March 09, 2012

ஐ ஐ டி கள் வழங்கும் இதர வித்தியாசமான படிப்புகள்

கடந்த இரண்டு வருடங்களாக, எங்கள் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது.

சில சந்திப்புகளுக்கு பின்னர், அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள் படிப்பு போன்ற விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

பன்னாட்டு மென் பொருள் நிறுவனம் ஒன்றின் உதவி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், தன் மகன் புனே தேசிய சட்டக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினார். அதன்பின் அவரை பேடன்ட் லா படிக்க அமெரிக்கா அனுப்பப் போவதாகக் கூறினார்.

இதே போல் பல உயரதிகாரிகளின் பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பிற துறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் துறைகளில் உச்சத்தை அடைகிறார்கள்.

அம்மாதிரியான வித்தியாசப் படிப்புகளில் சில ஐ ஐ டிக்களிலும் வழங்கப்படுகின்றன.



பொதுவாக ஐ ஐ டி கள், பொறியியலில் பி.டெக், எம்.டெக் எம் எஸ் மற்றும் பிஎச்.டி, இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் எம்.எஸ்.ஸி மற்றும் பிஎச்.டி ஆகிய படிப்புகளை வழங்கி வருகின்றன. இதுபோக எம்.பி ஏ படிப்பையும் வழங்கி வருகின்றன.

இவற்றில் பொறியியலில்

பி டெக் – JEE (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட்]
எம் டெக் – GATE [கிராஜிவேட் ஆப்டிடூட் டெஸ்ட் இன் இஞ்சி னியரிங்]
எம் எஸ் – GATE + நேர்முகத் தேர்வு
பிஎச்.டி – M.E (OR) M.Tech + அந்தந்த துறைகள் முடிவு செய்யும் அட்மிசன் டெஸ்ட்

மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்திற்கு

எம்.எஸ்.ஸி – JAM [ ஜாயிண்ட் அட்மிசன் டெஸ்ட் பார் எம் எஸ் ஸி]
பிஎச்.டி –M.Tech (or) M.Sc with GATE/CSIR/NET வகையறா + அந்தந்த துறைகள் முடிவு செய்யும் அட்மிசன் டெஸ்ட்

எம் பி ஏ வுக்கு

முன்னர் JMET – (ஜாயிண்ட் மேனெஜ்மெண்ட் எண்டரன்ஸ் டெஸ்ட்] மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். தற்போது CAT (COMMON ADMISSION TEST) டெஸ்ட் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

ஆனால் இது போக ஒவ்வொரு ஐ ஐ டி யிலும் உள்ள ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சைன்ஸ் டிபார்ட்மெண்ட்கள் வித்தியாசமான படிப்புகளை வழங்கி வருகின்றன.

அவற்றைப் பற்றிய ஒரு பார்வை.

சென்னை ஐ ஐ டி

இங்கு எம் ஏ ஆங்கிலம் மற்றும் எம் ஏ டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவை 5 ஆண்டு கால படிப்புகள். +2 முடித்தவுடன் சேர வேண்டியவை. இதற்கான அட்மிசன், இத்துறை மூலம் நடத்தப் படும் நுழைவுத்தேர்வின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது. மொத்தம் 45 சீட்கள் உள்ளன.

இந்த தேர்வு மே மாதத்தில் நடத்தப் படும். செம டப்பாக இருக்கும் இந்தத் தேர்வு.

அனுகூலங்கள்

இந்திய ஆட்சிப் பணி போன்ற போட்டித் தேர்வுகளை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

இந்திய பல்கலை மானியக்குழுவால் நடத்தப் படும் தேசிய தகுதி தேர்வு (NET) போன்றவற்றில் எளிதில் வெற்றி பெறலாம்.

சட்ட மேற்படிப்புகள், வெளிநாட்டு பல்கலை மேற்படிப்புகளுக்கு அட்மிசன் கிடைக்க உதவும்.


ஐ ஐ டி கோரக்பூர்


இங்கு உள்ள ”ராஜீவ் காந்தி ஸ்கூல் ஆப் இண்டெலெக்சுவல் பிராப்பர்டி லா” சட்டத்துறையில் எல் எல் பி படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பை முடித்தால் பேடண்ட் சம்பந்தமான வழக்குகளை கையாளலாம். பன்னாட்டு கம்பெனிகளில் லீகல் அட்வைசராக பணிபுரியலாம்.

கல்வித் தகுதி

பொறியியல், மருத்துவத்தில் இளநிலை பட்டம் (முதல் வகுப்பு அவசியம்)
(அல்லது)
அறிவியல் அல்லது மருந்தாளுமையில் முதுகலை பட்டம் (முதல் வகுப்புடன்)
(அல்லது)
முதல் வகுப்பு எம் பி ஏ மேற்கூறியவற்றுடன் இணைந்திருக்கலாம்.

மேலும் இங்கு உள்ள ஸ்கூல் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது. இது, மருத்துவர்களுக்கு பொறியியல் திறமையை ஊட்டுகிறது. இதன் மூலம் அவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவெடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக
ரீகாம்பினண்ட் டி என் ஏ, பயோ மெடிக்கல் போன்ற ஆராய்ச்சிகள்.

கான்பூர் ஐ ஐ டி

பொருளாதாரத்தில் எம் எஸ் ஸி ஐந்தாண்டு (ஒருங்கிணைந்த) படிப்பை வழங்குகிறது கான்பூர் ஐ ஐ டி.

ரிசர்வேசன் உட்பட வருடத்திற்கு 25 சீட்கள்.

