November 05, 2012

பிரதாப் போத்தன்


சின்ன வயதில் தெரியவில்லை. இப்போது பிரதாப் போத்தனை நினைத்தால் சற்று பொறாமையாய்த்தான் இருக்கிறது.

சிவாஜி கணேசன், திலகன், கமல்ஹாசன், மோகன்லால்,சத்யராஜ்,கார்த்திக்,பிரகாஷ்ராஜ்  மற்றும் ரகுவரன் போன்ற அற்புதமான நடிகர்களை இயக்கியிருக்கிறார்.  

ஆரம்ப காலத்தில் இருந்தே விளம்பர உலகில் இருந்து, டெண்டுல்கர், லாரா போன்ற லெஜண்டுகளை இயக்கியவர்.

கவுண்டமணி, ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் போன்ற காமெடியர்களை இயக்கியவர்.

மகேந்திரன்,பாலு மகேந்திரா, பரதன், மணிரத்னம், செல்வராகவன்,பிளஸ்ஸி போன்ற திரை மொழி தெரிந்தவர்களிடமும், பாலசந்தர், விசு போன்ற நாடக மொழி தெரிந்தவர்களிடமும் மணிவண்ணன், கே எஸ் அதியமான், ராஜசேகர், சந்தான பாரதி, பி வாசு, விஷ்ணுவர்தன், சிங்கீதம் சீனிவாசராவ், பில்லா கிருஷ்ணமூர்த்தி போன்ற கமர்ஷியல் இயக்குநர்களிடமும் நடித்திருக்கிறார்.


கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்கள் திரைப்படமாகும் போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சில்க் ஸ்மிதா, அமலா போன்ற  பேரழகிகளையும் ரஞ்சிதா, குஷ்பூ, கௌதமி,கஸ்தூரி போன்ற அழகிகளையும் லட்சுமி, ராதிகா போன்ற பெர்பார்மன்ஸ் ஆர்டிஸ்டுகளையும் இயக்கியிருக்கிறார்.


கேரளாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரின் பிள்ளையாகப் பிறந்த பிரதாப் தமிழ்சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான எம் ஆர் ராதாவின் மருமகனும் ஆவார்.

பிரதாப் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான ஜெனரில் அமைந்தவை.

மீண்டும் ஒரு காதல் கதை மன நலம் குன்றிய இருவரின் காதல், அவர்களின் உறவு, கர்ப்பம், அதனால் உருவாகும் சிக்கல்கள்

ஜீவா ராணுவ சதி- அப்பாவியின் மீது பழி மீண்டு வருதல்
வெற்றி விழா காவல்துறையின் ரகசிய ஆப்பரேஷன் ஆப்பரேசன் மேற்கொண்டவருக்கு ஏற்படும் மறதி வெற்றி

மைடியர் மார்த்தாண்டன் அரச பரம்பரை வாரிசு சாமான்யமாக வாழ நினைத்தல் காதல்

மகுடம் கிராமிய கதை

ஆத்மா அமானுஷ்ய திரில்லர்

சீவலப்பேரி பாண்டி சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டவனின்  ஆட்டோபயோக்ராபி

லக்கி மேன் எமன் பிரம்மசுவடி பிழை -  காமெடி

தமிழில் இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை.

இவற்றில்
மீண்டும் ஒரு காதல் கதை தேசிய விருதுக்கு போட்டியிட்டது

ஜீவா திரைப்படம் அக்கால மட்டுமல்ல எக்கால இளைஞர்களாலும் மறக்கப்படாமல் இருக்கும். சில்க் ஒரு மாடலாகவும், சத்யராஜ் போட்டோ கிராபராகவும் இருப்பார்கள். போட்டோ எடுக்கும் ஒரு பாடல் காட்சியில் திரையரங்கமே ஜொள்ளால் ஈரமாயிருக்கும். அந்த ஆண்டு வெளியான எல்லா சினிமா பத்திரிக்கைகளின் தீபாவளி ஸ்பெசலையும், நடுப்பக்கத்தையும் ஜீவா சில்க்கே ஆக்ரமித்திருந்தார். ஸ்பெஷல் போனஸாக அமலாவின் நீச்சலுடை தரிசனம்.

போர்ன் சூப்பர்மஸி நாவலின் பாதிப்பில் இயக்குநர் ஷண்முகசுந்தரம் எழுதிய கதையை வெற்றிவிழாவாக எடுத்தார். அபூர்வ சகோதரர்களின் பெரு வெற்றிக்குப் பின் வந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம். இந்தப் படத்தில் போலிச்சாமியாரை (ஜனகராஜ்) ஒரு சூப்பர் பவராக காமித்திருப்பார். அது இப்போது வெகு உண்மையாக மாறிவிட்டது.

