January 20, 2009

நெத்தியடி

தகவல் புரட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்ட பத்து பேர்களை கணக்கெடுத்தால் எனக்கு அதில் ஒரு இடம் நிச்சயம் இருக்கும். எனக்கு முந்தைய செட்டில் பி காம் முடித்து கம்பெனியில் சின்ன வேலை பார்த்தாலும் பெண் கிடைத்தது. இப்பல்லாம் தரகர் கூட ஜாதகத்தை வாங்க மாட்டேங்கிறார். நான் ஒன்னும் டாடா பேமிலியிலயோ இல்லை தமன்னா பேமிலியிலயோ பொண்ணு வேணுமின்னு கேட்கலை. போனா வந்தா கறி சோறு ஆக்கிப்போட்டு, தீபாவளி பொங்கலுக்கு புள்ள குட்டிகளுக்கு சட்டை எடுத்துக்குடுக்குற அளவுக்கு காசு இருக்குறவங்க இருந்தா போதும். நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா, எனக்குத்தான் வயசு ஏறிக்கிட்டே போகுது.
இன்னோரு கஷ்டம் இந்த செல்போனு. எங்க எழவு விழுந்தாலும் போன அடிச்சுடுறாங்க. முன்னல்லாம் தந்திதான் வரும். ரொம்ப லேட்டா கிடச்சது, அவசர வேலையா வெளிய போயிட்டேன் அப்புறம்தான் தெரிஞ்சுச்சுன்னு புருடா விடலாம். இப்போ எழவு விழுந்தது அடுத்த வீட்டுக்காரனுக்கு தெரியுறதுக்குள்ள அமெரிக்காவுக்கே தெரிஞ்சுருது. நாளைக்கு புத்தக கண்காட்சிக்கு போயி என்னல்லாம் வாங்கலாம்னு ரூம்மேட் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது ஊர்ல இருந்து வந்துருச்சு மாமா போயிட்ட நியூஸு. பொண்ண குடுக்க மாட்டேங்கிறாங்க, பொணத்த மட்டும் தூக்கச்சொல்லுவாங்க.
ஆறு மணிநேர ட்ராவல், ஏதாச்சும் மொக்கப் படத்த போட்டு வெறுப்பேத்திட்டாங்கண்ணா என்னா பண்றதுன்னு ரூம்ல கிடந்த புக்கெல்லாம் எடுத்து பேக்ல வச்சு கிளம்பிட்டேன். போற வழில ஐடிகாரன பார்த்தாலே வயிறு எரியுது. பீல்ட் அவுட்டாயிரும்கிறாங்க ஆனா இன்னும் பளபளப்பாத் தானய்யா அலையுறாங்க. சரியா தூக்குறதுக்கு முன்னாடியே போயாச்சு.மாமன் மகன் நல்லா செலவழிச்சுக்கிட்டு இருந்தான். மயானத்துல கோட்டி கேட்ட காசவிட சேர்த்து கொடுத்தான். டேய் இதென்ன திருப்பதியா? ஆஹா மனனெறைவா செய்யுறாங்களே, இவிங்க குடும்பம் அடிக்கடி வந்து போகணுமின்னு அவன் நினச்சுறப் போறாண்டா. அடங்குடா.
காரியம்லாம் முடிஞ்சுச்சு. வழக்கம் போல அம்மா, அப்பாவிடம் "பார்த்தீங்களா, எவ்வளோ செலவு ஆகுதுன்னு?, வேலை பார்த்தப்பவே ஒழுங்கா சேத்திருந்தா? இவனையாச்சும் இஞ்சினியருக்க படிக்க வையுங்கண்ணே. டொனேஷன் குடுக்க மாட்டேன்னு நிமிந்துக்கிட்டீங்க. முப்பது ஆகப்போகுது எங்கயாச்சும் முன்னாடி நிக்க முடியுதா இவனால?" என்று அர்ச்சனையை தொடங்க மௌனமாயிருந்தார் அப்பா. ஏம்மா, விடும்மா அவர, ரிட்டயரான காலத்துல நிம்மதியா இருக்க விடும்மா என்று அடக்கிவிட்டு கிளம்பினேன்.
பக்கத்தில் 45 வயது ஆள் உட்கார பஸ் கிளம்பியது. தம்பி சென்னைக்கா என ஆரம்பித்தார். போச்சுடா என்றது என் மனம்.

எங்க வேலை பார்க்குறீங்க?

