அல், ரஜினிக்கு முக்கியமான தருணங்களில் கமர்ஷியல் வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் ராஜசேகர். தர்மதுரை என்னும் வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு, நம்மிடம் இருந்து விடைபெற்று சென்ற அவரது சில முக்கிய படங்களை பார்க்கலாம்.
மலையூர் மம்பட்டியான்
தியாகராஜன் தமிழ்திரையில் நிலைபெற காரணமாய் இருந்த படம். சூழ்நிலையால் வழிப்பறி கொள்ளையனாக மாறி மக்களுக்கும் உதவும் பாத்திரத்தில் தியாகராஜனும், வழிப்பறிக்கு ஆளாகி பின்னர் மம்பட்டியானையே காதலிக்கும் பெண்ணாக சரிதாவும் நடித்திருந்தார்கள். செந்தில் இதில் நகைச்சுவைக்கு மட்டுமின்றி கதைக்கும் பயன்பட்டிருந்தார். (சுப்ரமணியபுரம் - கஞ்சா கருப்பு டைப் துரோகம் ) . இளையராஜாவின் இசையில் காட்டு வழி போற பொன்னே கவலைப்படாதே, சின்னபொன்னு சீலை போன்ற் கிளாசிக் பாடல்களும் வெள்ளரிக்காய் பிஞ்சு ஒன்னு என்னும் குத்துப்பாடலும் உண்டு. பி சி சென்டர்களில் அமோக வெற்றி அடைந்த படம். இது ரஜினி நடிக்க இந்தியில் கங்குவா என்னும் பெயரில் வெளியானது. பின்னர் கரிமேடு கருவாயன், சீவலெப்பேரி பாண்டி ஆகிய படங்கள் வர இப்படம் ஆரம்பமாக அமைந்தது.
தம்பிக்கு எந்த ஊரு?
பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்,தில்லு முல்லு போன்ற படங்களில் சிறந்த நகைச்சுவை நடிப்பை ரஜினி காட்டியிருந்தாலும் பின்னர் பாயும் புலி,சிகப்பு சூரியன், தனிக்காட்டு ராஜா போன்ற ராவான ஆக்ஷன் படங்களில் நடித்த ரஜினிக்கு ஆக்ஷன்+காமெடி என்ற புது பாதையை காட்டிய படம் இது. இப்படத்திற்க்கு பின்னரே ரஜினிக்கு மாபெரும் குடும்ப ஆடியன்ஸ் உருவானது எனலாம். இந்த பாணி விஜய் வரை தொடருகிறது. இப்பட்த்தின் மூலம் பாம்புக்கும் ரஜினிக்கும் உருவான பந்தம் அண்ணாமலை,முத்து,அருணாசலம்,படையப்பா வரை தொடருகிறது. காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே. மாதவி காதலியாகவும். சுலக்ஷனா ஒரு தலையாய் காதலிப்பவராகவும் நடித்தனர்.
காக்கிசட்டை
சகலகலாவல்லவனுக்கு பிறகு கமலுக்கு அமைந்த அதிரடி மசாலா. இப்பட்த்தின் தாக்கம் சமீபத்திய போக்கிரி வரை தொடருகிறது. சத்யராஜுக்கு பெரும் புகழை தந்த படம். தகடு தகடு என கமலை தூக்கி சாப்பிட்டிருப்பார் சத்யராஜ் இந்தபடத்தில். அம்பிகா,மாதவி,ராஜீவ் நடித்த இப்பட்த்தில் பாடல்களும் அருமை. வானிலே தேனிலா, சிங்காரி சரக்கு, பட்டு கண்ணம் தொட்டுக் கொள்ள, பூப்போட்ட தாவணி போன்ற க்மர்ஷியல் படத்துக்கு தேவையான பாடல்கள்.
