January 06, 2009

தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் கடினமான வேலைகளுள் ஒன்று தயாரிப்பு நிர்வாகி வேலை. அச்சாணியாக இருந்து தேரை திரையரங்கில் நிலை நிறுத்தும் வரை அவரது பணி ஓய்வில்லாமல் இருக்கும். ஒரு நல்ல தயாரிப்பு நிர்வாகியால் பட செலவை 20% வரை குறைக்கலாம் என்பதில் இருந்தே அவர்களின் முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு தயாரிப்பு நிர்வாகியின் பணி என்ன?

ஒரே ஒரு நிமிடம் வரும் காட்சியை எடுத்துக் கொள்வோம். காலையில் கடற்கரையில் ஒரு பிணம் ஒதுங்கி இருக்கிறது. மக்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். காவல்துறையினரும் வந்து பார்க்கிறார்கள். அவ்வளவுதான். எந்த ஹீரோ,ஹீரோயினும் இல்லை. இந்த காட்சி எடுக்க என்னென்ன முன் தயாரிப்புகள் தேவை?

1. கடற்கரையில் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி

2. கேமரா உள்ளிட்ட அவுட்டோர் யூனிட் உபகரணங்களை வாடகைக்கு தரும் நிறுவனத்திடம் இருந்து ஏற்பாடு செய்தல்

3. காட்சிக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்தல்

4.டைரெக்டர், கேமரா மேன் அவரது உதவியாளர்கள் படபிடிப்பு இடத்தை அடைய ஏற்பாடு செய்தல்

5. காவல்துறையினராக நடிப்பவருக்கான உடை, அவர்கள் வரும் போலிஸ் ஜீப் ஏற்பாடு

6. வரும் அனைவருக்கும் காலை சாப்பாடு

இது போல கண்ணுக்கு தெரியாத பல வேளைகளும் இருக்கும். தயாரிப்பாளரிடம் அன்று பணம் இல்லை என்றால் அதையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

ஷங்கர் போன்றோர் படத்தில் பணிபுரிபவர்கள் என்றால். எடுத்துக்காட்டாக சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடல் காட்சியை எடுத்துக் கொள்வோம்

1. ரஜினி, நயன் தாரா, ஷங்கர், கே வி ஆனந்த், தோட்டா தரணி, பிருந்தா மாஸ்டர் மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரது உதவியாளர்களின் பயண் ஏற்பாடு,தங்குமிடம்
2. தொப்பையில் படம் வரைந்து ஆட வேண்டுமென்பதால் பெருந்தொப்பை கொண்டான்களின் ஏற்பாடு, பெயிண்ட், அனைவருக்கும் உணவு ஏற்பாடு.
3. அகேலா கிரேன், ஜிம்மி ஜிப் போன்ற நவீன கேமரா உபகரண ஏற்பாடு

யோசியுங்கள். இதை காஸ்ட் எபெக்டிவ்வாகவும் செய்ய வேண்டும். இத்தனை அம்சங்களும் அந்த இடத்தில், நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதுதான் தயாரிப்பு நிர்வாகியின் முதற்கட்ட பணி.

இம்மாதிரி சிறப்பாக திட்டமிட தெரிந்தால் மட்டும் போதுமா? வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும்?. குயுக்தி என்னும் தாமிரம் கிடைத்தால் கலந்தால் தான் அணிகலனாக முடியும்.

1. மார்க்கட்டில் மாறிவரும் நடிக,நடிகையரின் மதிப்பை சரியாக கணித்து சம்பளம் பேச வேண்டும். நடிகையாக இருந்தால் யாரையும் காதலிக்கிறாரா? ஓடிவிடிடும் நிலையில் இருக்கிறாரா என்ற தகவல்கள் வரை தெரிந்திருக்க வேண்டும்.

2.எது எது எங்கே மலிவு?, வாடகை சிறந்ததா, வாங்குவது சிறந்ததா? உள் கமிஷன் அடிப்பவர்கள் யார்? எப்படி தவிர்க்க வேண்டும்?