பிரைவேட்ல தான் (என்னா பொண்ணா குடுக்கப்போற?)

அப்பா?

அவரு ஆர் டி ஓ. இப்ப ரிட்டயர் ஆயிட்டாரு.

நல்ல வருமானமில்ல?

இல்லிங்க. பொழைக்கத் தெரியாதவரு. ஸ்ட்ரைட் பார்வர்ட். (நல்லா சம்பாதிச்சு இருந்தா ஏண்டா நான் இந்த பஸ்ல வர்றேன்?)

தாத்தா வசதியானவரா தம்பி? அப்பதான் நம்மாளுக இப்படி இருப்பாங்க.

பெரிசா இல்ல. இருவது ஏக்கர் இருந்துச்சு. எங்கப்பா கூட பொறந்தவங்க மூணு தங்கச்சி. எங்கப்பா முட்டாத்தனமா எல்லாரும் சமம்னு பங்கிக் கொடுத்துட்டாரு. எங்கப்பா பங்குலயும் இப்ப என் அக்கா,தங்கச்சிக்கும் பங்கு வேற.

என்னடா விட்டா இந்தாளு நம்மளை ரொம்ப காச்சிடுவானோன்னு. பேக்ல இருந்து உயிர்மையை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அந்தாளும் லஜ்ஜையில்லாமல் வேற ஏதும் புக் இருக்கா என கேட்க, என் மனம் தொலைஞ்சடா மகனே என மகிழ்ச்சியில் எடுத்துக் கொடுத்தது "பின் நவீனம்- ஒரு அறிமுகம், பூக்கோ,தெரிதா -அறிமுகப் புத்தகம்"

அரை மணி நேரம் கழித்து, அவர் யாருங்க இவங்கெல்லாம், அதென்ன பின்னவீனத்துவம்னு கேட்க நான் ஆரம்பித்தேன்.
"இவங்கெல்லாம் எது சரியானதுன்னு மக்கள் செய்யுறாங்களோ அத உடைச்சு உண்மையிலேயே எது சரியானதுன்னு நமக்கு காட்டுறவங்க, சராசரி ஆளுங்க மாதிரி இருக்கமாட்டாங்க"

ஓ உங்கப்பா மாதிரிங்களா தம்பி?

51 comments:

பாண்டித்துரை said...

//பி காம் //

அப்ப நீங்க பி.காம்!

narsim said...

"முடிவுல ஆரம்பிக்குது" தலைவா.. புனைவுல புகுந்து விளையாடுறீங்களே தல.. அட்டகாசம்

Cable சங்கர் said...

//டேய் இதென்ன திருப்பதியா? ஆஹா மனனெறைவா செய்யுறாங்களே, இவிங்க குடும்பம் அடிக்கடி வந்து போகணுமின்னு அவன் நினச்சுறப் போறாண்டா. அடங்குடா.//

சுப்பர்.. வர வர நகைச்சுவையில பின்ன ஆரம்பிச்சிட்டிங்க முரளி.. வாழ்துக்கள்.

பாரதி தம்பி said...

ஒருபக்க கதை போல இருக்கு...ஆனா இல்ல. மொத்தமா நல்லாயிருக்குன்னு சொல்றதைவிட இயல்பா இருக்கு, ஆரம்பத்துல.

சரவணகுமரன் said...

கலக்கலா இருக்கு...

கார்க்கிபவா said...

//நான் ஒன்னும் டாடா பேமிலியிலயோ இல்லை தமன்னா பேமிலியிலயோ பொண்ணு வேணுமின்னு கேட்கலை. போனா வந்தா கறி சோறு ஆக்கிப்போட்டு, தீபாவளி பொங்கலுக்கு புள்ள குட்டிகளுக்கு சட்டை எடுத்துக்குடுக்குற அளவுக்கு காசு இருக்குறவங்க இருந்தா போதும். நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா//

அடடா.. இதப் படிக்கிறப்ப அந்த மாதிரி பொண்ணையே தேடலாம்னு ஆசை வந்திடுச்சுங்க.. என் கனவுல வேற மாதிரி இருந்துச்சுங்க..

கார்க்கிபவா said...

தல அந்த தமிழ்சினிமாவில் சலூன்கடை பதிவு என்னாச்சு?

anujanya said...

