July 26, 2008

தாவணியின் சக்தி


கடந்த பத்தாண்டுகளில் கலை ரீதீயாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களில் ஒரு ஒற்றுமையைக காணலாம். அது படத்தில் ஒரு முக்கிய பெண் கேரக்டர் தாவணி அணிந்திருக்கும்.

சேது – அபிதா
அழகி – மோனிகா
ஆட்டோகிராப் – மல்லிகா
பருத்திவீரன் – பிரியாமணி
சுப்ரமணியபுரம் – சுவாதி

இதுதவிர

கில்லி,சாமி,திருப்பாச்சி - திரிஷா
சண்டக்கோழி – மீரா ஜாஸ்மின்
திமிரு – ஸ்ரேயா ரெட்டி
சிவாஜி – ஸ்ரேயா

திரையரங்களுக்கு வருவோர் பெரும்பாலும் ஆண்கள் (70%). அதில் 70% 18 ல் இருந்து 35 வரை. 30 வயதை தாண்டிய ஆண்களுக்கு தாவணி மீதான மோகம் குறையாததற்கு காரணம் இருக்கலாம். இப்போதுள்ள 20+ க்கும் தாவணி மோகம் இருக்க காரணம் அது ரத்தத்திலேயே இருப்பதாலா?

16 comments:

Athisha said...

இப்பல்லாம் யாருங்க தாவணி போடறாங்க..
அதனாலதான் நிஜத்தில கிடைக்காதத
திரைல தேடுறாங்க

சிவாஜி படத்தில கூட தமிழ்ப்பொண்ணுனு சுரேயா!!! வ தாவணி போட்டுகிட்டுதான் காட்டுவாங்க

முரளிகண்ணன் said...

குசேலன் விமர்சனம் தனிப்பதிவாக போடலாம் என்று நினைத்தேன். தமிழ்மணத்தில் இணைப்பதில் சிக்கல். எனவே முதல் பதிவுடன் சேர்த்துவிட்டேன்

மங்களூர் சிவா said...

/
தாவணியின் சக்தி"
/

சிவாஜியில் ரயிலையே நிறுத்திய தாவணியின் சக்தி இப்ப என்ன ஃப்ளைட்ட எதும் நிறுத்திருச்சான்னு பாக்க வந்தேன்!

:)))))))))

ithayasaral said...

குேசலன் விமர்சனத்ைத இன்னும் ெகாஞ்சம் விரிவாக ெசால்லி இருக்கலாம். படத்தில் ரஜினி இருக்கிறாரா? உங்கள் விமர்சனத்தில் குறிப்பிடவில்ைலேேய?

Samuthra Senthil said...

கிராமத்து பெண்களே தாவணியை மறந்து வரும் இந்நாளில் தாவணிக்காக ஒரு பதிவு போட்டு தாவணியின் புகழ் பரப்பிய முரளிகண்ணனுக்கு பாராட்டுகள்.

தாவணி பதிவை பார்த்ததும் நடிகைகளை கிளாமராக படம் எடுக்க போட்டோகிராபர்கள் படும் பாட்டை ஒரு பதிவாக போடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. பதிவையும் போட்டு விட்டேன். அதனை படிக்க இங்கே சொடுக்குங்களேன்.

லக்கிலுக் said...

//ஆண்களுக்கு தாவணி மீதான மோகம் குறையாததற்கு காரணம் இருக்கலாம்.//

எனக்கு தாவணி மீதெல்லாம் மோகம் வருவதில்லை, தாவணி போட்ட பெண்கள் மீதுதான் வருகிறது. அவர்கள் சுடிதார் போட்டிருந்தாலும் அதே மோகம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் :-)



ரஜினிகாந்தின் ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி, எங்கேயோ கேட்டகுரல் மாதிரி நடிப்பில் சிகரம் தொட்ட படங்கள் வந்த நேரத்தில் கமல் மைக்கை வைத்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்தார்.

நல்ல நடிகரான ரஜினியை எங்கே தொலைத்தோம் என்று தேடவேண்டும்.

முரளிகண்ணன் said...

\\படத்தில் ரஜினி இருக்கிறாரா? உங்கள் விமர்சனத்தில் குறிப்பிடவில்ைலேேய?
\\
இதயசாரல், அவர் 45 நிமிடம் வரை திரையில் வருகிறார். மற்ற காட்சிகளில் பெரும்பாலும் அவரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.

முரளிகண்ணன் said...

\\அவர்கள் சுடிதார் போட்டிருந்தாலும் அதே மோகம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் :-)

\\

வரும் வரும்

முரளிகண்ணன் said...

\\சிவாஜியில் ரயிலையே நிறுத்திய தாவணியின் சக்தி இப்ப என்ன ஃப்ளைட்ட எதும் நிறுத்திருச்சான்னு பாக்க வந்தேன்!
\\

மங்களூராரே ஆனாலும் உங்களுக்கு அதிகம்

நகைச்சுவை உணர்வு

rapp said...

அந்த ஒரிஜினல் படத்துல வசனங்களை வெச்சுத்தான் கலக்கி இருப்பார் ஸ்ரீனிவாசன், வழக்கம்போல வாசு கெடுத்திட்டாரா? அவருக்கு நல்ல மலையாளப் பட இயக்குனர்களை பார்த்தால், அவங்களை வித்தியாசமா பழிவாங்கத்தோனுதுன்னு நான் நினைக்கறேன்.

rapp said...

//இந்திய கிளியோபட்ரா என்று சொல்லும் அளவுக்கு நயன் கலக்கியுள்ளார்//
:):):)

முரளிகண்ணன் said...

\\அந்த ஒரிஜினல் படத்துல வசனங்களை வெச்சுத்தான் கலக்கி இருப்பார் ஸ்ரீனிவாசன், வழக்கம்போல வாசு கெடுத்திட்டாரா? \\
ராப் வசனங்கள் இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாகவும், புகழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் ரஜினி ரசிகர்கள் மகிழும்படி உள்ளது.

rapp said...

உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம், ஆனாலும் சொல்றேன், பொறியியல் கல்லூரிகளில் என்னோட சித்தப்பா எல்லாம் படிச்ச காலத்திலேயே தாவணி அணிய மட்டும் தடை இருந்தது. இப்போக் கூட பல இடங்களில் ட்ரஸ் கோட் படி தாவணி தடை செய்யப் பட்ட ஒரு உடை

rapp said...

//வசனங்கள் இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாகவும், புகழ்ச்சியாகவும் இருக்கிறது//
ஆமாங்க, ஆனா அதுதான் அவருக்குக் கைவந்த கலையாச்சே, சின்னத்தம்பி பார்த்து ஏழு எட்டு வயசிலயே நான் எரிச்சல் பட்டேன், மறுபடியும் தன் முத்திரைய இந்தப் படத்தில் பதிச்சிருப்பார்

Thamira said...

எனது ஓட்டையும் தாவணிக்கு பதிவு செய்துகொள்கிறேன். தாவமிக்கு ஜே!
அண்ணன் முரளிக்கு ஜே!

முரளிகண்ணன் said...

\\எனது ஓட்டையும் தாவணிக்கு பதிவு செய்துகொள்கிறேன்\\

தாமிரா இதுதான் தாவணியின் சக்தி