January 27, 2009

கார்த்திக் என்றொரு கலைஞன்

முப்பிறவி கண்ட முதல்வர் என்று எம்ஜியாரை அழைப்பார்கள். கதாநாயக நடிகர்களுக்கு முப்பிறவி என்பது அரிது. ஒருமுறை உச்சத்திற்க்கு சென்று விட்டால் அவ்வளவுதான். முடிந்தவரை அங்கே தாக்குப்பிடிக்க வேண்டும். கீழே இறங்குதல் என்பதே கிடையாது விழுந்தால் பாதாளம் தான். மோகன்,ராமராஜன்,அர்விந்த்சுவாமி,பிரபுதேவா ஆகியோருக்கெல்லாம் உச்சம் ஒருமுறை மட்டுமே வாய்த்தது. விழுந்தார்கள் எழவில்லை. முப்பிறவியை அரிதாக கண்ட கதாநாயகர்களில் முத்துராமன் மகனும் ஒருவர்.

முதல் பிறவி

பாரதிராஜாவால் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான கார்திக்குக்கு அப்போது வயது 21. முதல் படத்தின் பிரமாண்ட வெற்றியும், முத்துராமனின் மகன் என்ற அடையாளமும் அவருக்கு கோடம்பாக்கத்தின் கதவுகளை முழுவதும் திறந்துவிட்டது. ஆனாலும் அவரால் தொடர்ந்து வெற்றிகளை பறிக்க முடியாவில்லை.

முத்துராமனின் திடீர் மரணத்தால் அவருக்கு சரியான வழிகாட்டி அமையாமல் போனதும், அப்போதைய அவருடைய தோற்றத்தின் காரணமாக கனமான பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியாமல் போனதும் தோல்விகள் தொடர்கதையானதுக்கு காரணமாயின.
வாலிபமே வா வா, நினைவெல்லாம் நித்யா, இளஞ்ஜோடிகள், பகவதிபுரம் ரயில்வே கேட் போன்ற படங்களில் நடித்தார். எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்தகால கட்டத்தில் காட்பாதர் என்று யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டார். கதைகளை தேர்ந்தெடுக்கும் கலை கைவரப்பெறாத வயது வேறு. 1984 ல் வெளிவந்த நல்லவனுக்கு நல்லவனில் ரஜினிக்கு மாப்பிள்ளை வேடம். இந்த படத்தில் ஓரளவு மெச்சூர்டான தோற்றம் இருந்தாலும் நெகடிவ் கேரக்டர் என்பதால் மிகவும் பேசப்படவில்லை.
இந்த காலகட்டத்தில் விசு,கிஷ்மூ இவரை மிகவும் ஆதரித்தார்கள். இதை கார்த்திக்கின் பழைய பேட்டிகள் மூலம் அறியலாம். கெட்டி மேளம், அவள் சுமங்கலி தான் ஆகிய படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரை ஆதரித்தார்கள்.
இதே காலகட்டத்தில் தான் ராதாரவி இவருக்கு மிக நெருக்கமானார். இருவரும் இணைந்து நட்பு உட்பட சில படங்களில் நடித்தார்கள். வேறு வழியில்லாமல் கர்ணனின் இரட்டை குழல் துப்பாக்கியில் கூட இருவரும் நடித்தனர். ஆனந்த விகடனில் 90 களில் ஒரு தொடர் பேட்டி வெளிவந்தது. அதில் ஒரு பிரபலமானவர் தனக்கு மிக விருப்பமான நண்பரை குறிப்பிடவேண்டும். பின்னர் அவரை தன் வீட்டில் எப்போது சந்திப்போம், என்னென்ன பேசுவோம், என்ன பறிமாறப்படும் என்பது பற்றி சொல்ல வேண்டும். முதல் வாரத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டது காந்தியை. பாலசந்தர் குறிப்பிட்டது மணிரத்னத்தை (சாந்தாராம் விருது பெற்றுத் தந்ததற்க்காக). அந்த வரிசையில் ராதாரவி குறிப்பிட்டது கார்த்திக்கை. அவர்கள் நட்பு இன்று கலக்குரே சந்துரு வரை தொடருவது ஆச்சரியமே.

