October 09, 2008

இயக்குனர்களின் வித்தியாசமான முதல் படங்கள்

சில இயக்குனர்களின் பெயரைக் கேட்டவுடனேயே அவர்கள் இம்மாதிரிப் படங்கள் தான் இயக்குவார்கள் என்று நாம் சொல்லுவோம். ஆனால் அவர்களின் முதல் படம், தற்போது அவர்கள் இருக்கும் டொமைனுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். அம்மாதிரி இயக்குனர்களையும், அந்த முதல் படங்களையும் பார்ப்போம்.

ராம நாராயணன்

இவர் பெயரைக் கேட்டாலே நம் ஞாபகத்துக்கு வருவது விலங்குகளை வைத்து இவர் இயக்கிய படங்கள்தான். யானை(ஆடி வெள்ளி) , பாம்பு,நாய்,மாடு (துர்கா),குரங்கு இவற்றை வைத்து படங்களை எடுத்தவர். தேவர் பிலிம்ஸ்க்கு அடுத்து விலங்குகளை உபயோகித்து அதிக படம் எடுத்தவர் இவர்தான். அதற்கடுத்து பாளையத்து அம்மன், ராஜகாளி அம்மன் போன்ற சிறுமுதலீட்டு சாமி படங்களை எடுத்தவர். இவர் படங்களில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றால், அவர் மார்க்கட் இழந்தவர் என்று அர்த்தம். நாயகியாய் நடித்து மார்க்கட் போனபின் ஓய்வுக்கு முன்னரோ அல்லது தற்போது சின்னத்திரைக்கு முன்னரோ இவர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஐதீகம். சிறுமுதலீட்டு காமெடி படங்களும் இவர் ஸ்பெசாலிட்டி. இவரின் 100 வது படம் "திருப்பதி எழுமலை வெங்கடேசா" நல்ல ஹிட். பின் கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வனாதன் ராமமூர்த்தி போன்ற படங்களும் ஓரளவு ஓடின. இடைக்காலத்தில் விஜயகாந்த் (கரிமேடு கருவாயன்), பிரபு (சூரக்கோட்டை சிங்ககுட்டி),கார்த்திக்,சுரேஷ் (இளஞ்ஜோடிகள்) அர்ஜுன்,ஆனந்த்பாபு (கடமை),சந்திரசேகர் (இவர் ஆஸ்தானம்) ஆகியோரை வைத்து பல படங்கள் எடுத்தவர். தமிழ் தவிர தெலுங்கு,கன்னடம்,ஒரியா,போஜ்பூரி ஆகிய மொழிகளிலும் வெற்றிப்படங்களை கொடுத்தவர். விலங்குகளுக்கு ஏது பாஷை? மொழி பிரிவினை?. இதுவரை 113 படங்களை இயக்கியுள்ளார். ஒரெ சமயத்தில் பல உதவி இயக்குனர்களைக் கொண்டு நான்கு, ஐந்து படங்களை இயக்கியதால் மேஸ்திரி இயக்குனர் என்று அழைக்கப்பட்டவர். குறைந்த செலவில் படமெடுப்பதால் ஏவிஎம்,கவிதாலாயா நிறுவனங்களும் இவர் இயக்கத்தில் படம் தயாரித்துள்ளன. 1989 தேர்தலில் திமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சஙகத்தலைவராகவும் உள்ளார்.

ஆனால் இவரது ஆரம்ப காலப் படங்கள் கம்யூனிச சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. முதல் படம் சுமை (1981). வேலை இல்லாதால் குடும்பத்தார் படும் சிரமங்களை அடிப்படையாக கொண்டது. 1982 ல் இவர் இயக்கிய சிவப்புமல்லி (விஜயகாந்த்,சந்திரசேகர், தயாரிப்பு ஏவிஎம்) கம்யூனிச சிந்தனையை அடிப்படையாக கொண்டது. மே தினம் உழைப்பவர் சீதனம் என்னும் பாடலில் வரும் "ரத்தச் சாட்டை எடுத்தால்" என்னும் வரி சென்சாரால் முதலில் ஆட்சேபிக்கப்பட்டது. ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம், தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் என்னும் அருமையான பாடலும் உண்டு.

