June 06, 2008

இரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்


முட்டை இல்லாமல் கூட ஆஃபாயில் போட்டு விடலாம் ஆனால் பாலபாரதி மற்றும் லக்கிலுக் இல்லாமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவது முடியாத காரியம். வரும் ஜூன் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலை தனிக்கட்டை பிரச்சினை இல்லை. லக்கி தான் வீட்டை ஏமாற்றிவிட்டு கலந்து கொள்ளவேண்டும். கடந்த பதிவர் சந்திப்புகளிலேயே அவர் தன்னிடமிருந்த பொய்களை காலி செய்து விட்டதால் இந்த சந்திப்புகளுக்கு அவசரமாக இரண்டு பொய்கள் தேவைப்படுகின்றன. கைவசம் வைத்திருப்போர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சிறந்த காரணத்துக்கு கீழ்க்கண்ட பரிசுகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்

(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி

பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களுக்கு

20 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

”பாலபாரதியை பாம்பு கடிச்சிடுச்சு.. ஆஸ்பத்திரிக்கு போகனும்..” (பாம்பு சீரியஸ்)ன்னு சொல்லீட்டு வரலாம். :)

அடுத்த தபா.. பாலாவுக்கு ஆக்சிடெண்ட் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வில் இருக்கார்ன்னு சொல்லச்சொல்லலாம் :))

ஜெகதீசன் said...

:)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

எனக்கு கிடைத்தாலும் எந்த பரிசும் வேணாம்.. சந்திப்புக்கு வந்தா போதும்...!

வேணும்னா... பாஸ்டன் பாலாவுக்கு கொடுத்துடலாம்.. :))

முரளிகண்ணன் said...

\\அடுத்த தபா.. பாலாவுக்கு ஆக்சிடெண்ட் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வில் இருக்கார்ன்னு சொல்லச்சொல்லலாம் \\
தலை இப்படி சொல்லணும்னா சந்திப்பே வேண்டாம்

முரளிகண்ணன் said...

ஜெகதீசன் சந்திப்புக்கு அவசியம் வாங்க

சென்ஷி said...

சந்திப்பு வெற்றிகரமாய் நடக்க வாழ்த்துக்கள் தலைவா :))

(ம்ஹ்ம்.. இப்படி வாரம் ஒரு மீட்டிங் போடுற உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது.. :( )

அதிஷா said...

லக்கிக்கே பொய்யா? என்ன கொடும சார் இது?

லக்கிலுக் said...

"ஆத்தா வையும், சந்தைக்கு போவணும், ஆளவுடு!”

- இந்தப் பொய் ஓகேவா? நான் பரிசு வென்றால் வீராச்சாமி பட டிவிடியை டோண்டு சாருக்கு பரிசாக அனுப்பவும் :-)

ஜிங்காரோ ஜமீன் said...

நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

zingaro-jameen.blogspot.com

கோவி.கண்ணன் said...

சிறந்த யோசனை சொல்பவர்களுக்கு

//(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி//

முரளிகண்ணன் சார்,

இது நாலுமே கிடைக்கும் என்று சொல்லாதவரை யாராவது நல்ல யோசனையோடு வரக்கூடும்.

மெரினா பீச்சில் ப்ளாட் வாங்கப் போகிறேன் என்று (பொய்) சொல்லி அவர் கிளம்பி வரமுடியாதா ?
:)

முரளிகண்ணன் said...

\\நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?
\\
ஜிங்காரோ அவசியம் வாங்க, மகிழ்வோடு வரவேற்கிறோம்

லக்கிலுக் said...

//ஜிங்காரோ ஜமீன் said...
நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?
//

ஜிங்காரோ அவர்களே!

பேரே சும்மா ஜிவுஜிவுன்னு இருக்குதே? வாங்கோ.. குட்டைய கலக்குங்கோ!!

அதிஷா said...

பொய் 1 ; லக்கி அவரோட ரசிகர் மன்றத்துல அவருக்கு பாராட்டு கூட்டம்னு சொல்லிட்டு வர்லாம் ,( உங்களுக்கெல்லாம் ரசிகர் மன்றமானு கேட்டா சமாளிக்க jk ரித்திஷ் படம் ஒன்று வைத்து கொள்ளவும் )

பொய் 2 ; அப்படியே வீட்டுக்கு போற வழில ஒரு மாலையும் பூச்செண்டும் வாங்கிட்டு ரசிகர் மன்றத்துல போட்டதுனு சொல்லிக்கலாம்

பி.கு ; ( நன்றி , கல்யாண பரிசு தங்கவேலு ஐயா )

இந்த பொய்களுக்கு பரிசு தருவதாக இருந்தால் எங்கள் ஆசான் உ.த அண்ணாவுக்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

முரளிகண்ணன் said...

சென்ஷி,லக்கி,கோவி கண்ணன் மற்றும் அதிஷா வருகைக்கு நன்றி

சதுக்க பூதம் said...

லுக்கிலுக்கின் tamil blog உலக பணிகளை பாராட்டி கலைஞர் தரவிறுக்கும் பொற்கிழியை வாங்க வரவேண்டும் என்று சொல்லலாம்

Pisasu said...

//
ஜிங்காரோ ஜமீன் said...
நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

zingaro-jameen.blogspot.com

//
ஜிங்காரோ நீங்க அவசியம் வரணும். ஆனா ஊறுகாய் செலவு என்னுது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா.

ஜிங்காரோ ஜமீன் said...

//
முரளிகண்ணன் said...

ஜிங்காரோ அவசியம் வாங்க, மகிழ்வோடு வரவேற்கிறோம்
//

உண்மையை சொல்லணும்னா நாங்க எதுவும் அப்படி பெருசா எழுதி விடவில்லை நண்பர்களே! வலைப்பூவை பார்த்திங்கன்னா உங்களுக்கே தெரியும். ஏதோ ஒரு வேகத்திலே ஆரம்பிச்சோம். அவ்வளவாக ஆதரவு இல்லாததால் கொஞ்சநாளாக தயங்கி நிற்கிறோம். ஆனா நீங்க இவ்வளவு ஆர்வமாக கூப்பிடறதை பார்த்தால். ரொம்பவே சந்தோஷமா கீதுப்பா.. முதல்ல போய் ஒரு ஜிங்காரோ பீரை போய் உட்டுக்கணும். :)


//
லக்கிலுக் said...

ஜிங்காரோ அவர்களே!

பேரே சும்மா ஜிவுஜிவுன்னு இருக்குதே? வாங்கோ.. குட்டைய கலக்குங்கோ!!
//


//
Pisasu said...

ஜிங்காரோ நீங்க அவசியம் வரணும். ஆனா ஊறுகாய் செலவு என்னுது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா.
//


ஒருவேளை எங்களை வைச்சு காமெடி, கீமெடி பண்ணிட மாட்டிங்களே :) :)

வால்பையன் said...

பொய்யெல்லாம் சொல்லிரலாம்
ஆனா பரிசுகளை பார்த்தா தான் தலை சுத்துது

வால்பையன்

இத்துப்போன ரீல் said...

ப்ளேபாய் லக்கிலுக் அவர்களே!(கல்யாணமானதை மறைப்பவர் ப்ளேபாய் தானே!..ஓ ....உங்களைத்தான் டோண்டு சார் குத்தினாரா?..)

பொய்யது விளம்பேல்!....
:)

முரளிகண்ணன் said...

சந்திப்புக்கு அவசியம் வாங்க வால் பையன் மற்றும் இத்துப்போன ரீல்