அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அத்தைப் பெண்ணான மகேஸ் என அழைக்கப்படும் மகேஸ்வரி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். என் அம்மாவுக்கும், அத்தைக்கும் பனிப்போர் நிலவி வந்ததால் அடுத்த தெருவில் இருந்தாலும் அவர்கள் வீட்டுடன் இரண்டு மூன்று வருடங்களாக போக்கு வரத்து இல்லாமல் இருந்து வந்தது.
வேண்டுதல் காரணமாக நாங்கள் திருப்பதி சென்று வந்த பின்னர், என் தந்தை என்னை அழைத்து அரை லட்டையும், நாலு கருப்புக் கயிறையும் கொடுத்து மகேஸ் வீட்டில் போய் கொடுத்து விட்டுவா என்று அனுப்பி வைத்தார். அவர்கள் வீட்டிற்க்குள் நுழைந்ததும், வாடா மருமகனே எங்க அதிசயமா இந்தப் பக்கம் வந்துருக்கே என்று அத்தை வரவேற்றாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த மகேஸ், ஏம்மா இப்படி கிண்டல் பண்ணுறே என்று அவள் அம்மாவிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள். அப்போதுதான் அவள் முகத்தை முழுதாக பார்த்தேன். என்ன ஒரு சாந்தமான முகம்? வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு அமைதி அவள் முகத்தில் குடி கொண்டிருந்தது. இந்த சம்பவத்திற்குப் பின் அவள் வீட்டிற்குள் அடிக்கடி தலை காட்டத் தொடங்கினேன்.
பள்ளியில் இன்ஸ்பெக்ஷன் நடைபெறப் போவதாகவும், எல்லா நோட்டு, புத்தகங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுமாறு கிளாஸ் டீச்சர் அறிவித்து விட்டு சென்றார். எனக்கு உடனே என் டிராயிங் நோட்டை நினைத்து பயம் வந்தது. ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ அந்த அளவுக்கு கஷ்டம் எனக்கு டிராயிங்.
மகேஸும் ராமதாஸைப் போலத்தான். அவர் எப்படி இருக்கும் ஆறு சதவீத ஓட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டணி உதவியுடன் தேவையான சீட்களை ஜெயிக்கிறாரோ அதுபோல மகேஸும் தன் சுமாரான படிப்பை வைத்துக்கொண்டு அழகான ஹேண்ட் ரைட்டிங், படம் வரையும் திறமையைக் கொண்டு பாஸ் மார்க்கை வாங்கி தப்பித்து விடுவாள்.
அன்று சாயங்காலம் டிராயிங் நோட்டைத் தூக்கிக் கொண்டு அவளைச் சரணடைந்தேன். எப்போதும் எங்கள் சந்திப்பு வீட்டு ஹாலில் தான் நடக்கும். அது போக இருக்கும் ஒரு ரூம் அவளுக்கென பிரத்யேகமாக அவள் வீட்டாரால் ஒதுக்கப் பட்டிருந்தது. மகேஸின் அண்ணன் கல்லூரி விடுதியில் படித்துக் கொண்டிருந்தான். வாடா டேபிள்ல வச்சு படம் வரைஞ்சு தர்றேன் என ரூமுக்குள் அழைத்துச் சென்றாள். சாதாரண டேபிள், சிங்கிள் காட் பெட், ஒரு பேன் இவை மட்டுமே அங்கிருந்த மதிப்பான பொருட்கள். ஆனால் அவற்றை வைத்து அந்த ரூமையே நந்தவனமாக மாற்றியிருந்தாள். ஏராளமான கை வேலைப்பாடுகள். அவள் ஆர்ட் டைரெக்டர் ஆனால் தோட்டா தரணி, சாபு சிரில் எல்லோரும் பீல்ட் அவுட்தான். அவள் பாட புத்தகங்களின் அட்டையில் கூட பூக்களின் படங்களை வைத்து அதன் மேல் ட்ரான்ஸ்பரண்ட் பாலித்தின் ஷீட்டால் அட்டை போட்டு ஸ்டேப்ளர் பண்ணியிருந்தாள்.