பி வாசு

இவர் பெயரக் கேட்டாலே மசாலா நெடி மூக்கைத்துளைக்கும். சென்டி மெண்ட் இல்லை மீட்டர் மெண்ட், கிலோமீட்டர் மெண்ட் ரேஞ்சுக்கு சென்டிமெண்ட் காட்சிகள் அமைப்பார். பிரபு (என் தங்கச்சி படிச்சவ, சின்னதம்பி) சத்யராஜ் (வேலை கிடைச்சுடுச்சு,நடிகன்,வால்டேர் வெற்றிவேல்), ரஜினி (மன்னன்,சந்திரமுகி) போன்ற அவர்களின் முக்கிய படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் அடியாட்களுக்கு யூனிபார்ம் (வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி) முதலில் கொடுத்தவர் இவர்தான். இவரும் பிறமொழி படங்கள் இயக்கியுளார்.

இவர் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் இருந்தவர். இவரும் மற்றொரு உதவியாளரான சந்தான பாரதியும் இணைந்து பாரதி-வாசு என்னும் பெயரில் இயக்கிய படம் பன்னீர் புஷ்பங்கள். விடலை பருவ காதலை பேசியபடம். போர்டிங் ஸ்கூலில் படிக்கும் சுரேஷும்,சாந்தி கிருஷ்ணாவும் மோதலுக்குப் பின் காதலிக்கிறார்கள். பிரதாப் போத்தன் ஆசிரியர். பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள் எனப் போகும். ஓ வசந்த ராகம் கேட்கும் நேரம் போன்ற மெலடிகளும், ஹாஸ்டல் சாப்பாட்டை கிண்டல் செய்து மாணவர்கள் பாடும் வெங்காய சாம்பாரும் வேகாத சோறும் போன்ற பாடல்களும் ஹிட்டானவை

வி சேகர்

சிறு முதலீட்டு படங்களை இயக்கி புகழ் பெற்றவர். நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறி போச்சு, ஒண்ணா இருக்க கத்துக்கணும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற கீழ் மத்தியதர குடும்ப வாழ்க்கையை பேசும் பல படங்களை இயக்கியவர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். கவுண்டமணி,செந்தில்,ஜனகராஜ்,விவேக்,வடிவேல்,சார்லி,சின்னி,வையாபுரி போன்ற நகைச்சுவை நடிகர்கள், வணிக மதிப்பு குறைந்த சிவகுமார்,நிழல்கள் ரவி, நாசர், லிவிங்ஸ்டன் போன்ற நடிகர்கள், மார்க்கட் இழந்த நடிகைகள் ஆகியோரை வைத்து குறுமுதலீட்டில் படம் எடுக்க வல்லவர். இசையைப் பற்றி கவலைப்படுவதில்லை. நல்லா இருந்தா சந்தோசம், இல்லையா ரொம்ப சந்தோசம் (பாட்டு ரிச்சா எடுக்கனுமே) என்னும் கொள்கை உடையவர்.

பாக்யராஜின் உதவியாளரான இவரின் முதல் படம் நீங்களும் ஹீரோதான். ஹீரோக்களை தோலுரித்துக்காட்டிய இப்படத்தின் நாயகன் நிழல்கள் ரவி. இப்படத்தைக்கண்டு அப்போதைய சில ஹீரோக்கள் எரிச்சலானார்கள். கவுண்டமணி கூத்து வாத்தியாராகவும், செந்தில் அவர் மாணவராகவும் வருவார்கள். ஒரு கிராமத்திற்க்கு சினிமா எடுக்க வருவதை களமாக கொண்டு பட குழுவினரையும், ஹீரோக்களையும் எள்ளல் செய்த படம்.

கே எஸ் ரவிக்குமார்

எஸ் பி முத்துராமனுக்குப் பின், தயாரிப்பாளர்களின் கஷ்டம் புரிந்த இயக்குனர் என பெயர் பெற்றவர். ரஜினி (முத்து,படையப்பா), கமல் (அவ்வை சண்முகி, தசாவதாரம்), அஜீத் (வில்லன்,வரலாறு), சரத் (நாட்டாமை,நட்புக்காக) என அவர்கள் கேரியரின் மைல்கல் படங்களை தந்தவர். இதுதவிர புருஷ லட்சனம்,பிஸ்தா போன்ற சிறுமுதலீட்டில் அதிக லாபம் தந்த படங்களையும் இயக்கியவர்.

