October 11, 2008

சச்சின் - ரஜினி, டிராவிட் - கமல், கங்குலி - விஜயகாந்த்

சச்சின் - ரஜினி

இருவருக்கும் ரசிகர்கள் அதிகம். ஒருவர் களத்தில் இறங்கினால் மைதானம் அலறும், மற்றொருவருக்கு தியேட்டர். பெரியவர் முதல் குழந்தை வரை கவர்ந்தவர்கள். ஒருவருக்கு விளம்பரபட தயாரிப்பாளர்கள், மற்றொருவருக்கு பட தயாரிப்பளார்கள் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இருவருக்கும் கடவுள் பக்தி அதிகம். ரஜினிக்கு பாபா, சச்சினுக்கு சாய்பாபா, இங்கே காளிகாம்பாள் அங்கே சித்திவினாயகர்.

இருவரும் அர்ஜுனனை போன்றவர்கள். களத்தில் இறங்கினால் அதகளம் தான். ஆனால் தலைமைப்பண்பு என வரும்போது? அதற்கென்று சில தனியான குணங்கள் வேண்டும். அது இருவருக்கும் குறைவு. இமேஜ் பற்றி இப்போது அதிகம் கவலைப்படுகிறார்கள். வால்டேர் தேவாரம் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை தலைவரானபோது கூட சொன்னார்கள், "இவர் அருள்,ஸ்ரீபால் போன்றோர் வியூகம் அமைத்து கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்". ஆனால் இவரால் தனியாக சிறப்பாக செயல்படமுடியாது என்று. அதை நிரூபித்தார். இவர்களும் அவரைப் போன்றவர்களே.

டிராவிட் - கமல்

இருவரும் தங்கள் துறைகளில் கைதேர்ந்தவர்கள். ஆனால் முன் ஜோடியுடன் ஒப்பிட்டால் ரசிகர்கள் குறைவு. இருவரும் வல்லுனர்களால் சிலாகிக்கப்படுபவர்கள், சாதாரண ரசிகர்களால் அன்னியமாக பார்க்கப்படுபவர்கள். ஒருவர் அற்புதமான பேட்டிங் டெக்னிக் இருந்தும் பார்ப்பவரை நோகடித்துவிடுவார். மற்றவர் அபாரமான நடிப்பு இருந்தும் பார்ப்பவரை சிலநேரம் இருக்கையில் நெளியவைத்துவிடுவார்.

டிராவிட்டுக்கு இந்தியாவைவிட வெளிநாட்டில் டெஸ்ட் சராசரி அதிகம். கமலுக்கு தமிழ்நாட்டை விட வெளி ஏரியாக்களில் மதிப்பு அதிகம்.

கங்குலி - விஜயகாந்த்

முன் இரு ஜோடிகளுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு தொழில் திறமை குறைவு. ஆனாலும் இருப்பதை வைத்துக்கொண்டு இவர்களுடன் மல்லுக்கட்டி முன்னேறியவர்கள். கங்குலிக்கு ஆப் சைட் என்றால் விஜயகாந்துக்கு ஆக்சன் சீன். கங்குலிக்கு லெக் சைட்டில் நளினமாக ஆடவராது. நம்மாளுக்கு காலை வைத்து நளினமாக ஆட தெரியாது. பார்ம் போனபின் மீடியாக்களால் பந்தாடப்பட்டவர்கள். ஒருவருக்கு வங்காளம் பின்னால் நின்றது. இவருக்கு இவரது பி & சி ரசிகர்கள். துறை வல்லுனர்களிடம் இவர்களைப்பற்றி கேட்டால் நல்லமுறையில் பதில் வராது, ஆனாலும் நின்றவர்கள்.

ஆனால் தலைமைக்கு தேவையான குணங்கள் இருவரிடமும் அதிகம். தைரியமானவர்கள். கங்குலி, 1991 ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் கிரிக்கெட் ஆட வந்தேன், கூல்ட்ரிங்ஸ் கொடுக்க அல்ல என்று நிர்வாகத்தை எதிர்த்தவர். இவர் நான் கதானாயகனாகதான் நடிப்பேன், வில்லனாக மாட்டேன் என்று அடம் பிடித்தவர். இவர் பார்மை இழந்து பின்னர் மீண்டும் எழுந்து நிற்பார். பல தோல்விப்படங்கள் கொடுத்தாலும் பின் ஒரு வெற்றியின் மூலம் இவரும் எழுந்துநிற்பார்.

23 comments:

Thamiz Priyan said...

நல்ல வித்தியாசமான ஓப்பீடுகள்... :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ்பிரியன்

நிலாக்காலம் said...

எல்லாமே சரியாத்தான் இருக்கு.. அதிரடிக்கார மச்சான் தோனியை விட்டுட்டீங்களே.. :(

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நிலாக்காலம். தோனி சிக்காமலா போயிடுவாரு? அப்ப பார்த்துக்கலாம்

வினையூக்கி said...

Tres bien - Excellent -அட்டகாசம் போங்க ஒப்பீடுகள். இதே வகையில் நான் முன்பு ஒரு முறை யோசித்துப் பார்த்து இருக்கேன். டெண்டுல்கர் - ஏ.ஆர்.ரகுமான் , ஹாரிஷ் ஜெயராஜ் - வீரேந்திர சேவக்

----
கங்குலியை அஜித்தூடன் ஒப்பீட்டுப் பார்த்து இருக்கேன். மீள்வருகைகளில் இவர்கள் இருவரையும் அடித்துக் கொள்ள முடியாது.

