முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்
நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், விக்னேஷ்வர் ஆகிய நான்கு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடந்து கொண்டிருந்தது. நான்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள்.
பாரதிராஜாவின் இயக்கம், கதையில் சுஜாதாவின் பங்களிப்பு, பீரியட் பிலிம்,இளையராஜவின் இசையில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த பாடல்கள் என நாடோடி தென்றல்.
மலையாள சினிமாவில் அப்போது உச்சத்தில் இருந்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே (இதிலும் இளையராஜவின் பாடல்கள் அட்டகாசம்),
ஆதித்யன் இசையில் ராஜேஷ்வர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வந்த அமரன். இப்படத்தில் டான் வேடம். முதன்முதலாக கார்த்திக் இப்படத்தில் வெத்தல போட்ட ஷோக்குல என்ற கானாவை பாடியிருந்தார். தற்கால கானாவுக்கான விதை இப்படாலின் மூலமும் , இதன் சம காலத்தில் வெளியான தலைவாசல் படத்தின் மூலமே தூவப்பட்டது. ஸ்ரீவித்யாவும் இப்படத்தில் சண்ட பஜாரு என்னும் பாடலை பாடியிருந்தார். எம் எல் வசந்தகுமாரியின் மகளுக்கு திரைப்பாடல் பாட என்ன கஷ்டம் இருக்கும்?
குஷ்பு ஜோடியாக நடித்த விக்னேஷ்வர் முதன் முறையாக காவல் துறை அலுவலகத்தை நவீனமாக காட்டிய படம். சென்னை எக்மோரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்த ஹட்கோ அலுவலகத்தை காவல்துறை அலுவலகமாக காட்டி அசத்தியிருப்பார்கள்.
இந்த நான்கு படங்களிலும் நான்கு வித கதாபாத்திரங்கள். நாடோடி தென்றலில் அந்தக்கால ப்ளேபாய், கோபுர வாசலிலே இந்த கால காதலன், அமரனில் டான், விக்னேஷ்வரில் காவல்துறை அதிகாரி. மிக சிறப்பாக இந்த நான்கு கேரக்டர்களிலும் அசத்தியிருப்பார். என்ன ஒரு துரதிர்ஷ்டம், நான்கும் தோல்வி அடைந்தன்.
இந்தப் படங்களை அவர் ஒப்புக்கொண்ட 90- 91 காலகட்டத்தில் மணிரத்னம் தன் தளபதி படத்தின் கலெக்டர் கேரக்டருக்கு கார்த்திக்கை அணுகினார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் அர்விந்த் சாமியை மணி அறிமுகப்படுத்தியதாகவும் கூறுவார்கள். சிலரோ அந்த வாய்ப்பை தவிர்க்கவே அவ்வாறு கார்த்திக் கேட்டதாகவும் கூறுவார்கள்.
இதன் பின் இவர் நடித்த உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், நாடோடி பாட்டுக்காரன், இது நம்ம பூமி,தெய்வ வாக்கு, ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் பொன்னுமணி, காத்திருக்க நேரமில்லை, சின்ன கண்ணம்மா ஆகிய படங்கள் அனைத்தும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின.
இந்தக்காலத்தில் ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த சின்ன ஜமீன், சீமான் ஆகிய படங்கள் மட்டுமே வணிகரீதியில் தப்பித்தன. பின் வெளியான முத்துக்காளை, நந்தவனத் தேரு ஆகியவையும் தோல்விப் படங்களே.
86ல் மறுவாழ்வு பெற்று 90 வரை உச்சத்தில் இருந்த கார்த்திக் பின் 95 வரை சரிவையே சந்தித்தார். இதற்க்கு முக்கிய காரணங்கள்.
1. சரியான நேரத்திற்க்கு படப்பிடிப்புக்கு வராமல் டபாய்ப்பது. காத்திருக்க நேரமில்லை, சக்கரவர்த்தி ஆகிய படங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் கழித்தே திரைக்கு வந்தன. இவரால் பல தயாரிப்பாளர்கள் டரியலானார்கள். பெரிய இயக்குனர்களும் இவரை தவிர்க்க தொடங்கினார்கள்.
2. முடி கொட்டத் துவங்கியதால் விக் அணிந்து நடித்தார். அது ஒத்துக் கொள்ளாமல் தோல் அலர்ஜி ஏற்பட்டது. எனவே பல காட்சிகளில் தொப்பி அணிந்து நடிக்கத் தொடங்கினார். வெயிலில் நின்று நடிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்ட போது ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள வற்புறுத்தினார். இதனால் பல இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல கதை வைத்திருந்த பலர் இவரை அணுக பயந்தார்கள்.
3. சோலைக்குயில் படத்தில் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார். பின் அவரது தங்கையையும் மணந்து கொண்டார். இதனால் வீட்டிலும் சிக்கல்கள்.
4. கார்த்திக்கின் ப்ளேபாய்தனம் உலக புகழ்பெற்றது. பலருடனும் கோயிங் ஸ்டெடியாக இருந்தால் கேரியர் எப்படி ஸ்டெடியாக இருக்கும்?