வெளிநாடுகளுக்கு படங்களை வினியோகிப்பவராக துவங்கி பின்னர் உதவி இயக்குனரானவர். இவர் பணிபுரியும் படங்கள் வெளியாகாது என்னும் செண்டிமெண்ட் கொண்டவர். இவர் இயக்குனராகும் போது இரண்டு படங்களே வெளியாகிருந்தன, அதில் ஒன்று புதுவசந்தம். அப்படத்தில் இவரின் திறமையை கவனித்த ஆர் பி சௌத்ரி இவருக்கு இயக்குனர் வாய்ப்பளித்தார். அப்படம்தான் புரியாத புதிர்.
எந்தவித கமர்ஷியல் ஐட்டங்களும் இல்லாமல் வெளிவந்த திரில்லர் படம் இது. ரகுவரன்,ரேகா,ஆனந்த் பாபு, சரத்குமார் நடித்தது. கணவன் கொலை செய்யப்படுகிறான். சந்தேகம் மனைவி,அவளின் முன்னாள் காதலன் உட்பட பலரை சுற்றி வருகிறது. இதில் சைக்கோ கணவன் வேடத்தில் ரகுவரன் அசத்தியிருப்பார். ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷன்களில் உச்சரிப்பார். எத்தனை முறை அவ்வாறு சொல்கிறார் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை ஓடவைக்க போட்டி கூட நடத்தப்பட்டது.

இயக்குனர் ஷங்கர் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். "எனது முதல் படமாக குயில் என்னும் படத்தை எடுக்க நினைத்தேன், ரகுவரன், ரேவதி,விவேக் காம்பினேசனில். ஆனால் முடியவில்லை என்று.

இந்தப் படங்கள் எல்லாமே ஓரளவு ஓடிய படங்கள் தான். ஆனால் வெற்றி என்று சொல்ல முடியாது. ஒருவேளை இப்படங்கள் பெருவெற்றி அடைந்திருந்தால், இவர்கள் வேறுமாதிரிப் படங்களை கூட கொடுத்திருக்கலாம். யார் கண்டது?.

34 comments:

bullet said...

மீ த ஃபர்ஸ்ட்..

வழக்கம் போல தெளிவான அலசல்..

முரளிகண்ணன் said...

தங்கள் வருகைக்கு நன்றி, நானும் ஒருவன்

சரவணகுமரன் said...

//ஒரெ சமயத்தில் பல உதவி இயக்குனர்களைக் கொண்டு நான்கு, ஐந்து படங்களை இயக்கியதால் மேஸ்திரி இயக்குனர் என்று அழைக்கப்பட்டவர். //

:-))

//பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறி போச்சு, ஒண்ணா இருக்க கத்துக்கணும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை //

எல்லா படங்களிலும் ஒரே திரைக்கதை. மூணு ஜோடி, அதுல ரெண்டு காமெடி ஜோடி, ஒரு அரசியல்வாதி, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட். கவுண்டமணி, வடிவேலு, விவேக் வந்த படங்கள் எல்லாம் இப்ப டிவி'ல பாக்கும் போது, ரொம்ப நல்லா இருக்கு. ஒரு டைம், பஸ்ல வரும்போது, இவர் படம் ஒண்ண பார்த்து பஸ்'சே சிரிப்புல குலுங்கிச்சி.

narsim said...

இந்த துறையில் ஆய்வு மேற்கொண்டால் முனைவர் பட்டம் உறுதி..

நல்ல பகுப்பாய்வு முரளி..

இராம நாராயணன் ஆரம்பகாலம் அருமை..

மனோபாலா கூட ஊர்க்காவலன் என்ற படத்தை இயக்கியவர் என்று நினைக்கிறேன்..

தொடருங்கள்..

நர்சிம்

சரவணகுமரன் said...

ஆர்.வீ. உதயகுமாரையும் சேர்த்திருக்கலாம்.

கானா பிரபா said...

மீண்டும் ஒரு நல்ல தொகுப்பு முரளி, இன்னும் சில இயக்குனர்களையும் சேருங்கள், பாலம், மூன்றாம் படி படங்களை எடுத்த கார்வண்ணனும் குறிப்பிடத் தகுந்தவர்.

Muralidharan said...

Good analysis. Please put the first films of other popular directors too

rapp said...

இன்னைக்கு பதிவு கலக்கலோ கலக்கல்:):):) ராமநாராயணன் அவர்கள்தான் அப்படியே நேர்மாறா மாறி படம் எடுத்திருக்கார். வாசு சாரைப் பத்தி என்னா சொல்றது? முன்னயாவது இவரோட மசாலாப் படங்கள் பாக்க நல்லா இருக்கும், இப்போ அதுவும் செம போரடிக்குது:(:(:( வி.சேகர் அவர்கள் பத்தி உங்க விமர்சனம் சூப்பர். இவர் பாக்யராஜ் அசிஸ்டென்டா? ரவிக்குமார் அந்த ஐ நோ சீனை ஸ்பாட்ல யோசிச்சு மாத்துனார்னு டைரெக்டர் சேரன் பேட்டியில் ஒருமுறை சொல்லிக் கேட்டிருக்கேன். எனக்கு இவரோட பிஸ்தா படம் ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு டாபிக் ரொம்ப ரொம்ப சூப்பர்:):):)

Bleachingpowder said...

