July 19, 2011

நெற்றிக்கண் பத்திரிக்கைக்கு கண்டனங்கள்

நெற்றிக்கண் பத்திரிக்கையில் கடந்த சில வாரங்களாக ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. கிசு கிசு பாணியிலோ அல்லது பதலக்கூர் ஸ்ரீனிவாசலு பாணியிலோ இல்லாமல் நேரடியாக இடம் சுட்டிப் பொருள் விளக்கத்துடன் ரஜினி அவர்களது குடும்ப விஷயங்களை எழுதிக் கொண்டிருகிறார்கள்.

ரஜினி லதாவை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம்?, ரஜினியின் குடும்பத்துக்கு லதா இழைத்த அநீதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் ரஜினி ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு லதா ஒத்துக் கொள்ளாமல் அவர் வீரியத்தைக் குறைக்க தினமும் உணவில் வேப்பம்பூ ரசம் வைத்துக் கொடுத்தார் என்று அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை குறிவைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினியின் சினிமா, அவர் அரசியல் ஆகியவற்றை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அவற்றை அவர் பொது வெளியில் வைக்கிறார். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பந்தி வைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

நெற்றிக்கண்ணுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்

3 comments:

shortfilmindia.com said...

அந்த புக்கு இன்னுமா வருது..?

முரளிகண்ணன் said...

ஆமா கேபிள்.

அறிவிலி said...

இவுனுங்களயெல்லாம் இக்னோர் பண்றதுதான் பெட்டர்.உங்க ப்ளாக் படிச்சுட்டு இன்னும் ரெண்டு பேரு புக்க வாங்கிற போறானுங்களேன்னுதான் என் கவலை.