August 06, 2008

சந்திப்புக்கு வரவில்லை – பாலபாரதி,லக்கிலுக்,ஜியோவ்ராம்,வளர்மதி,புருனோ,பைத்தியக்காரன் அறிவிப்பு

ஞாயிறு மாலை சந்திப்பை உறுதி செய்வதற்காக நேற்று சென்னை பதிவர்களை அலைபேசியில் பிடித்த போது

நான் : தலை, சந்திப்பு

பாலபாரதி : நான் வரல்லையா

நான் : ஏன் தலை?

பாலபாரதி : கம்பெனியில டவுசரை கிழிக்கிறாங்க, வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை தான் 12 டவுசரையும் தைக்க வேண்டிஇருக்கு

நான் : 6 நாள் 6 டவுசர் தானே?

பாலபாரதி : அங்க ஒருநாளைக்கு ரெண்ட கிழிக்கிறாங்க

நான் : !!!!!!!!

நான் : லக்கி, சந்திப்பு

லக்கி : வரல்ல

நான் : ஏங்க?

லக்கி : வாரநாள்ள எல்லாம் சுட்டபழம்,பத்துபத்து மாதிரி படம் பார்க்கவும் அதிக்கு விமர்சனம் எழுதவுமே நேரம் சரியாப்போயிடுது. இதுல பின்னூட்டம், பதில் பின்னூட்டம் அப்புறம் யூத் விகடன் வேலைகள்

நான் : அதனால?

லக்கி : ஞாயிறு தான் எங்க கம்பெனி வேலையை பார்க்க வேண்டி இருக்கு

நான் : !!!!!!!!

நான் : சார், சந்திப்பு

ஜியோவ்ராம் : ம்ஹூம்

நான் : ஏன் சார்?

ஜியோவ்ராம் : தெரியாம 45 கதைன்னு சொல்லிட்டேன். பார்க்கிற ஆள் எல்லாம் மீதி கதையைக்கேட்டு ஒரே தொல்லை

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

வளர்மதி : திரைப்படம் காட்சி ஊடகம், பதிவு மொழி ஊடகம்,சந்திப்பு ஒலிஒளி ஊடகமா பன்முகத்தன்மையின் நீட்சியா இருப்பதால

நான் : அப்படின்னா நீங்க வரல்லையா சார்?

வளர்மதி : நான் வரல்லைன்னு எப்பங்க சொன்னேன், வந்தா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

புருனோ : அய்யய்யோ

நான் : என்னாச்சு?

புருனோ : அட நீங்க வேற, 6 நாளும் ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்த்துட்டு ரிலாக்ஸ்க்காக வந்தா, அங்கயும் ஒரே கன்சல்டிங். இதுக்கு மக்களுக்காவது சேவையை தொடரலாம்

நான் : !!!!!!!!!!!!

நான் : சார், சந்திப்பு

பைத்தியக்காரன் : கண்டிப்பா வந்துர்றேன். ஆமா வளர்,சுந்தர், பாலா, லக்கி எல்லாம் வர்றாங்கல்ல?

நான் : இல்லை

பைத்தியக்காரன் : அவங்க இல்லாம எதுக்கு சந்திப்பு நடத்துறீங்க? பேசாம நீட்ஷேவையும் பூக்கோவையும் போய் படிங்க

நான் : !!!!!!!!!!!!

நொந்து போய் அதிஷாவை அழைக்க,

நான் : அதிஷா, யாரும் வரமாட்டாங்க போல இருக்கே?
அதிஷா: அமீரகம் மாதிரி பிரியாணி போட்டு, இலவச புக் டிவிடி கொடுப்பமா?
நான் : யாரு, நீயா? நீ அடைச்ச கடையில உடைச்ச சோடாவும், குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ. யாரு வருவா?

