சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதும் என் நண்பரின் உதவியால் நேற்று குசேலன் படம் பார்த்தேன்
சில துளிகள்
படம் முடிந்த பின்னரும் பசுபதியின் அந்த ஏக்கமான முகத்தை மறக்கமுடியவில்லை
மூன்று குழந்தைக்கு தாயாகவும், ஏழை சவரத்தொழிலாளியின் மனைவியாகவும் வரும் மீனா அதீத மேக்கப்புடன் வருவது லேசாக உறுத்துகிறது.
சந்தானம் வரும் காட்சிகள் வடிவேலின் காட்சிகளை காட்டிலும் நகைச்சுவையாக இருக்கிறது. (ஒருவேளை வடிவேலின் மேல் உள்ள அதிக எதிர்பார்ப்பு காரணமா எனத் தெரியவில்லை
இந்திய கிளியோபட்ரா என்று சொல்லும் அளவுக்கு நயன் கலக்கியுள்ளார்
ஒளிப்பதிவு சுமார் (காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஒளிப்பதிவாளரா இவர்? என்று கேட்கும் படி இருந்தது. பின்னெ டைரக்டர் அப்படி.)
பாடல் ஒ கே ரகம். வசனம் மொக்கை
ஆனால் படம் முடிந்தபின் ஒன்று தோன்றியது. இரண்டு காட்சிகளில் தான் ரஜினி நடித்துள்ளார் (பாடல், பில்ட் அப் தவிர்த்து). அந்த இரண்டு காட்சியிலேயெ ஏன் தனக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கிறது என்று புரியவைத்து விட்டார்.
உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்
28 comments:
//உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்
//
You mean Pasupathy?
இந்தியரே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
//சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதும் என் நண்பரின் உதவியால் நேற்று குசேலன் படம் பார்த்தேன்//
காதில் புகை வருகிறது
//காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஒளிப்பதிவாளரா இவர்? என்று கேட்கும் படி இருந்தது. பின்னெ டைரக்டர் அப்படி//
ஹா ஹா ஹா
//பாடல், பில்ட் அப் தவிர்த்து)//
இதை வன்மையாக கண்டிக்கிறேன் :-)))))))))
//உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்//
உண்மை தான், இயக்குனர்கள் சரியாக ரஜினியை பயன்படுத்தி கொள்ளவில்லை.
சரி படம் எப்படி இருக்கு அதை சொல்லவே இல்லையே? மொக்கையா சுமாரா டாப்பா தேறுமா ஏதாவது சொல்லுங்க.
சூப்பர்ஸ்டார் ஒரு வினாடி வந்தாலும் அதற்குமேல் ஒன்றும் இல்லை அந்த படத்தில்!.
சூப்பர்ஸ்டாரின் 76-முதல் 2008 வரையும் அதற்குமேல் அவர் காலம் தாண்டி என் காலம் முடியும் வரை இரசிகனாய்,இருக்கப்போகும்,இரசிகன்
நல்லதந்தி!
சூப்பர்ஸ்டார் ஒரு வினாடி வந்தாலும் அதற்குமேல் ஒன்றும் இல்லை அந்த படத்தில்!.
சூப்பர்ஸ்டாரின் 76-முதல் 2008 வரையும் அதற்குமேல் அவர் காலம் தாண்டி என் காலம் முடியும் வரை இரசிகனாய்,இருக்கப்போகும்,இரசிகன்
நல்லதந்தி!
\\சரி படம் எப்படி இருக்கு அதை சொல்லவே இல்லையே? மொக்கையா சுமாரா டாப்பா தேறுமா ஏதாவது சொல்லுங்க.
\\
கிரி படம் ரசிக்கும் வகையில்தான் உள்ளது. சந்திரமுகி மாதிரி வந்திருக்கிறது. பாட்ஷா,படையப்பா மாதிரி பெரிய எண்டர்டெயினர் இல்லை.
நான் திரையரங்கில் பார்த்திருந்தால் சரியாக சொல்லி இருப்பேன். அவர்களுடன் பார்த்தது ஒரு சங்கடமான அனுபவமே. எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
பெருமைக்கு எருமை மேய்த்த கதைதான் அவர்களுடன் பார்த்தது.
//அந்த இரண்டு காட்சியிலேயெ ஏன் தனக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கிறது என்று புரியவைத்து விட்டார்//
அதுதான் சூப்பர் ஸ்டார்.
