கல்லூரிப் படிப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேசிங் செய்வதைப் போல.
எப்படி பவுலிங்&
பீல்டிங் நன்றாக இருந்தால் நாம் சேஸ் செய்யவேண்டிய ரன் குறையுமோ அதுபோல கல்லூரிக்கு
ஒழுங்காகச் சென்று பாடங்களைக் கவனித்தால் நாம்
படிக்க வேண்டிய நேரமும் வெகுவாகக் குறையும்.
லைன் அண்ட் லெங்த் – தினமும் கல்லூரிக்கு ஒழுங்கான நேரத்தில்,
தேவையான புத்தகங்கள், நோட்டு, கருவிகளுடன் செல்வது. எப்படி லைன் அண்ட் லெங்த்தில் பௌலிங்
போட்டால் பேட்ஸ்மென்னால் அதிக ரன் அடிக்க முடியாதோ? அதேபோல் நாம் ஒழுங்காகச் சென்றுவிட்டால்
நம்மால் படிக்க முடியாத அளவுக்கு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியாது.
நோ பால் – கல்லூரிக்குச் செல்லாமல் லீவு போடுவது.
ஒரு ரன்னும் கொடுத்து, இன்னொரு பாலும் கொடுப்பதால் நாம் அதிக நேரம் படிக்கும் அளவுக்கு
பாடம் குவிந்துவிடும்.
வைடு – கல்லூரி உள்ளே வந்துவிட்டு வகுப்புக்குச்
செல்லாமல், கேண்டீன் செல்வது, மதியம் கட் அடித்து விட்டு சினிமா செல்வது. இதனாலும்
நாம் படிக்க வேண்டிய நேரம் கூடும்.
பைஸ் – கிளாஸில் உட்கார்ந்து கொண்டு சுத்தமாக கவனிக்காமல்
கற்பனையில் மிதப்பது.
கேட்ச் மிஸ் – எப்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு காட்ச்சை விட்டால்
அவர் வீறு கொண்டு எழுந்து அதிக ரன்னை குவிப்பாரோ அதுபோல, சில ப்ராப்ளமாட்டிக் சப்ஜெக்ட்களின்
அடிப்படைகளை சொல்லித்தரும் போது, கவனிக்காமல் விட்டுவிட்டால் படித்துப் புரியவேண்டியது
மலை போல குவிந்துவிடும்.
ரன் அவுட்/ஸ்டம்பிங் – சரியான நேரத்தில் பந்தை எறிந்து அவுட்டாக்குவது
போல அசைன்மெண்டுகள்/செமினார்களை குறித்த நேரத்தில் முடித்துவிடவேண்டும்.
கிரவுண்ட் பீல்டிங் – இது சிறப்பாக இருந்தால் எப்படி நம்மால் 30-40 ரன்களை எதிரணியின் ஸ்கோரில்
இருந்து குறைத்து விட முடியுமோ, அது போல கிளாஸில் ஆக்டிவ்வாக கவனித்துக் கொண்டேயிருந்தால்
நாம் மாலையில் வீட்டில் படிக்க வேண்டியது மிகக் குறைந்து விடும்.
நாம் படிக்கும் போது (நம்ம பேட்டிங்)
ரன்ரேட் - கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம்
என்ற நினைப்பே கூடாது. கடைசி நேரத்தில் விக்கெட் விழுந்தால் டீம் கொலாப்ஸ் ஆவதைப் போல
காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் வந்தால் நாம் காலி. எனவே சீராக ரன்ரேட் மெயிண்டெயின்
செய்வதைப் போல தினமும் படிக்க வேண்டும்.
ஸ்ட்ரைக் பவுலர்கள் – எல்லா டீம்களிலும் ஸ்ட்ரைக் பவுலர்கள் இருப்பது
போல எல்லா செமெஸ்டரிலும் சில கில்லர் சப்ஜெக்ட்கள் இருக்கும். அதைக் கவனமாகப் படிக்க
வேண்டும்.
ஆவரேஜ் பவுலர்கள் – இவர்கள் ஓவரில்தான் நாம் ரன்களைக் குவிக்க
முடியும், அதுபோல இவற்றை நன்கு படித்து சிஜிபிஏ வை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பார்ட் டைம் பவுலர்கள் – இவர்கள் வீச்சில் ஒரு பந்தையும் வீணாக்கக்
கூடாது. இது பிராக்டிக்கலை போன்றது. எஸ் கிரேடுக்கு குறைந்து விடக் கூடாது.
கேட்ச் – நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத
பாலை தூக்கி அடித்து அவுட்டாவது போல, எதிர் பாலிடம் மயங்கி படிக்காமல் விட்டு விடுவது.
ரன் அவுட் – தேவையில்லாத ரன்னுக்கு ஓடுகிறேன் பேர்வழி,
என்று அவுட்டாவதைப் போல, சக மாணவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படிக்கும்
நேரம் குறைந்து போவது.
ஹிட் விக்கெட் – தேர்வுக்கு நீண்ட நேரம் கண்விழித்துப்
படித்து காலை எக்ஸாம் ஹாலில் தூங்கி விழுந்து கோட்டை விடுவது.
மெய்டன் ஓவர் – தீபாவளி, பொங்கல், பூஜா ஹாலிடேஸ் என பல்க்காக
லீவு வரும் போது படிக்காமல் விட்டு விடுவது. இதனால் நாம் படிக்க வேண்டிய ரன்ரேட் எகிறிவிடும்.
சிங்கிள்ஸ் – சேசிங்கில் முக்கியமே சிங்கிள்ஸ்தான். தினமும்
குறைந்த அளவு நேரமாவது புத்தகத்தை திறப்பது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது போல இரண்டு
மூன்று சம்ஜெக்ட்களை தொட்டுப் பார்த்து விடவேண்டும்.
பவுண்டரிகள் – வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ச்சியாக
இரண்டு, மூன்று மணிநேரம் தொடர்ந்து படிப்பது.
பவர்பிளே – தேர்வுக்கு முந்தைய ஸ்டடி ஹாலிடேஸ். விக்கெட்
இருந்தால் தான் இதில் அதிரடியாக ஆடமுடியும். அதுபோல முன்னர் இருந்தே படித்து சப்ஜெக்ட்களின்
அடிப்படைகளைத் தெரிந்திருந்தால் விரைவாக எல்லாவற்றையும் படித்து முடித்து விட முடியும்.
இன்னும் சில நாட்களில்
கல்லூரிகளில் கால் பதிக்கப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
2 comments:
நல்ல கம்பேரிஸன். மாணவர்களுக்கு ஈசியா புரியுற மாதிரி சிம்பிளா ஆனா சொல்ல வந்த விஷ்யத்தை தெளிவா சொல்லியிருக்கீங்க. மாணவர்களுடன் உரையாட நேர்கையில், உங்களது இந்த கட்டுரையை பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி பாலகுமார்.
Post a Comment