3.நடிகையோ அவரது தாயாரோ பார்க் ஷெராட்டன் பட்டர் சிக்கன் தான் வேண்டும் என்பார்கள். முதல் தடவை வாங்கும் போது மட்டும் அங்கே வாங்கிவிட்டு கூடுதலாக நாலு பார்சல் கவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்

4. மார்க்கட்டில் உள்ள காமெடி நடிகர்களை சமாளிப்பது சாமானியமானதல்ல. அவர்கள் டப்பிங் பண்ணும் வரை தெளிவாக தாங்க வேண்டும்.

இம்மாதிரி பல திறமைகள் தேவைப்படும் இந்த வேலை, தயாரிப்பாளராக மாறுவதற்க்கேற்ற பெரும் அனுபவத்தை கொடுக்கக் கூடியது. தற்போதுள்ள பல தயாரிப்பாளர்கள் முன்பு நிர்வாகியாய் இருந்தவர்களே. ஜெமினி கணேசன் தான் பார்த்து வந்த தாம்பரம் கிறித்துவக் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து தயாரிப்பு நிர்வாகியாய் ஜெமினி ஸ்டியோவில் சேர்ந்தார். பின்னர் அந்த ஸ்டியோவின் மாத சம்பள நடிகரானார். அந்நாளைய பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ஜெமினி,ஏவிஎம்,விஜயா வாகினி ஆகியவை தயாரிப்பு நிர்வாகத்துக்கு தங்களுக்கு வேண்டிய ஆட்களை மட்டுமே வைத்துக் கொன்டிருந்தன. ஏவிஎம் சரவணன் முதன் முதலாக தங்கள் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகி பணியைத்தான் பார்த்தார். ராஜ்கமல் பிலிம்ஸ்ல் இருந்த டி என் சுப்ரமணியம் திறமையாக பணியாற்றியவர். அவர் வயதின் காரணமாக ஓய்வு பெறும்போது தயாரிப்பாளர் அவருக்கு விழா எடுத்து ஓய்வு தொகையாக 10 லட்சம் அளித்தார்.


நிர்வாகியாய் இருந்து தயாரிப்பாளராய் மாறியவர்கள்

பிரமிட் நடராஜன்

இவர் கவிதாலயா நிறுவனத்தில் பணியாற்றிய போது கவிதாலயா நடராஜன் என அழைக்கப்பட்டார். அப்போது பிரமிட் ஆடியோ நிறுவனத்தை இவர் தொடங்கியதால் பிரமிட் நடராஜன் என அழைக்கப்பட்டார். பிரமிட் சாய்மீராவுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை என்பது புதுகை அப்துல்லாவுக்கும், காஷ்மீர் ஓமர் அப்துல்லாவுக்கும் உள்ள ஒற்றுமை போன்றது. இவர் கவிதாலயாவில் இருந்து வெளியேறி அப்போது லைம்லைட்டில் இருந்த பிரபுதேவா,நக்மா ஆகியோரை வைத்து ரஹ்மான் இசையில் பி வாசு இயக்கத்தில் லவ்பேர்ட்ஸ் படத்தை தயாரித்தார். படம் படு தோல்வி. பின்னர் சங்கமம்,ரிதம் போன்ற படங்களை தயாரித்தார். அலைபாயுதேவில் நடிப்பில் கிடைத்த பெயரால் தற்போது குணசித்திர நடிகராக மாறிவிட்டார்.

பி எல் தேனப்பன்

ட்ரெயின் டிக்கட் புக் செய்து கொடுப்பவராக பணியை துவக்கி பின் சூப்பர் குட் பிலிம்ஸ், ரவிக்குமாரின் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாய் இருந்தவர். முத்து படத்தில் செந்தில் கேரக்டருக்கு இவர் பெயரை வைப்பது வரை அவர் மனதில் இடம் பிடித்தவர். கமலின் அபிமானத்துக்கும் உரியவர். பெப்ஸி பிரச்சினையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல் துவக்கிய காதலா காதலா படத்துக்கு இவரே தயாரிப்பாளர். பின்னர் மீடியா டிரீம்ஸ் தயாரித்த பம்மல் கே சம்பந்தம் இவர் பேனரில்தான் வெளியானது. திவான்,கனா கண்டேன்,பிரியசகி, வல்லவன், துரை ஆகிய படங்களை தயாரித்தார்.

