May 22, 2008

ராமராஜன் திரைப்படங்களின் உளவியல் – சுகுணா திவாகர் கருத்தை முன்வைத்து.


கமலின் தீவிர ரசிகனான எனக்கு ராமராஜன் படங்களை சுத்தமாகப் பிடிக்காது. அவர் படங்களுக்கு செல்வோரை நக்கல் செய்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. ஒருமுறை “என்னப் பெத்த ராசா” என்ற படத்துக்கு நண்பன் அழைத்த போது நூறு ரூபாயும்,ஒரு கர்ச்சீப்பும், பஞ்சும் கொடுத்தாலும் வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அப்போது அவர் படங்களைப் பற்றிய பொதுவான விமர்சனம்
1. ஸ்டில்களில் இணைந்து நடிப்போர் இல்லாமல் இருந்தால் எந்தப்படம் என்று கண்டுபிடுக்க முடியாது
2. எல்லா வகை காட்சிக்கும் ஒரேமாதிரி நடிப்பு வசன உச்சரிப்பு
3. காமெடி மற்றும் பாட்டு இல்லாவிட்டால் படம் ஓடாது
(யோசித்துப் பார்த்தால் இது விஐய் படத்துக்கும் பொருந்தும்)

ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளாலும் பேருந்து பயணங்களாலும் பத்து பதினைந்து ராமராஜன் படங்களைப் பார்க்கும் அவல நிலைக்கு ஆளானேன்.

சுகுணா திவாகர் தன் பதிவொன்றில் ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாத கிராமப் படங்கள் ஏனெனில் அவை நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தாதவை என்று கூறியிருந்தார். அதைப்படித்தபின் படங்கள் அனைத்தையும் மீள்பார்வை செய்து பார்த்தேன். அப்பட்டமான உண்மை.

1.கதையின் நாயகன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாகவே காட்டப்படுகிறான். (என்னப் பெத்த ராசா, தங்கமான ராசா, கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊரு வந்து,நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்..........). செயற்கரிய செயல்களை செய்வதில்லை. சிறிது புத்திசாலித்தனம்,நேர்மை ஆகியவற்றால் மக்களை கவர்கிறான். இந்த கதாநாயக தன்மையால் கிராமப்புற இளைஞர்கள் தங்களை அவரிடம் அடையாளம் கண்டார்கள். ஓ இதுமாதிரி இருந்தால் நம்மையும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளோடியது.
ஆனால் அவரை அடுத்து வந்த கே.எஸ். ரவிக்குமார் தன் படங்களில் (ஊர்மரியாதை, நாட்டாமை, நட்புக்காக,சமுத்திரம் ) நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தினார். ஊர் பெரியவர் தெய்வம் மற்றவர்கள் ஏப்ப சாப்பை என்பது போல கதையமைப்பு இருக்கும். ஆர்.வி.உதயகுமார் (சின்னகவுண்டர், எஜமான்,ராஜகுமாரன்) பின்னர் வெளிவந்த சில பிரபு,சத்யராஜ்,சரத்குமார் படங்களும் இவ்வகையே. அவற்றில் எல்லாம் கதாநாயர்கள் நம்ப முடியாத பலம், நேர்மை, வள்ளல் தன்மையுடன் இருப்பார்கள். அவ்வகைப் படங்களில் கிராமப்புற ரசிகர்களால் தங்கள் சுயத்தை அடையாளம் காண முடியவில்லை. எனவேதான் இன்னமும் ராமராஜன் படங்கள் பி சி சென்டர்களில் ஓடுகின்றன.

2. கதாநாயகிகளும் கூடியவரையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவே காட்டப்படுகிறாள். ஆளை மயக்கும் அழகுடன் இருப்பதில்லை. இது கிராமப் புற பெண்கள் தங்களை அடையாளப்படுத்த.

