January 13, 2009

ரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும்

என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.

இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்பார் சின்ன வெங்காயம் போட்டு. பினிஷிங் டச்சாக இரண்டு நைஸ் ஊத்தாப்ப்பமும் உண்டு. மார்கழி மாதங்களில் என் தெருப் பையன்கள் எல்லோரும் பட்டையோ நாமத்தையோ போட்டுக்கொண்டு பொங்கல்,சுண்டல் வாங்க கோவிலுக்கு கிளம்பும் போது நான் வாளியை தூக்கிக் கொண்டு குள்ளி டீக்கடைக்கு போவேன். அங்கே டீ மட்டும் தான் கிடைக்கும். வடை,பஜ்ஜி எதுவும் இருக்காது. தென் மாவட்ட டீக்கடைகளில் காலையில் பறக்கும் மாநிலகொடியான தினத்தந்தி கூட அங்கே வாங்க மாட்டார்கள். ஆனாலும் வியாபாரம் அனல் பறக்கும். போடும் டீ அப்படி. சில மாலை வேளைகளில் ஸ்ரீராம் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ஓமப்பொடி,நவதானிய மிக்சர்.
இப்படியாக நாளொரு சாப்பாடும், பொழுதொரு டிபனுமாக போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீரென பருவக்காற்று வீசியது. எங்கள் தெருவுக்கு இரண்டு தேவதைகளுடன் ஒரு வங்கி அதிகாரி குடி வந்தார். ஒற்றுமையாய் இருந்த தெருப் பையன்களுக்கிடையே சண்டை வரத் தொடங்கியது. எப்படியாவது என் வயதில் இருந்த இரண்டாவது பெண்ணின் காதலைப் பெற்றுவிட வேண்டுமென்று துடித்தேன். ஒருநாள் என் வருங்கால மாமனார் என் வீட்டிற்க்கு வந்தார். என் தந்தை பணிபுரியும் அலுவலகம் தொடர்பான வேலைக்காக.
இரண்டு நாள் கழித்து, என் தந்தை என்னை அழைத்து கையில் ஒரு கவரை கொடுத்து தேவதையின் வீட்டில் போய் கொடுக்கச் சொன்னார். சரி என்று உற்சாகமில்லாமல் தலையாட்டி விட்டு வெளியே வந்தேன். அங்கு போகாமல் ஒளிந்து கொண்டேன். என் தந்தை வெளியே கிளம்பியதும் என் பேவரைட் டிரஸ் அணிந்து ஒப்பனையிட்டு கிளம்பினேன். ஸ்டைலாக நடந்து சென்று அவர்கள் வீட்டு கதவைத் தட்டினேன். வருங்கால மாமியார் கதவைத் திறந்தார். ஹாலில் பாம்பே சகோதரிகளை தோற்கடிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கவரை கொடுத்ததும் அந்த அம்மாள் கேட்டார்
" அவர் பையனா நீ?, சும்மா வாளிய தூக்கிக்கிட்டே திரியுறனால ஏதோ கடைப் பயைன்னு நினச்சோம்".
அப்போது ஹாலில் பிசாசுகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.
பின்னர் தெருவில் ஆழமாக விசாரிக்கையில் தான் தெரிந்தது, இரண்டு முரளி இருப்பதால் எப்பொதும் ஜலதோசத்தால் அவதிப்படுவனை சளி முரளி என்றும் என்னை வாளி முரளி என்றும் மக்கள் அழைத்துவருவது. இனி தெருவில் நம் பப்பு வேகாது, வெளியூரில் இருக்கும் நம் உறவுப் பெண்களையாவது லவ்வலாம் என்று தீர்மானித்தேன். அங்கும் என் தந்தையின் போஜனப் பிரியம் குறுக்கே வந்தது. நானும் ஆசை அசையாக உறவினர் திருமணங்களுக்கு முதல் நாள் மாலையே கிளம்பி செல்வேன்.
கல்யானம் நடத்துபவர்கள் என்னை பார்த்ததும் கேட்பது
" அப்பாவுக்கு புரமோஷனாமே?, காலையிலாவது வருவாரா?,"
அடுத்து உடனே
" எப்பவும் அவர் தான் ஸ்டோரையும்,சமையல்காரங்களையும் பார்த்துப்பார், நீதான்பா அவர் இடத்தில இருந்து பார்த்துக்கணும்"
திருமணத்திற்க்கு வரும் பெண்கள் அதற்கெனவே ஒளித்து வைத்திருக்கும் சிறப்பு உடைகளுடனும், ஒப்பனைகளுடனும் வளைய வந்து கொண்டிருப்பார்கள். என் உறவுப் பையன்களெல்லாம் நூல் விட்டுக் கொண்டிருப்பார்கள். நானோ இங்கே இந்த எண்ணெயில வடை சுட்டா காரலா இருக்கும் மாத்துங்க என்று சமையல்காரர்களிடம் நூல் விட்டுக் கொண்டிருப்பேன்.
பந்தி விசாரணையின் போது,
ஒருமுறை என் அத்தை பெண்னிடம் இந்த கூட்டு வச்சுக்கங்க, ரசத்துக்கு நல்ல காம்பினேஷன் என்று சொல்லப் போக அவள் சொன்னது
" நாங்க வாழ்றதுக்காக சாப்பிடுறவங்க, சாப்பிடறதுக்காக வாழ்றவங்க இல்லை".
என் காதல் என்னிடமே தங்கிவிட்டது. பரிமாறாத சாதத்துக்கு என்ன மதிப்பு?
பின்னர் ஊரிலேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். ஒருமுறை என் நண்பனுக்கு அட்டஸ்டேஷன் வாங்குவதற்க்கு தந்தை அலுவலகம் சென்றிருந்த போது பியூன் என்னைக் காட்டி கிளார்க்கிடம் சொன்னார்,
" சாமானியமா லீவே எடுக்க மாட்டாரு நம்ம சாரு, மகனுக்கு மஞ்சள் காமாலைன்ன உடனேயே மூணு மாசம் லீவு போட்டதுமில்லாம, மகன் சாப்பிடுற கஞ்சித்தண்னிய தான் குடிச்சுக்குட்டு இருந்தாரு".
அதுவரை என் தந்தையிடம் எனக்கு ஏற்படாதிருந்த பாசம் கண்ணின் வழியே கங்கையாய் வெளியேறியது.
காதல் தான் என் தந்தையால் கிடைக்கவில்லை. ஆனால் கல்யாணம் கிடைத்தது. இப்போது கூட வேலை முடிந்து வீட்டிற்க்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். கதவை பையன் வந்து திறக்கிறான். என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? என்று கேட்ட படியே உள்ளே நுழைகிறேன். தைல வாசனை. மதியம் இருந்து ஒரே தலைவலிங்க என்கிறாள் மனைவி. சரி சரி ரெஸ்ட் எடு, டிபன் வாங்கிட்டு வந்துர்றேன் என்று சொல்லியபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன் நான். மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்ச்யத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. போகோவில் மிஸ்டர் பீனை பார்த்துக் கொண்டே என்னைப் பார்க்கிறான் என் மகன்.

