June 29, 2010

1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டம் இல்லாமலேயே அழகழகான தமிழ்ப் பெயர்களில் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டிய ஆண்டு இந்த ஆண்டுதான்.

கண்ணேதிரே தோன்றினாள், மறுமலர்ச்சி, தினந்தோறும், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், இனியெல்லாம் சுகமே, துள்ளித் திரிந்த காலம், இனியவளே, கண்களின் வார்த்தைகள், ப்ரியமுடன், நிலாவே வா, என்னுயிர் நீதானே மற்றும் உயிரோடு உயிராக என நல்ல தலைப்புகளுடன் மென்மையான படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.

அதே போல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களும் இந்த ஆண்டில் அதிக அளாவு வெளிவந்தன.

உதவிக்கு வரலாமா, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, அரிச்சந்திரா, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, கும்பகோணம் கோவாலு மற்றும் கல்யாண கலாட்டா என நகைச்சுவையை மையமாகக் கொண்ட பல படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.

இந்த ஆண்டு ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றிய ஆண்டாகும்.

அஜீத்தும் விஜய்யும் ஆக்‌ஷன் ஹீரோக்களாக பரிமளிக்காத நேரம். விக்ரம் அப்போதுதான் மொட்டையடித்துக் கொண்டு சேதுவாகிக் கொண்டிருந்தார் வரப்போகும் வசந்தத்தை எதிர்பார்த்து. சூர்யா சினிமா என்றால் என்ன என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் பீல்ட் அவுட். கார்த்திக் ரொமாண்டிக்கான காதல் கலந்த லைட்டான கதைகளை மட்டும் பண்ணிக் கொண்டிருந்தார். பிரசாந்த் அன்றைக்கும் இன்றைக்கும் என்ற பேச்சே இல்லாமல் எப்போதும் இப்படித்தான் என்று இருந்தார்.

கமல்ஹாசன் அவ்வை சண்முகி, மற்றும் சாக்‌ஷி 420 யின் வெற்றிக்குப் பின் மருதநாயகத்தை தொடங்கி, முடியாமல் பெப்ஸி பிரச்சினையில் நுழைந்து, வேறு வழியில்லாமல் காதலா காதலா படத்தைத் தொடங்கி வெளியிட்டார்.


அப்போதைய நிலைமைக்கு ஆக்‌ஷன் ஹீரொக்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் அர்ஜூன் தான். இதில் ரஜினிகாந்த் படையப்பாவை படைக்கும் ஆயத்தங்களில் இருந்தார். விஜயகாந்தோ தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.

அர்ஜூன் கே எஸ் ரவிகுமாருடன் இணைந்து கொண்டாட்டம் என்ற ஆக்‌ஷனும் இல்லாத காமெடியும் இல்லாத இடைநிலைப் படத்தைக் கொடுத்தார். தாயின் மணிகொடி என்ற வழக்கமான தேச பக்தி படமும் அர்ஜூன் நடிப்பில் வெளியானது. ஆனால் அப்படம், படத்தின் கதாநாயகியான நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவான நிவேதாவுக்காக மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. (படத்தைத் தொடர்ந்து பெங்களூரில் அவர் தற்கொலை செய்து கொண்டார் (பெரிய இடத்து விவகாரம்)).

ராஜ்கிரண் வீரத்தாலாட்டு, பொன்னு விளையற பூமி என படம் பார்க்க வந்தவர்களை புண்ணாக்கிக் கொண்டிருந்தார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நட்புக்காக மட்டுமே இந்த ஆண்டில் வெற்றியைப் பெற்ற ஒரே ஆக்‌ஷன் படம். இதிலும் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல்தான். வின்செண்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரியமுடன் ஓரளவு ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த ஆண்டில் வெளியான சில திரைப்படங்களைப் பற்றிய ஒரு பார்வை.


மறுமலர்ச்சி


மதுரை, நெல்லை,கோவை மற்றும் சென்னை வட்டாரப் படங்களே வந்து கொண்டிருந்த காலத்தில் தென் ஆற்காடு வட ஆற்காடு மாவட்ட கிராமத்தை களமாகக் கொண்டு வந்த படம் இது (முதல் படமென்றும் சொல்லலாம்). முதலில் ராசு படையாச்சி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மறுமலர்ச்சி என மாற்றப்பட்டது. அதேபோல் முதலில் விஜயகாந்த் நாயகன் வேடத்துக்குப் பேசப்பட்டு பின்னர் மம்மூட்டி நாயகனாக நடித்தார். பாரதி இயக்கம், எஸ் ஏ ராஜ்குமார் இசை. இப்பட ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், அப்போது ராசு படையாச்சி என்னும் பெயருக்காகவே எந்த தமிழ் கதாநாயகனும் நடிக்க மறுக்கிறார்கள் என ஆவேசப்பட்டார். பின்னர் அவர் ஆற்காடு மாவட்ட பின்புலத்தில் பல படங்களை இயக்க இப்படம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.