விக்ரம்
தமிழில் நீண்ட இடைவெளைக்கு பின் வந்த அறிவியல்+ சாகசம் தொடர்பான படமிது. (ஜெனோவா போன்ற படங்களை கருத்தில் கொண்டால்). இப்பட்த்தின் கதை குமுதத்தில் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டது. இப்படம் உருவான கதை பின்னர் கமலால் எழுதப்பட்டு புத்தகமாக வந்தது, ஒரு கோடி ரூபாய் கனவு என்ற பெயரில். அம்ஜட்கான்,டிம்பிள் கபாடியா,லிசி போன்றோர் தமிழில் அறிமுகமான படம். வனிதாமணி வனமோகினி, என் பேரு மஞசக்குருவி, விக்ரோம் போன்ற பாடல்கள். இப்படத்தின் முதல் பாதி வெகுவேகமாகவும் பிற்பாதி மெதுவாகவும் செல்லும். ஓடும் நேரமும் பிற்பாதியில் அதிகம். ஏவுகணை, கம்ப்யூட்டர் போன்ற வார்த்தைகளை தமிழகம் முழுவதும் பரப்பிய படம். இப்படம் உருவாகும் போது கமல் கொடுத்த பேட்டியில் ஆப்பிள் கம்ப்யூட்டரைப்பற்றி சொல்லி இருப்பார். வர்த்தக ரீதியில் இது தோல்விப்படமே.
மாவீரன்
அமிதாப் நடித்த மர்த் என்னும் படத்தின் ரீமேக். சமஸ்தான மன்னரும், ரஜினியின் தந்தையுமான தாராசிங்கை சிறைபிடிக்கிறார்கள். ரஜினி எப்படி போராடுகிறார் என போரடிக்க வைத்து விட்டார்கள். படம் உருவான போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்களுக்கும் கூட இப்படம் பிடிக்கவில்லை எனலாம். பட இடைவேளையில் அவர்கள் விக்ரோம் கல்லமுட்டாய் விக்ரோம் என பாடி கிண்டல் செய்தால் நாங்கள் பதிலுக்கு மாவீரன் நொண்டி வருது விலகு விலகு என எதிர்ப்பாட்டு பாடுவோம். அம்பிகா இணை, நாகேஷ் துணை.
படிக்காதவன்
அண்ணன் தம்பி பாசக்கதை. சிவாஜி ,ரஜினி, அம்பிகா,வடிவுக்கரசி,நாகேஷ், ஜெய்சங்கர் நடித்தது. ஊர தெரிஞ்சுக்கிட்டேன், ராஜாவுக்கு ராஜா நாண்டா, ஜோடிக்கிளி எங்கே போன்ற பாடல்கள். ஜனகராஜின் என் தங்கச்சிய நாய் கடிச்சிருசுப்பா காமெடி இன்னும் காமெடி ஷோக்களில் பயன்படுகிறது.
மாப்பிள்ளை
இப்பட்த்திற்க்கு ரஜினிக்கு அப்போது பெருந்தொகையான 43லட்சம் வெள்ளையில் கொடுக்கப்பட்டது. தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தின் ரீமேக் இது. சிரஞ்சீவியின் மைத்துனர் தயாரிப்பில் வெளியான இப்பட்த்தில் சிரஞ்சீவி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரீவித்யா மாமியாராகவும், அமலா காதலியாகவும் நடித்திருந்த நல்ல நகைச்சுவை படம் இது. மானின் இருகண்கள் கொண்ட மானே மானே, வேறு வேலை உனக்கு இல்லையே, என்னதான் சுகமோ போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தின் பலம்.
தர்மதுரை
நல்ல அண்ணன், ஏமாற்றுக்கார தம்பிகளைப் பற்றிய கதை. இப்படத்தில் இருந்துதான் நீங்க மனுசனே இல்ல, தெய்வம் போன்று ரஜினியை புகழ்பாடும் வசனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. செம்மீன் புகழ் மது இதில் ரஜினியின் தந்தையாக நடித்தார். மாசிமாசம் ஆளான பொண்ணு, அண்ணன் என்ன தம்பி என்ன போன்ற பாடல்கள், ரஜினியின் நடிப்பு, கௌதமி,வைஷ்ணவி நடிப்பு ஆகியவற்றால் நன்கும் ஓடிய படம்.
இப்படத்திற்க்கு பின் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இவரது படங்கள் பெரும்பாலும் பீல்குட் மசாலா என்னும் வகையில் இருக்கும். ரஜினியை வைத்து நிறைய படங்கள் (பெரும்பாலும் ரீமேக்) கொடுத்தார். மலையூர் மம்பட்டியான் தவிர மற்ற படங்கள் நடிகர்களுக்கு ஏற்ப எடுத்ததால் இவரது தனித்தன்மையாக எதையும் கூறமுடியவில்லை. நல்ல கதை, நடிகர்கள் கிடைத்தால் அசத்திவிடுவார்.