//சந்திரமுகி மாதிரி வந்திருக்கிறது. பாட்ஷா,படையப்பா மாதிரி பெரிய எண்டர்டெயினர் இல்லை.//
இந்த கதையில் அதை போல எதிர் பார்க்க முடியாதது தான்.
//பெருமைக்கு எருமை மேய்த்த கதைதான் அவர்களுடன் பார்த்தது.//
உண்மை தான் முரளி கண்ணன். நான் இப்படி தான் சந்திரமுகி படம் பார்த்தேன், படமே பிளாப் ஆகி விட்டது என்று எல்லோரிடமும் கூறி விட்டேன். அங்கே இருந்தவங்க காட்டுன முக பாவனை பார்த்து. அப்புறம் படம் பார்த்து நண்பர்கள் நான் சரி இல்லைன்னு சொன்னதுக்கு செம திட்டு அது தனி கதை.
நீங்கள் கமல் ரசிகராக இருந்தாலும் நியாயமாக பேசும் உங்கள் இந்த பேச்சே என்னை மிக கவர்ந்தது.
//பெருமைக்கு எருமை மேய்த்த கதைதான்//
பதிவை விட இந்த பழமொழி சூப்பர்...
முரளிகண்ணன், இந்தியனின் சந்தேகம்தான் எனக்கும் வந்தது, உங்கள் பதிவு பசுபதியை வீணடித்துவிட்டதான கருத்தைத்தான் தருகிறது.
இந்த அதிர்ஷ்டசாலி தான். எங்களுக்கு முன்ேன பார்த்ததுக்கு.. த ைலவ ைர பற்றி இன்னும் எழுதியிருக்கலாம்
வாங்க தமிழ்ப்பறவை.
அதெல்லாம் ஒரு புளோல வர்றது.
வாங்க மதிவதனன்
ரஜினியின் நடிப்பை பற்றி சொன்னபிறகு தான் அந்த வரி வருகிறது. அந்த கருத்து ரஜினிக்குத்தான். தெளிவாக சொல்லாததற்கு வருந்துகிறேன் இந்தியன் & மதிவதனன்
வாங்க ஆனந்த்ரே
\\த ைலவ ைர பற்றி இன்னும் எழுதியிருக்கலாம்\\
தனி பதிவு ஒன்று எழுதலாம் என்று இருக்கிறேன்
முரளி,
நான் தசாவதாரத்திற்கு விமர்சனம் எழுதின மாதிரி காமெடி ஒன்னும் பண்ணவில்லை அல்லவா ?
\\நான் தசாவதாரத்திற்கு விமர்சனம் எழுதின மாதிரி காமெடி ஒன்னும் பண்ணவில்லை அல்லவா ?
\\
மோகன் இந்த மாதிரி யாரும் கேட்பாங்கன்னுதான் ஒரு நாள் தாமதித்தேன். ஆனால் என்னால் படம் பார்த்ததை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
என்னையும் கூப்பிட்டு இருந்தா
நானும் வந்திருப்பேன்ல
அது சரி இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது
படத்தின் மூலமான கத பறயும்போளில் மம்முட்டி வருவது சில நிமிடங்களே. படம் துவங்கும்போதே ரஜினி சொன்னது எனக்கு 25%, வடிவேலுவிற்கு 25%, பசுபதிக்கு 50% என்று. அதையெல்லாம் மறுத்து அப்பாவி ரசிகர்களிடம் இது பக்கா ரஜினி படம் என்று பல பேட்டிகள் மூலம் பில்டப்பை ஏற்றியது பி.வாசு. ஏனென்றால் அப்படி பில்டப் கொடுத்தால்தான், ரசிகர்கள் பெருந்திரளாக படம் பார்க்க வருவார்கள். இப்போது ரஜினி வருவது சில காட்சிகள்தான் என்றால் அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்களா?
//உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள//
nice joke. chndramukila rajini nallaa nadicha athu avaroda thiramai. illainna directors avarai waste pannittaanga. enna kodumai ithu.
ippadithaan padam odinaa athu rajiniyala, odalainnaa athu directors thappunnu rajini rasigargal solluvaanga. neenga solrathum athupola thaan irukke.
who stopped rajini to do a mullum malarum or thillu mullu? only crying is not good acting...
who stops rajni to go to good directors like maniratnam, bala selvaragavan gautam menon ect,
kamal, sagalakalaa vallavan pannumbothu rajini enkannil neer vazinthaal panninaar. athu flop. so he left out trying such movies. but rajini thalabathy pannumbothu kamal guna panninaar. innamum anbe sivam mahanathi pola padangal pannugiraar.
tholvi sagajam thaan. athanaal muyarchiyai vittuvidakoodaathu. but rajini stopped trying. its HIS fault
முரளி கண்ணன், ரஜினியின் பாட்ஷா, படையப்பாவின் ரசிகனாய் இருந்தாலும்... வேட்டையனின் வசூல் வேட்டையைக் கண்டு களித்தவர்களில் நானுல் ஒருவன்.
