July 25, 2008

கலக்கப் போவது அசத்தப் போவது - முன்னோடி: மூர்த்தி & கோபி

இப்பொழுது அனைத்து தொலைக்காட்சிகளும் மிமிக்ரி மற்றும் ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. இந்த கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது வழிகாட்டி என்று பார்த்தால்

திரை நட்சத்திரங்களான சின்னி,தாமு,மயில் சாமி,விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள். ஆனால் இவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயெ நகைச்சுவை செய்து வந்தார்கள். பெரும்பாலும் பிரபல நடிகர்களை இமிடேட் செய்துவந்தார்கள்.

80 களின் முடிவிலும்,90 களின் ஆரம்பத்திலும் இந்த துறையில் கலக்கியவர்கள் மூர்த்தி மற்றும் கோபி. இவர்கள் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்ப்பட்ட கேசட்டுகளை வெளியிட்டு சாதனை படைத்தவர்கள்.

இவர்களின் முக்கிய களங்கள்

1) அப்போது வெளியான திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை உல்டா செய்வது.

கரகாட்டக்காரன் பாடலை இவர்கள் வார்த்தையில் கேட்க வேண்டுமே
தேவர் மகன் - சேட்டு மகன்
டூயட் - இடியட்

2) திருவிளையாடல் கட்டபொம்மன் வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது

3) பிற மொழி வசனங்களை எல்லா நடிகர்களின் வாய்சிலும் பேசுவது


4)தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை கிண்டலடிப்பது

அந்த நாட்களில் எல்லா மோட்டல்களிலும் இவர்கள் கேசட் தான் டாப் சேல்ஸ். இவர்கள் கேசட் இல்லாத டீக்கடை இல்லை.


இப்போது என்ன ஆனார்கள்? என்ன ஆச்சு?

1) 93 க்குப்பின் தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் மக்களுக்கு தேவையான பொழுதுபோக்கை கொடுத்துவிட்டது

2) இவர்களின் கேசட் எல்லாம் தரம் குறைந்தவை (ரூ 8). 90களில் மக்கள் நல்ல தரமான டேப் ரெக்கார்டர்களை வாங்க துவங்கியது. இவர்கள் கேசட் டெல்லி செட்டுக்குத்தான் ஏற்றது. அதுவும் இப்பொது டி வி டி காலம்

3) குடும்பத்தோடு அமர்ந்து கேட்க முடியாதது. (தொலைக்காட்சி என்றால் பரவாயில்லை. அவர்கள் ஒளிபரப்புவது. இது உன் ஆசைக்கு கேட்கிறாய்)

4)அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கண்டுகொள்ளதது

5) இதையெல்லாமா கேட்கிறாய் என்று கேலி செய்யப்படுவது.

எப்போதாவது உங்கள் பேருந்து ஒரு உருப்படாத மோட்டலில் நிற்கும் போது காதை தீட்டுங்கள். அவர்கள் உல்டா செய்த பாடல் வரிகள் உங்கள் காதில் விழலாம்

23 comments:

Athisha said...

மயில்சாமியை விட்டுவிட்டீர்கள்
திருவிளையாடல் கேசட்டில் எல்லா வசனமும் அவர் ஒருவரே பேசியிருப்பார் ..

தமிழகத்தில் மிமிகரியின் பிதாமகன்களாக கோபி மூர்த்தி மற்றும் மயில்சாமியை ஏற்றுக்கொள்ளலாம்.

rapp said...

அடடா, நீங்க சொல்ரதஎல்லாம் கேட்டா ஆர்வமா இருக்கே, இப்போ யாராவது இவைகளை வலையேற்றி இருந்தால் அந்த லிங்கை இங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

முரளிகண்ணன் said...

அதிஷா, மயில்சாமி சினிமா நடிகர் என்பதால் அவரை சின்னி, தாமுவுடன் சேர்த்திருந்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள கேசட் நான் கேட்டதில்லை. முயற்சிக்கிரேன்

முரளிகண்ணன் said...