3.பெண்களை மட்டம் தட்டி பேசும் காட்சிகள் குறைவு. ரஜினி (படையப்பா,மன்னன்) விஐய்(சிவகாசி,குருவி) இதில் படு மோசம்.
இப்போது வரும் பல மொக்கைப்படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளோவோ பரவாயில்லை.

51 comments:

இளவஞ்சி said...

முரளி,

நீங்க சொல்லறது உண்மை.

நான் ராமராஜன் ரசிகனல்ல.. ஆனால் என் வாழ்க்கையில் அதிகமுறை பார்த்த படமெனில் அது கரகாட்டக்காரனாகத்தான் இருக்கும். எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பே தராத ஒரு கட்டமைப்பு அப்படத்தில் உண்டு!

இந்த மசாலா ஃபார்முலா கிடைக்காமத்தான் நம்ம இயக்குனருங்க இப்பவெல்லாம் குருவி, பீமா ன்னுட்டு சீப்படறாங்க...

கிரி said...

//3.பெண்களை மட்டம் தட்டி பேசும் காட்சிகள் குறைவு. ரஜினி (படையப்பா,மன்னன்)//

ராமராஜனை பற்றி சொல்லி சைக்கிள் கேப் ல தலைய வேற போட்டு வாங்கிட்டீங்க :-). நீங்க சொல்றது உண்மை தான், தலைவர்னால தப்பு இல்லைன்னு ஆகிடுமா :D அதுலயும் மன்னன் ரொம்ப மோசம்.

ராமராஜனின் கரகாட்டக்காரன் படம் பார்த்தீங்கன்னா அதுல ரொம்ப இயல்பா நடித்து இருப்பாரு அதை விட கரகம் கலக்கி இருப்பாரு. இப்ப தான் கட்சி அது இதுன்னு போய் ஒண்ணும் இல்லாம போய்ட்டாரு.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி இளவஞ்சி, கிரி

PPattian : புபட்டியன் said...

எனக்கும் கரகாட்டக்காரன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்தான்.

கௌதமி கூட அவர் நடித்த "எங்க ஊரு காவக்காரன்" படம் நான் ரசித்து பார்த்த படங்களில் ஒன்று.. அதிலும் "ஆசையில பாத்தி கட்டி, நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி" பாட்டு அந்த நாட்களில என் பேவரிட்டா இருந்த்து.

லிப்ஸ்டிக் மன்னன், ஜிங்குச்சா கலர் சட்டை, ஜுனியர் சாம்பாரு, கௌபாய் என்றாலும் அவர் படம் பாக்கற மாதிரிதான் இருக்கும்.

வால்பையன் said...

சினிமா தனம் இல்லாமல் ராமராஜன் படம் கூட வந்ததில்லை
ரோசாப்பூ ரவிக்கைகாரி மற்றும் பதினாறு வயதினிலே
போன்ற படங்கள் மட்டுமே விதி விலக்கு,
கதாநாயகனை ஒரேடியாக நல்லவனாக காட்டுவதும் சினிமாத்தனம் தான்

நல்ல பதிவு

வால்பையன்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புபட்டியன்

\\லிப்ஸ்டிக் மன்னன், ஜிங்குச்சா கலர் சட்டை, ஜுனியர் சாம்பாரு, கௌபாய் என்றாலும் அவர் படம் பாக்கற மாதிரிதான் இருக்கும்.\\
எங்கள் வட்டாரத்தில் அவர் பெயர் டவுசர்

\\ஆசையில பாத்தி கட்டி, நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி" பாட்டு அந்த நாட்களில என் பேவரிட்டா இருந்த்து\\

அந்தப்படத்தில் எல்லா பாட்டும் நல்லா இருக்கும்

திங்கள் சத்யா said...

அருமாயான பதிவு. நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். இத்தனை நாளாக இதனை கவனிக்காமல் விட்டுவிட்டோமே!

ராமராஜன் படங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை வெளிட்டால் குருவிகளுக்கும், படையப்பன்களுக்கும் ........... அடி விழும் என்று எதிர்பார்க்கலாம்.