முரளி,

என்ன இந்தத் தாக்கு தாக்குறீங்க! நடுவில வெண்பூ, கார்க்கி வகையறாக்களுக்கு ஒரு அப்பர் கட். //பீல்ட் அவுட்டாயிரும்கிறாங்க ஆனா இன்னும் பளபளப்பாத் தானய்யா அலையுறாங்க.//

அப்புறம் 'பின் நவீனம்' னு அய்யனாரை வம்புக்கு இழுக்குறீங்க. கலக்கல். போகிற போக்கில் இந்த வாரக் குமுதத்தில் நீங்களும், நர்சிமும் நிச்சயம்.

அனுஜன்யா

Unknown said...

ஆரம்பிச்சு தடதடன்னு ஒரு வேகமா முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு கதை. இன்னும் கொஞ்சம் நிதானமா விவரணைகளோட இருந்திருந்தால் ஒரு சிறப்பான சிறுகதை கிடைத்திருக்கும்.

ரமேஷ் வைத்யா said...

அச்சா... சூப்பர் ஃபாஸ்ட் தோற்றது.

அக்னி பார்வை said...

ha ha ha

:))))))))))))))))

வெண்பூ said...

முரளி,

வித்தியாசமா இருக்கு.. ஆனா உங்ககிட்ட இருந்து இப்படி ஒண்ணை எதிர்பார்க்கலை. என்ன, சாருவோட புக் எதுனா படிச்சீங்களா? :)))

வெண்பூ said...

//
அனுஜன்யா said...
முரளி,

என்ன இந்தத் தாக்கு தாக்குறீங்க! நடுவில வெண்பூ, கார்க்கி வகையறாக்களுக்கு ஒரு அப்பர் கட். //பீல்ட் அவுட்டாயிரும்கிறாங்க ஆனா இன்னும் பளபளப்பாத் தானய்யா அலையுறாங்க.//

//

ஆஹா.. எனக்குக் கூட தோணலியே.. முரளி இப்படிப்பட்ட ஆளா? தெரியாம போச்சே.. :)))

சின்னப் பையன் said...

:-))))))))

முரளிகண்ணன் said...

பாண்டித்துரை,நர்சிம்,கேபிள் சங்கர், ஆழியூரான்,சரவண குமரன்,கார்கி தங்கள் வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

அனுஜன்யா,கே வி ஆர்,ரமேஷ் வைத்யா, அக்னி பார்வை, வெண்பூ, சின்னப்பையன் வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி

அத்திரி said...

//தல அந்த தமிழ்சினிமாவில் சலூன்கடை பதிவு என்னாச்சு?//


ரிப்பீஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..............

முரளிகண்ணன் said...

கார்கி & அத்தரி

நீங்க சொல்ல வர்றத புரிஞ்சுக்கிட்டேன்.

புனைவுலாம் உனக்கு வராதுடா, அனாவசியமா மொக்க போடாம ஒழுங்கா சினிமா பத்தி எழுதுங்கிறீங்க.

இனிமே சினிமா மொக்கைதான்

ILA (a) இளா said...

அப்படி எழுதினாலும் கலக்கல்,இப்படி எழுதினாலும் கலக்கல். மனசுக்குள்ள:ஹ்ம்ம், எழுத்தாளனுங்க பொறக்கறாங்கப்பா..தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் நமக்கு மட்டும் வரவே வராது

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி இளா

thamizhparavai said...

nice to read...

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ்பறவை

வெட்டிப்பயல் said...

As usual kalakal Mu.Ka...

நசரேயன் said...

ரெம்ப நல்லா இருக்கு, உங்க படைப்புகள் அனைத்தும் தனி ரகம்

யாத்ரீகன் said...

>>> நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா <<<

adadadaa.. yenna oru description.. :-)))

அருண்மொழிவர்மன் said...

ஒரு சமூகப்பிரச்சனையை இயல்பான நக்கலுடன் எழுதியுள்ளீர்கள்

நன்றாக உள்ளது

Udhayakumar said...

// நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா//

aha aha....

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல்
நசரேயன்
யாத்ரீகன்
அருண்மொழிவர்மன்
உதயகுமார்

அனைவருக்கம் நன்றி

கிரி said...

:-))))

உண்மைத்தமிழன் said...

புத்தகத் தலைப்பு மாதிரியே ஒண்ணும் புரியல முரளி..

பாபு said...

