June 05, 2008

ஜூன் 15 பதிவர் சந்திப்பில் உண்மைத்தமிழன் விவகாரம்


சமீப காலமாக உண்மைத்தமிழன் தினமும் ஒரு பதிவுக்கு 50 முதல் 100 வரை பின்னூட்டம் போடுவது பதிவர்கள் யாவரும் அறிந்ததே. இந்த தனி நபர் பின்னுட்ட சுனாமியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல பதிவர்கள் கவலைப்பட துவங்கிஉள்ள நிலையில் ஜூன் 15 தமிழ்மண நிர்வாகிகள் மட்டும் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.இதன் காரணமாக பின்னூட்ட உயரெல்லை மீண்டும் அமலுக்கு வந்தால் என்ன செய்வது என கும்மி மட்டுமே அடிக்கும் அமீரக பதிவர்கள் தங்கள் வருத்தங்களை சென்னை பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதால் அவர்கள் இந்த பிரச்சினையை அன்றைய தினம் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இப்படி ஏதும் விவாதம் நடைபெற்றால் அதை எதிர்த்து தீக்குளிப்போம் (டீ இல்லை) என்று உன்மைத்தமிழன் ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காரணத்தால் அன்று காவல் துறை பாதுகாப்புடன் பதிவர் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்று எந்த பிரச்சினையும் நடக்காமல் எப்படி சந்திப்பு நடத்துவது என்பதற்காக அமெரிக்க எஃ பி ஐ யிடம் பயிற்சி பெற்ற திரு பாஸ்டன் பாலா அவர்கள் ஜுன் 8 ஆம் தேதி சென்னை பதிவர்களின் மெக்காவான மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் பயிற்சி கொடுக்க உள்ளார்.

அனைவரையும் வருக வருக என சென்னை பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்

மேலதிக விபரங்களுக்கு இங்கே

70 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.

அதிஷா said...

ஒகே பாஸ் . ;-)

அகராதி said...

அண்ணன் உண்மைத்தமிழனின் பின்னூட்ட சுனாமியை தடுத்து நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.

1. அவர் பணியாற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லி அவருடைய கம்ப்யூட்டரின் இணைய இணைப்பை துண்டிக்கலாம்.

2. ஒரு நல்ல மனநல மருத்துவரை அண்ணன் உண்மைத்தமிழனுக்கு பரிந்துரை செய்யலாம்.

லக்கிலுக் said...

ஞாயித்துக்கிழமை ஆச்சின்னா வாராவாரம் பதிவர் சந்திப்பு போட்டு கழுத்தறுத்தீங்கன்னா எல்லாரும் அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை. இந்த கோணத்துலே இந்த பிரச்சினையை யாராவது யோசிச்சி பார்த்தீங்களா? :-(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சமீப காலமாக உண்மைத்தமிழன் தினமும் ஒரு பதிவுக்கு 50 முதல் 100 வரை பின்னூட்டம் போடுவது பதிவர்கள் யாவரும் அறிந்ததே.//

இதென்ன தினமும் 50 பதிவா? எங்க போட்டேன்.. பத்துதான் இருக்கும்.. ஆவரேஜா பார்த்தா இதுதான் கரெக்ட்டு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இந்த தனி நபர் பின்னுட்ட சுனாமியை//

இதெல்லாம் ஓவரா இல்ல..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல பதிவர்கள் கவலைப்பட துவங்கிஉள்ள நிலையில் ஜூன் 15 தமிழ்மண நிர்வாகிகள் மட்டும் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.//

என்னத்த சமாளிக்கிறது.. உண்மைத்தமிழனின் பின்னூட்டங்களை வெளியிட மாட்டோம்னு எல்லாரும் ஒரு தீர்மானம் போட்டுக்குங்க..