இரண்டாம் பிறவி

மணிரத்னத்துக்கு முதல் பிறவியான மௌன ராகம் கார்த்திக்குக்கு இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது. சத்யராஜ் சொல்வார் " நம்ம கிட்ட என்ன சரக்கு இருக்குங்கிறத காட்டுறவரைக்கும் தான் இங்க கஷ்டம். நம்மால இது முடியும்னு தெரிஞ்சுட்டா இண்டஸ்ட்ரியே நமக்கு கதை பண்ண ஆரம்பிச்சுடும்". இதற்க்கு பெரிய உதாரணம் ரகுவரன். அவரால் சில கேரக்டர்களை அனாசியமாக பண்ண முடியும் என அவர் நிரூபித்தபிறகு ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் கதையில் அவருக்கு ஒரு பாத்திரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
மௌன ராகம் படத்தில் நடித்ததற்க்கு கார்த்திக்கிக்கு கிடைத்த முக்கியமான விருதுகளில் ஒன்று புனே திரைப்பட கல்லூரியில் ஹால் ஆப் பேமில் சிறந்த துணை நடிப்புக்கான நடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்னி நட்சத்திரம் (1988), வருஷம் 16 (1989), கிழக்கு வாசல் (1990) ஆகிய படங்களில் நடித்ததற்க்காக தொடர்ந்து மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கி ஹேட்டிரிக் அடித்தார். கிழக்கு வாசல் வெற்றி விழாவில் பேசிய ரஜினி சின்ன புள்ளையா இப்பதான் பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி ஒரு பெர்பார்மன்சா என பாராட்டினார்.

இதே காலகட்டத்தில் சங்கிலி முருகன் தயாரித்த பாண்டி நாட்டுத் தங்கம், பெரிய வீட்டு பண்ணக்காரன் ஆகிய பக்கா கமர்சியல் படங்களிலும் நடித்து பி சி சென்டர்களிலும் தன் முத்திரையை பதித்தார் கார்த்திக்.
91 ஆம் ஆண்டு இவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தன. ராஜேஷ்வர் இயக்கத்தில் அமரன், பாரதிராஜா இயக்கத்தில் நாடோடி தென்றல், பிரிய தர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே, மிக ஸ்டைலாக படமாக்கப் பட்டுக் கொண்டிருந்த விக்னேஷ்வர் ஆகியவை தான் அந்தப் படங்கள்
(தொடரும்)


29 comments:

சரவணகுமரன் said...

கார்த்திக் அப்பாக நடிக்க போவதையொட்டிய சிறப்பு பதிவா இது?

நன்கு தொகுக்கப்பட்ட தகவல்கள்

Cable சங்கர் said...

//இதற்க்கு பெரிய உதாரணம் ரகுவரன். அவரால் சில கேரக்டர்களை அனாசியமாக பண்ண முடியும் என அவர் நிரூபித்தபிறகு ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் கதையில் அவருக்கு ஒரு பாத்திரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.//

இவரை போலவே இன்னொரு நடிகர் பிரகாஷ்ராஜ்.. இவரை தெலுங்கில் உபயோகபடுத்தியது போல் இன்னமும் தமிழில் உபயோகபடுத்தபடவில்லை என்கிற ஆதஙகம் எனக்கு நிறைய்..

Cable சங்கர் said...

அடடா.. மிஸ்ஸாகிருசே.. வடை போச்சே..

சின்னப் பையன் said...

நேயர் விருப்பப் பதிவு வந்தாச்சு!!!

சின்னப் பையன் said...

//மணிரத்னத்துக்கு முதல் பிறவியான மௌன ராகம் கார்த்திக்குக்கு இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.//

correct...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சரவன குமரன்.

கேபிள் சங்கர் சார் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி.

சின்னப்பையன், இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கிறது. பெரியதாக வந்ததால் பிரித்துப் போடுகிறேன். அதற்க்கும் ஆதரவளியுங்கள்

Divyapriya said...

மெளன ராகம்க்கு முன்னாடி கார்த்திக்கு இவ்ளோ கஷ்டமா? நல்லா இருக்கு தகவல்கள்...

முரளிகண்ணன் said...

திவ்யப் பிரியா தங்கள் வருகைக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

எத்தனை திறமை இருந்து என்ன??? தனிமனித ஒழுக்கமின்மையால் அத்தனையும் இழந்து விட்டாரே :((

அருண்மொழிவர்மன் said...

நல்ல பதிவு

தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்இவரை பற்றி முன்னரே எழுதிய ஒரு பதிவு
http://solvathellamunmai.blogspot.com/2008/09/blog-post_17.html

கோபிநாத் said...

\\இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.\\

உண்மை...இப்போ அவரை பார்க்கவே பாவமாக இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோபிநாத் said...
\\இரண்டாம் பிறவியாக அமைந்தது. அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது.\\

உண்மை...இப்போ அவரை பார்க்கவே பாவமாக இருக்கு.///

repeateyyyyyyy

முரளிகண்ணன் said...

அப்துல்லா தங்கள் வருகைக்கு நன்றி.

அருண்மொழிவர்மன், எனக்கு மிகவும் பிடித்த உங்கள் பதிவுகளில் அதுவும் ஒன்று. அப்போது நான் எழுதலாம் என நினைத்திருந்ததைப் பற்றி நீங்கள் எழுதவும், நான் பின்வாங்கி விட்டேன்.

