சண்டை, கார் சேஸிங் என மசாலா படங்களுக்குரிய சண்டைகள் அனைத்தும்
சிறப்பாக இருக்கும். அதன் பின் வந்த காக்கிச் சட்டையில் ட்ரைலர் லாரியில் நடக்கும்
சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று. அப்படம் வந்து சில ஆண்டுகள் வரை ட்ரைலர் லாரியை
அடையாளம் சொல்ல காக்கிச்சட்டை படத்துல வர்ற லாரி என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ராம்
லட்சுமண் படத்தில் வரும் சிலம்பு, ஜூடோ, கராத்தே சண்டை, தூங்காதே தம்பி தூங்காதேயில்
உட்காரும் பெஞ்ச் வைத்து போடும் சண்டை என மசாலா சண்டைகள் நிறைய இருக்கும். பெரும்பாலும்
இவையெல்லாமே ஆங்கில, சீன படங்களின் பாதிப்பிலேயே இருக்கும்.
ஒரு கைதியின் டைரி
படத்தில் புது ரோசாப் பூவு பாடலில் கமலுக்கு
சற்று உயரத்தில் ஒரு கூண்டினுள் நின்று நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பில்
திடீரென கூண்டு அறுந்து கமலின் வயிற்றின் மீது நடிகை கூண்டோடு விழுந்தார். அனைவரும்
பதறி விட்டனர். ஆனால் கமல் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வயிற்றைக் கல்லாக்கியதால்
தப்பித்தார். இதன் பின்னரே கமல் தன் ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு இன்சூரண்ஸ் எடுக்க
வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தார். புன்னகை மன்னன் படத்தில் தற்கொலை செய்ய குதித்து மரத்தில்
தொங்கும் காட்சி போல பல ரிஸ்கான காட்சிகளில் அக்காலத்தில் நடித்து வந்தார்.
நாயகன் படமே சண்டைக்
காட்சிகளிலும் கமலுக்கு திருப்பத்தை தந்தது எனலாம். அதன் பின்னரே அவர் சற்று ரியலிஸ்டிக்கான
சண்டைக் காட்சிகளின் பக்கம் திரும்பினார். ரத்தத்திற்குப் பதில் சிகப்பு சாயம் ஊற்றுவதை
நிறுத்தினார். காயங்கள் காயம் போலவெ தெரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த சத்யா படத்தில்
சண்டிக் காட்சிகளில் சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளே
இடம் பிடித்தன. பாலத்தின் மீதேறி தப்பி ஓடும் கமலின் நண்பனை காலில் வெட்டும் காட்சிகள்
அப்போது தமிழுக்குப் புதிது.
தேவர்மகனில் இன்னும்
மெருகேறியது சண்டைக் காட்சிகள்.
சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. மகாநதி படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது.
சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. மகாநதி படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது.
குருதிப்புனலின்
ரயிலின் முன் தாவும் காட்சி, சில துப்பாக்கிச் சூடு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தியனில் சுதந்திர போராட்ட வீரனின் சண்டைக் காட்சிக்கும், மகல் கமலின் சண்டைக் காட்சிக்கும்
பெரிய வேறுபாடு இருக்கும். பெரியவராக வர்மக்கலை உபயோகித்து போடும் சண்டைகளும் செம ஸ்டைலாக
இருக்கும். (நெடு முடி வேணுவை தாக்கி தப்பிக்கும் காட்சி).
அதன்பின் எடுத்து
கைவிடப்பட்ட மருதநாயக ட்ரெயிலரிலேயே நான்கைந்து
சண்டைக் காட்சிகள் இருக்கும். வேலால் ஒருவர் குத்த வரும் போது, அடுத்துப் போட்டு விட்டு
எருமை மாட்டில் ஏறி தப்பிப்பது, அருவியின் மீதிருந்து பெரிய பாறையை உருட்டி விட்டு
பலரை கொள்வது என. அந்த ட்ரெய்லரில் குதிரையின் கண்களில் கூட ஒரு கோபம் இருக்கும். காட்சி
எடுக்கும் முன்னர் அக்குதிரையை சீண்டுவாராம் கமல்.
