தமிழ்சினிமாவில் கதாநாயகன், நாயகி, எதிர்நாயகன், ஆகியோரது குணாதிசயங்கள் பில்ட் அப் காட்சிகளின் மூலமாகவோ அல்லது பிறரை விட்டு பேசச் சொல்லியோ தான் பார்வையாளனுக்கு உணர்த்தப் படுகிறது. அவர்கள் குடியிருக்கும் வீடானது அந்தக் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்டப்படுகிறதா என்று பார்த்தோமானால் பெரும்பாலான திரைப்படங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.
படத்தின் நாயகர்/நாயகியின் செல்வ நிலையை காட்டும் விதத்தில்
ஏழை – குடிசை (கிராமம் மற்றும் சேரிப்பகுதி)
கீழ் நடுத்தரம் - சம்சாரம் அது மின்சாரம் செட் (தனி வீடு)
ஒண்டுக் குடித்தனங்கள் (ஸ்டோர்ஸ்)
மத்திய நடுத்தரம் – ஹவுசிங் போர்ட் டைப் வீடுகள்
உயர் நடுத்தரம்- அபார்ட்மெண்ட் டைப்,
பணக்காரர்கள் – கீழ்பாக் குஷால்தாஸ் கார்டன் (தற்போது இடிக்கப்பட்டு விட்டது), ஈ சி ஆர் ரோட் பங்களாக்கள், கல்பனா ஹவுஸ், இரண்டு பக்கம் படிக்கட்டு வைத்து ஹை சீலிங் உள்ள வீடுகள்.
பெரும் செல்வந்தர்/ நாட்டாமை டைப் – எம் ஏ எம் ராமசாமி வீடு, செட்டுநாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு.
என அவர்களின் இருப்பிடம் சித்தரிக்கப்படுகிறது.
ஆச்சாரமானவர்கள் என்பதைக் காட்ட ஒரு பூஜை அறை, துளசி மாடம் ஆகியவற்றைக் காட்டினால் போதும் என்ற கருத்தும் தமிழ்சினிமாவில் தொன்று தொட்டு வழங்கிவருகிறது.
வில்லனுக்கும் அவர் வசதிக்கும், தொழிலுக்கும் மற்றும் பதவிக்கும் ஏற்ற வீடு காட்டப்படும்.
ஆனால் நகைச்சுவை நடிகன் தான் பாவம், அவனுக்கு என்று சொந்தமாக ஒரு இருப்பிடம் மிக அரிதாகவே (சூரிய வம்சம், பெரிய தம்பி) காட்டப்படும். அதுகூட கதைக்கு அவசியமாவதால் வேறு வழியில்லாமல் காட்டப்படும்.
பேய்ப்படங்கள் மற்றும் குற்றம் சார்ந்த திகில் படங்களில் வீடுகள் அமானுஷ்ய தன்மை கொண்டதாக சித்தரிக்கப்படும் (13 ஆம் நம்பர் வீடு, ஆனந்தப்புரத்து வீடு).
வீடு ஒரு கதாபாத்திரமாக அமைந்த படங்கள் என்றால்
பாலுமகேந்திராவின் வீடு படம் தான் சட்டென்று எல்லோர் நினைவுக்கும் வரும். ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்ட படு கஷ்டத்தை காவியமாக சொன்ன படம் அது.
டி பி கஜேந்திரன் இயக்கத்தில் உருவான பட்ஜெட் பத்மநாபன், தன் வீட்டை மீட்க போராடுபவனின் கதையை நகைச்சுவை முலாம் பூசி சொன்னது.
சேரனின் பாண்டவர் பூமி, குடும்பத்திற்க்காக சிறைக்குப் போன தம்பி வெளிவந்து நன்கு வாழ வேண்டுமென அவனது அண்ணன்கள் ஒரு மணப்பெண்ணை வளர்த்து, வீட்டையும் கட்டி வைப்பதை இணை கதையாகச் சொன்னது.
என சில படங்களைச் சொல்லலாம்.
எனவே எப்படிப் பார்த்தாலும் குணாதிசயங்களைச் சொல்லும் வீடு காட்டப் பட்டிருக்கிறதா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.