அதிஷா : அப்ப சிங்கை மாதிரி இலவச பின்னூட்டம்....
நான் : அங்க எல்லாம் சாப்ட்வேர் ஆட்கள். பிடுங்க ஆணி இல்லேன்னா பின்னூட்ட விளையாட்டு விளையாடுறவங்க. இந்த குரூப்பு போடுற பின்னூட்டத்தயே ரிலீஸ் பண்ணாது. இதில பரிசாம்

அதிஷா : அப்ப கோவை மாதிரி ஷாமியானா போட்டு....
நான் : நீ சொந்தமாவே யோசிக்க மாட்டியா?

அதிஷா : அப்படின்னா ஒரே வழிதான் இருக்கு. அதப்பண்ணுன்னா சென்னை என்ன, கும்மிடிப்பூண்டியில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள பதிவர்கள் வந்துருவாங்க

நான் : சீக்கிரம் சொல்லுப்பா
அதிஷா : பத்து பத்து சோனா வை சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டுறலாம். கூட்டம் அம்மிரும்
நான் : !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!


சோனா வந்தாரா?
பதிவர் கூடினரா?

10-08-08 மாலை 5-30 மெரினா வில் காண்க

நமது மலேசிய மாவீரன் டிபிசிடி இன்று மாலை மெரினாவில் பதிவர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் வருக
நேரம் : 6.30-8.30

28 comments:

Anonymous said...

//அப்ப கோவை மாதிரி ஷாமியானா போட்டு//

அங்கயுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Natty said...

thala... sona nejamavae varangala? nan hawaii'le irukaen... flight ticket kedaikuthannu pakkuraen ;)

ஜெகதீசன் said...

எச்சுகிச்சுமீ....
எனக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்து, ஷேவ் பண்ண ஒரு 1000 ரூபாய் கைல தந்தா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்வது பற்றி நானும் பரிசீலனை செய்வேன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்....
:)

கோவி.கண்ணன் said...

//அதிஷா : பத்து பத்து சோனா வை சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டுறலாம். கூட்டம் அம்மிரும்
நான் : !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!


சோனா வந்தாரா?
பதிவர் கூடினரா?
//

ஓஓஓஓஓஓஒ அப்படியா ?

உறுதிப்படுத்துங்கள், ப்ளைட்டுக்கு டிக்கேட் வாங்கனும் !

முரளிகண்ணன் said...

வாங்க வடகரை, நல்லத எங்க இருந்தாலும் எடுத்துக்க வேண்டியதுதானே

முரளிகண்ணன் said...

வாங்க நட்டி
சென்ற தலைமுறை இளைஞர்ன்னு சொல்றீங்க.

முரளிகண்ணன் said...

வாங்க கோவி
வருகை உறுதியானவுடன் செய்தி அனுப்புகிறோம்

முரளிகண்ணன் said...

வாங்க ஜெகதீசன்
ஏன் சோனா உங்ககிட்ட மட்டுமே பேசிக்கிட்டு இருக்கணுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ/

ஹாஹாஹா

அதிஷா விவரமான பார்ட்டிதான் போலிருக்கு :)

Athisha said...

குருதிப்புனல் பாட்டு புத்தகமும் , பேசும்பட வசன சிடியும் 30 ஐ சகலகலா வல்லவன் வலைப்பூ சார்பா தயார் பண்ணியாச்சு , சந்திப்புக்கு வரவங்களுக்கு அள்ளிக்குடுத்தறலாம்

ஆமா உங்க வீட்டுகாரம்மா கிட்ட என்ன பொய் சொன்னிங்க

Athisha said...

சோனா வை இப்போதுதான் பிடித்தேன்

செல்லில்ங்க

வலைப்பதிவருங்கனா அலர்றாங்க
பேர கேட்டாலே அதிருதாம்

சந்திப்பில் கலந்து கொள்ள அதிக பணம் கேட்பதால்

சோனா நிவாரண நிதி ஒன்னு கலெக்ட் பண்ண பிளான் இருக்கு

- யெஸ்.பாலபாரதி said...

//யாரு, நீயா? நீ அடைச்ச கடையில உடைச்ச சோடாவும், குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ. யாரு வருவா?
//

ஹஹஹ..

