June 07, 2008
தமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்பு
தமிழ் சினிமாவின் கதைக்களம் பொதுவாக இரண்டு எல்லைகளில் அடங்கிவிடும். கிராமபுற அல்லது பெருநகர படங்கள். அவர்கள் பாஷையில் சொல்வதானால் சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட். இந்த சிட்டி வகையறாவில் வெளிநாடு,ஊட்டி போன்றவை அடங்கும். வில்லேஜ் வகையறாவில் பாரதிராஜா,சேரன்,அமீர்,தங்கர் பச்சான் போன்றோர் எடுக்கும் இயல்புக்கு ஓரளவு ஒட்டிய படங்களும், கே எஸ் ரவிக்குமார், ஹரி, சங்கிலி முருகன் போன்றோர் எடுக்கும் மசாலா கிராம படங்களும் அடங்கும். இரண்டுக்கும் நடுவே தாலுகா தலைநகரம் என்ற அளவில் இருக்கும் சிறு நகரங்களை பிரதிபலிக்கும் படங்கள் 75 ஆண்டு தமிழ்சினிமாவில் மிகக்குறைவே
டி ஆரின் ஒரு தலை ராகம், ராபர்ட் ராஜசேகரின் பாலை வனச் சோலை, பாக்கியராஜின் இன்று போய் நாளை வா, சுபாஷின் ஏழையின் சிரிப்பில், பாலாவின் சேது மற்றும் பாலாஜி சக்திவேலின் கல்லூரி போன்ற சில படங்கள் மட்டுமே நம் உடனடி நினைவுக்கு வரும் சிறு நகர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள். தென்மாவட்ட கிராமங்களை பாரதிராஜா, சேரன் போன்றொரும், மேற்கு மாவட்டங்களை உதயகுமார் போன்றவர்களும், வடக்கு மாவட்டங்களை தங்கர் பச்சானும் அவர்களின் இயல்புகளுடன் சித்தரித்தனர். கே எஸ் ஆர்,ஹரி. பி.வாசு போன்றவர்கள் இந்த லிஸ்ட்டில் இல்லை. அவர்கள் கிராமத்தை ஒரு பேக் டிராப்பாக மட்டும் உபயோகப்படுத்தினார்கள்.
சிறுநகர மனிதர்களின் உளவியல் கிராமப்புற மற்றும் பெருநகர மனிதர்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களின் பூர்வீகம் கிராமமாக இருந்தாலும் அவ்ற்றுடன் அவர்கள் இயைந்து போவதில்லை. பெருநகரங்களுக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்தாலும் அங்கும் இரண்டற கலக்க முடிவதில்லை. திரைப்படம்,தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் யாவும் கிராமம் அல்லது பெரு நகரத்தை மட்டுமே முன்னிருத்துவதால் அவர்களின் அடையாளத்தை அதில் காணமுடியாம்ல் சலிப்படைகிறார்கள். தேவி என்னும் வாரப்பத்திரிக்கை ஓரளவுக்கு நெல்லை, கன்னியாகுமரி சிறு நகரங்களை பற்றி பேசுவதால் அப்பத்திரிக்கை அப்பகுதிகளில் மட்டும் நன்கு விற்கிறது
கிராமங்களுக்கு வயல்,ஆறு சிட்டிக்கு பீச், ஷாப்பிங் மால்,காம்பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய கல்லூரிகள் என அவுட்லெட்கள் பல உள்ளன. சிறு நகரங்களில் என்ன அவுட்லெட் இருக்கிறது? அவர்களின் பொழுது போக்கு, வாழ்வியல் என்ன என்பதை தமிழ் சினிமா பேசவே இல்லை. இதற்கு காரணம் என்ன?
1) பெரும்பாலான இயக்குனர்கள் கிராமப்புரத்தில் இருந்து வந்தது
2) சிறுநகர மக்கள் பெருங்கனவுகள் இல்லாமல் வளர்க்கப்படுதல்
(படி, வேலைக்குப் போ, வீடு கட்டு அப்புறம் செத்துப்போ)
3) அவர்களின் கற்பனையை வளர்க்கும் கூறுகள் சிறு நகரத்தில்
இல்லாமை
4) சிட்டி சப்ஜெக்ட்னா கல்லூரி, காதல், தாதா வில்லேஜ்னா ஜாதி,நாட்டாமை,பழி வாங்குதல். இங்க என்னத்தை வைக்கிறது?
