August 02, 2008

ஐ ஐ டி பி டெக் மாணவர்கள் உண்மையிலேயே அறிவாளிகள்தானா?

நம் நாட்டில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் மிக கடினமாக கருதப்படுவது IIT J E E (Joint entrance examination for IITs) . கிட்டத்தட்ட 2 லட்சட்துக்கும் அதிகமானோர் எழுதி 2000 க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவது. எனவே நாட்டில் சிறந்த அறிவாளிகள் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும் என கருத்து நிலவுகிறது. ஆனால் கடந்த 10- 15 ஆண்டுகளாக இதில் வெற்றி பெற்று வருவோரைப்பற்றிய விமர்சனங்கள் பல நிறுவனங்களாலேயெ (campus recruitment ன் போது) வைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சிகரமாக சென்னை ஐ ஐ டியின் இயக்குனர் எம் எஸ் அனந்தும், Dean (students) இடிசாண்டி யும் இதுபற்றி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்கள். கோச்சிங் கிளாஸ் பயிற்சியாலேயெ 50% க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளே வருகிறார்கள். அவர்களிடம் raw intelligence இல்லை என இயக்குனரும், பெண்கள் அதிகாளவில் ஐ ஐ டி தேர்வில் வெற்றி பெறாததற்க்கு அவர்கள் கோச்சிங் கிளாஸ் செல்ல (பெற்றோர் தடை) முடியாததே காரணம் என டீனும் தெரிவித்துள்ளார்.


அதிகமான மாணவர்களை ஐ ஐ டிக்கு அளிப்பதின் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடம் பீகார்

ஆந்திராவில் புகழ்பெற்ற கோச்சிங் சென்டெர் ராமையா இன்ஸ்டிடுயுட். இதில் சேர ஒரு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல மையங்கள் உள்ளன என்றால் புரிந்து கொள்ளலாம்.ஐந்தாம் வகுப்பில் இருந்தே படித்தால்தான் இடம் கிடைக்கும்.

மற்றொரு காரணம் ஐ ஐ டி சிலபஸ்ஸும் இந்த ஸ்டேட் சிலபஸ்சும் ஏறத்தாழ ஒன்று.

தமிழ்நாட்டு மாணவர்கள் 5% கூட IIT B.Tech ல் இல்லை.அதிலும் சென்னையை தவிர பார்த்தால் 0.5% கூட இல்லை.

நம் மாணவர்கள் முட்டாள்களா? இல்லவே இல்லை. பின் என்ன காரணம்?

1)போதிய விழிப்புணர்வு இல்லை
2) பெற்றொரிடம் வசதி வேண்டும்
3)5 ஆம் வகுப்பில் இருந்தே பயிற்சி அளிக்க வேண்டும்
4) பள்ளிகளில் பாடத்திட்டம்
5)பள்ளி ஆசிரியர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை
6)கோச்சிங் செண்டர்கள் பரவலாக இல்லை.

இதனால்தான் மற்ற இடங்களில் இருந்து ஓரளவு அறிவு உள்ளவர்கள் கூட தொடர் பயிற்ச்சியின் மூலம் உள்ளே வருகின்றனர்

மதுரை, திருச்சி,திருனெல்வேலி அறிவிருந்தும் வரமுடியவில்லை.
இதனால் இப்பொது இந்த முறையை (format of examination) மாற்ற முயன்றுவருகின்றனர் பலர்.

நம் மாநில மக்களுக்கு நல்ல செய்தி

13 comments:

முரளிகண்ணன் said...

நிஜ அறிவாளிகளும் பலர் வருகிறார்கள். இந்த பதிவு கோச்சிங் சென்டர்களின் எபெக்ட் பற்றியதே

rapp said...

நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க.

ரங்குடு said...

நானும் ஐ.ஐ.டி யில் சேர ஆசைப் பட்டது உண்டு. ஆனால் அதற்கான பயிற்சி கிடைக்காததால் நுழைவுத் தேர்வு கூடஎழுத முடிய வில்லை. ஆனாலும், R.E.C எனப்படும் மானிலப் பொறியொயல் கல்லூரியில் படித்து பொறியாளர் ஆனேன். இது நடந்தது 1980-85 களில். ஆனாலும், ஐ.ஐ.டி யில் இடம் கிடைக்க அசாதாரண பயிற்சியும், அயராத உழைப்பும் தேவை. நுழைவுத் தேர்வின் கேள்விகள் சாதாரண பயிற்சி உடையவர்களால் பதிலளிக்க முடியாது.
ஆனால், எனக்கு நடிகர் சந்திர பாபு வின் பாடல் வரிகளில் நம்பிக்கை அதிகம்.
'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை - வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்தி சாலி இல்லை'
ஐ.ஐ.டி யில் படித்த வரெல்லாம் திறமை சாலிகள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஐ.ஐ.டி யில்
இடம் பிடித்தவர்கள் கடும் உழைப்பாளிகள்.