கண்டிப்பாக நான் உள்ளேன் அய்யா!

anujanya said...

முரளி,

கலக்கல் பதிவு. லக்கி, சுந்தர் மற்றும் வளர் உரையாடல் மிக மிக ரசித்தேன். உண்மையில் அவர்கள் வருகிறார்களா இல்லையா?

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

\\உண்மையில் அவர்கள் வருகிறார்களா இல்லையா?

\\
அவர்கள் வராமலா?
அவசியம் நீங்களும் வாருங்களேன்

லக்கிலுக் said...

டவுசர் கிழிந்தாலும் பரவாயில்லை. கிழிந்த டவுசரோடு இந்த பதிவுக்காகவே சந்திப்பில் கலந்துகொள்கிறேன் :-)))))

narsim said...

வரலாமா? லைட்டா வவுத்த பயம் கவ்வுது...

narsim

குசும்பன் said...

துபாய் மாதிரி இலவச பிரியாணி ...அவ்வ்வ்

போற போக்க பார்த்தா விஜயகாந்து கூட்டம் சேர்பது போல் ஆகிவிடும் போல இருக்கே!!!

Anonymous said...

//சோனா 'நிவாரண' நிதி ஒன்னு கலெக்ட் பண்ண பிளான் இருக்கு//

ஏதும் ஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கா?

புருனோ Bruno said...

//வளர்மதி : நான் வரல்லைன்னு எப்பங்க சொன்னேன், வந்தா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்//

ஹி ஹி ஹி...

புருனோ Bruno said...

http://payanangal.blogspot.com/2008/08/06062008.html

முரளிகண்ணன் said...

@ லக்கிலுக்
நீங்க இல்லாமலா?

@ ஜியோவ்ராம் சுந்தர்
அதிஷா விவரமான பார்ட்டி மட்டுமில்ல, விவகாரமான பார்ட்டியும் கூட

முரளிகண்ணன் said...

\\வரலாமா? லைட்டா வவுத்த பயம் கவ்வுது... \\

நரசிம்,
நடப்பது பதிவர் சந்திப்புதானே, இலக்கிய விவாதம் இல்லையே எதற்குப்பயம்?

முரளிகண்ணன் said...

\\போற போக்க பார்த்தா விஜயகாந்து கூட்டம் சேர்பது போல் ஆகிவிடும் போல இருக்கே!!!
\\

இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எங்க கேப்டன் மும்பைல ஆபிஸ் தொடங்கிட்டாரு. அமீரகத்திலயும் தொடங்க வாய்ப்பிருக்கு. மத்த கட்சி எல்லாம் ஆட்டோ அனுப்பும். நாங்க கேப்டனோட புள்ளிவிவரத்த அனுப்புவோம்.

முரளிகண்ணன் said...

\\ஏதும் ஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கா?
\\
வேலன்
சத்தியமா இல்லைங்க. ஆனாலும் உங்களுக்கு பயங்கர குறும்புங்க.

வளர்மதி said...

ஆகா ... இப்படி வேற ஒன்னு ஓடியிருக்கா!

ஞாயித்துகிழமை வச்சிக்குறேன் :)

ஆயில்யன் said...

//இந்த குரூப்பு போடுற பின்னூட்டத்தயே ரிலீஸ் பண்ணாது. இதில பரிசாம்//


:))))))))))))))

நல்லா இருக்கு !

பரிசல்காரன் said...

ஐயைகோ! என்ன கொடுமை இது! இதை எப்படி நான் இவ்வளவு நாட்களாக மிஸ் பண்ணினேன்?

குசேலன் விமர்சனத்துக்குப் பிறகு நம்மாளு ஒண்ணுமே எழுதலியேன்னு எல்லாத்தையும் திறந்து பார்த்தா.. இப்படி ஒரு முத்தான படைப்பை தவறவிட்டது தெரியவந்தது!

எனக்கெல்லாம் மன்னிப்பே இல்லை!

முரளிகண்ணன் said...

நன்றி பரிசல்.