October 11, 2008

என்னாச்சு ஏ ஆர் ரகுமானுக்கு?


2001 முதல் தற்போதுவரை ரகுமான் இசையில் வந்த தமிழ்படங்களின் வெற்றிசதவீதம் ஆச்சரியப்படவைக்கிறது.


2001 - ஸ்டார்,பார்த்தாலே பரவசம்

2002 - அல்லி அர்ஜூனா,கன்னத்தில் முத்தமிட்டால்,பாபா,காதல் வைரஸ்

2003 - பரசுராம்,பாய்ஸ்,எனக்கு 20 உனக்கு 18, கண்களால் கைது செய்

2004 - உதயா,ஆயுத எழுத்து, நியூ

2005 - அ ஆ

2006 - சில்லென்று ஒரு காதல்,வரலாறு

2007 - சிவாஜி,அழகிய தமிழ் மகன்

2008 - சக்கரகட்டி


இவற்றில் சிவாஜி,வரலாறு, நியூ மட்டுமே வெற்றிப்படங்கள். அதில் நியூ இனி திரையிடக்கூடாது என தடைவிதித்து விட்டார்கள்.


அ ஆ ஆவரேஜ்


மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை முடக்கிய படங்கள் எனலாம்
எனக்கு 20 உனக்கு 18 ல் ஏ எம் ரத்னம் காலி, பாபா மணி ரிட்டர்ன், சக்கரகட்டி - தாணுக்கு நாமகட்டி.

பாடல்கள் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் படம்?

இதில் பல படங்களுக்கு இந்திக்கு கொடுத்த டியூன் தான்.


பாடல் கரை சேர்த்துவிடும் என தயாரிப்பாளர்கள் கதையில் கோட்டைவிடுகிறார்களா?


பாடல்கள் வாங்குவதில் இயக்குனர்கள் களைப்படைந்து விடுகிறார்களா?


இல்லை கதை கேட்காமல் பேனர் பார்த்து ரகுமான் படம் ஒப்புக்கொள்வதால் இப்படி நடக்கிறதா?

56 comments:

புதுகை.அப்துல்லா said...

இல்லை கதை கேட்காமல் பேனர் பார்த்து ரகுமான் படம் ஒப்புக்கொள்வதால் இப்படி நடக்கிறதா?

//

அதான??

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

Anonymous said...

இருக்கலாம் பாஸ்.

பரிசல்காரன் said...

ரொம்ப நாளா நான் நெனைச்சுட்டிருந்ததைப் பதிவாப் போட்டிருக்க்கீங்க சார்!

பரிசல்காரன் said...

ஆர்.கே.சதீஷ் சாருக்கு என்ன ப்ரச்சினை?

செந்தழல் ரவி said...

இதே நேரத்தில் ரகுமான் இசை அமைத்த ஹிந்திப்படங்கள் மற்றும் அதில் உள்ள ஹிட் படங்கள் பற்றி சொல்லுங்கள் முரளி...

அங்கே தான் நீங்கள் மிஸ் பண்ணிட்டீங்க...

தேவதாஸ், குரு, டமுக்கு டப்பா டல்லா, ஜிமுக்கு ஜிப்பா ஜில்லா என்று ஹிந்தியில் பல வெற்றிபடங்களை இந்த காலகட்டத்தில் கொடுத்துள்ளார் ரகுமான். ( எனக்கு தெரிந்த ஹிந்தி அவ்ளோ தான்)

அதாவது ஒரு நல்ல எம்ப்ளாயியை பெரிய கம்பெனி அதிக சேலரி கொடுத்து தள்ளிக்கொண்டு போவது மாதிரி, இரகுமானின் திறமையை பாலிவுட் காசை வைத்து வாங்கிவிட்டது...!!!

செந்தழல் ரவி said...

அப்புறம்...

க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ வில்லனை குத்தவோ வெட்டவோ முயலும்போது, ஹீரோவோட அம்மாவோ அல்லது வில்லனால் கற்பழிக்கப்பட்டவரோ அவரை பின்னால் இருந்து குத்தும் சீன் எத்தனை க்ளைமாக்ஸில் உள்ளது ?

கார்க்கி said...

இந்தக் காலத்தில் எல்லாம் வெறும் பாட்டுக்காக படம் பார்க்க மாட்டார்கள்.. அது ராஜா காலத்தோட போச்சு.. அது மட்டுமில்லாமல் இதில் 50% படங்களில் ரகுமானே கோட்டை விட்டார் என்பதும் உண்மை..

யோசிப்பவர் said...

//பாடல் கரை சேர்த்துவிடும் என தயாரிப்பாளர்கள் கதையில் கோட்டைவிடுகிறார்களா?


பாடல்கள் வாங்குவதில் இயக்குனர்கள் களைப்படைந்து விடுகிறார்களா?


இல்லை கதை கேட்காமல் பேனர் பார்த்து ரகுமான் படம் ஒப்புக்கொள்வதால் இப்படி நடக்கிறதா?
//
கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து இரண்டுக்கும் நீங்கள் சொன்ன காரணங்கள் பொருந்தாது!!

வெண்பூ said...

முரளி, உங்களுக்கு சிறிதும் விருப்பமில்லாத ஒரு விசயத்தில் உங்களை கட்டாயப்படுத்தினால் என்ன ஆகும்? ரஹ்மானுக்கு இப்போது தமிழ் சினிமா உலகம் மீது விருப்பம் குறைந்து விட்டதுதான் உண்மை. அவருக்கு பாலிவுட்டும், உலகாளவிய புராஜக்ட்களும் அதிக பணமும் புகழும் தரும்போது, நமது இயக்குனர்கள் அவரை கட்டாயப்படுத்தி இசையமைக்க வைத்தால்....

விடுங்க தல... புதுசு புதுசா இளைஞர்கள் வர்றாங்க, வருவாங்க, அவங்கள பாராட்டி ஊக்கப்படுத்துவோம், நம்மள மதிக்காத ஒருத்தர நாம புடிச்சு தொங்க வேணாம்.. :(

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புதுகை அப்துல்லா, ஆர் கே சதிஷ்குமார், கடையம் ஆனந்த், செந்தழல் ரவி, வெண்பூ,பரிசல், கார்க்கி, யோசிப்பவர்,

புருனோ Bruno said...