கடவுள் பக்தியிலும் அவள் சளைத்தவள் இல்லை. வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி, சனிக்கிழமை ஹயகீரிவர் என படிப்புக்கான ஸ்பெஷலிஸ்ட் கடவுள்களின் தீவிர பக்தை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. அதுவரை மேக்கப் போடாமல் வெளியே வராத எங்கள் தெருப் பெண்கள்கூட பொதுத் தேர்வு என்றதும் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள். யூனிபார்மை மாட்டி, பரபரவென தலையை சீவி, அவதி அவதியாக சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு ஓடினார்கள். அப்போது நினைத்துக் கொண்டேன், நாம் யாரையாவது காதலிக்க நினைத்தால் சாதரண நேரத்தில் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டென்த்தோ, டுவெல்த்தோ எக்சாமுக்கு அவங்க போகும் போது பார்த்து விட்டுத் தான் முடிவு செய்யவேண்டும் என்று.
ஆனால் மகேஸ் கிளம்பிப் போன அழகு இருக்கிறதே?. தினமும் எப்படி நேர்த்தியான இரட்டை சடை போட்டு, நெருக்கமாக கட்டிய மல்லிகைப்பூவை சூடி பதறாமல் நடந்து போவாளோ அதே மாதிதான் போனாள். எந்த வித அனாவசிய பரபரப்பும் இல்லை. என் பெரியப்பா பையன் கூட அவளை கிண்டல் செய்வான். அவ நடந்து போகும் போது பக்கத்துல இடி விழுந்தாக்கூட அலட்டிக்காம லேசா தலையைத் திருப்பி ஓரக்கண்ணுல தான் பார்ப்பா என்று.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தது. ராமதாஸ் எப்படி தனக்கு சாதகமான தொகுதியில் மட்டும் நிற்பாரோ அதுபோல தனக்கேற்ற வொக்கேஷனல் குரூப்பை தேர்ந்தெடுத்து படிப்பைத் தொடர்ந்தாள் மகேஸ். தட்டின் நடுவில் சாப்பாட்டை வைத்து சாப்பிட வேண்டும், நடக்கும் போது அடுத்தடுத்த எட்டு ஒரே நேர்கோட்டில் வரவேண்டும் என என்னை திருத்திக் கொண்டே இருப்பாள்.
நான் கல்லூரி முதலாமாண்டு நுழைந்த நேரத்தில் அவள் படிப்பை முடித்திருந்தாள். உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்றில் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். மதிய சாப்பாட்டுக்குப் பின் பெண்கள் அனைவரும் சேர்களை எடுத்து வட்டமாகப் போட்டுக் கொண்டு அல்லி தர்பார் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
என்னை கவனித்திருந்த அத்தைப்பாட்டி ஒருத்தி என்னை அழைத்து, “என்னடா அவ பின்னாடியே சுத்திக்கிட்டிருக்க” என்று விசாரணையை ஆரம்பித்தாள். எனக்கு உதவிக்கு வந்த என் பெரியம்மா, “அவ இவனைக்காட்டிலும் மூப்பு, சும்மா பேசிக்கிட்டு இருக்கான்” என பதிலளித்தாள்.
அப்போது என் பாட்டி ”அதனாலென்ன, பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த, கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்.
பின்னர் மகேஸுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வந்தது. எழுத்தறிவில்லாத ஊமை கண்ட கனவாக என் காதல் இருந்தது. மகேஸ் திருமணத்திற்கு செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டேன்.
இப்போது எனக்கும் திருமணம் ஆகி விட்டது. பொருளாதார பற்றாக்குறையாலும், ஈகோவாலும் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் நான் செய்வது ஒன்றுதான். ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு பார்க்கிலோ, பார்க் மூடியிருந்தால் ஏதாவது பஸ் ஸ்டாப்பிலோ அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.
அந்த சமயங்களில் நினைப்பதுண்டு “பேசாம மூணு முத்த முழுங்கியிருக்கலாம்”

57 comments:
SUPER !!!!!!!!!!!!!!!!!!
வணக்கம் தல!
போன கதைக்கு பரிகாரம் தேடிட்டீங்க போல...
முடிவு சூப்பர். மத்ததெல்லாம் நல்லா இல்லையானு கேக்காதீங்க. அதெல்லாம் எப்பவுமே சூப்பர் தான்
btw, neenga en intha kathai ellam magazineku anupama directaa blogla poadareenga?
Its high time you should send your stories to magazines.
//அப்போது என் பாட்டி ”அதனாலென்ன, பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்.//
நெசமாலுமா தலைவா.. :-))
செம்ம கலக்கல் பதிவு.. அடிக்கடி வர முடியலன்னு நினைக்காதீங்க. எல்லாப்பதிவும் படிச்சுட்டேன். கமெண்டு இனிமே தவறாம போடுவேன்.