எஸ் கே கிருஷ்ணகாந்த்

லஷ்மி மூவி மேக்கர்ஸ்ல் பணியாற்றிய இவர் இந்தியன் மூவி மேக்கர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கி கிங் போன்ற படங்களை தயாரித்தார். திருடா திருடி என்னும் படம் மூலம் பிரபலமானார். முதல் வார ஓட்டத்துக்ப்பின் என் எஸ் சி ஏரியாவில் அந்தப் பட உரிமை ஏலம் விடப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. சிம்புவின் வெற்றிப்படமான மன்மதனும் இவர் தயாரிப்பே

பாபு ராஜா

சூப்பர் குட் பிலிம்ஸ்ல் பணியாற்றிய இவர் பின்னர் சரத்குமார்,வடிவேல் ஆகியோரை வைத்து அரசு,சத்ரபதி போன்ற படங்களை தயாரித்தார்.

கிருஷ்ணமூர்த்தி

தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின் லாடன் விலாசம் விசாரிக்கும் மனநிலை தவறியவராக வருவாரே அவர்தான் இவர். தற்போது ஒரு படத்தை தயாரித்து வருகிறார். புத்தாண்டு அன்று நடந்த நான் கடவுள் ஆடியோ வெளியீட்டு மேடையில் கூட ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது எவ்வளவு இயல்பான பிரமோஷனாக கருதப்படுகிறதோ அதுபோலவே நிர்வாகிகள் தயாரிப்பாளர் ஆவதும் கருதப்படுகிறது

23 comments:

Cable சங்கர் said...

இவர்களால் எப்படி தயாரிப்பு செலவை குறைக்க முடியுமோ.. அதே போல் சுருட்டவும் முடியும்.. அப்படி சுருட்ட முடியாதவர்கள்.. தயாரிபாளர்கள் ஆவதில்லை.

முரளிகண்ணன் said...

பதிவின் ஊடாக சொல்லப்பட்டுள்ள விஷயமே அதுதானே தலைவரே. தேங்காய் உடைக்கிற மாதிரி சொல்லிட்டீங்க.

நசரேயன் said...

இவ்வளவு வேலை இருக்கா தயாரிப்பு நிர்வாகிக்கு ?

ஆளவந்தான் said...

மனுசங்களை கட்டி மேய்க்கிற எல்லா வேலைகளுமே ரொம்ப சிரமமான வேலைகள் தான். அதிலும் நிறைய பணம் புழங்கும் இந்த மாதிரி வேலை கைப்பிடி இல்லாத கத்தி போன்றது.

Cable சங்கர் said...

நம்ம பக்கம் வந்துட்டு போங்க.. சூடான கதை காத்திருக்கு..

Cable சங்கர் said...

நன்றி முரளி.. தூக்க கலக்கத்தில் கதைக்கு எழுத வேண்டியவேண்டிய பின்னூட்டத்தை முந்தின பதிவில் எழுதிவிட்டீர்கள். இருந்தாலும் நன்றி..

butterfly Surya said...

நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//இம்மாதிரி சிறப்பாக திட்டமிட தெரிந்தால் மட்டும் போதுமா? வெறும் 24 காரட் தங்கத்தை வைத்து என்ன செய்ய முடியும்?. குயுக்தி என்னும் தாமிரம் கிடைத்தால் கலந்தால் தான் அணிகலனாக முடியும்.//

நச்

Anonymous said...

யோவ் நசரேயா. உமக்கு ரொம்ப பிரயோசனமான விஷயம். நல்லா படிச்சி மண்டைல ஏதிகவும்

அருண்மொழிவர்மன் said...

