April 01, 2009

வானம் பார்த்த செந்தில்

செந்தில் நான்காம் வகுப்புவரை நார்மலாகத்தான் இருந்தான். ஐந்தாம் வகுப்பில் அவனது அதி வளர்ச்சி ஓரளவு தெரிந்தது. டவுண் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது தான் அவனுக்கும் வகுப்பு மாணவர்களுக்குமான வித்தியாசம் உறைத்தது. பெரும்பாலான மாணவர்கள் அவனது இடுப்புக்கே இருந்தனர்.

அந்த பள்ளியில் ஒன்பதாவது வகுப்பிலிருந்து தான் மாணவர்கள் தான் பேண்ட் அணியவேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதி செந்திலின் வாழ்வில் விளையாடியது. அவன் உயரத்திற்கு அரைக்கால் சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது நீச்சலுடை அணிந்து பெண்கள் தெருவில் நடப்பதற்க்கு ஒப்பாக இருந்தது. எனவே வீட்டில் இருந்து கிளம்பும்போது வேஷ்டி கட்டி கொண்டு வருபவன், பள்ளி எல்லைக்குள் நுழைந்தவுடன் அதை மடித்து தன் மஞ்சப் பைக்குள் வைத்துக்கொள்வான். வகுப்புக்கு வந்த ஆசிரியர்களும் அவனை கிண்டல் செய்தார்களே தவிர பிரச்சினையை தீர்க்க நினைக்கவில்லை.

ஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர் சங்கரி தான் அந்த பிரச்சினையைத் தீர்த்தார். ”சார், இவ்வளோ உயரமான பையன் அரைட்ராயர் போட்டு பக்கத்தில நிற்கிறது சங்கோஜமா இருக்கு” என அவர் ஹெட் மாஸ்டரிடம் சிணுங்க செந்திலுக்கு விதி தளர்த்தப்பட்டது.

இவன் அசாத்திய உயரத்திற்கும் ஆகிருதிக்கும் காரணம் அவனது பரம்பரை தான். அந்த ஊரில் எல்லோரும் பழைய லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டித்தான் குளிக்க உபயோகப் படுத்துவார்கள். ஒரு கையால் முழு சோப்பை பிடித்து வாகாக குளிக்க முடியாது. ஆனால் செந்திலின் அப்பா கைக்கு அந்த முழு சோப்பே, சாம்பிள் சோப்பு போலத்தான் இருக்கும். பொதுவாக 11 ஆம் நம்பருக்கு மேல் செருப்பு கிடைப்பது கடினம் என்பதால் அவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர் செருப்பில் தான் வலம் வருவார். கோவில், திருமண விழா எங்கும் துணிந்து செருப்பை அவிழ்த்து வைப்பார். அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்கள் அந்த கிராமத்துக்கு எதுக்கு வரப்போகிறார்கள்?

கிராமத்தில் கிடா வெட்டிப் போடப்படும் விருந்துகளில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில்தான் அமர்ந்து கொள்வார். சேவாக் மாதிரி, சாப்பிட்டமா எந்திரிச்சு போனமான்னு இருப்பார்னு நினச்சுறாதீங்க. அவர் டிராவிட் மாதிரி. அங்க பந்து வீச்சாளர்கள் களைத்துப் போவதுபோல இங்கு பரிமாறுபவர்கள் களைத்துப் போவார்கள். அங்கு எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி திரும்புவது போல, இங்கு சக பந்தியாளர்கள். அங்கு டெயில் எண்ட் பேட்ஸ்மென்கள் வரும் வரை டிராவிட் நிற்பது போல சமையல்காரர்கள் சாப்பிடும் கடைசிப் பந்தி வரை இவர் ஈடு கொடுப்பார்.

ஒருமுறை எலும்புக் குழம்பின் ருசியால் ஏழெட்டு ரவுண்டு போய்க் கொண்டிருந்தார். இலையின் ஓரத்தில் கடிபட்ட எலும்புகள் மலையாய் குவிந்திருந்தன. நீண்ட இன்னிங்ஸின் விளைவால் கால் மரத்துப் போக இருவர் சேர்ந்து அவரை தூக்கிவிட்டார்கள். ஆனால் அவர் சாப்பிட்ட இலையைத் தூக்க நாலுபேர் தேவைப்பட்டது.