ராப் இணையத்தில் தேடிக்கொண்ட் இருக்கிறேன். கேசட் தரம் குறைவு என்பதால் பலர் உபயோகத்துக்குப்பின் தூக்கி போட்டு விடுவார்கள்

புருனோ Bruno said...

பல சமுக அவலங்களை தோலுரித்திருப்பார்கள்

கிழக்கு சீமையில் வரும் “அத்தைக்கு” பாடலை மாற்றியது இன்னமும் மறக்க முடியாது.

அவர்கள் “காணாமல் போனதிற்கு காரணம்” (என்னைப்பொருத்த வரை) - நீங்கள் கூறிய காரணங்கள் அல்ல.

1993-94ல் மூர்த்தி-கோபி யின் பாடல்கள் பிரபலமாக இருந்த்து. அதன் பின் 1996ல் தமிழகத்தின் அனைத்து தேநீர்கடைகளிலும் ஒலித்தது “பழைய பாடலா, புதிய பாடலா” பட்டிமன்றமே. (யாருடையது என்று தெரிகிறதா :) :):) )

அதன் பின் அந்த பட்டிமன்ற ஒலிப்பேழைகளின் “மவுசு” குறைவதற்கு நீங்கள் கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து

வெண்பூ said...

என் வீட்டிலேயே இவர்களின் கேசட் இருந்திருக்கிறது. நான் சின்ன வயதில் ரசித்த விசயங்களில் இவர்களின் கேசட்டும் அடக்கம். இன்னும் இருக்கிறதா தெரியவில்லை. அடுத்த முறை வீட்டுக்குச் செல்லும்போது தேடிப்பார்க்க வேண்டும். கிடைத்தாலும் அதை கேட்க என்னிடம் கேசட் ப்ளேயர் இல்லை :(

முரளிகண்ணன் said...

அன்பு புருனோ
லியொனி அவர்களின் தாக்கமும் ஒரு காரணம். 95க்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து டேப்பில் பாடல் கேட்பது நின்று போய்விட்டது. பக்தி கேசட் மட்டும் விற்றது. நாயகன்,கடலோர கவிதைகள்,முதல் மரியாதை,புதுப்புது அர்த்தங்கள் போன்ற பட பாடல்களை குடும்பத்தோடு அமர்ந்து கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

முரளிகண்ணன் said...

\\அதை கேட்க என்னிடம் கேசட் ப்ளேயர் இல்லை \\
வெண்பூ
எனக்கும் அதே நிலைமை

புருனோ Bruno said...

ஏ.ஆர்.ஆரின் வருகையும், குறுந்தட்டு தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் வந்ததால் அவரின் பாடல்களை குறுந்தட்டில் கேட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பரவியது.

குறுந்தட்டு வந்த சில நாட்களிலேயே MP3 வந்தது (100 ரூபாய்க்கு 100 பாடல்கள் காலம் ஞாபகம் இருக்கா)

அதன் பின் மார்ச் 2003ல் சூரியன் எப்.எம் வர MP3 மதிப்பிழந்தது

இப்படி மாறாதது மாற்றம் மட்டும் தான்.

--

//95க்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து டேப்பில் பாடல் கேட்பது நின்று போய்விட்டது.//

உண்மைதான்

//\\அதை கேட்க என்னிடம் கேசட் ப்ளேயர் இல்லை \\//

நான் கடைசியாக வாங்கிய கேசட் “ரிதம்” மற்றும் “தெனாலி” (2000 அக்டோபர்) என்று நினைக்கிறேன்

க்டைசியாக வாங்கிய குறுந் தட்டு - சிவாஜி.

-

இசையின் அடுத்த அவதாரம் MP3 Player (ஐபாட்) தானே

புருனோ Bruno said...

//95க்குப் பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து டேப்பில் பாடல் கேட்பது நின்று போய்விட்டது. //

தற்பொழுது வீட்டில் உள்ள எல்லாரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவது, பேசுவது கூட குறைந்து விட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம். !!!

PPattian said...

முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்..

மெஹபூபா, மெஹபூபா..

முரளிகண்ணன் said...