கோல்மால்


அருமையான முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். நாயகன் செல்வா, நாயகி மோனிகா நெருக்கருக்குப் பதில் வேறு நல்ல மார்க்கெட் வேல்யு உள்ளவர்கள் நடித்திருந்தால் உள்ளத்தை அள்ளித் தா அளவுக்கு பேசப்பட்டிருக்கும். ஏராளாமான திருப்பங்களைக் கொண்ட நகைச்சுவைப் படம். ஸ்க்ரிப்ட் பலமாக இருந்தாலும் காஸ்டிங் சரியில்லாவிட்டால் படம் ரீச் ஆகாது என நிரூபித்த படம்.


நட்புக்காக


இப்படத்தின் பிரிவியு பார்த்து விட்டு ரஜினி, கே எஸ் ரவிகுமாரிடம் கேட்டது “ இந்த மாதிரி கதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறங்க?”. படம் தெலுங்கில் சிரஞ்சிவி நடிக்க ”சினேகம் கோசம்” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.தினந்தோறும்/துள்ளித்திரிந்த காலம்


இரண்டு படங்களுமே ஒத்த சாயல் கொண்ட படங்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், இளைஞர்களின் பொறுப்பின்மையையும் களமாகக் கொண்டு வெளிவந்த படங்கள். தினந்தோறும் படம் இயக்குநர் நாகராஜனின் காட்சி அமைப்புகளாலும், வசனத்தாலும் பேசப்பட்டது. பின்னர் இயக்குநர் நாகராஜன் குடிக்கு அடிமையாகி, தற்போது மீண்டு வருவதாகத் தகவல்.


சொல்லாமலே

தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம். ஆனால் கிளைமாக்ஸில் நாக்கை அறுப்பதால் அதுவே பல ஊடகங்களால் முன்னிலைப் படுத்தப்பட்டது. இயக்குநர் சசிக்கு து முதல் படம். பின்னர் அவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என வெரைட்டியான படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழில் அவருக்கு நிலையான இடம் இல்லாமல் இருப்பது வேதனையான ஒன்று.


காதல் மன்னன்


இயக்குநர் சரணின் முதல் படம். இன்னொருவருக்கு நிச்சயித்த பெண்ணை காதலித்து மணக்கும் ரொமாண்டிக் ஹீரோ வேடத்தில் அஜீத். இம்மாதிரி தமிழில் வந்த முதல் படம் என்றும் சொல்லலாம். (தமிழ் – தில்வாலே லே துனியா.......). படத்தின் இணை இயக்குநர் விவேக் (பாலசந்தரின் சிஷ்யர்கள்). பின்னர் இவருக்கும் சரணுக்கும் முட்டிக் கொண்டது. மெஸ் ஓனராக எம் எஸ் விஸ்வனாதனை முதன் முதலில் நடிக்க வைத்திருந்தார்கள். நாயகி மானு கலாசேத்திரா மாணவி. செக்யூரிட்டி சர்வீஸ், மேன்ஷன் மெஸ், டூ வீலர் சர்வீஸ் ஸ்டேஷன் என நகரத்தின் அடையாளங்களை திரைக்கு தெளிவாக கொண்டு வந்த படம் இது.


அரிச்சந்திரா


கல்யாண வயதில் ஒரே இடத்தில் வேளை பார்க்கும் நண்பர்கள். குடியும் கூத்துமாய் இருப்பவர்கள். அவர்களின் லீடருக்கு குடியை, மாமிசத்தை, சிகரெட்டை வெறுக்கும் பெண்ணின் மேல் காதல். ஏமாற்றி காதலிக்கிறான். பின்னர் மாட்டிக் கொள்கிறான். எப்படி அவள் அன்பை மீண்டும் பெறுகிறான் என்பதே கதை. இந்தக் கேரக்டருக்கு கார்த்திக்கை விட பொருத்தமாய் யார் கிடைப்பார்?. நல்ல எண்டெர்டைனர்.