பின்னர் செந்திலின் ஆகிருதிக்குக் கேட்கவா வேண்டும்?. அவன் கல்லூரியில் சேர்ந்த போது முதல் சில நாட்கள், சீனியர்கள் அவனை புது லெக்சரர் என்று நினைத்து வந்தார்கள். சில நாட்களில் குட்டு வெளிப்பட்டாலும் அவ்வளவாக ராக்கிங் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஆனால் சக வகுப்பு மாணவர்கள் சும்மா விடுவார்களா?

எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல எந்த டாபிக் பற்றிப் பேசினாலும் செந்திலைக் கிண்டல் செய்தே முடித்தார்கள். உடன் இருக்கும் நண்பர்கள் ராக்கிங் செய்தாலும், ஆண்டு விழாவில் கலாட்டா செய்தாலும் இவனது தனித்த உருவம் காரணமாக எளிதில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டான். டவுன் பஸ்ஸில் உட்கார இடம் இருந்தாலும் கடைசிப் படியில் நின்று கொண்டுதான் வருவான் ஏனென்றால் முன் சீட்டில் முட்டி வலுவாக இடிக்கும். எம் எல் ஏ மகனாக இருந்தாலும் உள்ள வந்து நில்லு என்று அதட்டும் கண்டக்டர்கள் கூட, பாவம் இவன் உள்ள நின்னா டாப் இடிக்குமே என்று விட்டு விடுவார்கள்.

பெண்கள் தலைகுனிந்து நடப்பார்கள். சில புதுமைப் பெண்களும், ஆண்களும் நேர்கொண்ட பார்வையுடன் இருப்பார்கள். இப்போது எல்லாப் பெண்களும் புதுமைப் பெண்களாகிவிட்டார்கள். நம் செந்தில் மேல் நோக்கி பார்த்து நடப்பான். அவன் கழுத்து அமைப்பு அப்படி. அவன் உயரத்தின் காரணமாகவும், வானத்தைப் பார்த்து நடப்பதாலும் அவனுக்கு நண்பர்கள் வைத்த பெயர் தான் வானம் பார்த்த செந்தில்.


இரண்டு முதலாமாண்டு மாணவர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.

எந்த குரூப்கிட்ட வேணுமின்னாலும் மாட்டிக்க. வானம் பார்த்த செந்தில் குரூப்கிட்ட மட்டும் மாட்டிக்கிடாத.


அவன எப்படிடா கண்டுபிடிக்கிறது?


அது ரொம்ப ஈஸி. அவனப் பார்த்தாலே உனக்குத் தெரிஞ்சிடும்.



இம்மாதிரி பேச்சுக்களால் கூட அவன் மனம் உடையவில்லை. ஒருமுறை மூன்றாம் ஆண்டு மாணவி ஒருத்திக்கு ஒருவன் லவ் லெட்டர் எழுதிவிட, அவள் பிரின்சிபாலிடம் போவேன் என மிரட்டத் தொடங்கினாள். ”தெரியாம பண்ணிட்டான். இனி இதுமாதிரி செய்ய மாட்டான், இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுடு” என அவனின் நண்பர்கள் தூது போனார்கள். அவள் கெஞ்சினால் மிஞ்சும் டைப். ஒரு கட்டத்தில் கடுப்பான ஒரு ஷார்ட் டெம்பர் பார்ட்டி, வானம் பார்த்த செந்தில்தான் உன் புருஷனா வரணும்னு கேரளா போயி செய்வினை  வச்சுடுவேன் என மிரட்ட, அவள் பயந்து போய் தற்கொலை முயற்சி வரை சென்று விட்டாள். இந்த சம்பவம் அவன் மனதை வெகுவாக பாதித்து விட்டது.

ஒருவழியாக கல்லூரி வாழ்க்கை முடிந்தது. மத்த செட்டு மாதிரி இல்லாம நாம் அடிக்கடி மீட் பண்ணி டச்சிலேயே இருக்கணும்டா என தேர்தல் வாக்குறுதி கொடுத்து அனைவரும் கலைந்தோம்.

பணியிடத்தில் கிடைத்த புது நண்பர்களும், திருமணத்தின் மூலம் கிடைத்த புது உறவுகளும், குழந்தைகளும் கல்லூரி நட்புகளை மறக்கடித்திருந்தன.