தமிழ் திரைப்படங்களின் தரத்தை உயர்த்த இவர்களது ஆதரவும் வேண்டும். உதாரணமாக, பிரமாண்டம் என்ற பெயருடன் வெளியாகும் ஷங்கரின் திரைப்படங்களில் பெரும்பகுதி பணம் வெளிநாட்டு ஷூட்டிங்களிலும், கிராபிக்ஸ் களிலும் செலவாகின்றது. ஆனால் கதையின் போக்கில் அந்த பணம் செல்வாக்கு செலுத்துவதில்லை. சரியான தயாரிப்பு நிர்வாகியால் பல இடங்களில் செலவாகும் பணத்தை கட்டுப்படுத்த முடியும்

Anonymous said...

நீங்கள் எதாவது திரைப்படம் எடுத்தீர்களா அவ்வாறு முழுவிபரத்தையும் சொல்லுறீங்க தொடர்ந்து எழுதுங்க
nallurran-nallur.blogspot.com/

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD ARTICLE...I UNDERSTAND, THIS WORK NEEDS LOT OF MARKETING SKILL...ITS NOT A SURPRISE, THAT THEY BECOME PRODUCERS IN THE DUE COURSE OF TIME...

RAMASUBRAMANIA SHARMA said...

SSSSS....

சரவணகுமரன் said...

நல்ல பதிவு...
நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது... வார்த்தை விளையாட்டு அருமை...

narsim said...

வழக் கலக்!!

கார்க்கிபவா said...

//narsim said...
வழக் கலக்!//

ரிப்பீ

கானா பிரபா said...

//இவர்களால் எப்படி தயாரிப்பு செலவை குறைக்க முடியுமோ.. அதே போல் சுருட்டவும் முடியும்.. அப்படி சுருட்ட முடியாதவர்கள்.. தயாரிபாளர்கள் ஆவதில்லை.//

அதில் உண்மை இருந்தாலும், சுருட்டியதை மட்டும் வைத்தே மெகா பட்ஜெட் படம் எடுக்க முடியாது. தயாரிப்பு நிர்வாகிகளின் அனுகூலம் அவர்கள் அந்த வேலையில் இருக்கும் போது பைனான்சியர் தொடர்பு கிடைக்கிறது. அதை வைத்தே அவர்கள் தயாரிப்பாளராக மாற முடிகிறது.

யாரும் தொடாத துறையை எடுத்தாண்டதற்கு நன்றி ;)

ஷாஜி said...

//நடிகையாக இருந்தால் யாரையும் காதலிக்கிறாரா? ஓடிவிடிடும் நிலையில் இருக்கிறாரா என்ற தகவல்கள் வரை தெரிந்திருக்க வேண்டும்.//

---எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிரிங்க....

வினோத் கெளதம் said...

//நடிகையோ அவரது தாயாரோ பார்க் ஷெராட்டன் பட்டர் சிக்கன் தான் வேண்டும் என்பார்கள். முதல் தடவை வாங்கும் போது மட்டும் அங்கே வாங்கிவிட்டு கூடுதலாக நாலு பார்சல் கவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்.//

இது சூப்பர் மேட்டர் ..

சின்னப் பையன் said...

நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்

கிரி said...

//அடுத்த முறை வேலுவிலோ, பொன்னுசாமியிலோ,அஞ்சப்பரிலோ, அரசப்பரிலோ வாங்கி ரீ பேக்கிங் செய்து கொடுத்துவிட வேண்டும்//

ஹா ஹா ஹா

//தவசி திரைப்படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின் லாடன் விலாசம் விசாரிக்கும் மனநிலை தவறியவராக வருவாரே அவர்தான் இவர்//

எக்ஸ்கியுஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா? அவரா இவர் :-)))))

மாதவராஜ் said...

ரொம்பக் கஷ்டம்தான்!
ஒரு தயாரிபாளர் ஆகுறதுக்கு எவ்வளவு முன் அனுபவம் வேண்டியிருக்கு.

குப்பன்.யாஹூ said...

oh i was thinking piramid natarajan and piramid saminathan are relatives, thanks for useful info

what happend to pramid saimeera films now, i heard they r in bankrupt

is it right