அத்தை பெண்...ன்னு ஆரம்பிச்சதால.. நான் ‘கிளு..கிளு’-ன்னு நினைச்சி வந்தா... கலக்கிட்டீங்களே..!! :-)
முத்தை முழுங்கியிருக்கலாம்! ;-)
சூப்பர்..!!
//நாம் யாரையாவது காதலிக்க நினைத்தால் சாதரண நேரத்தில் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டென்த்தோ, டுவெல்த்தோ எக்சாமுக்கு அவங்க போகும் போது பார்த்து விட்டுத் தான் முடிவு செய்யவேண்டும் என்று.
///
அடடே...!
இது தெரியாம.....???? :)))
/./சென்ஷி said...
//அப்போது என் பாட்டி ”அதனாலென்ன, பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்.//
நெசமாலுமா தலைவா.. :-))
//
பாஸ் இதுல எதுனாச்சும் மைக்ரோ அரசியல் டிரை பண்ணியிருக்கிறீங்களா.....??? (எனக்கு டவுட் இருக்கு!)
:)))))
அரை லட்டும் நாலு காசிக்கயிறும் உண்மையிலேயே இப்பொழுது புனைவாக போய்விட்டது!
நிஜத்தில் இல்லை! திருப்பதி போய் வரும் மக்கள் மனத்திலும் இல்லை (ஒரு ஆதங்கம்தான் தெரிஞ்சவரு ஒருத்தரு திருப்பதி போய்ட்டு வந்து ஒரு கால் லட்டு கூட கண்ணுல காமிக்கல:( பட் அதிகம் வருத்தப்படாம ஸ்பெஷல் லட்டு வாங்கி வயித்தை நிரப்பிக்கிட்டேனாக்கும் :)))
//செம்ம கலக்கல் பதிவு.. அடிக்கடி வர முடியலன்னு நினைக்காதீங்க. எல்லாப்பதிவும் படிச்சுட்டேன். கமெண்டு இனிமே தவறாம போடுவேன்.//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
நல்ல சிறுகதை முரளி. ராமதாசை ரொம்பவே நக்கல் செய்கிறீர்கள் (அவருக்குத் தேவை தான்). நான் கூடத் தெரிந்திருந்தால் ஒரு இரண்டு முத்துகள் முழுங்கி இருப்பேன் :(
அனுஜன்யா
நன்றி உங்களோடு நான்.
வணக்கம் கணேஷ்.
வெட்டிப்பயல், மிக்க நன்றி. உங்களின் இரண்டாவது கமெண்ட் என்னை வானத்தில் மிதக்க வைக்கிறது.
எனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. முயற்சி செய்கிறேன்.
// அனுஜன்யா said...
நல்ல சிறுகதை முரளி. ராமதாசை ரொம்பவே நக்கல் செய்கிறீர்கள் (அவருக்குத் தேவை தான்). நான் கூடத் தெரிந்திருந்தால் ஒரு இரண்டு முத்துகள் முழுங்கி இருப்பேன் :(
அனுஜன்யா//
அப்ப இதோட தொடர்ச்சி அனுஜன்யாகிட்டேர்ந்தா.. :-))
சென்ஷி, மிக்க நன்றி.
\\அடிக்கடி வர முடியலன்னு நினைக்காதீங்க. எல்லாப்பதிவும் படிச்சுட்டேன். கமெண்டு இனிமே தவறாம போடுவேன்\\
இவை எதுவுமில்லாமலே அறியாத தன்னைப் போன்ற மனசொன்றை (நன்றி : ரமேஷ் வைத்யாண்ணா)
ஹாலிவுட் பாலா மிக்க நன்றி.
ஆயில்யன்,
\\பாஸ் இதுல எதுனாச்சும் மைக்ரோ அரசியல் டிரை பண்ணியிருக்கிறீங்களா.....??? (எனக்கு டவுட் இருக்கு!)
\\
இதில் ஏதும் நுண்ணரசியல் இல்லை. கிராமங்களில் பயன்படுத்துவதாக கேள்விப்பட்டதுண்டு
நன்றி அனுஜன்யா. உங்க கதைக்கு வெயிட்டிங்
உங்களோட ஒவ்வொரு பதிவும் விகடன் கதைகள் மாதிரி அழகா இருக்கு
//ஆயில்யன்,
\\பாஸ் இதுல எதுனாச்சும் மைக்ரோ அரசியல் டிரை பண்ணியிருக்கிறீங்களா.....??? (எனக்கு டவுட் இருக்கு!)