ஆமாம் புபட்டியன். மறக்க முடியாத கேசட் அது. அந்த கேசட்டை படுக்கை செட் எனப்படும் கிடைமட்டமாக இருக்கும் டெல்லி செட்டில் கேட்டு பல முறை மகிழ்ந்திருக்கிறோம்.

கிரி said...

எனக்கு இவர்களை பற்றி தெரியாது. லியோனி பாட்டி மன்றம் மட்டுமே கேட்டு இருக்கிறேன். புதிய பாடலா? பழைய பாடலா?

உங்கள் பதிவு அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

rapp said...

மறுபடியும் ஒரு வேண்டுகோள் :
இவைகள் கிடைத்தால், யாராவது கொஞ்சம் வலையேற்றுங்களேன். நீங்களும் புருனோ அவர்களும் கூறியவைகள் எல்லாமே நிஜம் :):):)

மோகன் கந்தசாமி said...

"சட்டப்பேரவையில் திரை நட்சத்திரங்கள்" என்ற தலைப்பில் ஒரு மிமிக்ரி கேட்டிருக்கிறேன். சபாநாயகர் கவுண்டமணி, முதல்வர் ரஜினி, எதிர்கட்சி தலைவர் கமல், கல்வி அமைச்சர் செந்தில், மற்றும் லூஸ்மோகன், சில்க் சுமிதா என கலக்கலாக இருக்கும். ஆனால் அது மூர்த்தி கோபி யின் கேசட்டா என தெரியவில்லை.

முரளிகண்ணன் said...

மோகன் அது மூர்த்தி கோபியின் கேசட் தான். அதில் கவுண்டமனி ஒவ்வொருவர் பேச்சுக்கும் ஒரு பஞ்ச் குடுப்பார். இதுதான் இவர்களின் 100 வது கேசட் என நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

அடடா...எனக்கு பழைய நினைவுகளைத் தூண்டி விட்டீர்கள்! இவர்களின் சட்டசபையில் இவர்கள் கேசட்டுக்கு நான் அடிமை! (அதில் விசு கேரக்டர் ஞாபகம் வருகிறதா?) எனக்கு ஹ்யூமர் சென்ஸ் இருப்பதாய் சொல்கிறார்கள். இது நிஜமென்றால் அதில் நிச்சயம் இவர்கள் பங்குண்டு!!

இந்த கோபிதானே இப்போது டி.ஷோக்களில் வருகிறார்? படவா கோபி.

அதேபோல சந்தானமும் வருகிறார்.

மூர்த்தி????

என்னா சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்!!!

முரளிகண்ணன் said...

\\இவர்களின் சட்டசபையில் இவர்கள் கேசட்டுக்கு நான் அடிமை! (அதில் விசு கேரக்டர் ஞாபகம் வருகிறதா?) எனக்கு ஹ்யூமர் சென்ஸ் இருப்பதாய் சொல்கிறார்கள். இது நிஜமென்றால் அதில் நிச்சயம் இவர்கள் பங்குண்டு!!
\\

பரிசல்காரரே,
விசு பசுவைப்பற்றி பேசுவதைப்போல அமைத்திருப்பார்கள் (அவர் எதிர்க்கட்சி) கலக்கலாக இருக்கும்

Raja said...

Makkale,
I got some links for Murthi Gopi Audio

http://www.hummaa.com/artist/artistdashboard.php?aid=13895

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி டஃப் இண்டியன்

இவன் said...

//அடடா, நீங்க சொல்ரதஎல்லாம் கேட்டா ஆர்வமா இருக்கே, இப்போ யாராவது இவைகளை வலையேற்றி இருந்தால் அந்த லிங்கை இங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.//
repetteeeee

நானும் கேட்டதில்லை முடிந்தால் யாராவது வலையேற்றுங்கள்

முரளிகண்ணன் said...

இவன், மேற்குறிப்பிட்ட தொடர்பில் இருக்கிறது. மேலும் முயற்சிக்கிரோம்

பாரம்பரிய மீனவன் said...

இவரது கேசட்டுகளை போட்டு நண்பர்கள் அனைவரும் சுற்றி இருந்து கேட்டு சிரித்து ரசித்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கு