October 30, 2012

ஏதாச்சும் வழி இருக்கா?


நான் பார்க்கும் பத்தாவது ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் இவர். பல சோதனைகளுக்குப் பின்னர் உதட்டைப் பிதுக்கினார். எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. எதுக்கும் அடுத்த வாரம் வாங்க. நான் கொஞ்சம் ஸ்டடி பண்ணி சொல்லுறேன் என்றார். கவலையுடன் வெளியே வந்த போது, சுவற்றில் மாட்டியிருந்த காலண்டர் கவலையை கூட்டியது.

காரணம் கேட்டால் உங்களுக்கு சிரிப்பாகக்கூட இருக்கும். ஆனால் இது பல நூறு ஆண்டுகால சத்த சரித்திரம். ஆம் சத்த சரித்திரம்தான். யாரிடம் இருந்து ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் பரம்பரையில் ஆண்கள் எல்லோருக்கும் இரவில் வரும் குறட்டை ஒரு போயிங் விமானம் பறக்கும் போது வரும் சத்தததைவிட அதிகமாகவே இருக்கும்.

நல்ல வேளையாக அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒரே தெருவில் வசித்து வந்ததால் நியூசென்ஸ் கேஸில் இருந்து எங்கள் மக்கள் தப்பித்திருந்தார்கள். அந்தத் தெருவில் சிறுபான்மையாக இருந்த சிலரும் குறட்டைக்கு பயந்து தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு வேறுபக்கம் ஓடியிருந்தார்கள். வாடகைக்கு வந்தவர்களும் ஒரே வாரத்தில் தெறித்து ஓட, அனைத்து வீடுகளும் சகாய விலையில் எங்கள் வசமாயிற்று.

ஒவ்வொருவரின் குறட்டையும் ஒரு ராகத்தில் அமைந்திருப்பது எங்களின் ஸ்பெசாலிட்டி. என் பெரியப்பா முதலில் கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து உச்ச ஸ்தாயிக்குப் போவார். பின்னர் அங்கே சில வினாடிகள் சஞ்சாரித்து விட்டு அப்படியே இறங்குவார். அவரின் தம்பி இரண்டு வீடு தள்ளி இருப்பவர், அண்ணன் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பார். மல்லாடி பிரதர்ஸ் போல இவர்கள் கச்சேரி இருக்கும். இன்னொரு சித்தப்பா தந்தி அனுப்புவது போல் குறட்டை விடுவார்.  கிர்ர்ர்ர்       கிர்ர்ர்ர்    கிர்ர்ர்ர் என சத்தத்துக்கு இடையே சீரான இடைவெளி இருக்கும். என் பாட்டிக்கு 98 வயது. கண்ணே தெரியாது. ஆனால் குறட்டையே வைத்தே இன்னின்னார் இங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடித்து விடுவார்.

எங்கள் வீட்டுக் குழந்தைகளும் கருவில் இருந்தே இந்த சத்தத்தை கேட்டு வளருவதால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. சிலர் ஹாஸ்டலில் தங்கப்போய், வார்டனே காலில் விழுந்து வீட்டுக்கு அனுப்பி வைத்த கதையெல்லாம் இங்கே உண்டு.

ஒருமுறை எல்லோரும் திருப்பதிக்கு ரிசர்வ் செய்து டிரெயினில் போனபோது, சீட் நம்பர் எல்லாம் மாறி வந்திருக்கிறது. கம்பார்ட்மெண்டில் இருந்தவர்களிடம் பெண்கள், குழந்தைகள் எல்லாம் இருக்காங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பெர்த் மாத்திக் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களோ நோ நோ என மறுத்திருக்கிறார்கள். இரவானதும் பங்காளிகள் அனைவரும் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பிக்க சக பயணிகள் அலறிப்புடைத்து அபாயச் சங்கிலியை இழுத்து அடுத்த கம்பார்ட்மெண்டுக்கே ஓடிய கதையெல்லாம் உண்டு.

பெண்கள் குறிப்பிட்ட வயதானதும் பூப்படைவது மாதிரி எங்கள் பங்காளி ஆண் பிள்ளைகளும் 17 அல்லது 18 வயதில் குறட்டை விடத் துவங்குவார்கள். குறட்டை விடத்துவங்கியதும்தான் அவனை ஒரு தலைக்கட்டாக ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் இருந்தது.

