January 15, 2009

சத்யம் நிறுவனம் அரசுடமை ஆக்கப்படுமா?

சத்யம் நிறுவனத்தை பெயில் அவுட் செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்க்கு முன் பல உற்பத்தி நிறுவனங்கள் , விவசாயிகள் (கரும்பு உற்பத்தியாளர்கள்), நெசவாளர்கள் இந்த பிரச்சினையை சந்தித்த போது அரசு ஏதும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தினார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இம்முறை யாரும் கேட்காமலேயே அரசு முன்வந்துள்ளது. சத்யத்தை காப்பாற்றாது போனால் அது ஐ டி துறையையே பாதிக்கும், பின்னர் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலரோ இது ஒபாமாவுக்கு சாதகமாக போய்விடும். சத்யம்,விப்ரோ அடுத்து இன்போசிஸ் மீதும் குற்றம் சாட்டி அவுட் சோர்ஸிங்கையே தவிர்த்து விடுவார்கள் அமெரிக்கர்கள் என்று சொல்லுகிறார்கள்.

இந்திய மக்களின் வரிப்பணத்தில் தானே பெயில் அவுட் செய்யப் போகிறீர்கள்?. அது 53,000 இந்தியரைத்தானே காப்பாற்றப் போகிறது? நல்லது. அரசுடமை ஆக்கிவிடுங்கள் சத்யத்தை. வரும் லாபம் பெயில் அவுட்டுக்கு வரி கட்டிய மக்களுக்கே போய் சேரட்டும். அரசுடமை ஆனால் ஊழல் மயமாகிவிடும் என இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு முறை அவ்வாறு செய்துவிட்டால் தனியார் நிறுவனங்களும் ஊழல் செய்ய பயப்படும்.

அரசுடைமை ஆக்கிய பின் எட்டு மணி நேரமே எல்லோரும் வேலை செய்யட்டும். இரண்டு நாள் விடுமுறை கொடுக்கட்டும். வேலை முடியவில்லையா? இன்னும் 53,000 வேலை இல்லாதவர்களை எடுத்துக் கொள்ளட்டும். நிறைய மக்கள் பெஞ்சில் உள்ளார்கள். கேம்பஸில் செலெக்ட் ஆகி பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

13 comments:

Cable சங்கர் said...

//சத்யம் நிறுவனத்தை பெயில் அவுட் செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்க்கு முன் பல உற்பத்தி நிறுவனங்கள் , விவசாயிகள் (கரும்பு உற்பத்தியாளர்கள்), நெசவாளர்கள் இந்த பிரச்சினையை சந்தித்த போது அரசு ஏதும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தினார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.//

இதுவே ஒரு தில்லாலங்கடி மேட்டர்.. அப்படி எதாவது செய்யவில்லையென்றால்.. பொருளாதாரம் இறங்கி போய்விட வாய்ப்பு இருப்பதால் சப்போர்ட் செய்வதாய் சீன் போடுகிறார்கள்.

Anonymous said...

and what about reservation policy?

முரளிகண்ணன் said...

\\and what about reservation policy?\\

அனானி ,

நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள்? சற்று தெளிவாக கேட்கலாமே?

அரசுடைமை ஆக்கப்பட்ட பின், அங்கு இட ஒதுக்கீட்டின்படி வேலை வாய்ப்பு தரவேண்டும் என்கிறீர்களா?

தாராளமாய் செய்யலாமே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் எழுதியிருப்பதுடன் ஒத்துப் போகிறேன். என்ன, இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாம் :)

narsim said...

//இந்திய மக்களின் வரிப்பணத்தில் தானே பெயில் அவுட் செய்யப் போகிறீர்கள்?. //

நல்ல அலசல்...முரளி கண்ணன்..

கணேஷ் said...

தாரளமாக செய்யலாம், ஆனால் அதற்க்கு முன்னால் சத்யம் ஒரு PSU கம்பனியாக மாற்றப்பட வேண்டும். அரசுடைமை ஆக்காமல் பணம் மட்டும் கொடுத்தால் இது ஒரு கெட்ட முன்ணுதாரணம் ஆகிவிடும். இதற்க்கு ஒத்துக்கொள்வார்களா சத்யம் மக்கள் ????

ஷாஜி said...

//அரசுடைமை ஆக்கப்பட்ட பின், அங்கு இட ஒதுக்கீட்டின்படி வேலை வாய்ப்பு தரவேண்டும் என்கிறீர்களா?

தாராளமாய் செய்யலாமே.//

--அடப் பாவிகளா.. நல்லா இருந்த IT துறைக்கா இந்த நெலம... நென்ச்சு பொறுக்குதில்லையே...

அக்னி பார்வை said...

அரசுடமையானால், அப்படியே ஈ கம்பெனியிலும் இடஒடுக்கீடு கிடத்தபடியும் ஆச்சு..நமக்கு ஒரொ சோலி முடிசி போயிடும்.

முரளிகண்ணன் said...

பெயில் அவுட் செய்யப் போவதில்லை என அரசு தற்போது அறிவித்துள்ளது.

நசரேயன் said...

சிந்திக்க வேண்டிய விஷயம்

சின்னப் பையன் said...

அரசியல்வாதிகளுக்கு % கிடைச்சா எதுவேணா நடக்கும்.

புருனோ Bruno said...

//--அடப் பாவிகளா.. நல்லா இருந்த IT துறைக்கா இந்த நெலம... நென்ச்சு பொறுக்குதில்லையே..//

ஐ.டி துறை நன்றாக இருந்தால் ஏன் அரசு 2000 கோடி தர வேண்டும்

Poornima Saravana kumar said...

அடப் பாவிகளா.. நல்லா இருந்த IT துறைக்கா இந்த நெலம... நென்ச்சு பொறுக்குதில்லையே.