5)இயக்குனர்களின் வாழிடச்சூழல் (பால சந்தர், மணி ரத்னம் - உயர் நடுத்தர வர்க்க படங்கள், பாலா - நோயுறு தன்மை)
நான் சிறுவயது முதல் சிறு நகரங்களில் வசித்தவன். என்னால் எந்த படைப்புகளுடனுடம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அய்யா புண்ணியவான்களே நாங்களும் இருக்கோம். எங்களையும் கண்டுக்கோங்க
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
//அய்யா புண்ணியவான்களே நாங்களும் இருக்கோம். எங்களையும் கண்டுக்கோங்க//
Forwarded to தமிழ்சினிமா படைப்பாளிகள்.
:)
(படி, வேலைக்குப் போ, வீடு கட்டு அப்புறம் செத்துப்போ)
வீடு அதுவும் தவணை முறையில் :-))
வருகைக்கு நன்றி விஜி,கிரி
அண்ணா வெயில் வசந்த பாலனை விட்டு விட்டீங்கலே
விருதுநகரினை வெயிலில் அழகாக சித்தரித்துருப்பார்.
நல்லா ஆராய்ச்சி பண்ணிருக்கீங்கணா..
இது பின்னூட்ட அஞ்சலுக்கு
அதிஷா ஆராய்ச் சீ எல்லாம் நாம பண்றதில்லெ. சும்மா மனசுக்கு தோணினத எழுதுரதுதான்
சமீபத்தில் பாண்டி திண்டுக்கல்லை களமாக கொண்டுவந்தது. ஹரியின் படங்கள் ஒவ்வொன்று ஒரு ஊர். நாகர்கோயில், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி என்று எல்லா ஊருக்கும் ஒரு படமெடுப்பார். கண்ணும் கண்ணும் படம் 90 சதவிகிதம் குற்றாலத்தில் படமாக்கப்பட்டது.
இதுமாதிரி ஓரிரண்டு எடுத்துக்காட்டு தான் கொடுக்க முடிகிறது என்பது வேதனை.
விழுப்புரத்தையோ, அரக்கோணத்தையோ கதைக்களமாக வைத்து எந்த இயக்குனரும் சிந்திக்க மாட்டார்கள் போலிருக்கு :-(
wow.. :-) that was really a good perspective
>> சிறுநகர மனிதர்களின் உளவியல் கிராமப்புற மற்றும் பெருநகர மனிதர்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களின் பூர்வீகம் கிராமமாக இருந்தாலும் அவ்ற்றுடன் அவர்கள் இயைந்து போவதில்லை. பெருநகரங்களுக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்தாலும் அங்கும் இரண்டற கலக்க முடிவதில்லை <<
very well said...
\\wow.. :-) that was really a good perspective
\\
நன்றி யாத்ரீகன்
\\இதுமாதிரி ஓரிரண்டு எடுத்துக்காட்டு தான் கொடுக்க முடிகிறது என்பது வேதனை.
\\
ஆமாம் லக்கி.
\\ஹரியின் படங்கள் ஒவ்வொன்று ஒரு ஊர். நாகர்கோயில், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி என்று எல்லா ஊருக்கும் ஒரு படமெடுப்பார்.\\
ஆனால் ஹரியின் படங்களில் அவர்களின் உணர்வுகள் இருக்காது. மசாலாத்தனமாகவே இருக்கும்
ஆர்வமூட்டும் நோக்கு
வருகைக்கு நன்றி ரவிசங்கர்
///கே எஸ் ஆர்,ஹரி. பி.வாசு போன்றவர்கள் இந்த லிஸ்ட்டில் இல்லை. அவர்கள் கிராமத்தை ஒரு பேக் டிராப்பாக மட்டும் உபயோகப்படுத்தினார்கள்.///
நல்ல உவமை.