எங்களின் பராக்கிரமம் அறிந்தவர்கள் யாரும் பெண் தர மாட்டார்கள் என்பதால், பெரும்பாலும் அத்தை மகள், அக்கா மகளையே கட்டும் பழக்கம் எங்கள் வம்சத்தில் இருந்தது. அந்த பெண்களும் இந்த குறட்டை சத்தத்துக்கு சிறுவயதிலேயே பழகியவர்கள் என்பது மட்டுமல்லாமல் மரபணு ரீதியாகவே அவர்கள் குறட்டையை சகித்துக் கொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்கள்.

நான் படிப்பை முடித்து, சென்னையில் வேலை கிடைத்ததும் என் சுற்றத்தார் மகிழ்வை விட கவலையே அடைந்தார்கள். எப்படி அங்க சமாளிப்ப? என்று கேட்டார்கள்.

அவர்கள் கேட்டதின் நியாயம் ஒரு வாரத்தில் தெரிந்தது. தங்கியிருந்த மேன்ஷனில் நான் காட்சிப் பொருளானேன். இரண்டே வாரத்தில் லேண்ட் மார்க் ஆனேன். பயங்கரமா குறட்டை சத்தம் கேட்கும், அந்த ரூமில இருந்து மூணாவது ரூம் என அட்ரஸ் சொல்லலானார்கள்.

அடுத்த வாரத்திலேயே மேனேஜர் வந்து, இங்கே தங்கியிருக்கும் எல்லோரும் காலி பண்ணி போயிருவாங்க போலிருக்கு. தயவு செய்து காலி பண்ணிடுங்க இந்தாங்க அட்வான்ஸ் என குமுறிவிட்டுப் போனார்.

பின் வேறு ரூம் தேடும் போதுதான் அந்த ஏரியாவில் நான் பிரபலமாகியிருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக யாரும்  குடி வராத, வாஸ்து சரியில்லாத ஒரு வீட்டு மாடி கிடைத்தது. நானும் கதவு, ஜன்னல் எல்லாம் இறுக சாத்தி, தெர்மோகோல் வைத்து சவுண்ட் புரூப் சிஸ்டம் பண்ணியும் பாச்சா பலிக்கவில்லை. வீட்டு ஓனர் காலிலேயே வந்து விழுந்துவிட்டார்.

சென்னையின் புற, புற நகரில் அக்கம் பக்கம் இன்னும் வீடே இல்லாத  ஒரு வீடு கிடைத்தது. தற்போதுவரை அங்குதான் ஜாகை.

இதற்கிடையில் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு ஒரு காதலும் வந்தது. அது எப்படி வந்தது எப்படி சக்சஸ் ஆனது எல்லாம் கதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் அந்தக் காதல் இப்போது ஊசலாடிக்கொண்டிருப்பதற்கு என் ஜீனே காரணம்.

ஆம். ஒருநாள் அலுவலக மக்களுடன் அவுட்டிங் சென்று மாலை திரும்பிக்கொண்டு இருந்தபோது அலுப்பில் வேனில் தூங்கி விட்டேன். வேனே நிலை குலைந்து போனது. காதல் அதைவிட.

பல சுற்று கெஞ்சல்களுக்குப் பின் அவள் சொன்னது இதுதான். எனக்கு முன்னால் ஒருநாள் குறட்டை விடாமல் தூங்கிக்காட்டு. பின் திருமணம் என்று. காளையை அடக்கி திருமணம், இளவட்டக்கல்லை தூக்கி திருமணம், ரேக்ளா ரேஸ் வெற்றி என்று வந்த தமிழர் பரம்பரையில் இப்படி ஒரு சவாலா என நொந்து கொண்டேன்.

ஆறு மணிக்குள் இரவு உணவை முடித்தால் குறட்டை வராது, சிக்ஸ் பேக் இருந்தால் குறட்டை வராது என பல அட்வைஸ்கள். எல்லாம் முயற்சித்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் பல்வேறு சோதனைகள், ஸ்கேன்கள் எடுத்தும் ஒன்றும் வழி பிறக்கவில்லை.