அப்புறம் அவன் இப்படி சுனாமி மாதிரி போடுவானான்னு பார்ப்போம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இதன் காரணமாக பின்னூட்ட உயரெல்லை மீண்டும் அமலுக்கு வந்தால் என்ன செய்வது//

வரட்டுமே.. ஒரு பதிவுக்கு 40 கமெண்ட்டுக்கு மேல வந்தா அது திரட்டில வராதுன்னு அவுக சொல்லட்டும்.. அப்ப நாம சுத்தமா அடங்கிருவோம்ல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//என கும்மி மட்டுமே அடிக்கும் அமீரக பதிவர்கள் தங்கள் வருத்தங்களை சென்னை பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதால்//

அதென்ன இதுக்கு மட்டும்தான் அமீரகத்துக்காரங்க விழுந்தடிச்சு ஓடி வர்றாங்க.. இங்க இருக்கிறவக எல்லாம் சுண்டல் சாப்பிட மட்டும்தான் வாயைத் தொறக்குறாங்க போல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அவர்கள் இந்த பிரச்சினையை அன்றைய தினம் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.//

அடச் சொல்லிட்டுப் போகட்டுமே.. பொழுது போக வேண்டாமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இப்படி ஏதும் விவாதம் நடைபெற்றால் அதை எதிர்த்து தீக்குளிப்போம் (டீ இல்லை) என்று உன்மைத்தமிழன் ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.//

எங்க.. இன்னொரு தடவை படிச்சுக்குறேன்.. கரெக்ட்டுதான்.. ரசிகர் மன்றத்தினர்தானே தீக்குளிப்பார்கள்.. உண்மைத்தமிழன் இல்லையே.. அப்பாடா.. சந்தோஷம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இந்த காரணத்தால் அன்று காவல் துறை பாதுகாப்புடன் பதிவர் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

போற போக்கைப் பார்த்தா அப்படியொரு சிச்சுவேஷன் சீக்கிரமே வரும்னு நினைக்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அன்று எந்த பிரச்சினையும் நடக்காமல் எப்படி சந்திப்பு நடத்துவது என்பதற்காக அமெரிக்க எஃ பி ஐ யிடம் பயிற்சி பெற்ற திரு பாஸ்டன் பாலா அவர்கள் ஜுன் 8 ஆம் தேதி சென்னை பதிவர்களின் மெக்காவான மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் பயிற்சி கொடுக்க உள்ளார்.//

FBI இப்ப இந்த அளவுக்குக் கீழ இறங்கிருச்சா..? பாபாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அனைவரையும் வருக வருக என சென்னை பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்.//

நானும் எல்லார் சார்பாகவும் முரளிகண்ணனை வருக, வருக என்று வரவேற்கிறேன்..

முரளிகண்ணன் said...

நல்ல வேளை பதிவு நீளம் குறைவா இருந்ததால பத்தோட போச்சி. அண்ணே இங்கயுமா?

முரளிகண்ணன் said...

\\இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.\\
ஆமா அவரை அடக்கணுமில்லே

முரளிகண்ணன் said...

\\ஒகே பாஸ் . ;-)\\

அதிஷா பாஸ்னா நம்ம தலை மட்டும் தான். நானெல்லாம் வாலு

முரளிகண்ணன் said...

\\அண்ணன் உண்மைத்தமிழனின் பின்னூட்ட சுனாமியை தடுத்து நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.
\\
நன்றி அகராதி. உங்கள் யோசனை வழி மொழியப்படுகிறது

அதிஷா said...

அடடா எந்த பதிவுக்கு போனாலும்
உ.த அர்ச்சனை தானா??

என்ன கொடுமை உ.த அண்ணா??

முரளிகண்ணன் said...

\\அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை. \\
ஆமாங்க லக்கி இனிமே சந்திப்புக்கு அழைக்கிறவுங்க இதுக்கு ஒரு ஐடியா குடுத்தா நல்லா இருக்கும்

முரளிகண்ணன் said...

அதிஷா இந்த வாரம் உ.த வாரம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லக்கிலுக் said...
ஞாயித்துக்கிழமை ஆச்சின்னா வாராவாரம் பதிவர் சந்திப்பு போட்டு கழுத்தறுத்தீங்கன்னா எல்லாரும் அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை. இந்த கோணத்துலே இந்த பிரச்சினையை யாராவது யோசிச்சி பார்த்தீங்களா?:-(//

என்னடா இது அக்கிரமமா இருக்கு..? இதெல்லாம் கல்யாணமானவங்கதான கவலைப்படணும்.. நீ எதுக்கு இப்படி குதிக்கிறே..?

அதிஷா said...

இந்த வாரம் மட்டுமில்ல அடுத்த வாரமும் அவருதான்....

