எண்பதுகளில் எங்கள்
ஊருக்கு முதன்முறையாக வருபவர்கள் அசந்து போய்விடுவார்கள். ஏதோ, ஒரு ஐரோப்பிய கிராமத்திற்குள்
நுழைந்த பீல் அவர்களுக்கு கிடைக்கும். கொடைக்கானலின் அடிவாரத்தில் இருந்ததால் நிலவிய
இதமான வானிலை. மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கும் பிளம்ஸ், திராட்சை, கேரட், பீட்ரூட்,
காலிபிளவர், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள். டென்னிஸ் பேட்டுடன் நடமாடும் ஆடவர்கள்,
பக்காவான கிரிக்கெட் செட்டுடன் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஹாக்கி ஸ்டிக்,
பேஸ்கட் பால் மற்றும் பேஸ் பால் மட்டைகளுடன் பள்ளி செல்லும் மாணாக்கர்கள். இவற்றையெல்லாம்
விட ஊர் முழுவதும் தாராளமாகப் புழங்கும் ஆங்கில வார்த்தைகள்.
பிரிட்டிஷ் ஆட்சியின்
போது, கொடைக்கானலில் தங்கியிருந்த பிரிட்டிஷார் குளிர்காலங்களில் அவர்கள் டென்னிஸ் விளையாடுவதற்காக அடிவாரத்தில் இருந்த வத்தலக்குண்டில்
அருமையான கிளே கோர்ட்டுடன் டென்னிஸ் கிளப்பை ஆரம்பித்திருந்தனர். நூறாண்டு தாண்டி செயல்பட்டுக்
கொண்டிருக்கு அந்த கிளப் வாயிலாக டை-பிரேக்கர், மேட்ச் பாயிண்ட், செட், டபுள் பால்ட்
என பல வார்த்தைகள் வத்தலகுண்டு வக்காபுலரியில் இடம் பிடித்திருந்தன.
வத்தலக்குண்டு
அக்ரகாரம் மூன்று தெருக்களைக் கொண்டது. அங்கிருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் என்ற ஒன்று
ஐம்பது ஆண்டுகளாக லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அந்த அக்ரகாரம் வழி போனாலே
சில்லி மிடாஃப், லாங் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர் போன்ற வார்த்தைகள்தான் காதில் விழும்.
வீடுகளுக்குள் நுழைந்து பார்த்தால் சர்வ சாதாரணமாக பிரிட்ஜ் ஆடிக்கொண்டிருப்பார்கள்.
இன்னொரு பக்கம்
பலமுறை ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாங்கிய பேஸ்கட் பால் டீம். பக்காவான இரண்டு சிமிண்ட்
கோர்ட்டுகள். பேஸ்கட் பால் நெட் சாதாரணமாக ஒரு மாதம் உழைக்கும் என்றால், இங்கே ஒரு
வாரம் கூட தாங்காது. கண்ணே தெரியாத கும்மிருட்டாகும் வரை விளையாடிக் கொண்டேயிருப்பார்கள்.
அவர்கள் பல இடங்களுக்கு விளையாடச் சென்று ரொட்டேட், மேன் ஆன் யூ, பிளாக், அபென்ஸ் போன்ற
வார்த்தைகளை ஊர் முழுதும் புழக்கத்தில் விட்டிருந்தார்கள். பொங்கல் பண்டிகையின் போது,
அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்டப் போடிகள் நான்கு நாட்கள் நடக்கும். பல மாநில ஆட்டக்காரர்கள்
தங்கள் பங்கிற்கு பல ஆங்கில வார்த்தைகளை அங்கே விதைந்திருந்தார்கள்.
வத்தலக்குண்டின்
அரசு மேல்நிலை பள்ளியும் நூறாண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்க பர்மா தேக்கால் பிரிட்டிஷ்
பொறியாளர்களால் கட்டப்பட்ட அருமையான கட்டிடம். சுற்றிலும் மைதானங்கள் மைதான எல்லை முழுவதும்
மரங்கள். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருக்கும் மாணவர்கள், எப்போதடா ஐந்தாம் வகுப்பு
முடியும், ஆறாம் வகுப்பிற்கு அங்கே செல்லலாம் என காத்திருப்பார்கள். ஏராளமான ஹாக்கி
மட்டைகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் எல்லா விளையாட்டு உபகரணங்களும் குவிந்திருந்த
பள்ளி அது. எனவே விளையாட்டுத் தொடர்புகளால் ஆங்கிலம் வத்தலகுண்டில் சரளமாக புழங்கியது.