இன்னும் ஒரு மாதம் டயம். குறட்டையை நிப்பாட்டலைன்னா எங்க வீட்ல பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி விடுவேன் என காதலி சொல்லிவிட்டாள்.

இன்று பார்த்த ஈ என் டி யும்  ஜகா வாங்கி விட, இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதை காலண்டர் சுட்டிக்காட்டியது.

எப்படியும் இது நடக்கப்போவதில்லை. சிறிது காலம் கழிந்ததும் எதோ ஒரு அத்தை மகளையோ இல்லை அக்கா மகளையோ. திருமணம் முடித்து வழக்கப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனையும் கஷ்டப்படுத்த வேண்டுமா? என யோசிக்கிறேன். இல்லை பிரம்மாச்சரியாகவே காலத்தை கழித்து விடலாமா? என்றும் யோசனையாய் இருக்கிறது.

ஏம் பாஸ் உங்களுக்கு யாராவது நல்ல ஈ என் டி ஸ்பெசலிஸ்ட் தெரியுமா?

41 comments:

வெண்பூ said...

க‌ல‌க்க‌ல் முர‌ளிக‌ண்ண‌ன்.. சிரிப்பை அட‌க்க‌ முடியாம‌ வாய்விட்டு சிரிச்சிட்டு இருக்கேன். அட்ட‌காச‌ம்..

முரளிகண்ணன் said...

நன்றி வெண்பூ

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர் :)

சிரித்தாலும், கவலையளிக்கக்கூடிய விவகாரம்தாண்ணே இது :)))

Nataraj (ரசனைக்காரன்) said...

நல்ல காமெடிக்கான களம், வெல் executed too..:)

நாய் நக்ஸ் said...

:))))))))))))))

ILA(@)இளா said...

அதகளமான பதிவு!

Santhosh Kumar said...

super scientist...

முரளிகண்ணன் said...

நன்றி ஷங்கர்

நன்றி நட்ராஜ்

நன்றி நக்கீரன்

நன்றி இளா

King Viswa said...

சார், தயவு செஞ்சு அடுத்த தடவ புனைவு என்பதை ஆரம்பத்திலேயே பதியுங்கள்.

ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டே படித்தேன்.

ஆனாலும் அருமை.

முரளிகண்ணன் said...

நன்றி சந்தோஷ்

வி.பாலகுமார் said...

சூப்பர் அண்ணே!

அப்புறம் நல்ல இ.என்.டி. ஸ்பெசலிஸ்ட் கிடைச்சா நமக்கும் சொல்லுங்க. :)

காவேரிகணேஷ் said...

யோவ், இப்படி எழுத்துல குறட்டை அதி சத்தம் விடுற...கலக்கல்......

விகடனுக்கு அனுப்புங்க...

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

நன்றி காவேரி கணேஷ்

முரளிகண்ணன் said...

நன்றி கிங் விஸ்வா.

karki bava said...

என்னை எரிச்சல் படுத்திய பதிவென்பதால் வழக்கு தொடரலாமென்றிருக்கிறேன்

இப்படிக்கு,
குறட்ட கார்க்கி

புதுகை.அப்துல்லா said...

ஒரு பெரிய மனுசன் பண்ற வேலையா இது? என் சொந்த வாழ்க்கையை இப்படியா பப்ளிக்கா சொல்லி அசிங்கப்படுத்துறது? :))))))

முரளிகண்ணன் said...

கார்க்கி & அண்ணே :-))))

வெண்பூ said...

இந்த‌ ப‌திவு முக‌ம் பாக்குற‌ க‌ண்ணாடி மாதிரி போல‌.. பாக்குற‌வ‌னுக்கெல்லாம‌ அவ‌ன‌வ‌ன் மூஞ்சியே தெரியுது.. கொய்யால‌ :))))))

☼ வெயிலான் said...

பதிவு அருமை.

உண்மையாகவே கேட்கிறீர்களென்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கு சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின் குணமடைந்த என் நண்பர் ஒருவர் கூறிய தகவல்.

☼ வெயிலான் said...

பதிவு அருமை.

