January 02, 2014

ரஜினியை ஜெயித்த கமல்


கமர்ஷியலில் ரஜினியை, கமல் ஜெயித்த நிகழ்வுகளில் ஒன்று போலிஸ் கேரக்டர்கள் ஏற்று நடித்த படங்கள். ரஜினி போலிஸ் வேடமிட்டு நடித்த படங்களில் மூன்று முகம் தவிர அத்தனை படங்களும் வசூல் ரீதியாக தோல்வி. பாலு மகேந்திரா இயக்கிய “உன் கண்ணில் நீர் வழிந்தால்”, பாரதி ராஜா இயக்கிய “கொடி பறக்குது”, வி ரவிச்சந்திரன் இயக்கிய “நாட்டுக் கொரு நல்லவன்” மற்றும் எஸ் பி முத்துராமன் இயக்கிய “பாண்டியன்” ஆகிய அனைத்துப் படங்களும் ரஜினி ரசிகர்களே மறக்க விரும்பும் படங்கள்தான்.

அன்புக்கு நான் அடிமையில் விஜயனுக்கு பதிலாக போலிஸ் வேடம் போடுவார். ஆனால் கதைப்படி போலிஸ் அல்ல. அந்தப் படம் ஓரளவு ஓடிய படம்.

ஆனால் கமல்ஹாசன் போலிஸ் கேரக்டர் ஏற்று நடித்த படங்களில் சித்ரா லட்சுமணன் இயக்கிய  சூர சம்ஹாரம், ராஜசேகர் இயக்கிய விக்ரம்  தவிர மற்ற எல்லாப் படங்களுமே வெற்றிப் படங்கள் தான்.

கே விஜயன் இயக்கிய ”சட்டம்”, பாரதிராஜா இயக்கிய ”ஒரு கைதியின் டைரி”, ராஜசேகர் இயக்கிய ”காக்கிசட்டை”, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ”அபூர்வ சகோதரர்கள்”, பிரதாப் போத்தன் இயக்கிய ”வெற்றி விழா”, பி சி ஸ்ரீராம் இயக்கிய ”குருதிப்புனல்” மற்றும் கௌதம் மேனன் இயக்கிய ”வேட்டையாடு விளையாடு” என எல்லாமே ஓடியவை தான்.

இந்த மாதிரி விகிதாச்சாரம் பார்த்தால் சூர்யா தான் 100க்கு 100. காக்க காக்க, சிங்கம், சிங்கம் 2 எல்லாமே செம ஹிட் வகையறா. விஜயகாந்த்துக்கும் அர்ஜூனுக்கும் வெற்றி விகிதம் 50க்கு மேல் இருக்கும். சத்யராஜ்க்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வால்டேர் வெற்றிவேல், அமைதிப்படை என பெரிய ஹிட்டுகள் போலிஸ் வேடத்தில். எல்லாமே வெவ்வேறு வகையான வேடங்கள். வீரப்பதக்கம் என்ற படத்தில் அமைதிப்படை அமாவாசை டைப்பில் போலிஸ் கான்ஸ்டபிளாக இருந்து டிஜிபியாக மாறி பின் திருந்தும் வேடம். ஆனால் படம் பப்படம்.

விக்ரமுக்கும் போலிஸ் கேரக்டர் நன்றாக செட் ஆகும். தில், சாமி இரண்டும் விக்ரமின் கேரியரையே பூஸ்ட் பண்ணிய படங்கள். அவருக்கும் தாண்டவம் தண்ணி காட்டியது. எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் நடித்த “காவல் கீதம்” தோல்விப்படம். எனவே அவருக்கும் 50% வெற்றி.
இவர்களைத் தவிர போலிஸ் வேடத்துக்கு அம்சமாக செட் ஆகும் இன்னொருவர் விஷால். ஆனால் அவரது சத்யம், நயன் தாரா இருந்தும் மரண பிளாப்.

அஜீத்துக்கு ஆஞ்சநேயா அடி. ஆனால் மங்காத்தா,ஆரம்பம் ஹிட். விஜய்க்கும் போக்கிரி,ெறி எனாஸ் ஹிட்கள் உண்ு. வேட்டைக்காரில் போலிஸ் ஆனாரா என ெரியில்லை. ஜில்லஆவேஜ்.

சிம்பு கூட தம் மில் ஐ பி எஸ் ஆபிசராக மாறிவிடுவார். ஒஸ்தியில் சமாளித்தார்.

முன் காலத்தில் பார்த்தால் எம்ஜியார்க்கு போலிஸ் வேடத்தில் அவ்வளவு சிறப்பு கிட்டவில்லை. என் அண்ணன், ரகசிய போலிஸ் 115 எல்லாம் வெற்றிதான் என்றாலும் பெரிய இம்பாக்ட் இல்லை. சிவாஜி ஏராளமான போலிஸ் வேடங்களில் நடித்திருந்தாலும் நமக்க ஞாபகம் வருவது தங்கப்பதக்கம் தான். வெள்ளை ரோஜா, விடுதலை என பல படங்களில் அவர் காக்கி உடுப்பு போட்டாலும், எஸ் பி சௌத்ரிக்கு முன்னால் அந்த  வேடங்கள் எல்லாம் எடுபடவில்லை.