ஆனால் எல்லாம்
பேச்சில் மட்டும்தான். எழுத்து என்று வரும் போது குப்புற அடித்து விழுந்து விடுவார்கள்.
ஒரு எஸ்ஸேயை மனப்பாடம் செய்வதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிடும். என்னடா இது பிரசண்ட்
கண்டினியஸ் பெர்பெக்ட் டென்ஸ்ங்கிறான், வுட் ஹேவ் பீன் சிங்கிங்கிறான் என டரியலாகிவிடுவார்கள்.
பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வை முதல் அட்டெம்டில் பாஸ் பண்ணியவர்களை அங்கே விரல் விட்டு
எண்ணிவிடலாம். இந்த பள்ளியைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் மட்டும் இதைக் கேள்விப்பட்டு இருந்தால் அவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்காது. ஊரில் இருந்தததே இரண்டே இரண்டு மேல்நிலைப்பள்ளிகள்தான். ஆனால் பன்னிரெண்டு
டுட்டோரியல் கல்லூரிகள் இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பள்ளிகளை விட அமர்க்களமாக
ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு அங்கே கூட்டம் நிரம்பி வழியும்.
அதற்காக மக்கள்
அங்கே மக்கு என்று அர்த்தமில்லை. மற்றவற்றில் எல்லாம் புகுந்து விளையாடுவார்கள். வாடிவாசல்
எழுதிய சி சு செல்லப்பா, பி எஸ் ராஜம் அய்யர் போன்ற இலக்கியவாதிகள் பிறந்த ஊர் வத்தலக்குண்டு
தான். அந்நாளிலேயே பல சிறு பத்திரிக்கை குழுக்களும் இருந்தன. பின்னர் தமிழக முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் ஆக்டிவ்வாக இருந்தது. லியோனி, தன் முதல் பட்டிமன்றத்தை அரங்கேற்றியது
கூட வத்தலக்குண்டில்தான்.
வத்தலக்குண்டில்,
யாருக்கு பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு நடக்கும் நாள் முதலில் தெரியும் என்றால்,
அது மஞ்சளாற்றங்கரையில், குட்லக் விநாயகர் கோவில் வாசலில் பூஜை சாமான் கடை வைத்திருந்த
செல்வத்திற்குதான்.
80களில் தினத்தந்தியில்
பத்தாம் வகுப்பு கால அட்டவணையை தலைப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். செல்வம் அதில்
ஆங்கிலத் தேர்வு நாளை மட்டும் தனியாகக் குறித்து விடுவார். ஆமாம். அவர் ஆயிரத்துக்கும்
மேல் தேங்காய் ஆர்டர் செய்ய வேண்டுமே.
தேர்வுக்கு முதல்
நாளில் இருந்தே குட்லக் விநாயகர் கோவிலில் கூட்டம் நிரம்பி வழியும். சிதறுகாய் பொறுக்க
அக்கம் பக்க ஊர்களில் இருந்து கூட ஆட்கள் வருவார்கள். டுட்டோரியல் கல்லூரிகளில் சிறப்பு
பிரார்த்தனைகள் நடக்கும். தங்கள் டுட்டோரியல் மாணவர்கள் அனைவரும் பாஸாக வேண்டும். மற்ற
மாணவர்கள் எல்லாம் பெயிலாகி, நம்மிடம் வரவேண்டும் என்று கேரளா சென்று செய்வினை வைத்தவர்கள்
கூட உண்டு. மாரியம்மன் கோவிலில் தன் மகன் இங்கிலீஸில் பாஸாக வேண்டும் என அம்மாமார்கள்
போட்ட மாவிளக்கை அனுப்பி வைத்தால் சோமாலியா பஞ்சமே தீர்ந்து விடும்.
பள்ளியில் வேறு
மாதிரியான பிரச்சினை நடக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே டெஸ்க் அரேஞ்ச்மெண்ட்
செய்து நம்பர் போட ஆரம்பிப்பார்கள். எல்லா வகுப்பறையையும் நன்கு பூட்டி, அந்த வளாகத்தையே
கிட்டத்தட்ட சீல் செய்து விடுவார்கள். இல்லாவிட்டால் டெஸ்கில் பிட் பதுக்குவது போன்றவைகள்
நடந்துவிடும். காலை பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிக டீக்கடைகள் வேறு முளைக்கும். காவல் நிலையத்தில் இருந்து சில கான்ஸ்டபிள்களும் வருவார்கள். கத்தி, கபடா போன்ற ஆயுதங்களுடன் உள்ளே வந்து இன்விஜிலேட்டரை மிரட்டும் ஆட்களும் உண்டே.