உண்மையாகவே கேட்கிறீர்களென்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கு சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின் குணமடைந்த என் நண்பர் ஒருவர் கூறிய தகவல்.

☼ வெயிலான் said...

பதிவு அருமை.

உண்மையாகவே கேட்கிறீர்களென்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கு சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின் குணமடைந்த என் நண்பர் ஒருவர் கூறிய தகவல்.

☼ வெயிலான் said...

பதிவு அருமை.

உண்மையாகவே கேட்கிறீர்களென்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கு சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின் குணமடைந்த என் நண்பர் ஒருவர் கூறிய தகவல்.

புதுகை.அப்துல்லா said...

@வெயில்லான் - இதை ஏய்யா குறட்டை மாதிரி தொடர்ந்து சொல்லுற?

சுசி said...

சிரிச்ச சிரிப்பில தூக்கம் கலைஞ்சு போச்சு :)

செம்ம்ம!!

முரளிகண்ணன் said...

நன்றி வெயிலான்

நன்றி சுசி

செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம் said...

அருமை...

தருமி said...

பதிவும் நல்லா இருந்தது. அதோடு ...

//புதுகை.அப்துல்லா said...

@வெயில்லான் - இதை ஏய்யா குறட்டை மாதிரி தொடர்ந்து சொல்லுற?
//

இதுவும்!

முரளிகண்ணன் said...

நன்றி செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம்

நன்றி தருமி ஐயா

பரிசல்காரன் said...

செம போஸ்ட்! நீண்ட நாளைக்குப் பிறகு சிரியோ சிரின்னு சிரிச்சேன்!

முரளிகண்ணன் said...

நன்றி பரிசல்

Prathi surendran said...

Ada kadavule- kavalaye padadenga- nan ungala katikaren :) hahaha..sema post ya..thanga mudiyala

பினாத்தல் சுரேஷ் said...

இந்த வியாதி தூங்கும்போது மட்டும் வருகிறதா? விழித்திருக்கும்போதும் தொடர்கிறதா? டாக்டர் பத்ரனின் கருத்துகளை இங்கே பார்க்கலாம்:

http://penathal.blogspot.com/2005/11/21-nov-05.html

ரசித்து சிரித்தேன் முரளிகண்ணன்.

முரளிகண்ணன் said...

நன்றி பிரதி சுரேந்திரன்

நன்றி பினாத்தலார்

முரளிகண்ணன் said...

பினாத்தலார்

அந்தப் பதிவை மறக்க முடியுமா? க்ளாஸிக் ஆச்சே.

அவள் விகடனும் கூட அப்போது இதை பிரசுரம் செய்திருந்தார்களே?

அறிவிலி said...

"மரபணு ரீதியாகவே அவர்கள் குறட்டையை சகித்துக் கொள்ளும் திறன் பெற்றிருந்தார்கள். "

அட்டகாசம். :-)

முரளிகண்ணன் said...

நன்றி அறிவிலி

வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் said...

Please visit Mr. Scientist

http://www.kkrenthospital.org/surgery_snoring.htm

முரளிகண்ணன் said...

நன்றி வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்

Ragavachari B said...

சார், ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் பின்ன சத்தம் போட்டு சிரிக்க முடியலையே, ஆபீஸ்ல இருக்குறேனே .... அவ்வளவு சூப்பர் ... சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல ஜெயம் ரவி ஒரு சீன்ல சொல்வரே அப்படி சிரிச்சேன் ... கிரேட்.

Ragavachari B said...

சார், ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் பின்ன சத்தம் போட்டு சிரிக்க முடியலையே, ஆபீஸ்ல இருக்குறேனே .... அவ்வளவு சூப்பர் ... சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல ஜெயம் ரவி ஒரு சீன்ல சொல்வரே அப்படி சிரிச்சேன் ... கிரேட்.

Ragavachari B said...

சார், ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் பின்ன சத்தம் போட்டு சிரிக்க முடியலையே, ஆபீஸ்ல இருக்குறேனே .... அவ்வளவு சூப்பர் ... சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல ஜெயம் ரவி ஒரு சீன்ல சொல்வரே அப்படி சிரிச்சேன் ... கிரேட்.