5. இவருக்காகவே என ஸ்பெஷலாக இருக்கும் கதைகள் கூட இவரை வந்து அடையவில்லை. ஒரே எடுத்துக்காட்டு பார்க்கலாம். மலையாளத்தில் பெருவெற்றி அடைந்த சித்ரம் படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள் எங்கிருந்தோ வந்தான் என்ற பெயரில். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பட்டையை கிளப்பிய படம். இங்கே கார்த்திக் அதை செய்திருந்தால் படம் அசத்தலாய் வந்திருக்கும். ஆனால் நடித்தது சத்யராஜ். சத்யராஜ் நல்ல நடிகர் தான். மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அந்த கேரக்டரை அவரால் சரியாக் செய்யமுடியவில்லை. கடைசியில் அப்படி ஒரு படம் வந்ததா என எல்லோரும் கேட்கும் படி ஆனது.
6. 90க்குப் பின் வந்த அர்விந்த் சுவாமி (தாலாட்டு, மறுபடியும்) இவருக்கு வரவேண்டிய நல்ல படங்களை எடுத்துக் கொள்ள, இளமையான வேடங்களுக்கு பிரசாந்த்,அஜீத் போன்றோர் பங்குக்கு வர நிலைமை இன்னும் சிக்கலானது.
மேலும் சில காரணங்கள், மூன்றாம் பிறவி அடுத்த பதிவில்
26 comments:
கலக்கல் பதிவு முரளி. நடுநிலை தான் உங்க பலம். கோபுர வாசலிலே மற்றும் பொன்னுமணி ஓரளவு வெற்றிப் படங்கள் என்று நினைத்திருந்தேன். பாடல்கள் ஹிட் ஆனதால் அப்படித் தோன்றியிருக்கலாம். அம்பிகாவைத் துரத்தித் துரத்திக் கொல்ல முயல்வார். என்ன படம் அது? கண் சிமிட்டும் நேரம்? படம் ஓடாவிட்டாலும், நல்ல படம்.
அப்புறம் ஸ்ரீப்ரியா போலவே, பானுப்ரியா கூட கேள்விப்பட்டிருக்கிறேன் :)
அனுஜன்யா
ஹாய், நான் first. இந்த முறையும் சங்கருக்கு வடை மிஸ் ஆகிடுச்சு. :)
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா.
கண் சிமிட்டும் நேரம் தயாரிப்பாளர் நம்ம சரத்குமார் தான். படம் வெற்றி பெற்றதும் கார்த்திக்கை வைத்து மிஸ்டர் கார்த்திக் என்னும் அடுத்த படத்தை துவக்கினார். அது சம்பந்தமாக ராதிகா, அவரது தாயார் ஆகியோரை சரத் சந்தித்தபோது, ராதிகாவின் தாயார் சரத்திடம் " நீங்களே நல்லா ஹீரோ மாதிரி இருக்கீங்களே, கதாநாயகனா நடிக்க வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார்கள். பின் நடந்தது சரித்திரம்.
மிஸ்டர் கார்த்திக் படு தோல்வி அடைந்து சரத் கடன்காரரானார். இந்த இரண்டு படத்தையும் இயக்கியது கலைவாணன் கண்னதாசன்
\\ஹாய், நான் first. இந்த முறையும் சங்கருக்கு வடை மிஸ் ஆகிடுச்சு. :)
\\
சங்கர் இரவுகளில் தான் நடமாடுவார்.
//பலருடனும் கோயிங் ஸ்டெடியாக இருந்தால் கேரியர் எப்படி ஸ்டெயாக இருக்கும்?
//
என்ன ஒரு வரிகள்..முரளிகண்ணன்.. கலக்கல்..
நன்றி நர்சிம்
முரளி, கார்த்திக்கின் பிரச்சனை எல்ல நேரங்களிலுமே ஒன்று தான், சரியான வழிக்காட்டியில்லாத்து..உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் ஒரு முறை ‘மௌனராகம்’ படத்தில் கார்த்திக்கின் காட்சிகளை மட்டும் பார்த்தேன் இப்பொழுது அந்த மாதிரி யாரால் நடிக்க முடியும்..
நல்ல பதிவு முரளி
வருகைக்கு நன்றி அக்னிபார்வை
நல்ல கட்டுரை. குஷ்புவின் வீட்டில் கார்திக்கின் புகைப்படம் தவிர வேறு எந்த சினிமா சம்பந்தப்பட்டவருடைய புகைப்படமும் இருக்காதாம்.
வருகைக்கு நன்றி அன்பரசு
அவ்வப்போது பகலிலும் வருவேன்.. சூப்பர் பதிவு தலைவா. மிகவும் நடு நிலையோடு எழுதப்பட்டிருக்கிறது.. பல பேருக்கு எது ஹிட் படம் எது பட் படம்னு தெரியாம இருந்தது.. அது இப்போ தெரிந்திருக்கும்.
//பாரதிராஜாவின் இயக்கம், கதையில் சுஜாதாவின் பங்களிப்பு, பீரியட் பிலிம்,இளையராஜவின் இசையில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த பாடல்கள் என நாடோடி தென்றல்//
முதல் முறையாக இளையராஜா திரைபடத்திற்கு கதை எழுதியது இந்த படத்திற்கு தான் என்று நினைக்கிறேன்.