இதுதவிர ஏவிஎம் தயாரிப்பில் அம்மா,பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்களை இயக்கினார். சரிதா நடித்த அம்மாவில் வரும் மழையே மழையே என்னும் பாடல் புகழ்பெற்றது. பாட்டி சொல்லை தட்டாதே நல்ல காமெடி படம்.
ராபர்ட் ராஜசேகர் இணை வேறு. இவர்கள் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையை துவங்கி இயக்குனரானவர்கள். ஒருதலை ராகம் இவர்களது ஒளிப்பதிவில் வந்தது. பாலைவன சோலை, சின்ன பூவெ மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியவர்கள்.
ராஜசேகர் இயக்கிய படவரிசை
1981
கண்ணீர் பூக்கள்
1982
அம்மா
1983
மலையூர் மம்பட்டியான்
1984
தம்பிக்கு எந்த ஊரு
1985
காக்கிசட்டை, படிக்காதவன்
1986
விக்ரம்,முரட்டு கரங்கள், மாவீரன், காலமெல்லாம் உன் மடியில், கண்மணியே பேசு, லட்சுமி வந்தாச்சு
1987
கூலிக்காரன்
1988
கழுகு மலை கள்ளன் பாட்டி சொல்லை தட்டாதே
1989மாப்பிள்ளை
1990காளிச்சரன்
1991
தர்மதுரை
39 comments:
ஒரு சந்தேகம். இவர்தான் ராபர்ட்-ராஜசேகர் கூட்டணி இயக்குநர்களில் ஒருவரா?
me the second
யோசிப்பவ்ர் தங்கள் வருகைக்கு நன்றி. அவர்கள் வேறு இவர் வேறு.
பதிவிலும் இணைத்துவிட்டேன்
அடடா, அவர்தான் காக்கிச்சட்டை இயக்கினவரா? சூப்பர். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். ஆயிரம் மசாலாப் படம் வந்தாலும் இதுக்கு இணையாகாது. அதேமாதிரி படிக்காதவன் படமும் சூப்பரா இருக்கும்.
இன்னைக்கு கலெக்ஷன் சூப்பர்:):):)
அப்படி என்றால் படிக்காதவனை இயக்கியவர் இவரா? அது ராபர்ட் ராஜசேகர்தானே?
ராஜசேகர் புகைப்படம் இருக்கிறதா? பிரிந்து விட்டார் என்றால்.. He is no more? தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழுவல் என்று ஞாபகம். ராஜசேகர் யாரின் சீடர்?
அனுஜன்யா
இவர் எப்படி இறந்தார்?
ராப், காக்கிசட்டை சூப்பர் மசாலா படம் வருகைக்கு நன்றி
கார்க்கி தங்கள் வருகைக்கு நன்றி. படிக்காதவன் இயக்கியது இவர்தான்.
அனுஜன்யா வருகைக்கு நன்றி
தர்மதுரை படத்தின் 100 வது நாளன்று மாரடைப்பால் காலமானார். இவரது புகைப்படம் இருக்கிறது. பின்னர் ஸ்கேன் செய்து போடுகிறேன்
படிக்காதவன்,தர்மதுரை, மாப்பிள்ளை,மாவிரன், எல்லாமே தழுவல்தான். பழைய தமிழ் படங்களை பார்த்து தெலுங்கில் எடுத்தார்கள். அதன் தழுவலே மாப்பிள்ளை . மற்றவை இந்தியில் இருந்து
அக்னிபார்வை தங்கள் வருகைக்கு நன்றி
தர்மதுரை படத்தின் 100 வது நாளன்று மாரடைப்பால் காலமானார்.
நல்ல தொகுப்பு, வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி நசரேயன்
இத்தனை நாள் இந்த இயக்குனரை கவனிக்காம விட்டுட்டோமே...
நல்ல தகவல்கள் கொண்ட பதிவு :)
இந்த லிஸ்ட்ல நிறைய படங்கள் நம்ம ஃபேவரைட்...
விக்ரம்
தம்பிக்கு எந்த ஊரு.
வருகைக்கு நன்றி வெட்டிப்பயல்
அடடா... இதெல்லாம் ராஜசேகர் படமா...? தெரியாமப் போச்சே...
பின்னிட்டீங்க தல.
//தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழுவல் என்று ஞாபகம். //
அது என்னமோ தெரியாது? ஆனால் இதே 'தர்மதுரை' ஹிந்தியில 'தியாகி'ன்ற பேருல டப் பண்ணி வெளியிட்டாங்க..
தம்பிக்கு எந்த ஊரு? மாதவி சூப்பர்...
//காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே//
சந்தேகமே இல்லை..இருக்காது.
இப்பாடலின் மெட்டு இளையராஜா தொலைபேசியில்(விசிலில்) சொன்னதாம்.
'காக்கிச்சட்டை' அருமையான மசாலா படம். 'வானிலே தேனிலா' க்ளைமாக்ஸூக்கு முந்தி இடம்பெறும் பாடல் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இது உதாரணம்.
'விக்ரம்' படத்தில் இடம்பெறாத பாடலான 'சிப்பிக்குள்ளொரு முத்து வளர்ந்தது' நன்றாக இருக்கும்.
'பீல்குட் மசாலா' அருமையான வார்த்தைப்பிரயோகம்.
வருகைக்கு நன்றி தமிழ்பறவை.
உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு நல்ல தகவல்கள் தருகிறீர்கள்.
நன்றி
அண்ணாச்சி நீங்க விக்கிபீடியாவை விஞ்சிய
முக்கிபீடியா( முரளிகண்ணன் பீடிய)
கலக்கல் இத்தனை விபரங்களையும் எங்கிருந்து தொகுத்தீர்கள் அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லவும்
அதிஷா வருகைக்கு நன்றி.
நல்ல தொகுப்பு. தம்பிக்கு எந்த ஊரு படம் வரும் வரை மாதவி ராசியில்லாத நடிகை என்கிற முத்திரையுடன் இருந்தார். இந்தப்படத்தின் வெற்றி குறித்து விநியோகஸ்தர்களுக்கு சந்தேகம் இருந்தது.ரஜினி எந்த செண்டிமெண்ட்டையும் கடந்து வெற்றி தரத் தக்கவர் என்று நிரூபித்த படம் இது.
வருகைக்கு நன்றி ரத்னேஷ்
Who was the music director for AMMA?
யப்பா...இவர் தான் ராஜசேகரா!! கலக்கிட்டிங்க அண்ணாச்சி ;)
\\//காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே//
சந்தேகமே இல்லை..இருக்காது.
இப்பாடலின் மெட்டு இளையராஜா தொலைபேசியில்(விசிலில்) சொன்னதாம்\\
ஆகா...தமிழ்பறவை முந்திட்டிங்க ;)
ராஜாவுக்கு அப்போ பெரியம்மையாம் படம் வேற தீபாவளிக்கு ரீலிஸ்ன்னு நினக்கிறேன் இந்த ஒரே பாடல் மட்டும் பாக்கி...ராஜாக்கிட்ட விஷயத்தை சொன்னவுடன் வீட்டில் இருந்தே தொலைபேசியில் ரெகார்டிங்
அறைக்கு சொல்லி பாடல் ரெடி செய்தார்களாம். செம பாட்டு ;)
நிறைய பேர் பார்த்திருக்கமாட்டார்கள், ஆனால் இவரது காளிசரண் நல்ல ஒரு படம். கார்த்திக், சரண்ராஜ், கௌதமி நடித்தபடம்.
வருகைக்கு நன்றி அருன்மொழிவர்மன், கோபினாத்,
கிருபா
சங்கர் கணெஷ் என நினைக்கிறேன். இல்லையெனில் சந்திரபோஸ். கானாபிரபாவிடம் கேட்டு சொல்கிறென்
::)))
முரளி கண்ணண், நாளஞ்சு நாளா உங்க பதிவ போடாம இருந்ததுக்கு சேர்த்துவச்சு போட்ட மாதிரி இருக்கு.. சூப்பர்..
அருமையான நினைவு கூறல்.. நல்ல பதிவு..
தொடர்ந்து கலக்கவும்..
நர்சிம்
ராஜசேகர் எஸ்பிஎம் போல மசாலா இயக்குனர் தான். பொழுதுபோக்கு படங்களை மட்டுமே எடுத்துள்ளார். அன்றைய மசாலா சுண்டல்காரார்.