//தேவதாஸ், குரு, டமுக்கு டப்பா டல்லா, ஜிமுக்கு ஜிப்பா ஜில்லா என்று ஹிந்தியில் பல வெற்றிபடங்களை இந்த காலகட்டத்தில் கொடுத்துள்ளார் ரகுமான். ( எனக்கு தெரிந்த ஹிந்தி அவ்ளோ தான்)//

முரளி சார்... உங்கள் கட்டுரையில் ஒரு bias உள்ளது. நான் அதை விளக்கி ஒரு இடுகை எழுதலாம் என்று நினைத்தேன். அதை செந்தழல் ரவி சரியாக கூறிவிட்டார்.

//அதாவது ஒரு நல்ல எம்ப்ளாயியை பெரிய கம்பெனி அதிக சேலரி கொடுத்து தள்ளிக்கொண்டு போவது மாதிரி, இரகுமானின் திறமையை பாலிவுட் காசை வைத்து //

உண்மை,....

ஆனாலும்... என் மறுமொழியையும் படியுங்கள்

புருனோ Bruno said...

//கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து இரண்டுக்கும் நீங்கள் சொன்ன காரணங்கள் பொருந்தாது!!//

இது குறித்து நான் விளக்குகிறேன் !!

புருனோ Bruno said...

//2001 முதல் தற்போதுவரை ரகுமான் இசையில் வந்த தமிழ்படங்களின் வெற்றிசதவீதம் ஆச்சரியப்படவைக்கிறது.//

முரளி சார்.....

1992 முதல் 2001 வரை கூட ரஹ்மான் இசையமைப்பில் வந்த படங்களில் 50 சதம் தான் வெற்றி பெற்றிருக்கின்றன

--

ஏன் 1980 முதல் 1996 வரை வந்த இளையராஜா படங்களில் 10 சதம் கூட வெற்றி பெற வில்லை

--

ஒரு படத்தின் வெற்றி / தோல்வியை வைத்து அந்த படத்தில் இசையமைப்பாளரின் பங்கை / இசையமைப்பாளரின் கலைத்திறனை எடை போடுவது சரியல்ல

--

உதாரணம்

சிறைச்சாலை - வணிக ரீதியாக தோல்வி படமென்றாலும் அதில் பாடல்களாகட்டும், பிண்ணனி இசையாகட்டும் ஒரு குறை கூட சொல்ல முடியாது

--

மேலும் உதாரணங்கள் வேண்டுமென்றால்

ஹே ராம்
பாரதி

என்று நினைத்து பாருங்கள்

cable sankar said...

ரஹமானின் சமீபத்திய ஹிட் “ஜானே தூ ஜானே நா என்கிற இந்தி படம்.. தியேட்டரில் போய் பாருங்கள் ரஹ்மானுக்கு இருக்கும் வரவேற்பை.. தமிழில் அவர் எடுத்து கொள்ளும் டைம் தான் பிரச்சனை, அதனால் தான் பெரிய புரொடியூசர்கள் கூட காத்திருக்க நேரமில்லாமல் ஓடுகின்றனர்.. ஹிந்தியில் குரு, ஜோதா அகபர். ரங்க் தே பசந்தி போன்ற படங்கள் ஹிட் லிட்டில் இருக்கிறது ..

புருனோ Bruno said...

//இவற்றில் சிவாஜி,வரலாறு, நியூ மட்டுமே வெற்றிப்படங்கள்.//

இதில் வரலாறு வெற்றி பெற்றதை ஏ.ஆர்.ஆரின் வெற்றி என்று கூறுவதை ஏ.ஆர்.ஆர் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சிவாஜியில் சஹானா பாடலை தவிர வேறு பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை தேவா விஜய் படத்திற்கு இசை அமைத்தது போலிருந்தது (தேவா கூட ரஜினி படத்திற்கு இசை அமைத்தால் 200 சதம் உழைப்பார் - அண்ணாமலை, பாட்ஷாவில் அனைத்து பாடல்களும் ஹிட் - இன்று வரை ரஜினி படங்களின் டைடிலில் வரும் இசை அண்ணாமலை “ஹோ ஹோ” இசை தானே ; பாட்ஷாவில் வரும் (என்னால் எழுத்தில் வடிக்க இயலாத ,,,,,,) பாட்ஷா..பாட்ஷா இசையையும், எனக்கு இன்னொரும் முகம் என்று ரஜினி நேர்காணல் அறையும் கூறும் போது வரும் இசையையும், பின் ஒரு சண்டை நடிகரை விளக்கு தூனில் எறிந்து தண்ணீர் குழாயை பிடுக்கும் போது வரும் இசையையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

சிவாஜி படத்தை ரஹ்மானின் வெற்றி படங்களில் சேர்ப்பது டூ மச்.

புருனோ Bruno said...

அதே நேரம், நீங்கள் குறிப்பிடாத பல படங்களின் ரஹ்மானின் பங்கு அபாரம்

கன்னத்தில் முத்தமிட்டால் - அனைத்து பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையும் உலகத்தரம் என்று அடித்து கூறலாம்

வெள்ளைப்பூக்கள் விருது பெற்ற பாடல்

பாய்ஸ், - படம் தோல்வி என்றாலும் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையில் என்ன குறைவு

எனக்கு 20 உனக்கு 18 - சுமார் பாடல்கள்

இதில் ரஹ்மான் ஒரு பாடல் எழுதியிருப்பாராமே.. அப்படியா

கண்களால் கைது செய் - பாடல்கள் நன்றாகத்தான் இருந்தது. அதை நம்பி 2004 படத்திற்கு சென்று ராடு வாங்கியது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

ஆயுத எழுத்து - பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை நன்றாகத்தான் இருந்தது

நியூ - காலையில் தினமும் பாடலை மறக்க முடியுமா

--

எனவே, ரகுமான் வெற்றி / தோல்வி என்று நீங்கள் குறிப்பிட்ட படங்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது

--

//பாடல் கரை சேர்த்துவிடும் என தயாரிப்பாளர்கள் கதையில் கோட்டைவிடுகிறார்களா?
பாடல்கள் வாங்குவதில் இயக்குனர்கள் களைப்படைந்து விடுகிறார்களா?
இல்லை கதை கேட்காமல் பேனர் பார்த்து ரகுமான் படம் ஒப்புக்கொள்வதால் இப்படி நடக்கிறதா?//

புருனோ Bruno said...