39 comments:

த.அகிலன் said...

ரொம்ப நல்லாயிருக்கு கதை..

ஹாலில் பாம்பே சகோதரிகளை தோற்கடிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
****************************

அப்போது ஹாலில் பிசாசுகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.

இந்த மாற்றம் பிடிச்சிருக்கு பாஸ் ரொம்ப..

சரவணகுமரன் said...

கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கீங்க...

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி அகிலன்,சரவண குமரன்

வெண்பூ said...

இது என்ன ரியலா? புனைவா? அருமையா எழுதியிருக்கீங்க முரளி.. பாராட்டுக்கள்..

முரளிகண்ணன் said...

வெண்பூ, புனைவுன்னு லேபிள் இருக்கே. போன கதைக்கும் இப்படித்தான் கலாய்ச்சீங்க

சுழல் சிறுகதை புகழ் வெண்பூவின் பாராட்டுக்கு மிக்க நன்றி

anujanya said...

இந்த வாரம் என்ன எல்லாரும் அசத்துறீங்க! நேற்று அதிஷா. கொஞ்ச நேரம் முன்னாடி ஜ்யோவ் கதை. இப்போ நீங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முரளி. ரொம்ப இயல்பா இருக்கு. புத்தக வெளியீட்டு விழாவில் காம்பீர் பண்ணினாலே நல்லா எழுத வருமா :)

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

நன்றி அனுஜன்யா.

SPIDEY said...

" அவர் பையனா நீ?, சும்மா வாளிய தூக்கிக்கிட்டே திரியுறனால ஏதோ கடைப் பயைன்னு நினச்சோம்".
HA HA HA தொப்பி தொப்பி .
நல்ல நகைச்சுவைக் கதை

ஆயில்யன் said...

மிக அழகாய் அருமையாய் இருக்கிறது கதை :)

முரளிகண்ணன் said...

ஸ்பைடி, ஆயில்யன் தங்கள் வருகைக்கு நன்றி

அத்திரி said...

//மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்ச்யத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. //

மிகவும் அனுபவித்து எழுதியிருக்கீங்க போல

கலக்கிட்டீங்க தல

அத்திரி said...

கணக்கில வராத அளவுக்கு நூல் விட்டிருக்கீங்க ம்ம்ம்ம்ம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முரளிகண்ணன்.

கடைசி ரெண்டு பாரா மட்டும் இல்லாட்டி இது ஒரு அற்புதமான புனைவா ஆகியிருக்கும்.