வருகைக்கு நன்றி தூயா, நர்சிம், கோவியார்
நல்ல தொகுப்பு முரளிகண்ணன், ராஜசேகரின் துரதிஷ்டம் இவரின் பல படங்களை எஸ்.பி.முத்துராமன் தான் இயக்கியது என்று நினைக்கின்றார்கள். ராஜசேகர் குறித்து இராம நாராயணன் கொடுத்த தொடர் கட்டுரைகள் தினத்தந்தியில் வந்தது, இப்போதும் மாலைமுரசுவில் இருக்கலாம்.
அம்மா படத்தின் பாடல்கள் எல்லாமே கலக்கல், இசை சங்கர் கணேஷ்
//தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழுவல் என்று ஞாபகம். //
kasme wadhe Rajini-Prabhusuhasini combination-l vanndha padam (Then-madurai vaigai nadhi - pattu)
Rajasekhar ippothu TV serialil varum nadigar (nizhalgal pada "ponmaali pozhuthu" actor) illaya?
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கானாபிரபா
வருகைக்கு நன்றி சீனு
இப்பொது தொலைக்காட்ச்சி தொடர்களில் நடிப்பவர்,ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய ராபர்ட் ராஜசேகர் இணையில் ஒருவரான ராஜசேகர். இவர் செம்பருத்தி படத்தில் பிரசாந்தின் தந்தையாகவும் நடித்தவ்ர்.
சீனு
80 களில் ரஜினியின் பல படங்கள் தழுவல்களே. பெரும்பாலும் (இந்தி-அமிதாப்)இடம் இருந்து
\\kasme wadhe Rajini-Prabhusuhasini combination-l vanndha padam (Then-madurai vaigai nadhi - pattu\\
நீங்கள் குறிப்பிடும் படம் தர்மத்தின் தலைவன்.
இவரது இயக்கத்தில் தம்பிக்கு எந்த ஊரு தான் பெஸ்ட்.
படிக்காதவனையும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.
கலக்குங்க
வருகைக்கு நன்றி அத்திரி
thanks for the musical info
கானா பிரபா
//மலையூர் மம்பட்டியான் //
இந்த படம் இவர் தான் எடுத்தாரா!!!!
எனக்கு காக்கி சட்டை விக்ரம் ரொம்ப பிடிக்கும், அதிலும் விக்ரம் ரொம்ப பிடிக்கும் ..விதயாசமான கதை..அதுல ஏஞ்ஜோடி மஞ்ச குருவி பாட்டு ரொம்ப பிடிக்கும் சலோமியா என்று ஜனகராஜ் கூறுவதும் நல்லா இருக்கும். டிம்பிள் சும்மா டக்கரா இருப்பாங்க..அந்த கடைசி விமான சண்டை தான் கொஞ்சம் சொதப்பிடுச்சு. எலி கோவில் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டு இருக்கும் குறிப்பா இசை சூப்பர். அம்ஜத்கான் நண்டோ எதோ சாப்பிடுவார்..எச்சி துப்பி மனோரமா கூட..செம காமெடி.
அதுல மனோரமா அந்தப்புறத்துக்கு தூக்கிட்டு போய் குண்டன் பாந்தாடிட்டான் ன்னு சொல்லும் போது ரகளையா இருக்கும் ஜனகராஜ் கமல் கிட்ட ட்ரான்ஸ்லேட் பண்ணுவார்..கிட்ட வாயா..இன்னும் கொஞ்சம் கிட்ட வாயா ஹா ஹா ஹா சூப்பர்
//ரஜினி எப்படி போராடுகிறார் என போரடிக்க வைத்து விட்டார்கள்//
:-))))
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது..அந்த படத்தில் ரஜினி நெஞ்சில் மாவீரன் என்று எழுதி இருக்கும்..அப்போது என் பள்ளியில் ஒரு பைய்யன் சிகப்பு மையில் மாவீரன் என்று எழுதி அடி வாங்கினான் ஹா ஹா ஹா
//படிக்காதவன்//
செம படங்க இது..எனக்கு பிடித்த ரஜினி படங்களில் ஒன்று. சிவாஜி ரஜினி கலக்கலாக இருக்கும்..ரஜினி, சிவாஜியிடம் ரொம்ப மரியாதையாக நடித்து இருப்பார்.
மாப்பிள்ளை ஓகே ..தர்மதுரை பெண்கள் மத்தியில் ரஜினிக்கு இமேஜை உயர்த்திய படம்
வெற்றி விழா அன்று இறப்பு, சந்தோசமாகவே பிரிந்து இருப்பார்.
Post a Comment