\\
இதில் ஏதும் நுண்ணரசியல் இல்லை. கிராமங்களில் பயன்படுத்துவதாக கேள்விப்பட்டதுண்டு//
ஆஹா பாஸ் அது நான் சென்ஷிக்கு போட்ட கொஸ்டீனு :) அவுருதான் ரிப்ளையணும்
முத்துக்களை விழுங்காவிட்டாலும், கதையாக்கி விட்டீர்கள்.
//மாதவராஜ் said...
முத்துக்களை விழுங்காவிட்டாலும், கதையாக்கி விட்டீர்கள்.//
கலக்கல் கமெண்ட்.. :-)
@ மந்திரன் மிக்க நன்றி
@ மாதவராஜ் மிக்க நன்றி
@ சென்ஷி, ஆயில்யன் கேள்விக்கு சுவையான பதிலைத் தரவும்
@ ஆயில்யன்..
ஏம்ல்லே.. ஒரு அறிவுப்பூர்வமான வார்த்தைய உண்மையான்னு தெரிஞ்சுக்க கேட்டா இப்படியால்ல என்னையும் புனைவு எழுத தூண்டுவ. வா வந்து அடுத்த முனியாண்டி விலாஸ்ல மீ த ஃபஷ்டு போடு :-)
//முரளிகண்ணன் said...
@ சென்ஷி, ஆயில்யன் கேள்விக்கு சுவையான பதிலைத் தரவும்//
இவருக்கு சுவையான பதில்ன்னா தட்டுல ஜிலேபியோட முறுக்குதான் வச்சு தரணும் :-).
நல்லா டேஸ்ட்டா இருக்கும் :-))
super thala..
//போன கதைக்கு பரிகாரம் தேடிட்டீங்க போல...//
enakku ennamo pona kathai itha vida better maathiri thonuthu.. :))
// ஜி said...
super thala..
//போன கதைக்கு பரிகாரம் தேடிட்டீங்க போல...//
enakku ennamo pona kathai itha vida better maathiri thonuthu.. :))
3/4/09 22:11
//
naan poana kathai climaxoada mattum ithai compare pannen. matha padi antha kathaila niraiya idangal arumaiya thaan irunthathu.
intha kathai climax enaku romba pidichithu... moreover ithula niraiya puthusa test panna maathiriyum irunthathu.. like nallathu, kettathu rendukume Ramadossai uvamaiya solrathu :-)
கதைக்கு காமெடியன்(ராமதாஸ்) நல்ல வலு கொடுத்திருககிறார்.
//என் அம்மாவுக்கும், அத்தைக்கும் பனிப்போர் நிலவி வந்ததால் //
எல்லா வீட்டிலும் அம்மாக்களுக்கும்,அத்தைகளுக்கும் பனிப்போர் என்பது டெம்ப்ளேட் போல
:)
// அறிவிலி said...
கதைக்கு காமெடியன்(ராமதாஸ்) நல்ல வலு கொடுத்திருககிறார்.
//
டபுள் ரிப்பீட்ட்ட்ட்டு
தல லைன பிடிச்சிட்டீங்க.. வாழ்க.. சூப்பர்..
ஜி வருகைக்கு நன்றி.
வெட்டி, உங்களுடைய சென்ற கதைக்கான பின்னூட்டம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. உங்கள் அக்கறை எனக்கு மிக்க சந்தோஷத்தை தருகிறது.
அறிவிலி, எம் எம் அப்துல்லா வாங்க வாங்க
கேபிள் சங்கர், நன்றி
சார், சூப்பரு...
சிம்பிளி சூப்பர்ப்!
ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ
ராமதாஸை எப்படி இருக்கும் ஆறு சதவீத ஓட்டுக்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டணி உதவியுடன் தேவையான சீட்களை ஜெயிக்கிறாரோ
unga veettu address sollunga auto anuppanum ...... maalai podathan
சரவணகுமரன், தமிழ்ப்ரியன், தஞ்சை ஜெமினி தங்களின் வருகைக்கு நன்றி
//ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ அந்த அளவுக்கு கஷ்டம் எனக்கு டிராயிங்//
ரசித்தேன் தல..........
தலைவா,
மாம்பழத்தை இப்படியா உறிக்கறது, கலக்கல் தல,
ஜீப்புல நீங்களும் ஏறிட்டீங்க,
வாழ்த்துக்கள்.