வருகைக்கு நன்றி மோகன் கந்தசாமி
தமிழ் சினிமா 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில் இப்படி ஒரு பதிவை வெயிட்டிருக்கும் முரளி கண்ணனின் முயற்சிக்கு பாராட்டுகள். இன்னும் கொஞ்சம் விவரமாக அதாவது விரிவாக தமிழ் திரையில் வெற்றி கண்ட பல கிராமத்து படங்களின் பெயர்களையும், அவற்றில் நடித்திருந்த நடிகர்கள் பற்றியும எழுதியிருந்தால் படிப்பதற்கு இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை குறையாக சொல்லாமல், ஆலோசனையாக சொல்லிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே...!
சினிமா நிருபர் குழு
\\இன்னும் கொஞ்சம் விவரமாக அதாவது விரிவாக தமிழ் திரையில் வெற்றி கண்ட பல கிராமத்து படங்களின் பெயர்களையும், அவற்றில் நடித்திருந்த நடிகர்கள் பற்றியும எழுதியிருந்தால் படிப்பதற்கு இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை குறையாக சொல்லாமல், ஆலோசனையாக சொல்லிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே...!\\
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.வரும் நாட்களில் அதுபற்றி எழுதுகிறேன்.
ஃபாசிலின் படங்கள் கிராமமும், நகரமும் அற்ற சூழலைக் கொண்டிருக்கும்.
வருகைக்கு நன்றி தமிழ்பறவை.
\\ஃபாசிலின் படங்கள் கிராமமும், நகரமும் அற்ற சூழலைக் கொண்டிருக்கும்\\
அவர் படங்களில் சிறுநகரம் காட்டப்பட்டாலும் அது கேரள வாசனையுடன் இருக்கும்.
//திரைப்படம்,தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் யாவும் கிராமம் அல்லது பெரு நகரத்தை மட்டுமே முன்னிருத்துவதால் அவர்களின் அடையாளத்தை அதில் காணமுடியாம்ல் சலிப்படைகிறார்கள்.//
முற்றிலும் உண்மை. நான் மிகவும் விரக்திஅடைவது ஆங்கில தினசரிகளுடன் வரும் இணைப்புகளை பார்த்து தான்.
ஏன் சார், சென்னை தவிர மத்த ஊரில் இருப்பவர்கள் இணைப்பை படிக்க மாட்டார்கள் என்று அவ்வளவு நம்பிக்கையா !!!
//ஆனால் ஹரியின் படங்களில் அவர்களின் உணர்வுகள் இருக்காது. //
ஆனால் சாமியை பொருத்தவரை திருநெல்வேலியுடன் இணைந்து இருந்தது போல் எனக்கு பட்டது.
//கிராமங்களுக்கு வயல்,ஆறு சிட்டிக்கு பீச், ஷாப்பிங் மால்,காம்பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய கல்லூரிகள் என அவுட்லெட்கள் பல உள்ளன.//
1. இதெல்லாம் இல்லாமல் ஒரு கடலோர சிற்றூரை மையமாக் வைத்து (இந்தியாவில் அப்படி ஊர் இல்லையென்றாலும்) வந்த இயற்கை படம் ஒரு வித்தியாசமான கதைக்களம்
2. அன்பே சிவம் - வித்தியாசமான - கிராமமல்லா நடுத்தர களம் தானே
3. லேசா லேசா படமும் ஒரு வித்தியாச களம் - 19ஆம் நூற்றாண்டில் வந்த ஆங்கில புதினங்களில் இங்கிலாந்து எப்படி இருக்குமோ அதை “மெனக்கெட்டு” காட்டியிருப்பார்கள் - வேலைக்காரர்களுக்கு அதே போல் உடையணிந்து.
அந்த கால ஆங்கில நாவல்கள் படிக்காதவர்களுக்கு சத்தியமாக புரிந்திருக்காது.