படத்தின் வியாபார வெற்றிக்கு இசையமைப்பாளரின் பங்கு தேவை என்றாலும் இசையமைப்பாளர் 100 சதம் தன் பணியை செய்தாலும், அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடையலாம்

--

கொஞ்சம் யோசித்து பார்த்தால்

1993 உழவன்
1993 புதியமுகம்
1993 திருடா திருடா
1994 மே மாதம்
1995 பாம்பே
1995 இந்திரா
1997 இருவர்
1997 மின்சார கனவு - தேசிய விருது பெற்ற பாடல்
1998 உயிரே
1999 என் சுவாச காற்றே (இது இவரது சொந்தப்படம்)
1999 சங்கமம் - தேசிய விருது பெற்ற பாடல்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
2000 ரிதம்

என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றபின்னரும், இன்று வரை அந்த பாடல்கள் முழுவதும் நினைவில் நின்றாலும், தோல்வியடைந்த படங்கள் 1993ல் இருந்தே உள்ளது

--

இதை போல் குணா, சிறைச்சாலை, பாரதி, ஹே ராம், என்று இளையராஜாவிற்கும் பெரிய பட்டியலே உள்ளது

--

புருனோ Bruno said...

வணிக ரீதியாக வெற்றிப்படங்கள் என்று பார்ப்பதை விட

இதில் எத்தனை படங்களிலிருந்து அனைத்து பாடல்களும் நினைவில் நிற்கிறது என்று பார்த்தால்

கன்னத்தில் முத்தமிட்டால்,
பாய்ஸ்,
எனக்கு 20 உனக்கு 18,
கண்களால் கைது செய் (நான் இந்த படத்தை பார்த்தது 2004ல்)
ஆயுத எழுத்து,
நியூ

என்று பட்டியல் மிகவும் சிறிதாக இருக்கிறது.

(வரலாறு வெற்றி பெற்ற படம் என்றாலும் அதில் பாடல்கள் ஹிட்டா என்று தெரியவில்லை)

புருனோ Bruno said...

கசப்பான உண்மை  இளையராஜாவின் சிறைச்சாலை
ரஹ்மானின் நியூ

--

இளையராஜாவிற்காவது ஒரு “காதலுக்கு மரியாதை” கிடைத்தது.
ரஹ்மானுக்கு அது கூட கிடைக்கவில்லை என்பது தான் சோகம்

--
ரஹ்மான் தனது கலையுலக பணித்தடத்தின் இறங்குமுதத்தில் இருக்கிறார்

புருனோ Bruno said...

எம்.எஸ்.வி ஓய்ந்த பொழுது சரியாக இளையராஜா வந்தார். அவரிடத்தை பிடித்தார். இளையராஜா ஒய்ந்த பொழுது ரஹ்மான் வந்தார். இளையராஜாவின் ஒலிப்பேழைகளை விட அதிகம் விற்பனையாகும் ஒலிப்பேழைகளை அளித்தார். ஆனால் தமிழ் திரையிசையின் தற்போதைய சோகம் என்ன வென்றால், வித்யாசாகர் (அன்பேசிவம், இயற்கை, சந்திரமுகி படங்களுக்கு பின்), ஹாரிஸ் ஜெயராஜ் (லேசா லேசா, காக்க காக்க படங்களுக்கு பின்), யுவன் சங்கர் ராஜா கூட தங்களின் பணித்தடத்தில் இறங்குமுகத்தில் தான் இருக்கிறார்கள் (declining phase of professional career)

அதனால் தான் ஏ.ஆர்.ரகுமானின் இறங்குமுகம் இது நாள் வரையில் வெளியில் தெரியவில்லை.

புருனோ Bruno said...

--
1980களில் இளையராஜாவில் படத்தில் 5 அல்லது 6 பாடல்களுமே வெற்றி பெரும்

1990களில் ரகுமானின் பாடல்களும் அப்படியே
--
இப்பொழுது யாருக்கும் அப்படி எந்த படமும் வரவில்லையே
--
ஒரு பாடல் ஹிட் என்பது சிக்ஸர்
அனைத்து பாடல்களும் ஹிட் என்பது 50
அனைத்து பாடல்களும் ஹிட் + பிண்ணனி இசை அபாரம் என்பது நூறு
--
தமிழ் திரையிசை இசையமைப்பாளர் ஒருவரிடம் இருந்து செஞ்சுரி பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது

பெத்தராயுடு said...

//முரளி, உங்களுக்கு சிறிதும் விருப்பமில்லாத ஒரு விசயத்தில் உங்களை கட்டாயப்படுத்தினால் என்ன ஆகும்? ரஹ்மானுக்கு இப்போது தமிழ் சினிமா உலகம் மீது விருப்பம் குறைந்து விட்டதுதான் உண்மை. அவருக்கு பாலிவுட்டும், உலகாளவிய புராஜக்ட்களும் அதிக பணமும் புகழும் தரும்போது, நமது இயக்குனர்கள் அவரை கட்டாயப்படுத்தி இசையமைக்க வைத்தால்....

விடுங்க தல... புதுசு புதுசா இளைஞர்கள் வர்றாங்க, வருவாங்க, அவங்கள பாராட்டி ஊக்கப்படுத்துவோம், நம்மள மதிக்காத ஒருத்தர நாம புடிச்சு தொங்க வேணாம்.. //

WEll said.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ

ரஹ்மானின் இசையை நான் என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

அவருக்கு தேவையான நேரத்தை இவர்கள் கொடுப்பதில்லையா?

சிச்சுவேஷனுக்கு தகுந்த பாடல், பிண்ணனி இசை பெறுவதில் சிக்கல் இருக்கிறதா?

அவர் எந்த அடிப்படையில் படங்களை ஒப்புக்கொள்கிறார்?

போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதே இந்தப்பதிவு.

எனக்கு 20 உனக்கு 18 ல் வரும் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே என்ற பாடல் ஏ ஆர் எழுதியது

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்
\\தமிழில் அவர் எடுத்து கொள்ளும் டைம் தான் பிரச்சனை,\\

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பெத்தராயுடு.

புருனோ Bruno said...

//ரஹ்மானின் இசையை நான் என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை. //


ஏ.ஆர்.ரகுமானை குறைத்து மதிப்பது நாம் அல்ல

அவரை வைத்து படம் எடுப்பவர்கள் தான் !!!

K.Ravishankar said...

“ “என்னாச்சு ஏ ஆர் ரகுமானுக்கு?“ ஒன்னும் ஆகல.
சரக்கு தீர்ந்து போய் விட்டது. “கூடு பறிக்கும்” அல்லது
“கண்ணாளனே” ஹம்மிங் வைச்சு எவ்வளவு நாள் ஒட்ட முடியும்.