அவருக்கு '' 1000 பின்னூட்டமிட்ட அபூர்வ சிகாமணி '' னு சந்திப்புல பட்டம் வழங்க ஏற்பாடு பண்ணா நல்லாருக்கும்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அகராதி said...
அண்ணன் உண்மைத்தமிழனின் பின்னூட்ட சுனாமியை தடுத்து நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.//

யாருங்க ஸார் நீங்க? அடையாளமே தெரியலை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அவர் பணியாற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லி அவருடைய கம்ப்யூட்டரின் இணைய இணைப்பை துண்டிக்கலாம்.//

நேர்ல சந்திக்காப்புறல ஐடியா இருக்குல்ல.. வாங்க சந்திப்போம்.. யார் இணைப்பை யார் துண்டிக்கிறதுன்னு அப்பால யோசிக்கலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஒரு நல்ல மனநல மருத்துவரை அண்ணன் உண்மைத்தமிழனுக்கு பரிந்துரை செய்யலாம்.//

தமிழ்மணத்தை மேயறதே ஒருவித மன நோய்தான்..

இதுக்கு ஒரே மருந்து 'மேல' டிக்கெட் எடுக்கிறதுதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.\\
ஆமா அவரை அடக்கணுமில்லே..?///

ஆடு, மாடு ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களேய்யா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//முரளிகண்ணன் said...
நல்ல வேளை பதிவு நீளம் குறைவா இருந்ததால பத்தோட போச்சி. அண்ணே இங்கயுமா?//

ஏம்ப்பா.. என் பேரை போட்டு பதிவெழுதிட்டு இங்கேயுமான்னு கேட்டா என்ன அர்த்தம்..?

ஆபீஸ்ல யாருக்குமே வேலை இல்லையா..? இ

ப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\அண்ணன் உண்மைத்தமிழனின் பின்னூட்ட சுனாமியை தடுத்து நிறுத்த இரண்டு வழிகள் உள்ளன.\\
நன்றி அகராதி. உங்கள் யோசனை வழி மொழியப்படுகிறது.///

என்ன ஜால்ரா சத்தம் ஓவரா கேக்குது..? இதுக்கு வழி மொழியறதுக்கு ஒரு ஆளா..?

மொதல்ல பதிவு எழுதறதை நீங்க நிறுத்துங்கய்யா.. அப்பபால கமெண்ட்ஸ் போடுறதை நான் நிறுத்திர்றேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அதிஷா said...
அடடா எந்த பதிவுக்கு போனாலும் உ.த அர்ச்சனைதானா?? என்ன கொடுமை உ.த அண்ணா??//

ஒரு கொடுமையும் இல்ல.. பல பேரு பதிவா போட்டுத் தள்ளுறாங்க.. நான் பதிலுக்கு கமெண்ட்ஸா போட்டுத் தாக்குறேன்.. அவ்ளோதான்..

முரளிகண்ணன் said...

\\அவருக்கு '' 1000 பின்னூட்டமிட்ட அபூர்வ சிகாமணி '' னு சந்திப்புல பட்டம் வழங்க ஏற்பாடு பண்ணா நல்லாருக்கும்\\

அதிஷா 1000 மா நீங்க வேற பில்லியன் பின்னூட்டமிட்ட பிரதாபன் னு கொடுக்கப்போறோம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\அவங்கவங்க பொண்டாட்டி கிட்டே என்னென்ன பொய்மூட்டையை அவுத்து வுட்டுட்டு வரவேண்டியிருக்குமோ தெரியலை.\\
ஆமாங்க லக்கி. இனிமே சந்திப்புக்கு அழைக்கிறவுங்க இதுக்கு ஒரு ஐடியா குடுத்தா நல்லா இருக்கும்.///

வேணாம்.. சேர்வார் சேர்க்கை சரியில்லை முரளி.. அப்பால ரொம்ப பீல் பண்ணுவீங்க.. ஜாக்கிரதை..

முரளிகண்ணன் said...

உ த அண்ணே போதும்னே முடியலை

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//முரளிகண்ணன் said...
அதிஷா இந்த வாரம் உ.த வாரம்.//

அப்ப ஒரு மாசம் முழுக்க கமெண்டஸ் போட்டா உ.த.மாதம்பீங்களா..?

ஏதாவது கேஷ் அவார்டு கொடுக்கக் கூடாதா..? பிரயோசனமா இருக்கும்..