கதை,பாடல்கள்
இளையராஜ
வசனம்:
சுஜாதா
திரைகதை,டைரக்ஷன்:
பாரதிராஜா
வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்.
பிளீச்சிங் பவுடர் வருகைக்கு நன்றி. கதையில் ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட காட்சி வந்ததால் சுஜாதா உதவி புரிந்திருந்தார். அப்போதைய அவரது கட்டுரைகளிலும் அது பற்றி குறிப்பு உள்ளது. அதனால்தான் கதையில் பங்களிப்பு என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருந்தேன்.
karthik is my favourite hero:)
அட்டகாசமான 2ம் பகுதி. ஏகப்பட்ட அறிந்திராத தகவல்கள்.
//பலருடனும் கோயிங் ஸ்டெடியாக இருந்தால் கேரியர் எப்படி ஸ்டெடியாக இருக்கும்?
//
:-)))
:-(((
நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், இதெல்லாம் தோல்விப் படமா? நல்லாத் தான இருக்கும்? அடுத்து மூன்றாம் பிறவில உள்ளத்தை அள்ளித்தா பத்தி சொல்லப் போறீங்களா?
கார்த்திக் நடித்த நிறைய காதல் பாடல்கள் செமஹிட். எனக்கு கோபுர வாசலில் படத்தில் வரும் ரெண்டு பாட்டு ரொம்ப பிடிக்கும். தேவதை போலொரு பெண்ணிங்கு பாட்டு தான் டாப். ஆனா கார்த்திக் ஆக்டிங் கொஞ்சம் monotonous தான்.
super post. Thank you for letting us know much about Karthik.
பூர்ணிமா சரண் தங்கள் வருகைக்கு நன்றி
சின்னப்பையன் சார் இன்னும் ஒரு பகுதி இருக்குது. மறக்காம ஆஜராயிடுங்க
திவ்யப்பிரியா, வித்யா நன்றிகள்
hi, amaran , ponnumani are all hits .
From Ponnumani only plain Merun shirt became famous among Thevar community.
What about kizakku vaasal, varusham16, agni natchatiram.
Your comparisan of arvindsamy, prasanth, ajith with Karthick shows your poor knowledge of cinema.
where is karthik and where are these amature actors.
After Kamalhasan, Karthick is the only actor to be called as actor.
I regret to say that your post is incomplete.
ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் நட்பு இருக்கவே முடியாது என்ற விதமாக தொனிக்குதே முரளி..??
குச்பூ/கார்த்திக் உறவுக் குறித்து, மஞ்ச பத்திரிக்கை அளவிற்கு நீங்க சொல்லியிருக்கீங்க..
அதைப் பற்றி நீங்க எப்படி அறிஞ்சிக்கிட்டீங்க என்று சொன்னால், நம்ப வசதியாக இருக்கும். (திரைப்படம் குறித்த விவரங்களுக்கு பின்னனி தேவையில்லை)
தவிர்த்திருக்கலாம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
குப்பன் யாஹு தங்கள் வருகைக்கு நன்றி.
\\hi, amaran , ponnumani are all hits \\
அமரன் தோல்விப் படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பொன்னுமணியில் பாடல்கள், சௌந்தர்யா அறிமுகம் என பரபரப்பாக பேசப்பட்டதால் உங்களுக்கு அப்படம் வெற்றி போல தோன்றியிருக்கலாம். அப்போதைய சினிமா அளவுகோளின் படி அப்படம் வசூல் ரீதியாக தோல்விப்படமே.
\\Your comparisan of arvindsamy, prasanth, ajith with Karthick shows your poor knowledge of cinema.
\\
நான் நடிப்பு ரீதியாக அர்விந்த் சுவாமி,அஜீத்துடன் கார்த்திக்கை ஒப்பீடு செய்யவில்லை. இது இல்லாவிட்டால் அது என்ற மனப்போக்கு எங்கும் இருக்கும். அதுபோல இவருக்கு வர வேண்டிய படங்கள் இவர்களிடம் சென்றன என்ற அர்த்தத்தில் தான் சொல்லி இருக்கிறேன்.
\\What about kizakku vaasal, varusham16, agni natchatiram\\
அனைவரும் நன்கு அறிந்த படங்கள் என்பதால், முதல் பாகத்தில் இவற்றில் நடித்து பிலிம் பேர் விருது வாங்கியதை மட்டும் குறிப்பிட்டேன்
\\I regret to say that your post is incomplete\\
ஒத்துக்கொள்கிறேன். இன்னும் சிறப்பாக எழுத முயற்சியில் இருக்கிறேன்
\\தவிர்த்திருக்கலாம்.\\
டிபிசிடி,
தவறுக்கு வருந்துகிறேன். குறிப்பிட்ட பகுதியை நீக்குகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் பல. மீண்டும் இதுபோல் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.
நல்ல பதிவு
நன்றி ராதாகிருஷ்ணன்
Post a Comment