ஏ.ஆர். அறிமுகம் ஆன புதிதில் நிறைய பாடல்களில் மெலடி இருந்தது..இப்போது சரக்கு தீர்ந்து போய் விட்டது. காரணம். He has attained Menopause in a very very short span.
மேலும் ஒரே மாதிரி படங்கள். .ரஜினி/ம.ரத்னம் படங்களுக்கு உழைத்து தேத்தி விடுகிறார்.ஆனாலும் சுமார்தான். ராப் டைப் பாடல்களில் மன்னர். ரொம்ப நாள் நிக்குமா?.

இப்போழுது ஏ.ஆர் என்ன முக்கினாலும் எடுபடவில்லை. காரணம்..”கும்பல் இசை” கும்பல் யார்? ப.வாஜ்,இமான், யுவன்,ஹாரிஸ், ஸ்றீகாந்த் தேவா, விஜய் ஆண்ட்னி, கா.ராஜா,தீனா மற்றும் பலர்.

இவர்களை விட ஏ.ஆர்.தனியாக தெரிகிறரா? இல்லை. வித்யா சாகர் சற்று தனியாக தெரிகிறார். ஜப்பானில் தெருவில் இறங்கி பார்த்தால் எல்லாம் ஒரே முகமா தெரியும். அது மாதிரி எல்லோரும் ஒரே மாதிரி இசை போட்டுக் கொண்டிருக்கிறாகள்.
அபூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வ சகோதரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கள். இந்த யூஸ் அண்ட் த்ரோ இசையில் கடைசி “ர்” ஜி.ஆஈ.பிரகாஷ்.
யாரும் சிறந்து விளங்க முடியாது.

அடுத்து பொதுவாவே ஏ.ஆர் புதுமையாகவும் ஒன்றும் செய்ய வில்லை.. எப்போதும் 40/100 மார்க் மாணவர்தான் .மேலோட்ட ரசிகர்களுக்கு அவர் இசை புயல் .பெரிய பெரிய கருவிகளை வைத்துக்கொண்டு “மெல்லிசை” போட்டுக்கொண்டிருக்கிறார்...
அல்லது யூஸ் அண்ட் த்ரோ இசை.

இது தவிர ஏ.ஆர்.ஐ Digitalised MSV என்று சொல்லலாம் Digitalised MSV . என்று சொல்லும் போது எம்.எஸ்.வியை குறைவாக மதிப்பிடவில்லை (ஆனால் MSVன் கடைசி பத்து ஆண்டு இசை துரு பிடித்துதான் போயிற்று)

(”காற்றுக்கென்ன் வேலி” பாட்டு (படம்-அவர்கள்) MSVன்
அமர்க்களமான இசை.அந்த டிரெண்டை தொடர்ந்த்திருந்தால்
டிரெண்டு மாறி இருக்கும்.)

இது தவிர ஏ.ஆர்ன் சில பாடல்கள் , எம்.ஸ்.வி.ன் பழைய பாடல்களுக்கு ”பில்டு அப்” கொடுத்து போடப்படடது. சொந்த சரக்கு இல்லை.

ஏ.ஆர் இசையில்.செய் நேர்த்தி இல்லை. அசட்டுத்தனம் இருக்கிறது செயற்கை இழை இசை. ஆத்மா இல்லை. சில பின்னணிகள் மக்குத்தனமாக இருக்கிறது .பிண்ணனியில் ஒரு ஒழுங்கு இல்லை.சில பாடல்கள் காபியை பியர் மக்கில் குடிப்பது போல் உள்ளது. கிணற்று குரல் ஒலிப் பதிவுகள். தனியாக போட்டு ஒட்ட வைக்கிறார். பாட்டில் மேற்க்கத்திய
தாக்க பாடல்க்ள் ரொம்ப நாள் நிக்காது. மேற்க்கத்திய தாக்கத்தை ராஜா வித்தியாச்மாக கொடுத்ததால் நின்றது.

இளையராஜாவின் இசையை ரசிப்பவர்களுக்கு மேலுல்ல குறைகள் அப்பட்டமாக தெரியும்..

ராஜாவுக்கு லேட் Menopause(2000). காரணம். ராஜா, இசையின் உச்சம்.(ஒரு உ.ம்.”புத்தம்புது காலை”) புதுமை. Rich orchestration. இசையில் ஆத்மா உண்டு. ”லட்சணம்”தெரியும் அசடு வழியாமல் இசை பின்னுவார். Majestic & Romatic Opening . கர்நாடக இசை அறிவு.. ஹிந்தி இசைக்கு சங்கு ஊதினார். புதுமை. Rich orchestration. இசையில் ஆத்மா உண்டு. ”லட்சணம்”தெரியும் அசடு வழியாமல் இசை பின்னுவார். Majestic & Romatic Opening இந்த திறமைகளினால் தாக்கு பிடித்தார். கர்நாடக இசை அறிவு..

ராஜாதான் இசையை “upgrade” செய்தார். ராஜாவின் எந்த சினன இசைச் சிதறல்களிலும் இனிமை இருக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை பாட்டைஅழகு படுத்திகொடுப்பர்ர். தாக்கு பிடித்ததற்கு இது முககிய காரணம். ஏ.ஆரிடம் இல்லை.

மேலும் ராஜா ஹிந்தி இசைக்கு சங்கு ஊதினார்.
பக்தி/சரித்திரம்/நாவல்/சமுகம்/குடும்பம் என்று படங்கள் அப்போது இருந்தது .படத்தில் 10 பாடல்கள் என்றால் இவரே 11 பாடி (பேசி?) துன்புறத்தலும் உண்டு.அதில் 5 ஆத்தா பாட்டு. ஆத்தா பாட்டு ஓகே. டூயட்? (காதல் ஒவியம்....)கட்டை குரலில் தேவையா? Domination! ஆனால் அந்த பாட்டின் இசை அழகோ அழகு!

மேலும் ராஜா,அவர் காலத்தில் ஒரு மாதத்திற்கு 6 அல்லது 7 படம் என்று கூர் கட்டி இசை அமைததும் தாக்கு பிடித்தார் சோடை போகவில்லை. காரணம். வெரைடி.சினிமா கதைகள். ஏ.ஆரிடம் வெரைடி இல்லை.அந்த சினிமா கதைகள் இல்லை.

ராஜாவும் சரக்கு தீர்ந்து போய் செகண்ட் சேல்ஸ் போடடுக் கொண்டிருக்கிறார்.(”கண்ணனுக்கு” படம்.-தனம்).கடைசியாக “ஒரு காட்டு காட்டினது” “ஒளியிலே தெரிவது” (படம்-அழகி).