நாம் இருவர் நமக்கு ஒருவர்


பிரபு தேவா தாடி எடுத்த படம், மீனா நீச்சலுடையில் நடித்த படம். சுந்தர் சி யின் வழக்கமான ஆள் மாறாட்டக் காமெடிப் படம். காதலா காதலா வுக்கும் இதற்கும் சில காட்சிகளில் ஒற்றுமை இருந்தது. கார்த்திக் ராஜா அருமையான மெலடிகளைக் கொடுத்திருந்தார். என்ன வென்று தெரியாமல் ஏதோ குறைந்திருந்ததால் தோல்வியடைந்த படம்.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்


கார்த்திக் கடனுக்கு (வாங்கிய) நடித்துக் கொடுத்த படம். ரமேஷ் கண்ணாவுக்கு நகைச்சுவை நடிகன் அந்தஸ்து கொடுத்த படம். தீபாவளிக்கு முன் வெளியாகி தீபாவளிப் படங்கள் பப்படமானதால் பொங்கல் வரைக்கும் ஓடிய படம்.

கண்ணெதிரே தோன்றினாள்

சுஜாதாவின் வசனத்தில் அறிமுக இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கி தேவாவின் கானாப் பாடல்களோடு வெற்றியடைந்த படம். பிரசாந்துக்கு சொல்லிக்கொள்ளும் படி அமைந்த மிகச்சில படங்களில் ஒன்று.

இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.

26 comments:

ஜெட்லி... said...

நல்ல தொகுப்பு....அந்த ஆண்டு வெளியான முக்காவாசி படங்களை நானும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.... போன தியேட்டர் கூட
நினைவில் இருக்கிறது.....

chinnasamy said...

nostalgia

முரளிகண்ணன் said...

நன்றி ஜெட்லி.

நன்றி சின்னசாமி.

♠ ராஜு ♠ said...

அந்தக் கடைசி வரி எடக்குத்து!
:-)

முரளிகண்ணன் said...

நன்றி ராஜு

கார்க்கி said...

காதலுக்கு மரியாதையை தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன்னு எங்காளு கலக்கிய வருஷம். நிலாவே வா மட்டும் சொதப்பல். ஆனால் 99 ஜனவரில வந்த துள்.ம.துள் சரிகட்டியது..

சொல்லப் போனா இந்த வருஷம் தான் நான் விஜய் ரசிகனாவும் மாறிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடி ஒன்லி சூப்பர்ஸ்டார்தான்

98க்கு அப்புரம் வந்த படஙக்ள்தான் எனக்கு நினைவுல இருக்கு.

எனக்கு என்னவோ ஜீன்ஸ் இந்த வருடம்தான் வந்ததா ஞாபகம். பார்த்து சொல்லுங்க.

Mohan said...

துள்ளித் திரிந்த காலம் படமும் கூட நன்றாகத்தான் இருந்தது. ஏனோ அந்தப் படம் பிளாப் ஆகி விட்டது. நல்ல தொகுப்பு.

kanagu said...

Romba naal kazhichu vandhurukeenga na.. epdi irukeenga???

Nalla thoguppu.. :) Arunachalam 1998-la varaliya??? epa vandhududu??

Ninaithen vandhai indha varusham vandhu nalla irundhude...

Cable Sankar said...

தினந்தோறும் நாகராஜ் இப்போது அடுத்து இயக்குவதற்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார். நான அவருடன் சமீபத்தில் தான் வேலை செய்தேன். மிக இயல்பான மனிதர்.

கார்க்கி said...

கனகு,

அருணாச்சல்ம் 1997. நினைத்தேன் வந்தாய் இந்த வருடம் தான்

வெட்டிப்பயல் said...

ஜீன்ஸை மிஸ் பண்ணீட்டீங்க பாஸ். Graphics கலக்கல் படமாச்சே.

உ.எ.கொ, ரோஜாக்கு எயிட்ஸ்னு பரப்பி மார்கெட் அவுட் ஆனதுக்கு பிறகு வந்து மெக ஹிட் படமாச்சே.

தில்சே படம் ஃபிளாப்னாலும் பாட்டு செம ஹிட்டாச்சே.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான படங்களின் தொகுப்பு.. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வந்த படங்கள்.. சில படங்கள் கட் அடிச்சிட்டு பார்த்தோம்.

அக்பர் said...

வீரத்தாலாட்டு படத்தை காலேஜ் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தது மறக்க முடியாது.

அந்த பாடத்தில் இருந்துதான் மணிரத்னம் அந்நியப்பட்டு போனார் என்று நினைக்கிறேன்.

நல்ல அலசல் முரளி அண்ணா.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான பதிவு

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் முரளி,
நீண்ட நாட்களின் பின்னர்.

// தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.
//நல்ல நக்கல். உண்மையில் இந்தக் காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் ஓரளவு தரமான படங்கள் _மாற்று சினிமாக்களாக சொல்ல முடியாவிட்டாலும், மசாலா என்ற பெயரில் மொக்கைத்தனம் இல்லாத - படங்கள் வெளியாகின.

தொடர்ந்து எழுதுங்கள்

அத்திரி said...

நல்ல தொகுப்பு கலக்குங்க

முரளிகண்ணன் said...

நன்றி கார்க்கி. ஜீன்ஸ் 98ஆம் ஆண்டு தான். மிஸ் பண்ணிவிட்டேன்.

நன்றி மோகன்

நன்றி கனகு

நன்றி கேபிள் சங்கர். தினந்தோறும் நாகராஜ் வெற்றியடைய வாழ்த்துக்கள்

நன்றி வெட்டிபயல். ஜீன்ஸ் மிஸ் ஆகிவிட்டது.

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி அக்பர்

நன்றி உலவு

நன்றி அருண்மொழிவர்மன்

நன்றி அத்தரி

செல்வம் said...

1998 எனக்கும் மிக முக்கியமான ஆண்டு. நான் பத்தாவது முடித்த ஆண்டு. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள படங்களில் ஏறத்தாழ 80 சதவிகிதம் பார்த்துள்ளேன். அதுவும் உ.எ.கொ வரும் போது நான் தீவிரமான விக்கிரமன் ரசிகனாக இருந்தேன்.

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே

முரளிகண்ணன் said...

நன்றி செல்வம்.

கோவி.கண்ணன் said...

வியப்பாக இருக்கிறது முரளி. இவ்வளவு தகவல்களை எப்படித்தான் நினைவு வைத்து எழுதுகிறீர்களோ, எப்படி நினைத்துப் பார்த்தாலும் இவை வேறு எங்கும் இருந்து எடுத்து எழுதுவதற்கான வாய்பே இல்லை என்று தோன்றுகிறது. நீங்கள் தமிழ் திரை களஞ்சியம் தான்.

திரைப்படங்கள் குறித்து அருமையான பல்சுவை, தகவல்கள் அடங்கிய நூல்(கள்) இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது என்று மட்டுமே புரிகிறது. அதற்கான முயற்சி எடுப்பீர்கள் என்று நம்பி வாழ்த்துகிறேன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நாயகிகள் பஞ்சம், சிம்ரன், கௌசல்யா மட்டுமே..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது//

அந்த கடைசிப் பாட்டின் கடைசி வரியின் காட்சியாக்கம்..,

புருனோ Bruno said...

//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.//

குசும்பு

உயிரே குறித்து முன்னர் நான் எழுதியது

மணிரத்னம் படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் இரண்டாவது வாரத்திலேயே 50 சதம் இடங்கள் காலியாக இருந்து, அனைத்து பாடல்களும் முடிந்தவுடன் 50 சதம் நிரம்பியிருக்கும் அரங்கிலிருக்கும் 80 சதவித பார்வையாளர்கள் வெளிவரும் போக்கு இந்த படத்தில் ஆரம்பித்து அதன் பிறகு பம்பாய், இருவர், உயிரே வரை தொடர்ந்தது. (அதன் பிறகு இரண்டாம் முறை படம் பார்ப்பவர்களால் மணிரத்னம் படங்கள் முழுவதும் பார்க்கப்பட்டது அலைபாயுதே தான்) திரையரங்கில் மீதியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஒன்று காதலர்களாக இருப்பார்கள். அல்லது வெளியூர் செல்ல முன்பதிவு செய்து விட்டு சில மணிநேரத்தை செலவழிக்க வந்தவர்களாக இருப்பார்கள்

புருனோ Bruno said...

ஜீன்ஸ் என்னாவாயிற்று

ஒரு வேளை அது தமிழ் பெயர் இல்லை என்பதால் விட்டு விட்டீர்களா

புருனோ Bruno said...

நினைத்தேன் வந்தாய்
பிர்யமுடன்
நிலாவே வா

என்னவாயிற்று

முரளிகண்ணன் said...

நன்றி கோவி கண்ணன். முயற்சியை விரைவில் துவக்குகிறேன்.

நன்றி சுரேஷ்

நன்றி டாக்டர். பதிவு நீளமாய் போய் விடுமோ என்று தவிர்த்து விட்டேன். வேறு பதிவில் சேர்த்து விடுகிறேன்.