பின் வந்த ஆளவந்தானிலும்
திரில்லுக்கு குறைவில்லை. சிறை கான்கீரீட்டை பல்லாலேயே கடித்து, சகோதரனின் தம்பி மனைவி
மீது ஆக்ரோஷமாக துப்புவது. சகோதரனைக் கொல்ல துரத்துவது என.
பின் வந்த பம்மல் கே சம்பந்தத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார்.
பின் வந்த பம்மல் கே சம்பந்தத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார்.
விருமாண்டியில்
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காட்சி, ஓடும் வண்டியில் இணைக்கப்பட்ட கட்டையில் புல் அப்ஸ் எடுப்பது, சுற்றி உடலை வளைப்பது, கொத்தாளத் தேவர் வீட்டில் அரிவாள் எரியும்
காட்சி, நல்லம நாயக்கர் தோட்டத்து ஆட்களை கொல்ல வரும் காட்சி என பல சிறப்பான காட்சிகள்
உண்டு. காரில் வரும் போதே ஜன்னல் வழியாக அரிவாள் வீசுவது என கமலின் டைரக்டர் டச் அதில்
தெரியும். கிளைமாக்ஸான சிறைக் கலவரம் காட்சியும் மறக்க முடியாத சண்டைக் காட்சி.
தசாவதாரத்தில்
நம்பி போடும் பழங்கால சண்டை, பிளட்சரின் வெறித்தன சண்டை, ஜப்பானிய கமலின் குங்பூ சண்டை
என வித்தியாச சண்டை காட்சிகள். அதிலும் பிளட்சரின் ஆரம்ப சண்டைக் காட்சியும், சிதம்பர
சண்டைக் காட்சியும் விறு விறுப்பாக இருக்கும்.
இப்போது விஸ்வரூபத்திலும்
சண்டை காட்சிகள் வித்தியாசமாக அமைந்துள்ளன. கார் வரும் போது ஜன்னல் கண்ணாடியை சுட்டு,
காரினுள் குதிப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் பலரை அடுத்து வீழ்த்துவது என.
கமல் தனக்கென சண்டைக்
காட்சிகளில் ஒரு பாணியை வைத்துக் கொள்ளாமல் கேரக்டரின் குண நலனுக்கு ஏற்ப சண்டை போடுவதாலேயே
இத்தனை வித சண்டைக்காட்சிகளை கொடுக்க முடிந்தது. மேலும் அவர் சேகரிக்கும் வித வித பொருட்களும்
சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் வைக்கின்றன. கலைஞனில் ஸ்டிலட்டோ, விஸ்வரூபத்தில் மூன்றாய்
பிரியும் கத்தி, நாயகனில் நிஜ துப்பாக்கி என சண்டைக்காட்சிகளுக்கு வலு சேர்க்க முடிகிறது.
17 comments:
செம கமல் fan போல நீங்க :-) நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்க.விஸ்வரூபத்தில் ஸ்டன்ட் காட்சிகள் அற்புதம். அதிலும் யாருக்கும் அடிபடாதது மிகவும் பாராட்டுக்குரியது.
amas32
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூப்பர் பாஸ், ரொம்ப நல்லா தொகுத்து இருக்கீங்க...
எனக்கு பிடிச்சது "சத்யா" சண்டை தான்.. எல்லோரும் உண்மையிலே சண்டை போட்ட மாதிரி இருக்கும்.