ஸ்டியோக்களில் சினிமா சிறைப்பட்டிருந்த காலத்தில் கார்பெண்டரும், பெயிண்டருமே வீட்டை முடிவு செய்தார்கள், பதினாறு வயதினிலேக்குப் பின் இயல்பு வீடுகள் என்ற போர்வையில் மதுரை, கோபி செட்டிப் பாளையம் மற்றும் காரைக்குடி சுற்று வட்டார வீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சிவாஜி படத்துக்காக ரஜினியின் வீட்டை பிரமாண்டமாய் காட்ட வேண்டுமென்று டெல்லியில் அலைந்து அந்த வீட்டைப் பிடித்தார்கள்.
நாயகன்/நாயகியின் தனித் தன்மைகளை வீட்டு அலங்காரம், அங்கு உள்ள பொருட்கள், போஸ்டர்கள், பொருள் அடுக்கியிருக்கும் விதம் என காட்ட கலை இயக்குநர்களுக்கு சுதந்திரத்தையும், ஸ்க்ரிப்டையும் கொடுங்கள் இயக்குநர்களே.
44 comments:
வெல்கம் பேக்!
நன்றி அதிஷா
வெல்கம் பேக்ண்ணே...!
பதிவும் வழக் கலக்.
நன்றி ராஜு
ஹலோ முரளி.. எப்படி இருக்கீங்க.. பேசி எத்தன மாசமாச்சி.. நல்லாருக்கீங்களா.. பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா.. தொடருங்கள்.
உங்கள் ஸ்டார்ஜன்.
ரொம்ப சந்தோசமா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க.. படிப்பெல்லாம் முடிஞ்சிதா.. இப்போ மதுரைவாசம்தானே..
நன்றி ஸ்டார்ஜான். தற்போது மதுரையில்தான் இருக்கிறேன்.
மீண்டும் பதிவுகளில் உங்களை பார்க்கவும், படிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.
பணிகளுக்கு இடையில் தொடர்ந்து எழுதுங்கள்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
:)
சின்னவீடு.....ன்னே ஒரு படம் வந்தது அதை விட்டுவிட்டிங்களே.
வீடு மனைவி மக்கள்.. ஒண்டுகுடித்தன வாடகை வீட்டு கெடுபிடியிலிருந்து தப்பித்து சொந்த வீடு கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் கதை..
மீள் வருகைக்கு வாழ்த்துகள்!
சிங்கம் திரும்பிடுச்சேஏஏஏஏஏஏஏஏஏஏய்
எங்களக்கு பிடிச்ச தமிழ்ப்படத்தில் வரும் குடிசை டைப் வீடு..,
வீடு சம்பந்தப்பட்ட நிறைய படங்களின் நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள் ..
வீடு என்றதும் எனக்கு இந்த படங்களும் நினைவுக்கு வந்தன
..
இல்லம் (சிவகுமார் ,அமல நடித்தது ,பல வருடங்களுக்கு பிறகு ஹிந்தி யில் ரீமேக் செய்யப்பட்டது )
புது வசந்தம் .
அண்ணாமலை .
முதல் மரியாதை ( ராதா வீடு )
சிந்து பைரவி (சுஹாசினி வீடு)
பூவெல்லாம் உன் வாசம்
சுகமான சுமைகள்
குகைகளில் வாழ்ந்து வந்த மலைக்கள்ளன்,
வரவேற்கிறோம் அண்ணா!
தொடர்ந்து எழுதுங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு.
நன்றின்னா.
நன்றி கோவி கண்ணன் - குறும்பு கண்ணன்?
நன்றி சென்ஷி
நன்றி சுரேஷ்
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி கிருஷ்குமார்
நன்றி அக்பர்
அரங்கேற்ற வேளை... வீட்டை சுற்றி தான் கதை நடக்கும்னு
நினைக்கிறேன்....
"மீண்டும், வருவேன்"... என எழுத வந்த "எங்கள் தங்கம்", "தம்பி", "தம்பி தங்க கம்பி", "கின்னார தும்பி" (இதையும் பட லிஸ்ட்லே சேர்த்து கொள்ளலாம் தானே... ஆஆவ்வ்வ் .... அட விடுங்கப்பா ஒரு ப்ளோ..லே வந்திருச்சி... ) முரளி கண்ணன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
நல்ல அலசல் நண்பரே.
நீ....ண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் இடுகை. ஏன் இவ்வள்வு பெரிய இடைவெளி? அடிக்கடி எழுதுங்கள். வருக ! வருக!