நிறைய உழைத்திருக்கிறீர்கள், பதிவை படிக்கும் போதே உணர முடிகிறது.வாழ்த்துகள்.


வெங்கட் பிரபுவின் முதல் படமான, உன்னை சரனடைந்தேனும், பாலாஜி சக்திவேலின் சாமுராயிம் கூட இப்படிதான் முதன் படத்தின் சாயல் துளி கூட இருக்காது பின்னர் எடுத்த திரைபடங்களில். அதே போல் விஜயின் ஆரம்ப கால படங்களை கண் கொண்டு பார்க்க முடியாது. ஒரு பிரபல வார இதழ் இந்த முஞ்சியை எல்லா பார்க்க வேண்டியிருக்கிறது என்று கூட எழுதியிருந்தது.

thamizhparavai said...

இம்முறை அலசல் வித்தியாசமாக இருந்தது முரளிகண்ணன்...
//பாரதி-வாசு //
அப்பாடல் 'ஆனந்த ராகம் கேட்கும் காலம்'
இக்கூட்டணியின் இன்னுமொரு படம் 'மெல்லப்பேசுங்கள்'.பானுப்ரியாவின் அறிமுகப்படம்.இதுவும் நார்மலான படம்தான்(மசாலா நெடி இல்லாமல்)..
'செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு' பாடல் இனிமையான ஒன்று.
வீ.சேகர் இப்போ என்ன ஆனாருன்னே தெரியல. இவர் சுகாதாரத்துறை அதிகாரியாக வேலை பார்த்துவிட்டு சினிமாவிற்கு வந்தவர்.கடைசியா டிராக் மாறி 'ஆளுக்கொரு ஆசை'ன்னு ஒரு காவியம் கொடுத்தாரு.
கே.எஸ்.ரவிக்குமாரைப் பத்தி சொல்லவே வேணாம். எல்லாமாதிரிப் படமும் எடுப்பாரு.

இனியா said...

aaha arumai Murali...

Kamal-KS Ravikumar innoru padam - Thenali

Mani Ratnathin muthal padathirkum,
avarin matra padankalukkum sambanthame irukkaathu...

வெண்பூ said...

நல்ல கலெக்ஷன் முரளி..

//
எத்தனை முறை அவ்வாறு சொல்கிறார் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை ஓடவைக்க போட்டி கூட நடத்தப்பட்டது.
//
ரகுவரன் தொகுத்த குமுதத்தில் இதற்கான விடையை அவரே சொல்லியிருந்தார். 34 முறை.

புருனோ Bruno said...

//ஹீரோக்களையும் எள்ளல் செய்த படம். கே எஸ் ரவிக்குமார்//

பகடி, கேலி, கிண்டல், - பொருத்தமான தமிழ் சொல் எள்ளல் என்று நினைக்கிறேன்

இனி நானும் பயன் படுத்துகிறேன்

புருனோ Bruno said...

//ரகுவரன் தொகுத்த குமுதத்தில் இதற்கான விடையை அவரே சொல்லியிருந்தார். 34 முறை.
//

”எந்திரி அஞசலி” அதுக்கு பிறகு வந்ததா, அதுக்கு முன்ன வந்த படமா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன், நர்சிம்,கானாபிரபா,ராப்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி முரளிதரன்.

பிளீச்சிங் பவுடர் வருகைக்கு நன்றி.


\\வெங்கட் பிரபுவின் முதல் படமான, உன்னை சரனடைந்தேனும்\\

உன்னைச்சரணடைந்தேன் படத்தை இயக்கியது சமுத்திரக்கனி. பின்னர் பருத்திவீரனில் பணியாற்றினார். சுப்ரமணியபுரத்தில் கடைசி தம்பியாக நடித்தார். பல டிவி சீரியல்களும் இயக்கியுள்ளார்.

முரளிகண்ணன் said...

ராப்,


\\வி.சேகர் அவர்கள் பத்தி உங்க விமர்சனம் சூப்பர். இவர் பாக்யராஜ் அசிஸ்டென்டா?\\

தற்போது உணவுத்துறை அமைச்சராக இருக்கும் எ வ வேலு முன்பு தண்டாரம்பட்டு வேலு என்று அறியப்பட்டவர். இவர்தான் பாக்யராஜிடம் இருந்து பிரிந்த சேகர் வளரக்காரணமாக இருந்தவர்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி தமிழ்பறவை.