நல்ல செய்திக்கு நன்றி. இங்கே லண்டனில் 31 சினி வோர்ல்டுல ரிலீஸ்.
ரஜினி என்ற நடிகன்; சினிமா என்ற வியாபாரக் கடலில் மூழ்கடிக்கப்பட்டார் என்பதே உண்மை. அவரும் புத்திசாலி.... :)
வீண்பேச்சுக்கு வாங்க...
போஸ்டர்கள் அனைத்திலும் ரஜனியும் நயந்தாராவும் தான் இருக்கிறார்கள். பசுபதி மீனா வடிவேல் ஒருதரையும் காணவில்லை. வாழ்க பி.வாசு, வாழ்க தமிழக மக்களை வாழவைக்கும் தெய்வம் ரஜனி
\\படம் துவங்கும்போதே ரஜினி சொன்னது எனக்கு 25%, வடிவேலுவிற்கு 25%, பசுபதிக்கு 50% என்று. அதையெல்லாம் மறுத்து அப்பாவி ரசிகர்களிடம் இது பக்கா ரஜினி படம் என்று பல பேட்டிகள் மூலம் பில்டப்பை ஏற்றியது பி.வாசு. \\
அதை ரஜினியாவது கண்டித்திருக்கலாம். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் சர்க்குலேஷனுக்காக இம்மாதிரி பேட்டிகளை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள். கதந்த இரண்டி வாரமாக ரஜினி தான் அட்டையில்
\\tholvi sagajam thaan. athanaal muyarchiyai vittuvidakoodaathu\\
சிலிக்கான் சில்லு, அவருக்கு குதிரையாக இருக்கத்தான் ஆசை என கூறியிருக்கிறார்.
அந்த ஆசையை அணையவிடாமல் செய்தது, சில தயாரிப்பாளர்களாலும்,இயக்குநர்களும் தான்
\\tholvi sagajam thaan. athanaal muyarchiyai vittuvidakoodaathu\\
சிலிக்கான் சில்லு, அவருக்கு குதிரையாக இருக்கத்தான் ஆசை என கூறியிருக்கிறார்.
அந்த ஆசையை அணையவிடாமல் செய்தது, சில தயாரிப்பாளர்களாலும்,இயக்குநர்களும் தான்
\\வேட்டையனின் வசூல் வேட்டையைக் கண்டு களித்தவர்களில் நானுல் ஒருவன்\\
ஆமாம் விஜய் நல்ல வசூல் தான் சந்திரமுகிக்கு. ஆனால் அது அவர் ரசிகர்களின் பேவரிட் கிடையாது. அதுபோலத்தான் இதுவும்.
வாங்க திரிஷா
\\போஸ்டர்கள் அனைத்திலும் ரஜனியும் நயந்தாராவும் தான் இருக்கிறார்கள். \\
என்ன பண்றது. பிரமிட் 65 கோடிக்கு வாங்கியிருக்காங்க (தமிழ்+தெலுங்கு). போட்ட காச எடுக்கணுமே. தயாரிப்பாளர் இவ்வளோ விலைக்கு வித்திருக்கக்கூடாது. என் மதிப்பீட்டில் ரஜினி சம்பளம் போக 6 கோடி தான் செலவாயிருக்கும்
\\அது சரி இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது\\
அதிஷா, இந்த மாதிரி கிண்டலை தவிர்க்கவே எழுத வேண்டாம் என நினைத்தேன். தலை வெடித்துவிடும் போல இருந்ததால் எழுதினேன்.
//உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு அற்புத நடிகரை வீணடித்து விட்டார்கள்//
யாரைச்சொல்லுறீங்க பசுபதியையா இல்லை ரஜினியையா??
நண்பா வாங்க
\\யாரைச்சொல்லுறீங்க பசுபதியையா இல்லை ரஜினியையா??
\\
ரசிகர்கள் என்ற வார்த்தை வந்தாலே அது ரஜினி தானே.
Post a Comment