தகுதித் தேர்வு

ஐ ஐ டி களில் பி டெக் சேர்க்க நடத்தப்படும் ஜே ஈ ஈ தேர்வின் அடிப்படையிலே அட்மிஷன் நடைபெறுகிறது. இந்தப் படிப்பு படிக்க தேர்ட் குரூப் என நம்மவர்களால் அழைக்கப்படும் காமர்ஸ் குரூப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த குரூப்பும் படித்திருக்கலாம். ஆனால் ஜே ஈ ஈ யில் ரேங்க வாங்க வேண்டும். எனவே கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் +2வில் படித்திருக்க வேண்டும்.

ஐ ஐ டி மும்பை

பிளானிங் அண்ட் டெவலெப்மெண்டில் எம் பில் ( 4 செமெஸ்டர்) படிப்பை வழங்குகிறது.

தேர்வு முறை

பிரத்யேக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கல்விதகுதி

எம் எஸ் ஸி அல்லது பி டெக்கில் 60% (சோசியல் சயின்ஸ் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்)

எம் ஏ கலை அல்லது பொருளாதாரத்தில் 55%

MET/GATE/UGC JRF/UGC lectureship போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள்.

இதுபோக அரசுப்பணியில் உள்ளவர்கள், நிறுவனங்களில் வேலை பார்ப்போரும் தங்களை என்ஹான்ஸ் செய்து கொள்ள இதைப் படிக்கலாம்.

ஐ ஐ டி கௌகாத்தி

இங்கும் எம் ஏ டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் வழங்கப்படுகிறது. மொத்தம் 48 சீட்கள். (ஓ பி சி 27%, எஸ் சி 15%, எஸ் டி 7.5% இட ஒதுக்கீடு)

பிப்ரவரியில் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, தேர்வு ஐ ஐ டி கௌகாத்தி வளாகத்தில் ஜூன் மாதம் நடைபெறும்.

தற்போதைய பொது அறிவு, தற்போதைய பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் லாஜிகல் ரீசனிங்கில் கேள்விகள் இருக்கும்.

பிரத்யேக படிப்புகளுக்கு பெரும்பாலும் அந்தந்த வளாகத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்.

14 comments:

கோபிநாத் said...

பயனுள்ள பதிவுண்ணே ;-)

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

Indian said...

Sooper!

முரளிகண்ணன் said...

நன்றி இந்தியன்

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

heartfelt thanks for useful information

எல் கே said...

very useful. thanks

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அப்து அண்ணே

எல் கே வருகைக்கு நன்றி

SPIDEY said...

sir from 2011 iit's had dropped jmet. now they are accepting only CAT score for MBA admissions

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்பைடி. மாற்றி விடுகிறேன்.

இப்போதுதான் அந்த வலைத்தளங்களை எல்லாம் மீண்டும் பார்த்தேன்.

Venkatesh Kumaravel said...

ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியில் கட்டிடக்கலை சம்மந்தமான படிப்பியல்களும் உண்டு. B.Arch (இளநிலை கட்டிடக்கலை) M.Arch (மேல்நிலை கட்டிடக்கலை)இரண்டும் உண்டு. தவிர Planning இருக்கிறது என்று நினைக்கிறேன். ரூர்க்கியில் உண்டு, கரக்பூரில் உண்டா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை. B.Archக்கிற்கான நுழைவுத்தேர்வு வழமையான JEE பரீட்சை தான். மேல்நிலையான M.Archக்கிற்கென்று பிரத்தியேக GATE - ஆர்க்கிடெக்சர் பரீட்சை உண்டு. இதையே தேசிய தொழிநுட்ப பயிலகங்களான NIT/ RECக்களிலும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.

NITக்களில் திருச்சி, கோழிக்கோடு, ஜெய்ப்பூர், போபால், பட்னா, உட்பட 8 பயிலகங்களில் கட்டிடக்கலை குறிப்பான படிப்புகள் உண்டு.

kandaswamy said...

for a person who has completed m.tech to do phd,one must clear gate and the admission test or simply admission test is enough?

முரளிகண்ணன் said...

நன்றி வெங்கிராஜா. பி ஆர்க் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நன்றி.

அன்பு கந்தசாமி,

பி எச் டி செய்வதற்கு கேட் தேர்வு என்பது அவசியமில்லை.

எம் ஈ அல்லது எம் டெக் போதுமானது. அதனுடன், அந்தந்த துறைகள் வைக்கும் அட்மிஷன் டெஸ்ட் போதுமானது. இது ஒவ்வொரு ஐஐடிக்கும் மாறுபடும்.

அட்மிசன் டெஸ்ட் முடிந்தவுடன் அதில் தேர்வு பெறுபவர்கள் நேர்கானலுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் பெரும்பாலும் டெக்னிகல் புரொபியன்ஸி தான் பார்க்கப்படும். நேர்காணல் மதிப்பெண் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஒருவேளை விண்ணப்பங்கள் குறைவாக வந்திருந்தால் அட்மிசன் டெஸ்ட் கேன்சல் செய்யப்பட்டு நேர்காணல் மட்டும் நடக்கும்.

ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், பி ஈ, எம் ஈ மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள்.

உதாரணத்திற்கு

சென்ற செமஸ்டர் கம்ப்யூட்டர் சைன்ஸ் பி எச் டி க்கு 80% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே அழைக்கப்பட்டார்கள்

அதனால் கேட் மதிப்பெண்ணை ஒரு காரணியாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் சில பேராசிரியர்கள், தங்களுக்கான மாணவர்களைத் தேர்வு செய்யும் போது கேட் தகுதி இருந்தால் முன்னுரிமை கொடுப்பார்கள்

CS. Mohan Kumar said...

Very very useful post. Thanks for sharing.