முரளிகண்ணன் said...

\\\இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.\\
ஆமா அவரை அடக்கணுமில்லே..?///

ஆடு, மாடு ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களேய்யா\\

அண்ணே ஒரு ப்ளோல வந்துருச்சு நம்ம ஊரு பாஷை. தம்பிய மன்னிச்சிருங்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அதிஷா said...
இந்த வாரம் மட்டுமில்ல அடுத்த வாரமும் அவருதான்....
அவருக்கு '' 1000 பின்னூட்டமிட்ட அபூர்வ சிகாமணி '' னு சந்திப்புல பட்டம் வழங்க ஏற்பாடு பண்ணா நல்லாருக்கும்.//

கூடவே அதிகம் வேண்டாம்.. ஒரு கமெண்ட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுத்திருங்க.. போதும்.. ஒரு மாசம் பொழைச்சுக்குவேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\அவருக்கு '' 1000 பின்னூட்டமிட்ட அபூர்வ சிகாமணி '' னு சந்திப்புல பட்டம் வழங்க ஏற்பாடு பண்ணா நல்லாருக்கும்\\
அதிஷா 1000மா? நீங்க வேற.. 'பில்லியன் பின்னூட்டமிட்ட பிரதாபன்'னு கொடுக்கப்போறோம்///

அட இதுவும் நல்லாயிருக்கே.. தேங்க்ஸ் முரளிகண்ணா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//முரளிகண்ணன் said...
உ த அண்ணே போதும்னே முடியலை..//

பதிவா போடுறீங்க.. பதிவு..

இதுக்கு ஐடியா கொடுத்த 'மகாத்மா' யாருன்னு ஞாயித்துக்கிழமை எனக்குத் தெரிஞ்சாகணும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\\இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.\\
ஆமா அவரை அடக்கணுமில்லே..?///
ஆடு, மாடு ரேஞ்சுக்கு மாத்திட்டீங்களேய்யா\\
அண்ணே ஒரு ப்ளோல வந்துருச்சு நம்ம ஊரு பாஷை. தம்பிய மன்னிச்சிருங்க..///

ப்ளோலயா..? வரும்டி வரும்..

நாங்கள்லாம் எழுதியிருந்தோம்னா ஊர் கூடி கும்மியடிக்க வந்திருப்பீக..

நான் கேர் ஆ·ப் பிளாட்பார்ம்ல.. அதான் கும்மி கொட்டுது..

முரளிகண்ணன் said...

\\பதிவா போடுறீங்க.. பதிவு..

இதுக்கு ஐடியா கொடுத்த 'மகாத்மா' யாருன்னு ஞாயித்துக்கிழமை எனக்குத் தெரிஞ்சாகணும்\\

முழுக்க முழுக்க சுயமா யோசிச்சு போட்டதுன்னே. நீங்க அடிச்சா கூட வாங்கிக்கிறேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இதுக்காகவே வருகிறேன் சந்திப்புக்கு.//

ஒரு முடிவோடதான் இருக்கீகளா சாமி.. உண்மைத்தமிழன்னா அவ்வளவு இளிச்சவாய தமிழனா போயிட்டான்..

என்ன கொடுமை சரவணா இது..?

அதிஷா said...

//
உ த அண்ணே போதும்னே முடியலை
//

முரளிணா உ.த வ உசுப்பி விட்டுட்டு போதும் னா ...........

சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா??

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
இதுக்கு ஐடியா கொடுத்த 'மகாத்மா' யாருன்னு ஞாயித்துக்கிழமை எனக்குத் தெரிஞ்சாகணும்\\
முழுக்க முழுக்க சுயமா யோசிச்சு போட்டதுன்னே. நீங்க அடிச்சா கூட வாங்கிக்கிறேன்.///

நான் நம்ப மாட்டேன்..

நம்ம முரளிகண்ணன்.. எத்தனை நல்லவரு.. எம்புட்டு அழகானவரு.. எவ்ளோ சிறப்பானவருன்னு நானுல்ல நாலு பேருகிட்ட சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன்.. அல்லாம் போச்சே..

அதிஷா said...

//முழுக்க முழுக்க சுயமா யோசிச்சு போட்டதுன்னே. நீங்க அடிச்சா கூட வாங்கிக்கிறேன் //

இது வேறயா........