4. தளபதி - மாவட்ட தலைநகரம் தானே
--
//என்னால் எந்த படைப்புகளுடனுடம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அய்யா புண்ணியவான்களே நாங்களும் இருக்கோம். எங்களையும் கண்டுக்கோங்க//
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
//ஃபாசிலின் படங்கள் கிராமமும், நகரமும் அற்ற சூழலைக் கொண்டிருக்கும்.//
காதலுக்கு மரியாதை :)
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்
////சிறுநகர மனிதர்களின் உளவியல் கிராமப்புற மற்றும் பெருநகர மனிதர்களிடம் இருந்து மாறுபட்டது. அவர்களின் பூர்வீகம் கிராமமாக இருந்தாலும் அவ்ற்றுடன் அவர்கள் இயைந்து போவதில்லை. பெருநகரங்களுக்கு வேலை காரணமாக இடம்பெயர்ந்தாலும் அங்கும் இரண்டற கலக்க முடிவதில்லை.////
////ஹரியின் படங்கள் ஒவ்வொன்று ஒரு ஊர். நாகர்கோயில், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி என்று எல்லா ஊருக்கும் ஒரு படமெடுப்பார்
ஆனால் ஹரியின் படங்களில் அவர்களின் உணர்வுகள் இருக்காது. மசாலாத்தனமாகவே இருக்கும்////
இரண்டும் உண்மை !!!!!!!
நானே எழுதியதை போல உணர்ந்தேன். நான் யோசிப்பது போல யோசித்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
சூப்பர் சார், நாங்க அடிக்கடி பேசிக்கறதை அப்டியே எழுதி இருக்கீங்க.
சொல்வது சரிதான்....சிறுநகரங்களில் படப்பிடிப்பும் நடைபெறுவதில்லை.
:(
டாக்டர் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி ஜாக்கி சேகர், கே ஆர் பி, ராப், கோவி. கண்ணன்
நண்பர் முரளிகண்ணன் அவர்களே...
உங்களுக்கு பிடிச்ச ரோஜா படத்தை மெகா சைஸில் நிருபர் வலைப்பூவில் போட்டிருக்கேன். வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்களேன்.
பல ஆழ்ந்த தளங்களுக்கு இந்தப் பதிவு அழைத்து செல்கிறது முரளி...
வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பைத்தியகாரன்
அய்யா சினிமா நிருபர் குழுவினரே பச்சப்புள்ளய இப்படியா ஏமாத்துவீங்க
என்ன முரளிக்கண்ணன் புதுப்பதிவு எதையும் இன்னும் போடல?
\\என்ன முரளிக்கண்ணன் புதுப்பதிவு எதையும் இன்னும் போடல?
\\
விரைவில் எழுதுகிறேன்
ஐயோ, எனக்கு ஒண்ணுமே புரியலியே... நான் மொத்தமே - என்னோட 23 வருட மதுரை வாழ்க்கைல - 50-60 படம் தான் பார்த்திருப்பேன் ...நான் ரெம்ப மிஸ் பன்ன்னிட்டனோ ??
ரெண்டு கோடி பேரு இருக்க மெட்ராஸ் சுத்து வட்டரதுலேயே இருக்க ஒரே தாதா நம்ம கபாலி ! அவன நம்ம விஜய் சார் தூக்கி தூக்கி போட்டு அடிக்குராறு னு டயரடக்கறு கத சொன்னா விஜய் சரின்னு சொல்லுவாரா இல்லை; இல்ல நாலு லெட்சம் பேரு இருக்க நாகமலை ஊரட்சில இருக்க ஒரே தாதா நம்ம கபாலி ! அவன நம்ம விஜய் சார் தூக்கி தூக்கி போட்டு அடிக்குராறு னு டயரடக்கறு கத சொன்னா விஜய் சரின்னு சொல்லுவாரா ??
இருந்தாலும், உங்க ஆராய்ச்சி அருமை.
ஆழமான இது போன்ற பதிவுகளை எழுதும் திறன் பெற்ற நீங்கள் குறைந்த பதிவுகளோடு திருப்திப் படுத்திக் கொள்வதுதான் என் போன்ற மொக்கை பதிவாளர்களுக்கு வசதியாக போய்விடுகிறது! நிறைய எழுதுங்கள் முரளி!
ஹலோ ஊருலதான் கீரிங்களா...
ஆராய்ந்து கடைசியில் பார்வைக்கு வைத்த ஐந்து காரணங்களும் அசத்தல். குறிப்பாக இரண்டும் மூன்றும் நிதர்சனங்கள்.
ஐந்தில், //பாலா - நோயுறு தன்மை//
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்:)!
Post a Comment