சென்ஷி said...

Super Story :-))

Cable சங்கர் said...

சூப்பர்.. எனக்கும் அந்த கடைசி ரெண்டு பாராக்கள் தான் இடிக்கிறது.. வாழ்த்துக்கள்.. முரளி.. கீப் இட் அப்... பொங்கல் வாழ்த்துகள்

அக்னி பார்வை said...

போகோவில் மிஸ்டர் பீனை பார்த்துக் கொண்டே என்னைப் பார்க்கிறான் என் மகன்.
:))))))))))))))

முரளிகண்ணன் said...

\\கணக்கில வராத அளவுக்கு நூல் விட்டிருக்கீங்க ம்ம்ம்ம்ம்\\

அத்திரி இது வேறயா?

முரளிகண்ணன் said...

\\கடைசி ரெண்டு பாரா மட்டும் இல்லாட்டி இது ஒரு அற்புதமான புனைவா ஆகியிருக்கும்.\\

சுந்தர் சார்

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

@ சென்ஷி

நன்றி தலைவரே

@ கேபிள் சங்கர்

ஊக்கத்திற்க்கு நன்றி

@ அக்னிபார்வை

ரசிப்புக்கு நன்றி

தேவன் மாயம் said...

சாமானியமா லீவே எடுக்க மாட்டாரு நம்ம சாரு, மகனுக்கு மஞ்சள் காமாலைன்ன உடனேயே மூணு மாசம் லீவு போட்டதுமில்லாம, மகன் சாப்பிடுற கஞ்சித்தண்னிய தான் குடிச்சுக்குட்டு இருந்தாரு".////

நல்ல அனுபவத்துடன் எழுதியிருக்கிறீர்கள்!!!!
தேவா........

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி தேவன்மயம்

கோபிநாத் said...

அட அட அண்ணாச்சி தொட்டுட்டிங்க நெஞ்சை தொட்டுட்டிங்க..அருமை..அரூமை.;))


\\அதுவரை என் தந்தையிடம் எனக்கு ஏற்படாதிருந்த பாசம் கண்ணின் வழியே கங்கையாய் வெளியேறியது. \\


\\நான். மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்ச்யத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. \\

ரொம்ப ரொம்ப பிடிச்ச வரிகள் அண்ணாச்சி...நெசத்தை பேசியிருக்கிங்க ;))

இன்னும் நிறைய எழுதுங்க ;))

narsim said...

முரளி கண்ணன்...

முதலில் இரண்டு வரிகளாக பிடித்த வரிகளை எடுத்துக்கொண்ட்டே வந்தேன்.. பதிவு முழுதும் காப்பியாகிவிட்டது.. அனைத்து வரிகளுமே அருமை.. மிக நல்ல புனைவு(?)

மனதைத் தொட்ட பதிவு முரளிகண்ணன்!

thamizhparavai said...

good one.. keep it up....

நசரேயன் said...

பின்னி படல் எடுத்துடீங்க, நகைசுவையாய் ஆரமித்து, நல்ல நெஞ்சை தொடுற மாதிரி முடிச்சி இருக்கீங்க

ILA (a) இளா said...

அருமை..

RAMASUBRAMANIA SHARMA said...

atlast you have not mentioned, wheather, your better half is from any one of the earlier girls, you have attempted to love...or it is an arranged marriage...any way..."nalla pathivu"

Viji said...

murali sir kalakkala irukku
super. ungalakukkum unga familikkum pongal vallthukkal.

முரளிகண்ணன் said...

கோபிநாத், நர்சிம், தமிழ் பறவை, நசரேயன், இளா, ராமசுப்ரமணிய சர்மா, விஜி அனைவருக்கும் மிக்க நன்றி.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

மிக அழகாய் அருமையாய் இருக்கிறது கதை :)

குடுகுடுப்பை said...

இப்படிதான் கதை எழுதனுமா?
நல்லாருக்கு.

Natty said...

ஜொல்ஸ் பகுதியெல்லாம் ஜூப்பர்... கலக்கல் கதை பாஸூ...

ஜீவா said...

romba nalla irrukkuthu ,:)

முரளிகண்ணன் said...

ச்சின்னப்பையன்,குடுகுடுப்பை,நட்டி,ஜிஜி

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Boston Bala said...

கலக்கல்! நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பாலா சார்

சி தயாளன் said...

அழகான கதை..சொந்த அனுபவமா..? தொடர்ந்து கலக்குங்கள்...

ராஜ பார்வை said...

மிக அழகாய் அருமையாய் இருக்கிறது

Unknown said...

murali kannan sir, 2009 la ezhudi irukkara pathiva nan ippathan padikkum baghyam kidachirukku. excellent. sirithu sirithu... kalakkiteengo!!!