கிரிகெட்டில் ஒரு பாட்ஸ்மேன் “Off Side”. வீக் என்று சொல்லுவார்கள். அது மாதிரி ஏ.ஆர். ஆர்கெஸ்ட்ரேஷ்னில் படு வீக்.. (கடைசி உ.ம். “சக்கரக்கட்டி’)

ஏ ஆர்... பாட்டின் கால்(1/4) ஒப்பனனயின் போதே வ்ழககமான் “கூடு பறிக்கும்”அல்லது “கண்ணாளனே” ஹம்மிங் அல்லது வேறு வ்ழககமான் க்ரூப் ஹம்மிங் கொண்டு வந்து விடுகிறார். பாட்டு படுத்து விடுகிற்து

ராஜாவின் “மாலையில் யாரோ மனதோடு” பாட்டும் ஏ.ஆர்.ன் “முன்பே வா,.. அன்பே வா” கிட்டதட்ட ஒரே வகையான் “உணர்ச்சிகளை” உள்ளடக்கிய பாட்டு.

“மாலையில்” பாட்டின் ஆரம்ப இசைச்சிதறல். காதல் உணர்வின் உச்சம். (பானுப்ரியா வேறு “ஒரு காட்டு காட்டுவார்”) ராஜா உணர்வை தொடுத்துக்கொண்டே போவார். ஆனால் ஏ ஆர்? நன்றாக ஆரம்பித்து , வ்ழககமான் ஹம்மிங் நிரப்பி .................................

மாத்தி யோசிங்க ஏ.ஆர்? இவரிடம் திறமையே இல்லையா?
இருக்கிற்து.”வராக நதி” நல்ல் இசையமைப்பு.

இந்த தலைமுறை ஒரு fashionககு ஏ.ஆர்ஐ கேட்டுக் கொண்டிருக்கிற்து. கொஞச நாள் உன்னிப்பாக கேட்டு தெளிவார்கள். FM தாக்கம். இது எல்ல தலைமுறைக்கும் பொருந்தும்.

யாரலும் ரெர்ம்ப வருடம் குப்பை கொட்டமுடியாது. இது எல்லா துறைக்கும் பொருந்தும்

கே.ரவிஷங்கர்
பின் குறிப்பு: இந்த பதிலை என் பதிவில்(raviaditya.blogspot.com)
போட்டேன்.காணவில்லை.

..

அருண்மொழிவர்மன் said...

அத்துடன், ரஹ்மான் - வைரமுத்து கூட்டாணியில் ஏற்பட்ட விரிசலும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். ரஹ்மான் இசையில் வாலி சில ஹிட் பாடலகாளை கொடுத்தபோதும் கூட, வைரமுத்துவடன் தொடர்ச்சியாக அவர் பல அற்புதமனா பாடல்களை கொடுத்திருந்தார். உதாரணமாக பாரதிராஜாவுக்கு இவர் இசையமைத்த படங்களில் கண்களல் கைது செய் தான் பெரிய வெற்றியை பெறாவில்லை.(அந்தி மந்தாரை ஒரு கலைப்படம் , இந்த லிஸ்டில் அது வராத்)

முரளிகண்ணன் said...

welcome to my blog - K.Ravishankar.
Thanks for your comment.

Thankyou Arunmozhivarman

Kamal said...

//விடுங்க தல... புதுசு புதுசா இளைஞர்கள் வர்றாங்க, வருவாங்க, அவங்கள பாராட்டி ஊக்கப்படுத்துவோம், நம்மள மதிக்காத ஒருத்தர நாம புடிச்சு தொங்க வேணாம்.. //
வெண்பூ, இது என்னங்க அநியாயமா இருக்கு... ஒருவருக்கு தமிழ் படத்தை தவிர ஹிந்தி படங்களும் இசை ஆல்பங்களும் அதிக ரீச் கொடுத்தால் அவர் அங்கு தான் செல்வார்..இது
இயல்பு...இதை வைத்து அவர் ஏதோ தமிழ் திரையுலகுக்கே துரோகம் செய்ததுபோல் சொல்லிஇருப்பது வருத்தமளிக்கிறது....
இங்கு மும்பையில் அவரை கொண்டாடுகிறார்கள்...இப்போது இங்கு அவருடைய "pappu can't dance sala வும் kadhi kabhi adhiti யும் தான் Hooooooooooottttttttttt...

rapp said...

பரசுராம்???????????????

ees said...

A.R.Rahman க்கு போட்டி வந்தாச்சு .....

see the below link

http://eesukutty.blogspot.com/2008/10/arrahman.html

முரளிகண்ணன் said...

kamal,rapp,ees

Thanks for your valuable comments

புருனோ Bruno said...

K.Ravishankar சார்

வழக்கமான ராஜா வெறியர்கள் எழுதுவது போல் ஒரு உணர்ச்சி வசப்பட்டு உண்மைக்கு வெகு தொலைவில் ஒரு மறுமொழி.

உணர்ச்சி வசப்பட்டு எழுதியதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பல வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள்

அதில் உச்சகட்ட நகைச்சுவை

//ராஜாவுக்கு லேட் Menopause(2000). ஹிந்தி இசைக்கு சங்கு ஊதினார்.//

இந்தி இசையை கேட்ட தமிழர்களை மட்டும் தான் ராஜாவால் தமிழ் இசை கேட்க வைக்க முடிந்தது

ஆனால் இந்தி இசை கேட்ட இந்தியர்களை கூட தமிழ் இசை கேட்க வைக்க இளையராஜாவால் முடியவில்லை.

அதை சாதித்த ரஹ்மான் தான்


சிம்பொனி இசையமைத்ததாக பில்டப் மட்டும் கொடுத்தவர் ஒருவர். அதை காதால் கேட்டவர்கள் யாரும் இல்லை என்பது சோகம். !!!

மற்றொருவரின் இசை லண்டனிலும் பிராட்வேயிலும் ஓங்கி ஒலித்ததை உலகமே பார்த்தது

அதையும் சாதித்தது ரஹ்மான்

இப்படி இருக்கையில் நீங்கள் கூறியது “டூ மச்”

அவ்வளவு தான் :) :)
-----
சிம்பொனி இசையமைத்ததாக பில்டப் மட்டும் கொடுத்தவர் ஒருவர். அதை காதால் கேட்டவர்கள் யாரும் இல்லை என்பது சோகம். !!!