வட்டார கல்வி அலுவலகத்தில் இன்னைக்கு மட்டும் பிளையிங் ஸ்குவாட் வத்தலகுண்டுக்கு கண்டிப்பாக
போகவேண்டும் என்று கட்டளை இட்டுவிடுவார்கள். வத்தலகுண்டுக்கு இங்கிலீஸ் இன்விஜிலேசனுக்கு
ஆட்கள் போடும் போது மிலிட்டரி செலக்சன் மாதிரி தான் செய்ய வேண்டியிருக்கும் என டீஇஒ
அலுத்துக் கொள்வார்.
டுட்டோரியல் கல்லூரிகள்,
சிலரை தற்கொலைப்படை போல தயார் செய்து அனுப்புவார்கள். அவர்கள் அரை மணி நேரம் முடிந்த
பின் வெளியே செல்லலாம் என்ற விதியைப் பயன்படுத்தி வெளியே வந்து கொஸ்டினை அவுட் செய்வார்கள்.
சில கேள்விகளுக்கான விடையை தயார் செய்து, கேட்டிற்கு வெளியே மரத்தில் இருந்து கத்துவது,
மைக்செட்டில் விடை அறிவிப்பது கூட நடக்கும்.
இத்தனை இருந்தும்,
அந்த 35 வாங்குவதற்கு, 35 வயது வரை போராடியவர்களும் உண்டு.
நான் மூன்றாம்
வகுப்புக்குச் சென்ற உடன் தான் ஆங்கில வகுப்பு ஆரம்பித்தது. ஏ பி சி டி என எட்டு வயதில்
எழுத ஆரம்பித்து, வார்த்தைகளை வாசிக்க எட்டாம் வகுப்பு ஆகிவிட்டது.
அப்போது இந்த அளவுக்கு
மினி ஜெராக்ஸ் வசதி இல்லாததால், எங்கள் தெருக்காரர்கள் இங்கிலிஸ் எஸ்ஸேயை சின்ன பாண்டில்
பிட்டாக எழுதிக் கொள்வார்கள். அந்த திருப்பணியில் நானும் ஈடுபட்டு, இரண்டாண்டுகள் ஏராளமான
எஸ்ஸேக்களை பலருக்கும் எழுதிக்கொடுத்திருக்கிறேன்.
பத்தாம் வகுப்பு
வந்ததும், ஆங்கிலத்துக்கு டியூசன் சேர்ந்தேன். இரவில் கூட ஹேஸ் பீன், ஹேவ் பீன் என
உளறிக் கொண்டே இருந்ததாக வீட்டார் தெரிவிப்பார்கள். ஒருவழியாக நானும் பிரசித்தி பெற்ற
பத்தாம் வகுப்பு இங்கிலீஸ் பரிட்சையை எழுதி முடித்தேன்.
ரிசல்ட் வெளியாகும்
நாள் நெருங்கியது. காலையிலேயே மாலை முரசுக்கு டோக்கன் வாங்கியாயிற்று. மாலை மூன்று
மணி அளவில் ஜேஸி பஸ்ஸில் தான் பேப்பர் வரும். எங்கள் ஊர் நம்பர்கள் மட்டும் தனியாகத்
தெரியும். ஏனென்றால் அவற்றுக்கு இடையே மட்டும், இடையில் உள்ளவர்கள் அனைவரும் பாஸ் என்ற
கோடு இருக்காது. எல்லாமே ஒத்தை நம்பராகத்தான் வரும். 100 பேருக்கு 20 என்ற விகிதத்தில்தான்
மக்கள் பாஸாவார்கள். மதியம் சாப்பிடக்கூட போகாமல் பஸ்ஸ்டாண்டிலேயே பழியாய் கிடந்து,
அடிதடி கூட்டத்தில் பேப்பரை வாங்கி, பிரித்து பார்த்தால் என் நம்பர் இருந்தது. எத்தனையோ
பேருக்கு, பிட்டுக்கு எஸ்ஸே எழுதிக் கொடுத்த புண்ணியம் தான் என்னை பாஸ் செய்ய வைத்ததாக
இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
பத்தாம் வகுப்புக்குப்
பின் தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக பல ஊர்களில் வசித்து, பின் எனக்கு கிடைத்த நடுத்தர
வகுப்பு வாழ்க்கையை தக்க வைப்பதற்காக பல ஊர்களில் கஜகர்ணம் அடித்துக் கொண்டிருக்கிறேன்.