கோயிங் டு அமெரிக்கா பட்டி டிங்கரிங் பார்த்து பிரதாப் இயக்கிய மைடியர் மார்த்தாண்டன் ஒரு கலகல காமெடி காதல் பிலிம். குஷ்பூவை தமிழில் வெகு கிளாமராக காட்டியபடம். தத்துவம் எண் 10001, ஏழைகள் போன்ற இன்னும் மறக்க முடியாத காமெடிகள் கொண்ட படம்.

விகடனில் தொடராக வந்து, ராஜேஸ்வரின் திரைக்கதை வசனத்தில் பிரதாப் இயக்கிய சீவலப்பேரி பாண்டி நெப்போலியனுக்கு கதாநாயக அந்தஸ்து கொடுத்த படம்.  

பிரதாப் இயக்கத்தில் சோடை போன படம் என்றால் அது மகுடம் தான். ஆத்மா, லக்கிமேன் போன்றவை வெற்றி பெறவில்லையென்றாலும் பார்க்க போரடிக்காது.

மலையாளத்திலும் இவர் திலகனை வைத்து இயக்கிய ரிதுபேதம், லட்சுமியை வைத்து இயக்கிய டெய்ஸி, சிவாஜி, மோகன்லாலை வைத்து இயக்கிய யாத்ரா மொழி என எல்லாமே வித்தியாச களங்கள்தான்.

பெரும்பாலும் மற்ற இயக்குநர்களின் படங்களில் அப்பவித்தனமான குடும்பஸ்தன், மைல்ட் சைக்கோ போன்ற கேரக்டர்களில் நடித்தாலும் இயக்கத்தில் புத்திசாலி. மலையாளி என்பதால் நல்ல தமிழ் கதை வசனகர்த்தாக்களிடம் தேவையானதைப் பெற்று போரடிக்காத படங்கள் கொடுத்தவர். தன் பட நாயகிகளை அழகாகக் காண்பிக்கும் கலைக்கண்ணும் உண்டு.

1980ல் தொடங்கி தற்போது மலையாளத்தில் ஹிட்டான 22 பீமேல் கோட்டயம் வரை நல்ல படங்களில், நல்ல இயக்குநர்களிடம் நடித்துக் கொண்டிருக்கும் பிரதாப் மேல் ஏன் பொறாமை கொள்ளக்கூடாது?

15 comments:

தினேஷ் ராம் said...

ஆகா. பிரதாப் போத்தனைப் பார்த்து கண்டிப்பா பொறாமை தான் படணும் போல!!

- தினேஷ்

(கா.பா. கல்யாணத்தின் பொழுது உங்க ரூம் மேட்டாக இருந்தவன்)

முரளிகண்ணன் said...

திணேஷா

ஆமாப்பா.

settaikkaran said...

நல்ல அலசல்! பிரதாப் போத்தன் நடித்த ‘தகரா’ மலையாளப்படத்தையும் வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும். பரதனின் இயக்கம்! அருமையான படம்!

முரளிகண்ணன் said...

நன்றி சேட்டைக்காரன்

செல்வம் said...

ஒரு வாரிசு உருவாகிறது படத்தில் தன் மகனை வளர்க்க தந்தையாக‌ படும் பாடு...விசுவின் மகனாக படும் பாடு (பெண்மணி அவள் கண்மணி), குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்ளும் கணவன் பாத்திரம்...நாடக மொழியில் இருந்தாலும் மறக்க முடியாத படங்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி செல்வம்.

காவேரிகணேஷ் said...

மு.க,

பிரதாப் போத்தன் முகநூலில் என்னுடைய நண்பராக உள்ளார், உங்களின் பதிவை அவரிடம் பகிர்கிறேன். ரொம்பவே சந்தோசப்படுவார்.

முரளிகண்ணன் said...

நன்றி காவேரி கணேஷ்

Sethu said...

sir, super :) I think, I have seen Yathra Mozhi, where Sivaji speaks in Tamil :) :) Correct me if I'm worng.

Raju Viswanathan said...

My dear marthandan is a inspiration frm Going to America (Eddie Murphy)and not Come September.

திண்டுக்கல் தனபாலன் said...

பிரதாப் போத்தன் அவர்களின் பல படங்கள் மறக்க முடியாதவை...

அவரைப்பற்றிய நல்லதொரு அலசலுக்கு நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

பிரதாப் போத்தன் பற்றிய சிறப்பான அலசல்! மைடியர் மார்த்தாண்டன் காமெடி அருமையாக இருக்கும்! நல்ல பகிர்வு!

முரளிகண்ணன் said...

நன்றி சேது. சிவாஜி அவர்கள் அனந்த சுப்ரமணியம் என்னும் கேரக்டரில் தமிழிலும் பேசி நடித்திருப்பார்

நன்றி சரண்சக்தி

நன்றி ராஜு விஸ்வனாதன் சார். திருத்தி விடுகிறேன்

நன்றி திண்டுக்கல் தனபாலன்

நன்றி சுரேஷ்

Anonymous said...

Ranjithavai paerazhakiyil saerkatha ungaLai "pidathi" saarbaaka KaNdikkirom

முரளிகண்ணன் said...

விஜய் ஹா ஹா ஹா