சரி காதால் கேட்க வேண்டாம். அந்த இசைக்குறிப்பு கூட வெளியாக வில்லை. ஏன்.

இசைக்கப்பட்ட இசையின் உரிமையில் பிரச்சனை இருப்பதாக கூறுவதை ந்ம்பினால் கூட (நான் அதை நம்பவில்லை) அந்த குறிப்புகள் முழுவதும் இசைஅமைப்பாளருக்கு தான் சொந்தம்.

அதை (குறிப்புகளை கூட) வெளியிடாத மர்மம் என்னவோ. காரணம் என்னவோ. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
---------

உண்மையில் ராஜா ரஹ்மான் அளவு சாதித்த்

புருனோ Bruno said...

//ஏ.ஆர் இசையில்.செய் நேர்த்தி இல்லை. அசட்டுத்தனம் இருக்கிறது செயற்கை இழை இசை. ஆத்மா இல்லை. சில பின்னணிகள் மக்குத்தனமாக இருக்கிறது .பிண்ணனியில் ஒரு ஒழுங்கு இல்லை.சில பாடல்கள் காபியை பியர் மக்கில் குடிப்பது போல் உள்ளது. கிணற்று குரல் ஒலிப் பதிவுகள். தனியாக போட்டு ஒட்ட வைக்கிறார். பாட்டில் மேற்க்கத்திய
தாக்க பாடல்க்ள் ரொம்ப நாள் நிக்காது. மேற்க்கத்திய தாக்கத்தை ராஜா வித்தியாச்மாக கொடுத்ததால் நின்றது.//

இவ்வளவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் லாயிட் வெப்பர் ராஜாவை அல்லவா இசையமைக்க அழைத்திருப்பார்.

இந்தி படங்களில் கூட ராஜாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையே. இதிலிருந்தே நீங்கள் கூறியது உண்மைக்கு எவ்வளவு தொலைவு என்று தெரிகிறதே

யோசிப்பவர் said...

Nice Replies Bruno!! But I think, we need to say more.

K.Ravishankar said...

Dear Mr.Bruno
I express my regret on account of following things.

1.If I hurt anyone on account AR (My intention is not that)
2.Some of the words of paragraph got repeated /and also part of unedited portion of AR appeared due to cut and paste problem.Pl.bear with me
3.Writing this reply in English அண்ட் தமிழ். . Pl.bear with me

My reply are written below your comments

//வழக்கமான ராஜா வெறியர்கள் எழுதுவது போல் ஒரு உணர்ச்சி வசப்பட்டு உண்மைக்கு வெகு தொலைவில் ஒரு மறுமொழி.//
I am a fan but not fanatic. If quality is high nothing wrong in praising him.There is a logic in it. I am proud of it. He is worth. He is genius.
//உணர்ச்சி வசப்பட்டு எழுதியதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பல வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள்//
I regretted that have printed some unedited portion which was targetted to TR/S.Ganesh/Manoj Kyan/C.Bose
//அதில் உச்சகட்ட நகைச்சுவை //
//ராஜாவுக்கு லேட் Menopause(2000). ஹிந்தி இசைக்கு சங்கு ஊதினார்.//
It is not a comedy Sir . It is true.He maintained his stay till 1998 due to his own 100% musical Capability. After 1998 he started composing his own 3rd and 4th editions(second sales).Exhausted. Mine is somewhat deep drilled down information, not ‘Nuni Pull” grassing.
There are(/Deva/Kunnakudi/VedaTR/S.Ganesh/M.Kyan/C.Bose/Amsa Lekha/V.Kumar/Vijay Baskar/GKV/Sirpi/LP/Adityan/TR/Shyam Devendran /Ravindran /M.B.Sri/L.Vaid/)lots of MDs during IRs period. Where these guys have gone? IR is till here.(some of them passed away).So it is a achievement for IR,staying long Survival of the fittest..(Due to variety and strong base on western , carnatic and folk and what not)
Have you listened any of these guys songs? The last four are potential guys.(Excellent song”காக்கைச் சிறகினிலே” by L.Vaidyanathan)MSV has put up long stay to various reasons(the long stay made him stereotyped).Everyone has exit. Things look unfashinable for every incoming new generation. This happens to every generation.
Eg.See the look of tamil magazine Rani weekly.
//இந்தி இசையை கேட்ட தமிழர்களை மட்டும் தான் ராஜாவால் தமிழ் இசை கேட்க வைக்க முடிந்தது//

Entha thamizhargal Sir? I do not know your age. Here I am talking about the Hindi music which dominated Tamil Nadu during 1973 to 1981. for which IR blew sangu. At that time If you do not hear H.Music ,your prestige will be lower ( I was a great fan of hindi music )

Why Hindi film and music domination at the period?
1.MSV”s and other guys rusted music 2. Tamil Black white movies3.Big budgeted Hindi Colour films like Sholay.Hindi heroes and heriones are fair and beautiful ,no wigs.5.Here we got bubbling teens like stalwarts MGR/Shivaji/JaiGanesh/V.Kumar/ Mu.Ka.Muthu,Srikanth/ etc., etc.,with wigs/rose powder/lipstick/Pointed shoes/outlandish dresses Memorable (?) movies of Shivaji like . “Patta kathi Bhairavan”-(Shivaji-Sridevi) “Emannukku Eman”,Lorry Dirver…Kalthoon..Siranjeevi
Masscared film fans.6. Songs in Bobby,Y.Bharat/Bom to Goa/Chooti Si Baat/Deewar,Jawani Diwani etc., which are memorable, out smarted our MSV”s.. 7. Hollywood movies and Pop Music like Abba/Bonium/Osipissa(?) made thamizhargal to downgrade tamil songs.
Slowly above things started changing because of change in generation.Bharathi Raja & Co surfacing in with Rajini and Kamal with all colour films and new faces like(no wigs)Suresh/Pandiyan/Mohan etc., etc. IR ‘s probationary period is getting over. So richness in music and film started. Hindi films & music slowly is vanishing. N.Nithya, Jhonny, P.Mudivathillai,Raja Parvai etc., etc.,. have memorable songs which Tamil Nadu ever heard off. B.Raja is a strong turning point with support of IR and after Mani Ratnam & Balu Mahendra(Genext film maker)
Songs of above movies made MDs driven to ICU. (SG /TRand C.Bose in coma)Most of nails of coffin box of hindi nailed left only three or four .