//"இவங்கெல்லாம் எது சரியானதுன்னு மக்கள் செய்யுறாங்களோ அத உடைச்சு உண்மையிலேயே எது சரியானதுன்னு நமக்கு காட்டுறவங்க, சராசரி ஆளுங்க மாதிரி இருக்கமாட்டாங்க"

ஓ உங்கப்பா மாதிரிங்களா தம்பி?//

சூப்பர்

முரளிகண்ணன் said...

கிரி, நன்றி

உண்மைத்தமிழன் அண்ணா தங்கள் கருத்துக்கு நன்றி

பாபு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குது..

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி முத்துலட்சுமி கயல்விழி

துளசி கோபால் said...

கொன்னுட்டீர்:-)

புருனோ Bruno said...

//"இவங்கெல்லாம் எது சரியானதுன்னு மக்கள் செய்யுறாங்களோ அத உடைச்சு உண்மையிலேயே எது சரியானதுன்னு நமக்கு காட்டுறவங்க, சராசரி ஆளுங்க மாதிரி இருக்கமாட்டாங்க"


ஓ உங்கப்பா மாதிரிங்களா தம்பி//

:)

Vidhya Chandrasekaran said...

//டேய் இதென்ன திருப்பதியா? ஆஹா மனனெறைவா செய்யுறாங்களே, இவிங்க குடும்பம் அடிக்கடி வந்து போகணுமின்னு அவன் நினச்சுறப் போறாண்டா. அடங்குடா.//
ROTFL:)
சூப்பர இருந்தது:)

Rathna said...

சில வரிகளின் அர்த்தம் புரியல........இப்பதான் எனக்கு புரியுது நான் புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்க்க கூட இல்லை என்பது .............

மதன் சிந்தாமணி said...

ama murali kalyanam anathil irunthu 5 periya ezavu attend panniyirukken,pona moonu nal minimum. ponam thookkarathil irunthu soru akki podarathu appappa,ivunungellam enna ponna kudunthanka!!

பாசகி said...

நல்லா எழுதிருக்கீங்க! ரொம்ப ரசிச்சேன்!!

கோபிநாத் said...

ஆகா..அண்ணாச்சி இந்த வருஷம் என்ன புனைவு வருஷமா!!! ;))

சும்மா புகுந்து விளையாடுறிங்க ;)

முரளிகண்ணன் said...

வாங்க டீச்சர், ரொம்ப சந்தோஷம்.

நன்றி டாக்டர் புருனோ

வாங்க வித்யா, மிக மகிழ்ச்சி

முரளிகண்ணன் said...

ரத்னா மேடம் தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

என்னப்பா செய்யுறது மதன்?. நம்ம விதி.

பாசகி தங்கள் வருகைக்கு நன்றி

கோபிநாத் தங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

இயல்பான நடையில் நல்ல கதை மு.க.

ஜியா said...

unga kadaisi rendu kathaigalum attahaasam

பாலராஜன்கீதா said...

இதுபோல இன்னும் வித்தியாசமாக பல புனைவுகளை எதிர்பார்க்கிறோம்.

சென்ஷி said...

அசத்திட்டீங்க தலைவா... முடிவு கலக்கல்..

சென்ஷி said...

// முரளிகண்ணன் said...
கார்கி & அத்தரி

நீங்க சொல்ல வர்றத புரிஞ்சுக்கிட்டேன்.

புனைவுலாம் உனக்கு வராதுடா, அனாவசியமா மொக்க போடாம ஒழுங்கா சினிமா பத்தி எழுதுங்கிறீங்க.

இனிமே சினிமா மொக்கைதான்
//

நோ சான்ஸ்.. எங்களுக்காக இந்த மாதிரியும் நிறைய்ய எழுதணும்...

முரளிகண்ணன் said...

வெயிலான் தங்கள் வருகைக்கு நன்றி

ஜி மிக மகிழ்ச்சி

பாலராஜன் கீதா சார் நிச்சயம் முயலுகிறேன்

சென்ஷி நிச்சயம் முயலுகிறேன்

thanjai gemini said...

டேய் இதென்ன திருப்பதியா? ஆஹா மனனெறைவா செய்யுறாங்களே, இவிங்க குடும்பம் அடிக்கடி வந்து போகணுமின்னு அவன் நினச்சுறப் போறாண்டா. அடங்குடா.//

:) :)
aaha aaha nalla timing sence

முரளிகண்ணன் said...

தஞ்சை ஜெமினி தங்களின் வருகைக்கு நன்றி