முரளிகண்ணன் said...

\\இந்த மசாலா ஃபார்முலா கிடைக்காமத்தான் நம்ம இயக்குனருங்க இப்பவெல்லாம் குருவி, பீமா ன்னுட்டு சீப்படறாங்க\\

ஆமாம் இளவஞ்சி. வாழ்க்கைக்கு நெருங்கிய கேரக்டர்கள் இல்லையென்றால் படம் அம்போதான்

முரளிகண்ணன் said...

\\இப்ப தான் கட்சி அது இதுன்னு போய் ஒண்ணும் இல்லாம போய்ட்டாரு.\\

ஆமாம் கிரி. அது அவருக்கும், பல இயக்குநர்,தயாரிப்பாளர்களுக்கும் இழப்பு

லக்கிலுக் said...

அட இந்தப் பார்வை கலக்கலா இருக்கே? பசுநேசன் வாழ்க!!

முரளிகண்ணன் said...

\\ரோசாப்பூ ரவிக்கைகாரி மற்றும் பதினாறு வயதினிலே
போன்ற படங்கள் மட்டுமே விதி விலக்கு,\\
வால் பையன் அவையெல்லாம் கிளாசிக்ஸ்.

முரளிகண்ணன் said...

\\இத்தனை நாளாக இதனை கவனிக்காமல் விட்டுவிட்டோமே! \\

திங்கள் சத்யா, எனக்கு இது சுகுணா திவாகரின் கட்டுரையைப் படித்த போது தான் தோன்றியது.

முரளிகண்ணன் said...

\\ பசுநேசன் வாழ்க!! \\

ஆஹா லக்கி இந்த பேரை மறந்துட்டேன்
( காப்பிரைட் : தினமலர் )

dondu(#11168674346665545885) said...

ஒரே ஒரு படத்தில் அவர் பணக்கார வாரிசாக வந்து ஆனால் தொழிலாளியாக வேடம் போட்டு தனது தொழிற்சாலையிலேயே வேலைக்கு சேர்ந்து, கரெக்ட் சமீபத்தில் 1959-ல் வந்த 'முதலாளி' படத்தின் ரீமேக்தான். எஸ்.எஸ்.ஆர். அதில் செய்த ரோலை ராமராஜன் செய்திருப்பார். படம் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

அவருக்கு இரண்டுவித முகபாவங்கள்தான் உண்டு. ஒன்று தேள் கொட்டின முகபாவம், இன்னொன்று தேள் கொட்டாத முகபாவம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அதிஷா said...

எங்க தலவர வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!!!!!!!!!!

அதிஷா said...

பாராட்டுக்கள் , ( 2011ல் எங்க தல ராமு ஆட்சில உங்கள நல்ல கவனிக்கிறோம்)

எங்க தலவரப் பத்தின இது போன்ற பதிவுகளை கொலைவெறியுடன் எதிர்நோக்கும்


பல கோடி ராமராஜன் ரசிகர்களில் ஒருவன்

அதிஷா said...

பாராட்டுக்கள் , ( 2011ல் எங்க தல ராமு ஆட்சில உங்கள நல்ல கவனிக்கிறோம்)

எங்க தலவரப் பத்தின இது போன்ற பதிவுகளை கொலைவெறியுடன் எதிர்நோக்கும்


பல கோடி ராமராஜன் ரசிகர்களில் ஒருவன்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி டோண்டு சார்
\\அவருக்கு இரண்டுவித முகபாவங்கள்தான் உண்டு. ஒன்று தேள் கொட்டின முகபாவம், இன்னொன்று தேள் கொட்டாத முகபாவம்.

\\
ஹா ஹா ஹா ஹா ஹா ஹஸ

முரளிகண்ணன் said...