கலக்கல்
அய்யா..மகேஸ் அக்கா தப்பிச்சுட்டாங்க!
(ராமதாஸ் மேட்டரு சூப்பரு)
தல கணேஷுக்கு நன்றி சொல்லி இந்தக் கேள்விய கேட்கறேன். அத்தை வீட்டு கூட பேச்சு வார்த்தை இல்லைனாலும்,அடுத்த தெருவில் இருந்த அழகிய ம்கேஸை இவர் பார்த்ததில்லை என்பது இடிக்குதே.. அவர் அவ்ளோ நல்லவரோ?
அறுசுவையுடன் கூடிய அருமை பதிவு. கலக்கல்.
பாருங்க ராமதாஸ் எவ்வளவு உதவி செய்யறார்.
அட, எல்லாரோட பால்ய காலத்திலும் ஒரு கதை இருக்குபோல... நம்ம வலைத்தளத்திலும் என்னோட கதை போட்டிருக்கேன். ம்! எங்கிருந்தாலும் வாழ்க!ன்னு சொல்லுங்க. நானும் அப்படித்தான் சொன்னேன்!
//பொண்ணு எத்தனை வயசு மூப்போ அத்தனை முத்த கட்டிக்கப் போறா ஆம்பிளை முழுங்கிட்டா சரியாப் போயிடும்னு சாஸ்திரம் இருக்கு” என்றாள். எல்லோரும் சிரித்தனர்//
தெரியாம போச்சே....
தெரிஞ்சிருந்தா .
.....
....
....
...
....
...
.....
......
..
....
.
.........வெல்லாம் மிஸ் பண்ணியிருக்கமாட்டமே
ரொம்ப சூப்பரா இருக்கு முரளி. நான் முத்துக்கள விழுங்கணும்னா 21 முத்து இல்ல முழுங்கனும்.
romba romba nallaa irundhuchu kadhai...kadaisi vari thaan toppu :))
என்னாத்த சொல்ல வழக்கம் போல அட்டகாசம் ;))
முரளி..அந்த மாதிரி பார்க்லயோ,பஸ் ஸ்டாப்லயோ இருக்க நேரிடும் போது எதுக்கும் பின்னால ஒரு வாட்டி திரும்பி பாருங்க..அங்கே மகேஸ் நின்று கொண்டிருக்கலாம்
நெஞ்சை தொடும் பதிவு முரளி.உங்கள் எழுது மிகவும் எதார்த்தமானதாக உள்ளது.
தொடர்ந்து இதை போலே நிறைய எழுதுங்கள்.
சம்பத்
Dear Magesh,
It is really nice!... Toched my heart!
Looking forward more stories from you:)
Spidy.
its really interesting to read because everybody in their life come across this kind of incidents
அந்த சமயங்களில் நினைப்பதுண்டு “பேசாம மூணு முத்த முழுங்கியிருக்கலாம்” //
இன்றுதான் உங்கள் கதையை முதன் முதலாகப் படிக்கிறேன்.நல்ல கேரக்டர் ஸ்டடி.உங்கள் மகேஸைப் போலவே அமைதியான நடை. நீரோடை சுகம்.
இந்தக்கதைக்கு கவிதைத்தனமான முடிவு.. அசத்தல் முரளி.!
மகேஸ்னதும் ஒர் நிமிஷம் நானோன்னு நினைச்சேன்.....
கதை அருமை !! சொந்தக்கதை இல்லயே?? :))))
பதிவர் கூட்டத்தில் உங்களைக் காணவில்லையே சார்.
// ராமதாஸை தேர்தலின் போது கூட்டணி மாறக்கூடாது என்று சொன்னால் எந்தளவுக்கு கஷ்டப்படுவாரோ அந்த அளவுக்கு கஷ்டம் எனக்கு டிராயிங். //
:)
// டென்த்தோ, டுவெல்த்தோ எக்சாமுக்கு அவங்க போகும் போது பார்த்து விட்டுத் தான் முடிவு செய்யவேண்டும் என்று.//
ஹி ஹி ஹி
//Its high time you should send your stories to magazines.//
வழி மொழிகிறேன்
நீங்கள் தாமதித்தால் வேறு பெயரில் வந்து விடும் வாய்ப்பு உள்ளது
நல்ல பதிவு
i liked ur blog and have become ur follower.
You can also visit my blog and if you like it u can be my follower :-)
Hope u like it
Post a Comment