May 11, 2008

விஜயகாந்த்தின் அரசாங்கம் எதிர்பாராத ஆச்சரியம்
இந்த வாரம் நண்பர்கள் எல்லாரும் குருவி போகலாம் என்று நினைத்திருந்தோம். இணைய விமர்சனைங்களை பார்த்து அதை தவிர்த்திருந்த நிலையில் நேற்று இரவு வேறுவழியில்லாமல் விஜயகாந்த்தின் அரசாங்கம் பார்க்க சென்றோம். நான் கூட பதிவு போட நல்ல மேட்டர், குருவியை எல்லாரும் கலாய்த்தது போல நாமும் இதை ஒரு வழி பண்ணிவிடுவோம் என்று ஆர்வத்துடன் போனேன். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். படம் பார்க்கிற மாதிரி இருந்தது. விஜயகாந்த் படம் மாதிரி இல்லை.

1) விஜயகாந்த் படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து வருகிறார்.
2) மிக குறைவான பில்ட் அப் காட்சிகள்
3) புள்ளி விவர பேச்சு இல்லை
4) 20 பேரை தனியாளாக அடிக்கும் காட்சி இல்லை
5) புத்திசாலித்தனமான திரைக்கதை
6) ஹீரோ அடிதடியை நம்பாமல் லாஜிக்காக யோசித்து துப்பறிவது.
7) டைரக்டர் (மாதேஷ்), ஷங்கர் கூடாரத்தில் இருந்து வந்திருந்தாலும், சாக்லேட் மாதிரி படம் தயாரித்து இருந்தாலும், மதுர மாதிரி படம் டைரக்ட் செய்திருந்தாலும் இப்படம் எந்த சாயலும் இல்லாமல் இருப்பது.

படம் முடிந்து வரும் போது ஒருவரை ஒருவர் கிள்ளி பார்த்துக் கொண்டோம்.

23 comments:

கிரி said...

அப்படியாங்க!!! எங்க Gapatain :D படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

படம் மொத்தத்தில் நல்லாயிருக்கு

ச்சின்னப் பையன் said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க... தூக்க கலக்கத்திலே பாத்துட்டீங்களா... அல்லது தேமுதிகவில் சேந்துட்டீங்களா.... :-)))))))

முரளிகண்ணன் said...

\\என்ன இப்படி சொல்லிட்டீங்க... தூக்க கலக்கத்திலே பாத்துட்டீங்களா... அல்லது தேமுதிகவில் சேந்துட்டீங்களா.... :-)))))))

\\
படம் உண்மையிலேயே நல்லா இருக்கு.

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்

பிரேம்ஜி said...

முரளி! நீங்க சொல்லிட்டீங்க.பார்த்துருவோம்.

முரளிகண்ணன் said...

\\அப்படியாங்க!!! எங்க Gapatain :D படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்\\

கண்டிப்பாக வெற்றி அடையும்

வருகைக்கு நன்றி கிரி

ஆ.கோகுலன் said...

தகவலுக்கு நன்றி.

//இணைய விமர்சனங்களை பார்த்து அதை தவிர்த்திருந்த நிலையில்//
திரைப்பட வசூலில் வலைப்பதிவுகளும் செல்வாக்கு செலுத்தும் போலிருக்கு!. :-)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ப்ரேம்ஜி மற்றும் கோகுல்.
\\//இணைய விமர்சனங்களை பார்த்து அதை தவிர்த்திருந்த நிலையில்//
திரைப்பட வசூலில் வலைப்பதிவுகளும் செல்வாக்கு செலுத்தும் போலிருக்கு!. :-)\\

இணையத்தில் எழுதுபவர்களின் ரசனை ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கும் என்பது இந்த ஒரு ஆண்டில் நான் கண்டு கொண்டது. மேலும் வலைப்பதிவு விமர்சனங்கள் சார்பற்றவை என்பதால் நம்பலாம். ஆனால் நம்மவர்களின் எண்ணிக்கை படம் பார்ப்போரின் எண்ணிக்கையில் 0.1% கூட இருக்காது. எனவே வசூல் பாதிக்க வாய்ப்பில்லை.

சந்தோஷ் said...

podhuvaa naa ivar padam pakkaradhu illai... ungala nambi padathukku poren...


santhosh

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சந்தோஷ் குறைவான எதிர்பார்ப்புடன் சென்றால் நல்லது

சந்தோஷ் said...

unga photo va chumma arasiyal vaadhi cutoutla irukkaramadhiri koduthuirukeenga.