தூள் அண்ணே ;))
நன்றி ராஜ்
நன்றி கோபிநாத்
Kamal is a master of all arts and a genius . So far he has got only a raw deal in India especially in Tamil Nadu. Had he born in US by now he would have got atleast 50 OSCARS by now. I feel sad for Kamal
நேத்து நாம் ட்விட்டரில் பேசியதில் விஸ்வரூபம்,குணா,வெற்றிவிழா,இந்தியன்,மை.ம.காமராஜன்,மும்பை எக்ஸ்பிரஸ்,அ.சகோதர்கள்,விக்ரம்,..... இதெல்லாம் விட்டுப்போய்விட்டது.
கண்டிப்பா நீங்க இதப் பத்தி ஒரு பதிவு போடுறீங்க :))))
//Had he been born in US (or at least in Kerala) by now he would have been .... //
ஒரு காலத்தில இதை நான் சிவாஜிக்கு சொன்னதுண்டு ...!
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் கமல் அதிக ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்தவர். நிறைய படங்கள் உண்டு . எனக்குள் ஒருவன் படத்தை நீங்கள் ஏன் கூறவில்லை. பார்க்காதவர்கள், அதன் சண்டை காட்சிகளையாவது பாருங்கள். நான் எனது சிறு வயதில் ரஜினி ரசிகன்தான்.ஆனால் அப்போதே கமலின் திறமையை நன்கு தெரிந்து கொண்டிருந்தேன். ஏக துஜே கேலியே படத்தில் " ஹம்பனே" பாடல் ஆரம்பத்தில் கமல் பைக் ஒட்டி வருவார். அருமையாக இருக்கும்.
ராம் லஷ்மணனில் ஒரே சண்டையில் பலவிதமான விசயங்கள் இருக்குமே..
Excuse me for writing in English.
Honestly I haven't seen a post like this. For someone to find difference in **fights** of an actor has to be really.. mad ( I cant find a better word). Hats off to your craziness.. :-)
Ravi
www.filmbulb.blogspot.com
www.teashoptalks.blogspot.com
post after long delay, good work bro.
Sir,
Nobody cannot explain than you for kamal fight reaction in cinema. Your collection is really superb and realistic. We expect more from you.Bye sir
You have put in writing what I exactly feel about about my favourite actor Kamal's fight scenes
Great Collection
What I wrote about dasavatharam in my blog
சண்டை நடிகர் : ஷின்கன் நரஹசி,ஜப்பானியர் : இவரின் ஒப்பனை உறுத்தாது ஒரு ஆச்சரியமே. இவர் ஜப்பானியர் அல்ல என்று நம்புவதே சிரமம் தான். ரஜினியை தொடர்ந்து கமலும் ஜப்பனிய சந்தையை குறிவைக்கிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஜப்பானியர்கள் எப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை. அதனால் என்னால் ஒப்பீடு செய்ய முடியவில்லை. ஆனால் அவர்களின் நடையை பல முறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். அது ஒரு விதமான shuffling gait (இது போல் goorkha gait, sailor gait எல்லாம் கூட உண்டு) என்பார்கள். இவர் வந்த பெரும்பாலான காட்சிகளில் கராத்தே தான் என்றாலும் ஒரு காட்சியில் (காவல் நிலையம் என்று நினைக்கிறேன்) ஒரு ஜப்பானியரை போல் கமல் நடந்தது அவர் இந்த படத்திற்கு எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. (இந்தியன் தாத்தாவும் இது போல் தான் நடப்பார்.)
இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல. கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
இவரை (தற்காப்பு கலையான கராத்தே நிபுனரை) பரசுராமருடன் (தற்காப்பு கலையான களரி) ஒப்பிடலாம்.
Good post , kamal has done lot of stunts, i do not mean the fight sequences. Like in GURU , he will smash a glass with bare hands. in sakalakalavallavan, he will break through a glass during illamai itho song.in sathya, he will be thrown from a van on a barbed fence. the list is endless.
Good post , kamal has done lot of stunts, i do not mean the fight sequences. Like in GURU , he will smash a glass with bare hands. in sakalakalavallavan, he will break through a glass during illamai itho song.in sathya, he will be thrown from a van on a barbed fence. the list is endless.
Post a Comment