இனியா, மணிரத்னத்தின் முதல் படமான சாந்தி சாந்தி சாந்தி (அனில்கபூர்,லட்சுமி நடித்தது, நான் முழுவதும் பார்க்கவில்லை)

வெண்பூ வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்

வெண்பூ said...

//
”எந்திரி அஞசலி” அதுக்கு பிறகு வந்ததா, அதுக்கு முன்ன வந்த படமா
//

http://en.wikipedia.org/wiki/Raghuvaran

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி புருனோ

பரிசல்காரன் said...

டாக்டர் முரளி வாழ்க!

நீங்க ஒரு வலையுலக ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்!!'

வினையூக்கி said...

அருமையான தொகுப்பு . சாந்தி சாந்தி சாந்தி , படத்தின் மூல கன்னடப்படத்தின் பெயர் பல்லவி அனுபல்லவி. இது அணில்கபூருக்கு கூட முதற்படம்.
இந்தப்படத்தில் அணில்கபூர் பின்னாலேயே நடந்தபடி காதலியுடன் பேசிவரும் காட்சி பின்னர் மௌனராகத்திலும் வரும்

Boston Bala said...

second time?

A meme invite:
India Films to Indie Movies - Meme « Snap Judgment

முன்கூட்டிய நன்றிகள் பல :)

கானா பிரபா said...

// மணிரத்னத்தின் முதல் படமான சாந்தி சாந்தி சாந்தி (அனில்கபூர்,லட்சுமி நடித்தது, நான் முழுவதும் பார்க்கவில்லை)//


Maniratnam's first film is Pallavi Anupallavi

சரவணகுமரன் said...

உங்கள் பதிவு மட்டும் இல்லை, பதிவின் பின்னுட்டங்களிலும் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

புருனோ Bruno said...

http://en.wikipedia.org/wiki/Raghuvaran

1990 Anjali
1990 Puriyaadha Pudhir

எது முதலில் :)

ஜியா said...

அருமையான அலசல்....

முரளிகண்ணன் said...

பாஸ்டன் பாலா தங்கள் ஆதரவுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ,ஜி,வினையூக்கி,சரவண குமரன், புருனோ.

முரளிகண்ணன் said...

கானாபிரபா, பல்லவி அனுபல்லவி தான் ஒரிஜினல். நான் பார்த்தது தமிழ் டப்பிங். விஜய் டிவியில்

அக்னி பார்வை said...

ஒரு முறை ராம நாராயனன் இப்படி கூறினார் ‘ நான் பெண் டைப் செய்வது போல் படமெடுத்தேன்
யாரும் பார்க்கவில்லை; ஆனால், பாம்பு டைப் செய்வது போல் படமெடுத்தேன் house full ஆக ஓடியது’

Thamira said...

பன்னீர் பஷ்பங்கள் இயக்கியது, வாசுவா? கிழிஞ்சுது போ.!

புதுகை.அப்துல்லா said...

அண்ணே ராமநாராயணனோட சிகப்புமல்லிய சமீபத்துல( சமீபத்துலன்னா உண்மையிலேயே சமீபத்துலதான் 2 மாசம் முந்தி) டி.வியில பார்த்தப்ப அசந்துபோனேன். நடிகர்கள் கால்ஷீட்டால்தான் கால்ஷீட் பிரச்சனை பண்ணாத குரங்குகே மேல்னு முடிவு பண்ணுனேன்னு ஓரு பேட்டியில் சொன்னாரு.

கிரி said...

//ராம நாராயணன்
இவர் பெயரைக் கேட்டாலே நம் ஞாபகத்துக்கு வருவது விலங்குகளை வைத்து இவர் இயக்கிய படங்கள்தான்.//

:-)))))))

//பி வாசு
இவர் பெயரக் கேட்டாலே மசாலா நெடி மூக்கைத்துளைக்கும்//

இன்னொரு நெடியும் கண்ணை துளைக்கும் :-))

//கவுண்டமணி கூத்து வாத்தியாராகவும், செந்தில் அவர் மாணவராகவும் வருவார்கள்//

செம காமெடியா இருக்கும்

//ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷன்களில் உச்சரிப்பார். எத்தனை முறை அவ்வாறு சொல்கிறார் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை ஓடவைக்க போட்டி கூட நடத்தப்பட்டது//

நினைவிருக்கிறது

ரன் பட இயக்குனர் லிங்குசாமி முதல் படம் குடும்ப படம்..அவர் என்னுடைய அடுத்த படம் இதை போல இல்லாமல் அதிரடியாக இருக்கும் என்றார். சொன்ன மாதிரியே ரணகளமாக எடுத்து இருப்பார்..செம விறுவிறுப்பு