Ippa purunjutha Sir?
//ஆனால் இந்தி இசை கேட்ட இந்தியர்களை கூட தமிழ் இசை கேட்க வைக்க இளையராஜாவால் முடியவில்லை.
அதை சாதித்த ரஹ்மான் தான்.//
Do you mean to say the languages( printed in our currency) spoken by all liked AR tamil songs..
May be guys of other states living here would like …. I do not know about Bhojpuris Kashmiris , Tirupura and Mizrom.

//சிம்பொனி இசையமைத்ததாக பில்டப் மட்டும் கொடுத்தவர் ஒருவர். அதை காதால் கேட்டவர்கள் யாரும் இல்லை என்பது சோகம். !!!//

Sir… thappu pantrnga? போணி ஆகாதுன்னு his Gorkha knows. திருவாசகம் is little known religious verse. போணியும் ஆகல. We used to sing religious verses in a particular way. People would have bought if it had been sung like ‘Kand Shashti Kavasam” or “Janani Jagam Nee”.It his passion towards that made him to do symphony .His personal agenda fulfilled.Here also he sang all the songs? Again domination.May be his religious fervour? Or insecurity? But he came out with flying colours.You should have “drilled down listening” to enjoy it not surface level listening.
அதையும் சாதித்தது ரஹ்மான்//
I disagree with you on its success. This is out and out commercial not திருவாசகம்

//மற்றொருவரின் இசை லண்டனிலும் பிராட்வேயிலும் ஓங்கி ஒலித்ததை உலகமே பார்த்தது//

I believe he is going to do symphony on “Thirukkural”. We will see இந்த இசை லண்டனிலும் பிராட்வேயிலும் ஓங்கி ஒலிக்கப் போகிறதா என்று?
”Rakkamma Kaia thattu” was figured once in BBC World Top Ten Music as 4th.

//இப்படி இருக்கையில் நீங்கள் கூறியது “டூ மச்”//

I reproduce the reply here also: I regretted that have printed some unedited portion which was targetted to TR/S.Ganesh/Manoj Kyan/C.Bose not AR.
//சிம்பொனி இசையமைத்ததாக பில்டப் மட்டும் கொடுத்தவர் ஒருவர். அதை காதால் கேட்டவர்கள் யாரும் இல்லை என்பது சோகம். !!!
சரி காதால் கேட்க வேண்டாம். அந்த இசைக்குறிப்பு கூட வெளியாக வில்லை. ஏன்.இசைக்கப்பட்ட இசையின் உரிமையில் பிரச்சனை இருப்பதாக கூறுவதை ந்ம்பினால் கூட (நான் அதை நம்பவில்லை) அந்த குறிப்புகள் முழுவதும் இசைஅமைப்பாளருக்கு தான் சொந்தம்.
அதை (குறிப்புகளை கூட) வெளியிடாத மர்மம் என்னவோ. காரணம் என்னவோ. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்//
---------
I do not know much about this. Sorry Please..

இவ்வளவும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் லாயிட் வெப்பர் ராஜாவை அல்லவா இசையமைக்க அழைத்திருப்பார்.
I request you to do your home work and then comment..
It is a typical hindi (Pappi Lahari type)film music based on some indian orphaned boy AR was not called for any symphony.Songs are average.Nothing great about it.
IR also composed music like India 24 hours and Miss World.
How to Name It and Nothing but Wind. (These two are well received by world audience)

//இந்தி படங்களில் கூட ராஜாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையே. இதிலிருந்தே நீங்கள் கூறியது உண்மைக்கு எவ்வளவு தொலைவு என்று தெரிகிறதே.//

He never opted for it. சரி வராது.
He also composed some hindi songs..He did not have time to compose for hindi at that time and also he realised that his texture of music will not sustain there and will not be liked by them.He will lose his own texure here. Kamal also failed.Why should he waste his time composing well arranged orchestrated music.
Their type of music is different. AR is intelligent enough to switch over there because his scope is limited here.

பொதுவான விஷயங்கள்.
என்னன படுக்க வைத்து MRI Scan எடுத்து “உளவியல் ரீதியாக” என்று திரு.செல்வகுமார் அவர்கள் ஒரு பதிவு போட்டார். எனக்கு அது
பொருந்த்தாது. நான் எம்.கே.டி முதல் இன்று வரை எல்லா
பாட்டுக்களும் (திறந்த மனதுடன்) கேட்பேன்.

கடைசியாக..........IR எல்லா வகையான இசையையும்
“ஒரு காட்டு காட்டி விட்டார்”.இத்னால் மற்றவர்களை(IRக்கு பிறகு) கேட்டால் ”சப்” பென்று இருககிறது. இப்போது பாடல்கள் இல்லை.
“Pop”டல்கள் தான் இருக்கிறது.


FM- 91.10, 91.90, 92.70, 93.50, 94.30, 98.30, 105.00, 106.40,
எல்லோரும் சுசித்ரா மாதிரியே .பேசிக்கொண்டிறிக்கிறார்கள்........................ ???????

முரளி கண்ணன் சார்! கொஞ்சம் பன்னீர் தெளிங்க!
சூடா ஆயிடுச்சி. உஙக வலைக்கு வந்தால், பன்னீர் தெளிதது, சந்தனம் காட்டி, கற்கண்டு கொடுப்பீர்கள். அப்பிடியே என் பதிவுக்கு வந்து
(raviaditya.blogspot.com ) ‘முதல் முத்தம் யார் கொடுத்தது?.” கமெண்ட போடுங்க. ப்ருனோ சார் நீங்களும்தான்.

நன்றி! நன்றி! நன்றி

முரளிகண்ணன் said...

DR. PRUNO, K.Ravishankar thanks for your arguments

K.Ravishankar said...

தயவு செய்து அரைத்த மாவை அரைககதிர்கள்.
இந்த மிமிக்ரீயை டிவி யில் பார்த்து புளித்துவிட்டது.

வித்தியாசமா முயற்சியுங்கள்

கே.ரவிஷங்கர்

K.Ravishankar said...

மன்னிக்க வேண்டுகிறேன். மேலே உள்ள என்னுடைய
மறு மொழி அதிஷா பதிவிற்கு. இங்கு போட்டு விட்டேன் .

கே.ரவிஷங்கர்

புருனோ Bruno said...

//I am a fan but not fanatic. If quality is high nothing wrong in praising him.There is a logic in it. I am proud of it. He is worth. He is genius.//
So is ARR whose music is heard outside Tamil Nadu and Outside India. Got It. No one denied that Ilayaraja is a genius.