ஆறாம் வகுப்பிற்காக பையனை புது பள்ளியில் சேர்த்திருந்தேன். அங்கே  யூனிபார்மில் பேட்ச் தைத்திருந்த டையையும் சேர்த்திருந்தார்கள்.  ஜூன் மாசம்னு பேரு, இப்படி வெயில் அடிக்குது, இதுல டையும் வேறயா என புலம்பிக் கொண்டே, ஏண்டா உங்க ஸ்கூலுக்கு டை இல்லாம போனா என்னவாம்? என்றேன்.

ஐயையோ, எங்க ஸ்கூல்ல வெளியே நிப்பாட்டீருவாங்க. எங்க கிளாஸில எஸ்.பிரபுவுக்கு மட்டும் தான் டை இல்லாம வரலாம்னு சொல்லி இருக்காங்க என்றான்.

ஏன்? என்றதற்கு

எங்க ஸ்கூல்லயே அவன் தான் ஹைட்டு. அவன் சைஸுக்கு டை தனியா தைக்கணுமாம். அது வர்றவரைக்கும் அவனுக்கு மட்டும் அலோவ்டு என்றான்.

அந்த எஸ்,  செந்திலாக மட்டும் இருந்து விடக்கூடாது என மனம் நினைத்தது.





39 comments:

Vidhya Chandrasekaran said...

சாப்பிடுபவரையும் கிரிக்கெட்டர்களையும் ஒப்பிட்டிருந்தது தூள். முடிவு ப்ச்:(

Vidhya Chandrasekaran said...

ஹை மீ த பர்ஸ்ட்:)

முரளிகண்ணன் said...

வாங்க வித்யா.

குடந்தை அன்புமணி said...

உங்கள் வர்ணணைகள் அருமையாக இருந்தது. கடைசியில்...என்ன கொடுமை சார் இது!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வரிக்கு வரி விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவீட்டீர்களே தலை...

கே.என்.சிவராமன் said...

முரளி,

இந்தப் பின்னூட்டம் புனைவை குறித்து அல்ல.

முன்பு கோபுலுவின் ஓவியத்துடன் 'கேரக்டர்' என்ற தொடரை வாராவாரம் சாவி எழுதினார். அதன் பிறகு அந்த பாணியை யாரும் தொடரவில்லை.

நீங்கள் அதை தொடர்ந்தால் நன்றாக இருக்கும். கண்முன்னால் அப்படியே கதாபாத்திரத்தை ஓட விடுகிறீர்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கிபவா said...

நானும் ரவுடிதான் தல.. முடிவ முதல்ல கண்டுபிடிச்சு, அத கன்ஃபார்ம் பண்ணிக்க கடைசி பத்திய அவசர அவசரமா படிச்சு, அப்புறம் மீதிய படிச்சு..

ச்சே.. ஒரு கதைய இத விட மோசமா வாசிக்க முடியாது.. :(((

என்ன எல்லாம் நிக்க வச்சு...









பாரட்டனும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அந்த ஊரில் எல்லோரும் பழைய லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டித்தான் குளிக்க உபயோகப் படுத்துவார்கள்.//
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

anujanya said...

பை.காரன் சொல்வதுதான். செந்தில் எதோ மிகவும் பரிச்சயமானது போல் இருக்கு. என் கிளாஸ் மேட் (பெயர் அரசு) ஒத்தன் இப்படிதான் சிரமப் பட்டான்.

நடை வழக் கலக். 'லைப்பாய் சோப்', அமெரிக்க பாஸ்கெட்பால் வீரர்கள், டிராவிட், டயர் செருப்பு, இலையைத் தூக்க நாலு பேர் என்று சரவெடி.

'எல்லா சாலைகளும் ரோமை நோக்கி' என்று வரவேண்டுமோ?

'கேரக்டர்' துவங்கி விடுங்களேன். பை.காரனில் இருந்தே துவங்கலாம் :) என்னை விட்டு விடுங்கள்.

அனுஜன்யா

Raju said...

கலக்கீட்டீங்க மு.க. அண்ணே...
சேவாக்,டிராவிட் மேட்டரு சூப்பரப்பு..

மாசற்ற கொடி said...

யதார்த்தமான கதை. As usual character sketching சூப்பர்.

ஓஹோ இதுதான் விஷயமா ? எங்க உறவினர்களில் 2-3 அமிதாப் பச்சன் -ஜெயா பாதுரி ஜோடி உண்டு. எல்லாமே அளவோடு இருந்தால்தான் - அழகு !