ஸ்ரீ....
நன்றி ஜெட்லி. இல்லம் தான் வீட்டைச் சுற்றி நடக்கும் கதை. அரங்கேற்ற வேளை ஒரு வீட்டில் இருக்கும் நாடக கம்பெனி, போன் அதன் மூலம் வரும் பிரச்சினைகள் எனச் செல்லும் ஒரு படம். இருந்தாலும் வீடு முக்கியப் பங்கு வகித்த படம்
நன்றி நையாண்டி நைனா. ட்ரேட் மார்க் நச் பின்னூட்டத்திற்க்கு
நன்றி செ சரவணகுமார்
நன்றி ஸ்ரீ
\\நையாண்டி நைனா said...
"மீண்டும், வருவேன்"... என எழுத வந்த "எங்கள் தங்கம்", "தம்பி", "தம்பி தங்க கம்பி", "கின்னார தும்பி" (இதையும் பட லிஸ்ட்லே சேர்த்து கொள்ளலாம் தானே... ஆஆவ்வ்வ் .... அட விடுங்கப்பா ஒரு ப்ளோ..லே வந்திருச்சி... ) முரளி கண்ணன் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.\\
கின்னார தும்பி..!? யூ மீன் தட் மூவீ..!
ஸேம் பிளட் நைனா.
:-)
வெல்கம் பேக் முரளி
தம்பிகளா இன்னும் கின்னார தும்பிகளை மறக்கலியா?
நன்றி டி வி ஆர் சார். புது அவதாரத்துக்கு வாழத்துக்கள்.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தலைவரே உங்கள் இடுகையை ரொம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு பார்க்கையில :)
வந்துட்டீங்களா....,
அதான கேட்டேன், பதிவுலகுல ஒருதரம் நுழைஞ்சா அப்புறம் வெளில போகவே மனசு வராது தலைவரே.
எப்படி இருக்கீங்க????
வெல்கம் பேக்.
வாங்க வாங்க
முரளி...எவ்வளவு நாளாச்சு...அப்பப்போ உங்க வீட்டுக்கு வந்து பார்ப்பேன். ஏதாவது பதிவு போட்டிருக்கிறீர்களா என்று.
இப்போது தமிழ் சினிமா வீடுகளை மையமாக வைத்தே ஒரு பதிவு. தலை பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள், இது நம்ம ஆளு, இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு, ருத்ரா வீடுகளை விட்டு விட்டீர்களே. யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா பாக்கியராஜ் படத்திலும் அவருடைய வீடு ஒரு கதாபாத்திரமாகக் காட்டப்பட்டிருக்கும்.
நல்வரவு மீண்டும்.
பட்ஜெட் பத்மநாபன் படத்தில் நகைச்சுவையையும் மீறி பிரபு வீட்டை மீட்க படும் பாடு உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கும்.
வருக வருக .... உங்கள் மீள் வரவு நல் வரவாகுக
வாங்க அண்ணா .. ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க. பதிவு நல்லா இருக்கு .
"Mouna ragam" veettai PC Sreeram oru
'character' aave amaithiruppaar !
"வருகைக்கு நன்றி" (முதல் முறையாக இந்த வார்த்தைகள் பின்னூட்டமாக) ... பட்டைய கெளப்புங்கள்...:-)
வெல்கம் பேக் முரளி
வாய்யா..வாய்யா..வாயயா..
வாங்க தல..வாங்க..
//நாள் கழிச்சு பார்க்கையில /
அப்துல்லா அண்ணே..அப்போ படிக்கலையா??????
வருக வருக
"தமிழ் பட்ம்" வீட்ட்டை விட்டுட்டீங்களே !!!
வெல்கம் பேக் முரளி... ரிசர்ச் எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சா?
WELCOMEBACK THALA
வருக :)
வாங்க முரளி.. வெல்கம் பேக்..
இது என்ன திரும்ப வரும் சீசனா? வெட்டிப்பயல், நீங்க, ரெண்டு பேருமே இந்த ஒரு வாரத்துல திரும்பி வந்திருக்கீங்க.. சந்தோசமா இருக்கு..
அண்ணாச்சி...வந்தாச்சி ;)) குட் ;)
வாங்க முரளி,
தொடர்ந்து எழுதுங்கள்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியான நன்றி.
Post a Comment