\\பல கோடி ராமராஜன் ரசிகர்களில் ஒருவன்\\

அதிஷா சொல்லவே இல்லை

\\ 2011ல் எங்க தல ராமு ஆட்சில உங்கள நல்ல கவனிக்கிறோம்)\\

இவருமா இப்ப ரேஸ்ல இருக்கார்?

\\எங்க தலவர வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!!!!!!!!!!\\

முடியல

அதிஷா said...

//

இவருமா இப்ப ரேஸ்ல இருக்கார்?

//

யாராரோ 2011ங்கறாங்க அவரும் பாவம்ல அவரையும் சேர்த்துப்போம் ,

தமிழ்நெஞ்சம் said...

Ramarajan Introduced DEVA music director in his movie.

Many persons didn't know this.

முரளிகண்ணன் said...

\\Ramarajan Introduced DEVA music director in his movie\\
ஆமாம் தமிழ்நெஞ்சம்
அந்த படத்தில் சீதா கதாநாயகி, அதில் ஆத்து மேட்டு தோப்புக்குள்ள என்ற அருமையான பாடல் இடம் பெற்றிருக்கும்

முரளிகண்ணன் said...

\\யாராரோ 2011ங்கறாங்க அவரும் பாவம்ல அவரையும் சேர்த்துப்போம் \\

அதிஷா நீங்க ரொம்ப நல்லவரு

மதன் சிந்தாமணி said...

இன்னும் சில
1.ராமராஜன் ஒரு படத்தில் கூட குடிகாரன்,சிகரெட் பிடிக்கும் பாத்திரங்களில் நடித்ததில்லை.(புரட்சி தலைவரையெ மிஞ்சிட்டார்)
2.பெண்களை கீழாக நடத்தும் பாத்திரங்களில் நடித்ததில்லை.

அவர் கழுத்தில் துண்டு ஒன்னை மாலை மாதிரி பொட்டு அதையும் இரண்டு கையாலயும் பிடித்துகொன்டு பெசும் அழகே தனி!!!

முரளி தம்பி நீங்க ரொம்ப நல்லா எழுதுரீங்க தம்பி!! நிங்க எழுதரத பாக்கும்போது எனக்கு என்னவோ யெல்லாம் ஞாபகம் வருது!
வீட்டுக்கு வந்து ஒரு வா காப்ப்பி தண்ணி சாப்பிடனும்...

முரளிகண்ணன் said...

\\அவர் கழுத்தில் துண்டு ஒன்னை மாலை மாதிரி பொட்டு அதையும் இரண்டு கையாலயும் பிடித்துகொன்டு பெசும் அழகே தனி!!!\\

அவரது சிறப்பு மேனரிசமே அதுதானே மதன்

Bee'morgan said...

வாவ். ரொம்ப புதுமையான பதிவு.. இந்த கோணத்தில் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை.. வாதம் ஏற்றுக் கொள்ளும் படியே இருக்கிறது..

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பீமோர்கன்

aathirai said...

ejamaan, chinna kounder, dhevar magan were also successful movies. normal people go to movie for entertainment. they dont carry 'aruvujeevi' lens. ramarajan movies ran mainly due to ilayaraja's songs.

aathirai said...

ramarajan movies run because of ilayaraja. ejamaan, chiina gounder ,dhevar magan were all successful movies. normal people go to movies for entertainment. they dont carry arivu jeevi lens to overanalyse everything.

கயல்விழி முத்துலெட்சுமி said...

ரொம்ப சரிங்க.. இதே மாதிரி நான் அடிக்கடி நினைப்பதுண்டு.. அன்னைக்கெல்லாம் எம் ஜி ஆர் படங்களில் காட்டியதைத்தான் ராமராஜன் பின்பற்றினார்.. அம்மா அக்கா செண்டீம்மெண்ட், நல்லதை எடுத்துசொல்லுவதுன்னு மக்களுக்கு ஒரு வகையா பாடம் சொல்றமாதிரி,ஆனா இன்னைக்கு பக்கம் பக்கமா நல்லது பஞ்ச் வசனமா சொல்வாங்க .. படத்துல அவங்க பொறுக்கியாவோ தாதாவாவோ தான் வராங்க.அதைப்பார்த்து நானும் நாலு பேரை அடிக்கனும்.. இல்லாட்டி தாதாவா ஆகனுன்னு தான் பசங்களுக்கு தோணும்..

