November 25, 2013

பிரசாந்தும் ஆர்யாவும்

90ஆம் வருடம். தினமலர் துணுக்கு மூட்டையில் ஒரு செய்தி. மம்பட்டியான் மகன் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமாகிறார். சம்பளம் 50,000 ரூபாய். இதுவரை எந்த புது முகத்திற்கும் கிடைத்திராத தொகை இது என்று. படம் வெளியாகி வெள்ளி விழா கண்டது. பிரசாந்துக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

அதற்குப்பின் இரண்டு சுமாரான படங்களில் நடித்தாலும், பெரிய இயக்குநர்களின் கண்பார்வையில் பட்டார்.

பாலுமகேந்திரா, மணிரத்னம், அகத்தியன், ஷங்கர், மணிவண்ணன், செல்வமணி, சுசி கணேசன், வசந்த், சுந்தர் சி, ஹரி, பி வாசு, வெங்கடேஷ் என வெரைட்டியான இயக்குநர்கள்.

காவேரியில் ஆரம்பித்து, ரோஜா, சிம்ரன், லைலா, சிவரஞ்சனி,ஷாலினி, சினேகா, ரியா சென்,  rinky கண்ணா, நிலா என வெரைட்டியான நடிகைகள். சூப்பர் ஸ்டாரே 10 ஆண்டு காத்திருந்த ஐஸ்வர்யா ராயுடன் அசால்டாக நடித்தவர்.

என் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்க மாட்டாரா என அவரின் செட் நடிகர்கள் ஏங்கும் போது, திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி என ஏ ஆர் ஆரின் அசத்தல் பாடல்களுடன் நடிக்கும் வாய்ப்பு.

இப்படி பல வாய்ப்புகள். நல்ல உயரம், சிகப்பு, வழுக்கையில்லாத தலைமுடி, மோசமென்று சொல்ல முடியாத முகம், நாலு பேரை அடித்தாலும் நம்பும் படியான ஆகிருதி, நடனமும் மோசமில்லை. பிண்ணனியில் படம் இயக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்ற தந்தை தியாகராஜன்

இத்தனை இருந்தும் பிரசாந்த்தை ஒரு நடிகராக ஏற்றுக் கொள்ளவே முடியாதபடிக்கே இருந்தது அவரின் பெர்பார்மன்ஸ். இளமை தேயத் தொடங்கியதும் அவருக்கான ரோல்களும் மறையத் தொடங்கி விட்டன. சாக்லேட் பாய்க்கு நடிப்பு தேவையில்லை. ஆனால் 35 வயதுக்கு மேல் ஏற்கும் கேரக்டர்களுக்கு நடிப்பு குறைந்தபட்ச அளவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் சினிமாவில் நிலைக்க முடியாது என்பதற்கு பிரசாந்த் தான் உதாரணம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதில் தவறிவிட்டார் பிரசாந்த்.ஆர்யாவுக்கும் அப்படித்தான். பாலா, செல்வராகவன், விஷ்ணுவர்தன், ஜீவா என பல இயக்குநர்கள். நல்ல வாய்ப்புகள். ஆனால் இன்னும் நடிப்பில் முன்னேற்றம் எதுவுமில்லை.

 35 வயதை கடந்த பின் ஆர்யாவுக்கும் பிரசாந்தின் நிலைமைதான் வரும்.

8 comments:

ravikumar said...

As you said he got variety of Directors & Film Background , in spite of that he could not stand.

Citizen said...

I don think so, the reason behind his fall are the controversy issue of his wife.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ரவிகுமார்

சிட்டிசன் வருகைக்கு நன்றி. - மனைவி வருகைக்கு முன்னரே அவர் அவுட் டேட்டட் ஆகிக்கொண்டுதான் இருந்தார்

Karthikeyan Vasudevan said...

1991ல் மலையாளத்தின் ஆல்டைம் கல்ட் க்ளாசிக்கான பெரும்தச்சன் படத்தில் திலகனின் மகனாக அறிமுகம்,இவருக்கு நீங்கள் சொன்னது போல எல்லாம் கூடி வந்தும் ,தன் தனித்தன்மையை நிரூபிக்காததால் சோபிக்க முடியவில்லை

ஜீவன் சுப்பு said...

ஆர்யாவை பார்க்கும் ஒவ்வொரு முறையும் SHOWCASE பொம்மையை பார்க்கும் மாதிரியான ஒரு பீலிங் தான் வருது .

முக்கியமான இன்னொரு விஷயம் நல்ல ஆஜானுபாகுவான நடிகர்கள் தமிழில் எடுபடுவதில்லை இல்லை தமிழர்களுக்கு பிடிப்பதில்லை .

s suresh said...

நல்ல ஒப்பீடு! உண்மையும் கூட! நன்றி!

King Viswa said...

Sir,

Kindly Change the Heroine's Name as Rinkle Khanna, Not Twinkle Khanna As You've Mentioned in Prashanth's Lead Pair's List.

முரளிகண்ணன் said...

Thank you Karthikeyan Vasudevan

Thank you Jeevan Subbu

Thank you S.Suresh

Thank you King Viswa. I will change it.