முரளிகண்ணன் said...

\\unga photo va chumma arasiyal vaadhi cutoutla irukkaramadhiri koduthuirukeenga\\
நண்பர் ஒருவர் எடுத்தது. எதிர்காலத்துக்கு உதவும் என்று வைத்துஇருந்தேன். சத்தியமாக நான் தே.மு.தி.க இல்லை

குட்டிபிசாசு said...

நானும் பார்த்துட்டு சொல்லுரேனுங்கோ!!

R A J A said...

படம் வித்தியாசமா இருக்குன்னு கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. Captain, 150வது படத்தை பேசும்படி பண்ணி இருக்கிங்க போல..........kalakkunga

எம்.ரிஷான் ஷெரீப் said...

நிஜமாகவா?
எங்க மேல உள்ள கொலவெறில ஏதும் சொல்லலியே :P

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜா மற்றும் ரிஷான் ஷெரீப்

துளசி கோபால் said...

இன்னும் எங்களுக்கு வரலை. பார்த்துடலாம்.

நம்மூர்க்காரர் படமாச்சே..... விடுவோமா?

ஆமாம். நம்பிப் பார்க்கலாமில்லே?

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி மேடம்.
\\இன்னும் எங்களுக்கு வரலை. பார்த்துடலாம்.

நம்மூர்க்காரர் படமாச்சே..... விடுவோமா?

ஆமாம். நம்பிப் பார்க்கலாமில்லே?
\\
நிச்சயமாக பார்க்கலாம் ஏமாற்றம் இருக்காது

லக்கிலுக் said...

முரளி! படம் நன்றாக வந்திருப்பதாக நானும் கேள்விப்பட்டேன். திரைக்கதை தான் மிக மெதுவாக நகர்ந்ததாம். நல்ல படமாக இருந்தாலும் விஜய்காந்தின் முந்தைய படங்களான தர்மபுரி, பேரரசு, சுதேசி போன்ற படங்கள் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. எனவே ஓபனிங் கலெக்சன் டல் அடிக்கிறது. படம் குறித்த நல்லமாதிரியான பேச்சு வாய்வழியாக மக்களிடையே பரவுமானால் படம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது.

குறிப்பு : எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தாலும் குருவி கலெக்சனில் பட்டையை கிளப்புகிறது.

முரளிகண்ணன் said...

\\குறிப்பு : எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தாலும் குருவி கலெக்சனில் பட்டையை கிளப்புகிறது\\

ஆமாம் லக்கி.

நாங்கள் சென்ற திரையரங்க வளாகத்தில் குருவி படத்துக்கு பிளாக் டிக்கட் விற்றுக்கொண்டிருந்தார்கள். என் நண்பர் " பாருங்க பிளாக்ல டிக்கட் போகுது, படம் நிச்சயம் நல்லா இருக்கும், இதுக்கே போவோம் என்று சொன்னார். நான் தான் எங்க பதிவர்கள் விமர்சனம் சரியாக இருக்கும்.இந்த படம் வேண்டாம் என்றேன். B மற்றும் C சென்டரில் குருவி நிச்சயம் நல்ல வசூல் செய்யும். பகவதி,மதுர போன்ற கரம் மசாலா படங்களைப் போலவே இதுவும் வசூல் ரீதியில் வெற்ரி அடையும் என நினைக்கிறேன்

கூடுதுறை said...

தாங்கள் கூறுவது மிகச்சரி. பதிவர்களின் கணிப்பு மிகச்சரியாகவே உள்ளது

உதா: ATM, இ.லோக.நா.அழகப்பன்,

மதுவதனன் மௌ. said...

கேப்டனோட 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் வெற்றியடைஞ்சுது. அதேபோல 150ஆவது படமும் வெற்றி அடையும் போல...

அடிமனசுல கலக்கமாவேற இருக்குது. அடுத்த வெற்றிப் படம் 200ஆவதா தான் இருக்குமோ எண்டு.

மதுவதனன் மௌ.

வெண்ணை said...

வண்ணக்கம்

நல்ல நாள்லேயே நான் நம்ம கேப்டன் படம் ஒன்னு விடாம பக்குறவன் .......நீங்க வேற ஏத்தி விட்டுபுட்டிங்க......உடநே போயி பக்குரேஅன் .......

வெண்ணைய்