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அதிஷா said...
//உ த அண்ணே போதும்னே முடியலை//
முரளிணா உ.த வ உசுப்பி விட்டுட்டு போதும் னா ........... சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா??///

தம்பி இஅதிஷா கண்ணு.. தேங்க்ஸ்.. அப்பால எல்லார்கிட்டேயும் சொல்லி வை..

முரளிகண்ணன் said...

\\நான் கேர் ஆ·ப் பிளாட்பார்ம்ல.. அதான் கும்மி கொட்டுது..\\
அன்புத்தம்பிகள் ஆயிரம் பேர் நாங்கள் இருக்கும் போது இப்படி சொல்லலாமா?
:-((

முரளிகண்ணன் said...

\\சினம் கொண்ட சிங்கம் என்ன செய்யும் தெரியுமா??\\

சந்தேகமில்லாம தெரிஞ்சு போச்சு

முரளிகண்ணன் said...

\\எத்தனை நல்லவரு.. எம்புட்டு அழகானவரு.. எவ்ளோ சிறப்பானவருன்னு நானுல்ல நாலு பேருகிட்ட சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன்.. அல்லாம் போச்சே\\

ஒரு பதிவுக்கு ஆசைப்பட்டு அண்ணனை பகைச்சுக்கிட்டுட்டனே. முருகா அவர குளிரவையப்பா

முரளிகண்ணன் said...

\\இது வேறயா........\\
அதிஷா வேறென்ன பண்ண சொல்றீங்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\நான் கேர் ஆ·ப் பிளாட்பார்ம்ல.. அதான் கும்மி கொட்டுது..\\
அன்புத் தம்பிகள் ஆயிரம் பேர் நாங்கள் இருக்கும் போது இப்படி சொல்லலாமா?:-((///

அன்புத் தம்பிகள் செய்ற வேலையா இது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\எத்தனை நல்லவரு.. எம்புட்டு அழகானவரு.. எவ்ளோ சிறப்பானவருன்னு நானுல்ல நாலு பேருகிட்ட சொல்லிக்கிட்டுத் திரிஞ்சேன்.. அல்லாம் போச்சே\\
ஒரு பதிவுக்கு ஆசைப்பட்டு அண்ணனை பகைச்சுக்கிட்டுட்டனே. முருகா அவர குளிரவையப்பா.///

பண்றதையெல்லாம் நீங்க செஞ்சுட்டு கடைசியா அவனைக் கூப்பிடுறீங்களா..

சத்தியமா வர மாட்டான்.. எனக்கும், அவனுக்கும் இப்ப டெர்ம்ஸ் சரியில்ல.. நிச்சயம் கண்ல சிக்க மாட்டான்..

முரளிகண்ணன் said...

\\அன்புத் தம்பிகள் செய்ற வேலையா இது..?
\\
நீங்க வானத்தைப்போல நாங்க குறும்பர்கள் கண்டுக்காதீங்க

அதிஷா said...

//
முருகா அவர குளிரவையப்பா
//
முரளிணா இதுக்கு முருகன் என்ன பண்ணுவாரு அவரே பழனில பேர்பாடி யோட காஞ்சுட்டுருக்காரு

முரளிகண்ணன் said...

\\சத்தியமா வர மாட்டான்.. எனக்கும், அவனுக்கும் இப்ப டெர்ம்ஸ் சரியில்ல.. \\
நாங்க வேணா கமலை அவ்வையார் வேஷம் போட்டு 'ஒன்றானவன் இரண்டானவன்னு' பாடச்சொல்லி ராசி பண்ணி வச்சிருவோம்

அதிஷா said...

//அதிஷா வேறென்ன பண்ண சொல்றீங்க//

அவரு பிரண்ட் லார்டு முருகாகிட்ட மொட்டயடிக்கறேனு வேண்டிக்கோங்க

அதிஷா said...

//சத்தியமா வர மாட்டான்.. எனக்கும், அவனுக்கும் இப்ப டெர்ம்ஸ் சரியில்ல.. நிச்சயம் கண்ல சிக்க மாட்டான்..
//
ஆமாமா இங்க அனானிங்களுக்கு அனுமதி இல்ல

அதிஷா said...

\\அன்புத் தம்பிகள் செய்ற வேலையா இது..?
\\

அன்பு தம்பீனாலே அப்டிதாங்கணா

அதிஷா said...