அதுபோலத்தான் ரஜினிக்கும். அந்த அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு முன்னால் ஈரோடு சிவகிரி, பாண்டியன் எல்லாம் எடுபடவில்லை. சாமி படத்தில் மட்டும் ரஜினி நடித்திருந்தால், ஒரு சாமி ரெண்டு சாமி வசனம் ஒரு தடவை சொன்னாக்கு சமமாகப் புகழ் அடைந்திருக்கும். ஏ ஆர் முருகதாஸ் அல்லது கௌதம் மேனன் படத்தில் ஒரு ஸ்டைலிஷான ரஜினியைக் காண ஆசையாக இருக்கிறது. 

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முன் காலத்தில் பார்த்தால் எம்ஜியார்க்கு போலிஸ் வேடத்தில் அவ்வளவு சிறப்பு கிட்டவில்லை.// அவர் பெரும்பாலும் உடுப்பணியா (சீருடைதான்) போலீஸ் அதிகாரியாக வருவார்.

என் அண்ணனில் அவர் போலீஸ் காரர் இல்லை. மதுரை வீரனை போலிஸ்காரராக எடுத்துக் கொள்ளலாமா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பல்லாண்டுவாழ்க, சிரித்துவாழவேண்டும், இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன்,சங்கே முழங்கு, காவல்காரன்,தெய்வத்தாய் ஆகிய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்கள்தான். இது தவிர நினைத்ததை முடிப்பவன், குடியிருந்தகோவில், நான் ஆணையிட்டால் படங்களில் போலீஸுக்கு உதவுபவராக வருவார். அன்றைய காலகட்டத்தில் தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் எம்ஜியாரை மீறி போலீஸாகவே மாறிவிட்டதுதான் காரணமாக இருக்கக்கூடும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விஜயகாந்த்துக்கும் அர்ஜூனுக்கும் வெற்றி விகிதம் 50க்கு மேல் இருக்கும்.// சதவிகிதம் 50 மேல் என்றாலும் எண்ணிக்கையில் இவர்களுக்கு அருகில்கூட மற்றவர்கள் வரமுடியாது தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹம் படத்தில் எப்போது போலீஸ் சீருடையிலேயே சுற்றிக்கொண்டு, காவல்நிலையத்துக்கோ, இல்லை குற்றவாளியை பிடிப்பதற்கோ போகாமல் ஒரே ஒரு காட்சியில் மட்டும் போலீஸ் ரெகார்டு ரூம் முக்கு போன போலீஸ விட்டுவிட்டீர்களே தல்

முரளிகண்ணன் said...

டாக்டர், உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு அதிகம் தகவல்களை தருகின்றன. குறிப்பாக எம்ஜியார் சிவாஜி காலகட்டம்.

பெரும்பாலான காட்சிகளில் போலிஸ் உடை எனப் பார்த்தால், எம்ஜியார் அப்படி வந்த படங்கள் குறைவாகவே இருக்கும்.

இது தமிழ்படங்களைப் பற்றி மட்டும் என்பதால் ஹம் மிஸ்ஸிங்

வவ்வால் said...

//
கே விஜயன் இயக்கிய ”சட்டம்”, பாரதிராஜா இயக்கிய ”ஒரு கைதியின் டைரி”, ராஜசேகர் இயக்கிய ”காக்கிசட்டை”, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ”அபூர்வ சகோதரர்கள்”, பிரதாப் போத்தன் இயக்கிய ”வெற்றி விழா”, பி சி ஸ்ரீராம் இயக்கிய ”குருதிப்புனல்” மற்றும் கௌதம் மேனன் இயக்கிய ”வேட்டையாடு விளையாடு” என எல்லாமே ஓடியவை தான்.
//

Why do you waste your time and energy,just write ,all kamal films are Megahit and all rajini films are utter flop !!!

Who cares?

ravikumar said...

Apoorva Sagotharargal is not police movie done by kamal. rest are ok. among the all Thangapadhakkam & Samy was having command over other's movie. Of course Satyaraj & Vkanth reached to a certain extent. In thangapadhakkam & Samy the voice of sivaji & vikram were good for dialogue delivery. None of others could reach that including kamal & surya

காரிகன் said...

கமலஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் என்பதெல்லாம் சிரிப்புத் துணுக்கு. அவருக்கு போலீஸ் வேடங்கள் பொருந்தியதே இல்லை. காக்கிச் சட்டை (என்று நினைக்கிறேன்) படத்தில் கமல் போலீஸ் வேடத்தில் வரும்போது அப்போதே தியேட்டரில் பலத்த சிரிப்பலை எழுந்தது.ரஜினி நீங்கள் கூறியபடி மூன்று முகம் படத்தில் மட்டுமே சற்று சகித்துக்கொள்ளக் கூடிய அளவில் நடித்திருந்தார்.( அதிலும் ஏகப்பட்ட கோமாளித்தன சேஷ்டைகள் செய்வார்). சத்ய ராஜ் (கடமை கண்ணியம் கட்டுப்பாடு) விக்ரம் (சாமி) இருவருமே மிக பொருத்தமாக இருந்தார்கள். சிவாஜி யின் தங்கப் பதக்கம் இப்போது ஒரு cult ஸ்டேடஸ் அடைந்துவிட்டது. (நம்ப முடியாத கதைஅமைப்பு கொண்ட படம் அது. சிவாஜியின் மிடுக்கான நடிப்பைத் தவிர வேறு எதுவும் அதில் இல்லை).

Sandiyar Karan said...

முரளி...
2014 முதல் பதிவாக ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் வெற்றியை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி!!

ravikumar said...

The ultimate success rated for an Artiste is based on Percentage Scored in various aspects not as single element. In that case only MGR & Rajni are the most successful

ராஜ் said...

பதிவுல உங்க டச் மிஸ் ஆனா மாதிரி எனக்கு தோணுது... :-(

முரளிகண்ணன் said...

நன்றி வவ்வால். :-))))

கருத்துக்களுக்கு நன்றி ரவிகுமார்.

கருத்துக்களுக்கு நன்றி காரிகன்.

நன்றி சண்டியர் கரண்.

சுட்டிக்காட்டலுக்கு நன்றி ராஜ். முயற்சி செய்கிறேன்.

வருண் said...

The fact is Alex Pandian (மூன்று முகம்) role even erased SP Coudhary role of Thangapathakkam which was considered the best. So, nobody can beat Rajni (அலெக்ஸ் பாண்டியன்) when it comes to Police role.

நீங்க இப்படி எதையாவது பிரிச்சுப் போட்டு அனலைஸ் பண்ணி கமல் ஒரே கிழியா கிழிச்சுப் புட்டாரு சொல்லி அவரை சந்தோஷப்படுத்தலாம்..:)

முரளிகண்ணன் said...

நன்றி வருண்

கிரி said...

கமல் போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு அருமையாக பொருந்துவார். காக்கி சட்டை எனக்கு ரொம்ப பிடித்த படம். ஒரு ஆர்வம் உள்ள நபர் போலீஸ் ஆனால் எப்படி இருப்பார் என்பதை அட்டகாசமாக நடித்து இருப்பார். அதுவும் அம்பிகா போலிஸ் உடை அளவு எடுக்கும் போது ..கடைக்காரர் கிட்ட காலை தூக்கி நான் திருடனை பிடிக்க ஓடும் போது இந்த இடத்தில் எல்லாம் டைட்டா இருக்கக் கூடாது என்று சொல்வார் பாருங்க.. செம.

அதோடு படம் முழுக்க கூற நிறைய இருக்கிறது. இதன் பிறகு நீங்கள் கூறிய படங்கள்..கடைசியாக வேட்டையாடு விளையாடு. இது உண்மையில் செம பொருத்தம்.

தலைவர் அலெக்ஸ் பாண்டியன் ல பட்டையில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.. ஆனால் அதன் பிறகு யாரும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. நல்ல நடிகரை வீணடித்து விட்டார்கள். நீங்கள் கூறியது போல ஏ ஆர் முருகதாஸ் அல்லது கௌதம் மேனன் படத்தில் ஒரு ஸ்டைலிஷான ரஜினியைக் காண ஆசையாக இருக்கிறது ஆனால், இது நடக்க இனி வாய்ப்பில்லை.

விஜயகாந்த் கூற நிறைய இருந்தாலும்.. எனக்கு சத்ரியன் தான் இன்று வரை பெஸ்ட். சூப்பர் படம். எப்போது பார்த்தாலும் சலிப்பதில்லை.

விக்ரம் சாமியில் professional போலீஸ் போல இல்லை என்பதால் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. மசாலா போலீஸ் இவர் :-) தில் படத்தில் அருமையாக இருக்கும்.. still மசாலா போலீஸ் ஆக இருந்தாலும்.

இதன் பிறகு எனக்கு பிடித்தவர் சந்தேகமில்லாமல் சூர்யா தான். காக்க காக்க படத்தில் மனுஷன் அன்புச் செல்வனாகவே வாழ்ந்து இருப்பார். This is called professional எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார். இதன் பிறகு சிங்கத்தில் மிரட்டி இருப்பார். இதுவும் செம ஆனால் ரொம்ப கத்தி இருப்பார்.

இதன் பிறகு ஆச்சர்யம் என்றால் சிறுத்தை கார்த்தி. பின்னி எடுத்து இருக்கிறார். இது நான் எதிபார்க்கவே இல்லை. கலக்கல் நடிப்பு.