முரளிகண்ணன் said...

வாங்க ராப், இது நம் மாநிலத்தவர்களுக்கு செய்திகளை சொல்வதற்கு

முரளிகண்ணன் said...

\\ஐ.ஐ.டி யில் படித்த வரெல்லாம் திறமை சாலிகள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஐ.ஐ.டி யில்
இடம் பிடித்தவர்கள் கடும் உழைப்பாளிகள்\\

நான் முழுப்பதிவில் சொல்ல வந்ததை ஒரே வரியில் சொல்லிவிட்டடீர்கள்.

ரங்குடு தங்கள் வருகைக்கு நன்றி

குட்டிபிசாசு said...

முரளி,

ஐ.ஐ.டி.யில் பிடெக் மட்டுமல்ல எம்.எசி. கூட படிக்க யாரும் தமிழகத்திலிருந்து அதிகம் வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வின்மை.

IIT JEE எழுதி தேர்வாகாத எஸ்.டி/எஸ்.சி மாணவர்களுக்கு ஐ.ஐ.டிகளே பயிற்சி அளித்து மதிப்பெண் பொருத்துச் சேர்த்துகொள்கிறது. இத்தகைய வாய்ப்பு பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. வரும் கொஞ்சம் தாழ்த்தப்பட்ட தமிழ்மாணவர்களும் அவர்களுடைய உறவின மாணவர்களுக்கு முறையாக சொல்லுவதில்லை.

இதுபற்றி நான் பிறகு ஒரு விரிவான பதிவிடுகிறேன். தற்போது தங்களுடைய பதிவிற்கு நன்றி, வாழ்த்துக்கள்!!

முரளிகண்ணன் said...

குட்டி பிசாசு தங்களின் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்

Viji said...

முரளி சார் அருமையான பதிவு, நல்ல அலசல். தமிழகத்து மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்பது என் ஆசையும் கூட. சென்னையில் பிட்ஜி (FITJEE) என்ற நிறுவணம் சிறந்த பயிற்சி அளிக்கிறது. திருச்சியில் கூட ஒரு நிறுவணம் உள்ளது அதை நடத்துபவர் பெயர் கூட முரளிதான். இது போல ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைப்பேன். நினைப்பதோடு சரி. :(.

உங்கள் பதிவைப் படித்து, முயற்ச்சி செய்து ஒரு தமிழன் ஐ ஐ டிக்குள் அடியெடுத்து வைத்தாலும் உங்களுக்கு கிடைத்த வெற்றியே.

புருனோ Bruno said...

இங்கு பார்க்க வேண்டுகிறேன்.

அப்புறம்

இன்று நான் வருவதற்கு தாமதமாகிவிட்டது. அதற்குள் நீங்கள் எஸ்(கேப்) என்று கேள்விப்பட்டேன்

krjtwrites said...

IIT என்று ஓன்று இருப்பது தமிழ் நாட்டில் பல கிராமத்தவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. நம்மவர்கள் பலர் ITI படிக்க சென்னைக்கோ, டெல்லிக்கோ என் செல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இது IIT-க்கும், ITI-க்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால் ஏற்பட்ட நஷ்டம். அரசு IAS-க்கு பயிற்சி கொடுப்பது போல் IIT நுழைவு தேர்விற்கும் பயிற்சி மற்றும் அறிமுகம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இப்போதெல்லாம் குறுக்கு வழியில் குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்கும் வழியைத்தான் பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். கடின உழைப்பால் காலம் கடந்து கிடைக்கும் பலன் யாருக்குத் தேவை?

krjtwrites said...

IIT என்பது அதிக இன்ஜினியரிங் கல்லுரிகள் இல்லாத வட மாநிலங்களுக்கு மட்டும் தேவையான ஓன்று என்ற நிலை இப்போது உள்ளது. நம் தமிழகத்தில் பல அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுரிகள் உள்ளதால் நம்மவர்கள் அதை தாண்டி யோசிப்பதில்லை.

முரளிகண்ணன் said...

krtjwrites

தங்கள் வருகைக்கு நன்றி

அக்னி பார்வை said...

IIT யில் சேர நம் மக்களுக்கு விழிப்புணர்சி , அது தமிழ் நாட்டில் இருந்து சில தொழிநுட்பவாதிகளையே உருவக்கும். அதற்க்கு பதில் தமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லுரிகளை கண்காணித்து சீரமைக்க நடவடிக்கை எடுத்தால், தமிழ் நாட்டில் இருந்து குறைந்தது 30000 தொழிநுட்பவாதிகளை உருவாக்க முடியும்.