நண்பர் சின்னப்பையன் அவர்கள் நேயர் விருப்ப பதிவாக கேட்டபோது உங்கள் பதிவைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்படி சொல்லும்போது எனெக்குத் தோன்றியது இதுதான் “ கார்த்திக்கை தற்போதைய இளைய தலைமுறை பார்க்கும் பார்வை வேறு, எனவே மீண்டும் எழுதினால் என்ன?”.

அடுத்த இரண்டு பகுதிகளுக்கும் தங்கள் ஆதரவு தேவை.

@ கோபிநாத்
தொடர் ஆதரவுக்கு நன்றி. திறமை இருப்பவர்கள் வீணாகும்போதுதான் அதிக கவலை ஏற்படுகிறது

துளசி கோபால் said...

கோகுலத்தில் சீதையில் கார்த்திக் நடிப்பு நல்லா இருந்துச்சே.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன்

வாங்க டீச்சர், அதை அடுத்த பதிவில எழுதுறேன்

narsim said...

எனக்கு மிகப்பிடித்த நடிகர்..
இன்றும் மெளனராகம் கார்த்திக் என்றால் ஒரு தனி முத்திரைதான்
தொடருங்கள் தல‌

கார்க்கிபவா said...

நல்ல நடிகன். திரையிலும் ,வாழ்க்கையிலும்

நவநீதன் said...

இடையில் மேட்டுக்குடி போன்ற காமடி படங்களில் கூட நடித்தார்...! (எதோ நமக்கு தெரிந்த சினிமா அறிவு அவ்வளவு தான்...)
அடுத்த பகுதியை அவளோடு எதிர்பார்க்கிறேன்....

முரளிகண்ணன் said...

நர்சிம், கார்கி,நவனீதன் வருகைக்கு நன்றி

கிரி said...

//அந்த 20 நிமிட நடிப்பு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தாக்குப்பிடிக்க போதுமானதாக இருந்தது//

மிகை இல்லை. இன்னும் சந்திர மௌலி என்ற பெயர் மறக்கவே முடியாது..இந்த பெயர் உள்ளவர்கள் பட்ட பாடும் மறக்க முடியாது

முரளிகண்ணன் said...

நன்றி கிரி

anujanya said...

கார்த்திக் எனக்கும் மிகப் பிடித்த நடிகர். முதலில் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், பின்பு வேறு சில விஷயங்களாலும் எங்கோ போயிருக்கவேண்டியவர், also ran லிஸ்டில் இருக்கிறார். போதாக் குறைக்கு, திடீரென்று வெத்தல பாக்கு குதப்பியபடி பேசும் ஸ்டைல் வேறு தொற்றிக்கொண்டது.

கார்க்கி, உன் குசும்பு புரிகிறது. திரையுலகில் 'அந்த' விஷயத்தில் சிவகுமார், (ஜெய் ஷங்கரையும் சொல்வார்கள்-உண்மையா தெரியாது) மாதிரி வெகு சிலரே தேறுவார்கள். நிறைய நடிகைகளுக்கு கார்த்திக் உண்மையிலேயே ஆப்த நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

முரளி, அருமையான பதிவு. சிறு சிறு விஷயங்களையும் கவனித்து எழுதியுள்ளீர்கள். பின்னூட்டம் போடுகையில், இரண்டாம் பாகம். சோ, வர்ட்டா.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அனுஜன்யா இரண்டாம் பாகம் எழுதிவிட்டேன். தங்கள் ஆதரவு தொடரட்டும்

வினோத் கெளதம் said...

கார்த்திக் உண்மையிலேயே நவரச நாயகன் தான்..அதுவும் அந்த மௌனராகம் Guest role இந்நாள் வரை பேசப்படுகிறது.அந்த Character பின்னி பெடல் எடுத்து இருப்பாரு. மூணாவது பிறவி உள்ளதை அள்ளி தா தானே..

முரளிகண்ணன் said...

\\மூணாவது பிறவி உள்ளதை அள்ளி தா தானே..\\

ஆமாம்.

வருகைக்கு நன்றி வினோத் கௌதம்

கானா பிரபா said...

kalakkal valakkam pol

Unknown said...

ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...

KarthigaVasudevan said...

ஏன் என் பின்னூட்டம் வெளியிடப் படவில்லை முரளிகண்ணன்? நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்

முரளிகண்ணன் said...

கானா பிரபா வருகைக்கு நன்றி.

மிசஸ் டவுட், என்னாச்சுன்னு தெரியலியே. திட்டுற பின்னூட்டமா இருந்தா வேண்டாம். மத்தபடி சிரமம் பார்க்காம இன்னொருதடவ போட்டுடுங்களேன்