புருனோ Bruno said...

//It is not a comedy Sir .//
It is of course Comedy.

It should be either 1996 - சிறைச்சாலை or 2005 - திருவாசகம்.

Why did you tell 2000

புருனோ Bruno said...

//.So it is a achievement for IR,staying long Survival of the fittest..//

But you forgot ONE IMPORTANT THING. IR could not cross Tamil Nadu.

Where as EVEN TODAY, ARRs Music is heard across the globe in Mumbai and London and New York. IR is a குறுநில மன்னன். ARR சக்ரவர்த்தி.

புருனோ Bruno said...

//Do you mean to say the languages( printed in our currency) spoken by all liked AR tamil songs..
May be guys of other states living here would like …. I do not know about Bhojpuris Kashmiris , Tirupura and Mizrom. //

May not all 100 crore Indians. But IR could not make Hindi Belt hear his music, where as ARR did that. Can you deny that

புருனோ Bruno said...

//We will see இந்த இசை லண்டனிலும் பிராட்வேயிலும் ஓங்கி ஒலிக்கப் போகிறதா என்று?//

பார்க்கலாம் ஆனால் பாம்பே ட்ரீம்ஸ் ஏற்கனவே ஒலித்ததே. அதை மறுக்கிறீர்களா
--

இளையராஜா வருமுன் கோலிவுட் கூட பிறரின் ஆதிக்கத்தில் இருந்தது. அதை கைப்பற்றியவர் அவர் என்பது உண்மைதான்

இளையராஜா என்று (கோலிவுட்) குறுநில மன்னனால் கைப்பற்ற முடியாத பாலிவுட் மற்றும் லண்டன் நியூயார்க் இசை ரசிகர்களின் உள்ளதை கைப்பற்றிய சக்கரவர்த்தி ரஹ்மான் என்பதை மறுக்க முடியாது

--

புருனோ Bruno said...

//I do not know much about this. Sorry Please..//

ஹி ஹி ஹி :) :) :)

புருனோ Bruno said...

// AR was not called for any symphony.//

But the fact was

1. ARR was called at least for that.
2. He did at least that.
3. Every one heard what he did

4. IR was not called EVEN FOR THAT. :) :)

5. We all have ONLY HIS WORD about Symphony
6. He has not even released his note in a printed form

7. He has not done any other Symphony

Is Every thing Clear

--

புருனோ Bruno said...

ஒரு கற்பனைக்கேள்வி. இது யாரையும் குறிப்பிடுவது அல்ல

--
நான் ஒரே ஒரு படம் மட்டும் தான் வரைந்திருக்கிறேன். அதை உங்களிடம் காட்ட மாட்டேன். எனக்கு வேறு படம் வரைய முடியாது. ஆனால் என்னை ஓவியர் என்று பட்டம் தர வேண்டும் என்று யாராவது சொன்னால் உலகில் எந்த மூலையிலாவது ஏற்றுக்கொள்ளவார்களா
--
நான் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியிருக்கிறேன். ஆனால் என்னால் அதை மறுபடிகூட பாட முடியாது. எனக்கு வேறு பாடல்களும் பாட முடியாது. ஆனால் எனக்கு பாடகர் என்ற பட்டம் வேண்டும் என்று யாராவது சொன்னால் உலகில் எந்த மூலையிலாவது ஏற்றுக்கொள்ளவார்களா
--
கேனப்பயல்கள் நிறைந்த தமிழ் நாட்டில் மட்டுமே இது போன்ற மோசடிகள் சாத்தியம்

முரளிகண்ணன் said...

புருனோ தங்கள் வருகைக்கு நன்றி.

இதே போன்ற விவாதம் “ ரஹ்மானுக்கு கதைகள் தேர்வு செய்ய தெரியவில்லையா?” என்ற பெயரில்
www.behindwoods.com தளத்தில்

வெளிவந்துள்ளது

K.Ravishankar said...

நன்றி புருனோ ,

நான் உடன்படவில்லை .
விவாதத்தை முடித்துக்கொள்வோம்.

நன்றி முரளி கண்ணன் .

புருனோ Bruno said...

//நான் உடன்படவில்லை .//

இதில் எந்த கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்று தெரிவித்தால் விவாதம் முழுமை அடையும்

1. ARR was called at least for that.
2. He did at least that.
3. Every one heard what he did

4. IR was not called EVEN FOR THAT.

5. We all have ONLY HIS WORD about Symphony
6. He has not even released his notes in a printed form

7. He has not done any other Symphony

dharshini said...

than seyira velaya ozhunga seiyanum(100% confidentoda) appadi pnna ella padalgalum hit aagum....yar producer,directer,hero idhu ellam patthu issai ammaikka koodathungarathu than ennoda thazmaiyana karruthu....aanulum....competition irrukaradhala( remixunu pottu makkala kolranga).......mathapadi yarai kuttam solla mudiyum?

கிரி said...

//நியூ இனி திரையிடக்கூடாது என தடைவிதித்து விட்டார்கள்.//

அப்படியா! ஏன்?

//சக்கரகட்டி - தாணுக்கு நாமகட்டி.//

:-) பிள்ளைகள் தங்கள் தந்தைக்கு நஷ்டத்தையே கொடுக்கிறார்கள். செல்வராகவன் தவிர்த்து வேற யாரையும் எனக்கு தெரியல

//பாடல்கள் வாங்குவதில் இயக்குனர்கள் களைப்படைந்து விடுகிறார்களா?//

ஒரு சில இயக்குனர்கள் சிறப்பாக தங்களுக்கு தேவையான இசையை வாங்கி விடுகிறார்கள் ..எடுத்துக்காட்டு ஷங்கர் மணிரத்னம் SJ சூர்யா மிஷ்கின் செல்வராகவன் அமீர் பாலா போன்றோர்

புருனோ Bruno said...

////நியூ இனி திரையிடக்கூடாது என தடைவிதித்து விட்டார்கள்.//

அப்படியா! ஏன்?
//

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாததால் !!!! அந்த படம் தடை விதிக்கப்பட்டது !!!!

புருனோ Bruno said...

இந்த இடுகை எழுதப்பட்டு நான்கு மாதங்கள் முடிவதற்குள் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் வாங்கினார்

--

இந்த விவாதத்தை இப்பொழுது மறுபடி படித்தால் சிரிப்பாக வருகிறது

--

விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன் உட்பட பல ஹிட்களை அளித்து ஏ.ஆர்.ஆர் தன்னை நிருபித்து விட்டார் !!