King... said...

சரியாத்தானே இருக்குது விவாதம் என்னதான் சொன்னாலும் அவருடைய படங்கள் பிச்சுக்கிட்டு ஓடிச்சு என்பதும் உண்மைதானே...

முரளிகண்ணன் said...

வாங்க ஆதிரை. அவர் பட வெற்றிக்கு இளையராஜா முக்கிய காரணம் என்றாலும் மற்ற அம்சங்கள் இல்லாமல் ஒரு படம் எப்படி வெற்றி அடையும்?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

என்ன நடக்குது இங்கே?

முரளி நீங்க வேற ஏதோ ஆய்வு பண்ணுறதா சொன்ன நியாபகம். இங்கன பார்த்தா, ராமராசன் ஆய்வு நடக்குது..!

முரளிகண்ணன் said...

\\ படத்துல அவங்க பொறுக்கியாவோ தாதாவாவோ தான் வராங்க.அதைப்பார்த்து நானும் நாலு பேரை அடிக்கனும்.. இல்லாட்டி தாதாவா ஆகனுன்னு தான் பசங்களுக்கு தோணும்..
\\
இதுதான் நடக்கக் கூடாது என்று பயப்படுகிறேன் கயல்விழி முத்துலட்சுமி

முரளிகண்ணன் said...

\\அவருடைய படங்கள் பிச்சுக்கிட்டு ஓடிச்சு என்பதும் உண்மைதானே...
\\
1988-89 ல் ராஜாதிராஜா, அபூர்வ சகோதரர்கள், வருஷம் 16 என பல சூப்பர் ஹிட் படங்கள் வந்தாலும் ராமராஜன் படங்களும் வெற்றிநடை போட்டன கிங்

முரளிகண்ணன் said...

\\முரளி நீங்க வேற ஏதோ ஆய்வு பண்ணுறதா சொன்ன நியாபகம். இங்கன பார்த்தா, ராமராசன் ஆய்வு நடக்குது..!\\

தலை, அதையே தொடர்ந்து செஞ்சுகிட்டு இருந்தா எப்படி? அப்பப்ப ரிலாக்ஸ் வேணும்ல

இராசகுமார் said...

சரியா சொன்னீங்க முரளி கண்ணன்,நான் கூட இப்படி நினைத்ததுண்டு.

நேர்மையானவரா,தாய் பாசம் மிக்கவரா,பணக்கார வில்லனை எதிர்க்கிற துணிச்சல் மிக்கவரா,பெண்களை மதிக்கிரவரா கதாநாயகன் காட்டப்படுகின்ற அவருடய படங்கள் நிறைய பேரை கவர்ந்திருப்பதற்கு இந்த பதிவின் பின்னூட்டங்களே சாட்சி.

பொண்ணுன்னா இப்படி இருக்கனும்,அப்படி இருக்கனும் பெண்ணடிமைபேசிய "படையப்பன்" "மன்னன்" க்ளை விட அவர் படங்கள் நல்ல படங்களே!

வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்!

இராசகுமார் said...

சரியா சொன்னீங்க முரளி கண்ணன்,நான் கூட இப்படி நினைத்ததுண்டு.
நேர்மையானவரா,தாய் பாசம் மிக்கவரா,பணக்கார வில்லனை எதிர்க்கிற துணிச்சல் மிக்கவரா,பெண்களை மதிக்கிரவரா கதாநாயகன் காட்டப்படுகின்ற அவருடய படங்கள் நிறைய பேரை கவர்ந்திருப்பதற்கு இந்த பதிவின் பின்னூட்டங்களே சாட்சி.பொண்ணுன்னா இப்படி இருக்கனும்,அப்படி இருக்கனும் பெண்ணடிமை பேசிய "படையப்பன்" "மன்னன்" க்ளை விட அவர் படங்கள் நல்ல படங்களே!

வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்!

Sambasivam said...

Ramarajan also had a lot of fans. But because of his own personal problems he was not able to shine continuously.

ஆ.கோகுலன் said...

மிக எளிமையான சுருக்கமான ஆய்வு.

//இப்போது வரும் பல மொக்கைப்படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளோவோ பரவாயில்லை.//

யதார்த்தமான முடிவு..!

முரளிகண்ணன் said...

\\வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்!\\
ஊக்கப்படுத்தியதற்கு நன்றி இராசகுமார்

முரளிகண்ணன் said...

வாங்க சாம்பசிவம் மற்றும் கோகுலன் கருத்துக்கு நன்றி

Sambasivam said...

Dear sagakkale.. Naan blog kku pudhusu. Eppadi thamizh la type panrathunnu sonna.. veluthuruven..

முரளிகண்ணன் said...

சாம்பசிவம் இணையத்திலே உள்ள NHM writer உபயோகித்தால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம். (www.nhm.in) அல்லது jaffna library தளத்திலும் கிடைக்கும்.

jaisankar jaganathan said...

ராமராஜனுக்கு இந்த பதிவை அனுப்புங்க. அவரை இத்தனை பேரு நினைவில் வைத்திருப்பது பற்றி அவரே ஆச்சரியப்படுவார்

புருனோ Bruno said...

முரளி சார்,

நீங்கள் சொல்வது உண்மை.

ராமராஜன் படங்களின் பிற அம்சங்கள்

1. ஒரு கதை !!!
2. நல்ல திரைக்கதை
3. ஆபாசமில்லாத வசனங்கள்
4. குடும்பத்தினருடன் பார்க்க கூடிய வகையில் இருப்பது

ஆனால் அவர் படங்கள் வெற்றிப்பெற்றதற்கு வேறொரு முக்கிய காரணம் - அந்த சமயம் இளையராஜா தனது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தார். அதே போல் செந்தில்-கவுண்டமனி ஜோடியும் கோவை சரளாவும் அப்பொழுது கலக்கிக்கொண்டிருந்தார்கள்

கதிர் படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தூக்கி நிறுத்தியதை போல் ராமராஜனின் படங்களின் வெற்றிக்கு பின்னால் இளையராஜா இருந்ததை மறக்க முடியாதல்லவா

jaisankar jaganathan said...

enga en comment

கமுதி. கி. வீரானந்தன். said...

ராமராஜன் படங்கள் எல்லாமே கிராமபுரத்தையே சார்ந்து இருக்கும், அதே போல் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

Abdul said...

தயவு செய்து இனிமேல் ராமராஜனை கிண்டல் செய்யாதீர்கள்.
ஓரு காலத்தில் கொடி கட்டி பறந்த்வர். உயரத்தில் இருக்கும் போது புகழ்வதும், நிலை மாறும் போது ஏளனம் செய்வதும் இவ்வுலகத்தின் இயல்பு.
ராமராஜன் விஷயத்தில் ரொம்ப ஒவராகவவே எல்லோரும் கிண்டல் பண்ணிட்டாங்க.
சிறு வயதில் எனக்கும் ராமராஜன் படம் ரொம்ப பிடிக்கும். இப்பவும்தான்.

முரளிகண்ணன் said...

ஜெய்ஷங்கர் ஜெகனாதன், கமுதி வீரானந்தன், அப்துல்

வருகைக்கு நன்றி

Vijay Armstrong said...

நீங்கள் சொல்லுவது உண்மைதான். ராமராஜன்/கே.எஸ்.ரவிகுமார் படங்களின் ஊடாக இருக்கும் இந்த விவரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. நன்றி