நீண்ட இடைவேளைக்குப்
பின் ஊருக்குச் சென்றிருந்தேன். என் நண்பன் ஒருவன் ஊருக்கு அருகில் உள்ள பொறியியல்
கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது,
இப்ப எப்படிடா இங்கிலீஸ் இங்க இருக்கு? என்றேன்.
ம்.அதெல்லாம் நல்ல
மார்க் எடுத்துடுறாங்க. ஆனா கேம்பஸ் இண்டர்வியூவில கம்யூனிகேசன் சரியில்லைன்னு ரிஜக்ட்
ஆயிடுறாங்க என்றான்.
43 comments:
//அதெல்லாம் நல்ல மார்க் எடுத்துடுறாங்க. ஆனா கேம்பஸ் இண்டர்வியூவில கம்யூனிகேசன் சரியில்லைன்னு ரிஜக்ட் ஆயிடுறாங்க என்றான்//
இதைத் தான் 'ஊரு தலை கீழா மாறிடிச்சி' என்பதா?
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!
நன்றி பந்து.
//எத்தனையோ பேருக்கு, பிட்டுக்கு எஸ்ஸே எழுதிக் கொடுத்த புண்ணியம் தான் என்னை பாஸ் செய்ய வைத்ததாக இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
// :) :0
நன்றி சுரேஷ்.
பிட்டுலாம் எழுதிக் கொடுத்தா பாஸாகிடலாமா!> இது தெரியாம போச்சே! தெரிஞ்சிருந்தா மாங்கு மாங்குன்னு படிச்சிருக்க வேணாமே!!
சமீபத்தில் இரண்டு வெவ்வேறு நாட்கள் உங்கள் ஊரில் முழு நாள் தங்கி வேலை பார்த்தேன். 10 வருடங்களுக்கு முன் அங்கு போயிருந்தால் அங்கேயே மாற்றல் வங்கி கொண்டு சென்று விடும் அளவிற்கு மக்களோடு நமக்கு ஒத்து போனது.
//பிட்டுலாம் எழுதிக் கொடுத்தா பாஸாகிடலாமா!> இது தெரியாம போச்சே! தெரிஞ்சிருந்தா மாங்கு மாங்குன்னு படிச்சிருக்க வேணாமே!!// பத்தாவது எஸ்யே எல்லாவற்றிலும் வாக்கிய அமைப்பு ஒரே மாதிரித்தான் இருக்கும். அவர் இம்போஸிசன் மாதிரி எழுதி எழுதியே வாக்கிய அமைப்புகள் மனனம் ஆகியொருக்கும். அதுவும் தவிர அடிப்படையிலெயே அவர் ஒரு ஜீனியஸ்.
நன்றி ராஜி. நண்பர் சுரேஷ் சொல்லியிருக்கும் காரணம் தான்.
டாக்டர், நல்ல மக்கள், நல்ல சாப்பாடு. நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.
சந்தடி சாக்கில் காலை வாரிவிட்டீர்களே?
ஆஹா புதுசா இருக்கே. ஒரு ஊரே இங்கிலீஷ்ற்காக பாடு பட்டு இருக்கே..
வத்தலகுண்டின் அருமையான வெதர் நினைவில் இருக்கிறது. உங்கள் எழுத்தை மிகவும் ரசித்தேன்!
நன்றி அமுதா கிருஷ்ணா
நன்றி லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
நன்றி சுந்தர்ராஜன்
எழுத்து நடை நன்றாகவும் without forced pretense இயல்பாக உள்ளது.
அசத்தல் பதிவு. அந்த காலத்தை கண் முன் கொண்டுவந்துடிங்க :)
அட்டகாசம்ண்ணே.......!
‘வத்தலகுண்டு வக்காபுலரி’ன்னு தலைப்பு வச்சிருக்கலாம். :-)
ஆமா, வத்தலகுண்டு ஏன் ஆங்கிலத்துல பத்லகுண்டு ஆச்சு..?
நன்றி அபயா அருணா
நன்ரி சுதர்
நன்றி ராஜு.
திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆன கதைதான். பிரிட்டிஷாருக்கு வ வராது போல. அதுக்கு பதிலா ப வருது.
அருமையான பதிவு. மிக இரசித்தேன்.
நன்றி பவித்ரா ஸ்ரினிவாசன்
வத்தலகுண்டு என்றதும் ஓடோடி வந்தேன். அம்பதுகளில் நாங்க இருந்த வத்தலகுண்டு உங்க எம்பதுகளில் அடியோடு மாறிப்போய்க்கிடக்கே!
அதுக்கப்புறம் 2006 இல் ஒரு சமயம் அங்கே போய்விட்டு'எங்கே போச்சு என் வத்தலகுண்டு'ன்னு நெஞ்சு கனக்கத் திரும்பி வந்தது ஒரு சோகம்.
மாவிளக்குன்னு இருக்கணும்.
மாத்திட்டேன் டீச்சர் :-)))
80கள் ஆரம்பம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தது.அப்புறம் அக்ரஹாரத்திலேயே ரெண்டு டுட்டோரியல் காலேஜ் வந்தது. பி டி சி, வி டி சி ந்னு.
இப்போ நடுத்தெருக்குப் போனோம்னா நம்ம தெருவா இதுன்னு மனசு விம்மும்.
சுவாரஸ்யமான. நடை தொடருங்கள் முக :)
எல்லாம் சரி நண்பரே! இன்னும் வத்தலகுண்டு என்ற பெயரை BATLAGUNDU என்று தானே அஞ்சல்துறையில் குறிப்பிடுகிறார்கள்? மெட்ராசை சென்னை என்று மாற்றிய பொழுது, உங்கள் ஊரின் spelling யும் மாற்றிவிடக்கூடாதா? எங்கள் சி.சு.செல்லப்பா பிறந்த ஊராயிற்றே!
நன்றி ஆயில்யன்
நன்றி செல்லப்பா யாக்யஸ்வாமி. பலரும் போராடி, தமிழக அரசு அளவில் மாற்றம் கொண்டுவந்து விட்டார்கள். இனி மத்திய அரசில் முயற்சிக்க வேண்டும்.
I enjoyed this post as it is very humorous, laughed till the end of the article. Thanks a lot, experiencing this after a long time.
I enjoyed this posting as it is very humorous, laughed till the end of the article. Thanks a lot, experiencing this after a long time.
நன்றி ரவிசுகா
Super article boss....enjoyed a lot.. :)
பிரிட்டிஷ் இங்கிலிஸ், அமெரிக்கன் இங்கிலிஸ் கேள்விப்பட்டுள்ளேன்.
இதென்ன வத்தலகுண்டு இங்கிலீஸ் என பார்க்க வந்தேன்.
மிகச் சுவாரசியமான எழுத்து நடை.
நன்றி ராஜ்
நன்றி யோகன் பாரிஸ்
what about "kattaspathri" please post about the hospital
விரைவில் எழுதுகிறேன் கணேஷ் பாபு
//வத்தலக்குண்டில், யாருக்கு பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு நடக்கும் நாள் முதலில் தெரியும் என்றால், அது மஞ்சளாற்றங்கரையில், குட்லக் விநாயகர் கோவில் வாசலில் பூஜை சாமான் கடை வைத்திருந்த செல்வத்திற்குதான்.//Why I Love Muralikannan...செம..
நன்றி ரவிகுமார்.
Hey...I live in kodaikanal for the last 8years.why your place is pronounced as Batlagundu....ur article is humorous and true.....
Hey.....article is true....
Hey.....article is true....
Hey.....article is true....
நன்றி unknown
நீங்க சொன்னதெல்லாம் 100% உண்மை. நான் மட்டும் பத்தாவது படிக்கும் போது ஒரு 25 மார்க் English-la கூட வாங்கி இருந்தேன்னா நான் தான் ஸ்கூல் first. English-ல பேசி interview-ல வேலை வாங்கிரதுகுள்ள தாவு தீர்ந்தது போங்க. இப்ப நிறைய பேரு English நல்ல பேசுறாங்க - ஜெகன், சந்தை பேட்டை தெரு, வதிலை (வத்தலகுண்டு)
நன்றி ஜெகன்
Good one, I enjoyed reading it - Karthi
Good one, I enjoyed reading it - Karthi
Good one, nice narration. I enjoyed reading it
Post a Comment