//
தம்பி அதிஷா கண்ணு.. தேங்க்ஸ்.. அப்பால எல்லார்கிட்டேயும் சொல்லி வை..

//

அண்ணா தனிப்பதிவா போட்டுட்டட்டா நீங்க நல்லவரு வல்லவரு அப்டீனு சூடானிங்க அவ்ளோதானு.......

முரளிகண்ணன் said...

\\முரளிணா இதுக்கு முருகன் என்ன பண்ணுவாரு அவரே பழனில பேர்பாடி யோட காஞ்சுட்டுருக்காரு\\

வெயிலின் கொடுமை தெரிஞ்சவங்க தான் மத்தவங்களை குளிர வைப்பாங்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முரளிகண்ணன் said...
\\சத்தியமா வர மாட்டான்.. எனக்கும், அவனுக்கும் இப்ப டெர்ம்ஸ் சரியில்ல..\\
நாங்க வேணா கமலை அவ்வையார் வேஷம் போட்டு 'ஒன்றானவன் இரண்டானவன்னு' பாடச்சொல்லி ராசி பண்ணி வச்சிருவோம்.///

நிச்சயமா குளிர மாட்டான்.. வேண்ணா உங்களுக்கும் ஏதாவது கிரகம் பிடிக்க வைச்சாலும் வைப்பான்.. ஜாக்கிரதை முரளி.. அவ்ளோ கோபத்துல இருக்கான் என் மேல..

சரி.. சரி.. டைமாச்சு.. இன்னிய கோட்டோவை இத்தோட இந்த இடத்துல முடிச்சுக்குறேன்..

நன்றி..

க்ம்.

முரளிகண்ணன் said...

\\அவரு பிரண்ட் லார்டு முருகாகிட்ட மொட்டயடிக்கறேனு வேண்டிக்கோங்க\\
அதிஷா இது வேறயா

குசும்பன் said...

//நன்றி..

க்ம்.//

அண்ணே உண்மை தமிழன் அண்ணே கவிதை சூப்பர்.
(ஒன்னுங் கீழ் ஒன்னு இருந்தாலே கவிதைதானே)

சதுக்க பூதம் said...

What time?

dondu(#11168674346665545885) said...

//அப்ப ஒரு மாசம் முழுக்க கமெண்டஸ் போட்டா உ.த.மாதம்பீங்களா..? //
கங்கிராட்ஸ். எத்தனை மாதம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அதிஷா said...

// அதிஷா இது வேறயா //

என்ன இதுக்கே பயந்துட்டா ,இன்னும் முதுகுல அலகு குத்தி தங்க தேர் இழுக்கணும் .....

முரளிகண்ணன் said...

குசும்பன் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

சதுக்க பூதம் வருகைக்கு நன்றி.
சந்திப்பு விபரம்

நாள்: 15 ஜூன் 2008
நேரம்: மாலை 5.30 முதல் 8.30 வரை
இடம் : ஸ்ரீ பார்வதி -மினி ஹால், 28/160 எல்டாம்ஸ் ரோடு, சென்னை-18
லோக்கேசன்-

எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் “மியூசிக் வேர்ல்ட்” கடைக்கு அருகிலும், “கிழக்குபதிப்பகம்”, “ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர்” எதிரில் இருக்கிறது நம் சந்திப்பு அரங்கம்.

அவசியம் வாங்க… உங்க எண்ணங்களை பதிவு செய்யுங்க!


ஜூன் 8ல் சென்னை மெரினா காந்திசிலை அருகில் 5.30 மணிக்கு

முரளிகண்ணன் said...

\\கங்கிராட்ஸ். எத்தனை மாதம்?

\\
டோண்டு சார் கலக்கல் கமெண்ட்.

முரளிகண்ணன் said...

\\என்ன இதுக்கே பயந்துட்டா ,இன்னும் முதுகுல அலகு குத்தி தங்க தேர் இழுக்கணும் \\

அய்யா என்னை விட்டுறுங்கோ

அதிஷா said...

// அய்யா என்னை விட்டுறுங்கோ //

விடுங்க நம்ம முருகப்பெருமான் அருள முழுதாக பெற்ற அண்ணன் உத வரட்டும் . வேண்டுதல ரீப்பீட்டுக்குவாரு ஒகேவா