---
ஜெயம் ரவியைப்பார்க்கும்பொழுதெல்லாம் யுவராஜ் சிங் நினைவுக்கு வரும்

தமிழன் said...

கங்குலி ஓய்வு பெற்றுவிட்டார், விஜயகாந்தை ஓய்வு பெறச் சொல்லுங்கள், திரைப்படத்தில் இருந்தும்,இப்போது போல் நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருந்தால் அரசியலிலும்.

முரளிகண்ணன் said...

வினையூக்கி, தங்கள் இசை ஒப்பீடு அருமை

முரளிகண்ணன் said...

வாங்க திலீபன், தங்கள் வருகைக்கு நன்றி

வந்தியத்தேவன் said...

கும்ளே கார்த்திக்
இருவரும் இளமையாக இருந்தபோது கலக்கினார்கள். இருவருக்கும் பெண் ரசிகைகள் அதிகம். தலைமைப் பதவி குருவி தலையில் பனங்காய் தான். கார்த்திக் கைவிட்டதுபோல் விரைவில் கும்ளேயும் கைவிடுவார்.

யுவராஜ் ‍சிம்பு
விளையாடினாரோ இல்லையோ யுவராஜ் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். சிம்புவும் நடிக்கிறாரோ இல்லையோ சர்ச்சை. இருவரும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்கள். சிறந்த வீரராகவும் நடிகராகவும் வரவேண்டியவர்கள் தங்கள் வாய்களாலும் செயல்களாலும் தம்மைத் தாமே அழித்துக்கொள்கிறார்கள்.

புருனோ Bruno said...

//கங்குலிக்கு லெக் சைட்டில் நளினமாக ஆடவராது. நம்மாளுக்கு காலை வைத்து நளினமாக ஆட தெரியாது. //

:) :)

ரசித்தேன்

அத்திரி said...

கலக்கிட்டீங்க. நல்ல ஒப்பீடு

வெண்பூ said...

ஆஹா... கலக்கல் கம்பேரிசன் முரளி.. எப்படி இப்படியெல்லாம்? ஆனா, பாத்து நீங்க சொல்லியிருக்குற ஒருசில விசயங்களுக்காக வலை மக்கள் உங்க மேல பாயப்போறாங்க :)))

//
தலைமைப்பண்பு என வரும்போது? அதற்கென்று சில தனியான குணங்கள் வேண்டும். அது இருவருக்கும் குறைவு
//

//
முன் ஜோடியுடன் ஒப்பிட்டால் ரசிகர்கள் குறைவு
//

ARV Loshan said...

அருமை.. கலக்கிடீங்க.. கங்குலி-விஜயகாந்த் கேப்டன்.. ;)
அஜித்,விஜயை விட்டுட்டீங்களே..
அப்ப கும்ப்ளே தான் சத்யராஜா? ;)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வந்தியதேவன்,அத்திரி,புருனோ,வெண்பூ,லோஷன்,திலீபன்

மிக்க நன்றி

narsim said...

முரளி கண்ணன்,

அருமையான பதிவு..

வித்தியாசமான சிந்தனை...

கங்குலியுடன் அஜித்தையும் ஒப்பிடலாமோ?

நர்சிம்

முரளிகண்ணன் said...

நரசிம் வருகைக்கு நன்றி

சரவணகுமரன் said...

சூப்பர் ஒப்பிடு... நானும் இதுப்போல் நினைத்ததுண்டு.... :-)

யோசிப்பவர் said...

வினையூக்கி சொன்னது போல், எனது நண்பர்கள் வட்டத்தில் கங்குலிக்கும், அஜித்துக்குமான ஒப்பீடுகள் அடிக்கடி நடக்கும். அதனாலேயே டென்டுல்கரை விஜயுடன் ஒப்பிடுவார்கள்(அஜித் = கங்குலி என்பதால் மட்டுமே)

rapp said...

super:):):)

//கங்குலி - விஜயகாந்த்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

முரளிகண்ணன் said...

saravanakumaran, yosippavar,rapp

Thanks for your valuable comments

கிரி said...

//நம்மாளுக்கு காலை வைத்து நளினமாக ஆட தெரியாது//

நல்லா சண்டை போட தெரியும் :-)

முரளிகண்ணன் கலக்கலா ஒப்பிட்டு இருக்கீங்க..நீங்க சொல்வது நல்லா பொருந்தி வருது

Anonymous said...

என்ன?? தலைவர் கங்குலி யை விஜயகாந்த் தோடு ஒப்பிடுவதா??
தலைவர் கங்குலி யை தலைவர் ரஜினி யோன் தான் ஒப்பிட வேண்டும்..
கங்குலி - ரஜினி

டெண்டுல்கர் - கமல்

கங்குலி க்கு ட்ராவிட் ஐ விட அதிக ரசிகர்கள் உள்ள்னர்...

Info Center said...

pls dont compare sports players to cine actors....in my view players are better, actors are waste. they want to thank full for their fans. but not to players. they have skills. but actors have just acting skill. acting skill all peoples are having. so pls dont appreciate, big fans for actors....specially for south Indian actors... i'm also from tamilnadu. so dont compare pls..