அன்புடன்
மாசற்ற கொடி

முரளிகண்ணன் said...

குடந்தை அன்புமணி, சுரேஷ் வருகைக்கு நன்றி.

பைத்தியக்காரன் ஊக்கத்திற்க்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.

கார்க்கி, டிவி ராதாகிருஷ்ணன் தொடரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அனுஜன்யா, டக்ளஸ், மாசற்ற கொடி தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி

நையாண்டி நைனா said...

தலே... நல்லாவே புனைஞ்சிருகீங்க.

அப்புறம் ஒரு சின்ன மேட்டர்,

/*எல்லா நகரங்களும் ரோமை நோக்கி */

எல்லா பாதையும் ரோமை நோக்கி என்று தான் வரும் என நான் நினைக்கிறேன்.

மற்ற பதிவர்களும் தவறை சொல்லலாம்.

"All Roads Lead to Rome" என்று தான் வரும்

முரளிகண்ணன் said...

நையாண்டி நைனா மிக்க நன்றி. திருத்தி விடுகிறேன்.

(அனுஜன்யாவும் தவறை சுட்டியிருந்தார். அவருக்கும் நன்றி)

ராஜ நடராஜன் said...

//அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்கள் அந்த கிராமத்துக்கு எதுக்கு வரப்போகிறார்கள்?//

நான் இங்கே வார இறுதி flee market ல் அமெரிக்க ராணுவ வீரர்கள் உபயோகித்த காலணிகளைப் பார்த்தேன்!நீங்கள் சொல்வது உண்மைதான்!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

Cable சங்கர் said...

வழக்கம போல அருமையான வர்ணனைகள்.. முடிவு ஓரள்வுக்கு ஊகிக்க முடிந்ததே.. இருந்தாலும் அருமையான நகைச்சுவை.

சின்னப் பையன் said...

அட்டகாசமான வர்ணனை....

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள் சங்கர், சின்னப்பையன்

பரிசல்காரன் said...

லைஃப்பாய் உதாரணத்தை படிக்கப் படிக்கவே உங்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பிப் பாராட்டீட்டேன். அவ்ளோ பாதிச்சுது.

பைத்தியக்காரனை எல்லாருமே வழிமொழிகிறோம்.

ஸ்டார்ட் மீஜிக்.

(அனுஜன்யாவின் கடைசி வரிகளிலிருந்த நுண்ணரசியலை மிக ரசித்தேன்!!)

பரிசல்காரன் said...

லைஃப்பாய் உதாரணத்தை படிக்கப் படிக்கவே உங்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பிப் பாராட்டீட்டேன். அவ்ளோ பாதிச்சுது.

பைத்தியக்காரனை எல்லாருமே வழிமொழிகிறோம்.

ஸ்டார்ட் மீஜிக்.

(அனுஜன்யாவின் கடைசி வரிகளிலிருந்த நுண்ணரசியலை மிக ரசித்தேன்!!)

Thamira said...

கிளைமாக்ஸ் வழக்கம் போல இருந்தாலும்.. நகைச்சுவை பின்னும் இந்த நடையும், பர்ஃபெக்ஷனும் அட்டகாசம்.. இந்த மாதிரி பாத்ததா நெனைவேயில்லயே.. எதிர்பார்க்கவேயில்லை.. பின்னிட்டீங்க..

புருனோ Bruno said...

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்கள் அந்த கிராமத்துக்கு எதுக்கு வரப்போகிறார்கள்?

ஆனால் செந்திலின் அப்பா கைக்கு அந்த முழு சோப்பே, சாம்பிள் சோப்பு போலத்தான் இருக்கும். பொதுவாக

அங்கு டெயில் எண்ட் பேட்ஸ்மென்கள் வரும் வரை டிராவிட் நிற்பது போல சமையல்காரர்கள் சாப்பிடும் கடைசிப் பந்தி வரை இவர் ஈடு கொடுப்பார்.

ஆனால் அவர் சாப்பிட்ட இலையைத் தூக்க நாலுபேர் தேவைப்பட்டது.

---

சூப்பர் சூப்பர்

கிரி said...

உங்களோட எடுத்துக்காட்டுகள் ரசிக்கும்படி இருந்தது முரளிகண்ணன் :-)

தமிழன்-கறுப்பி... said...

நல்லா இருக்கு,..!
அடிக்கடி புனைவும் எழுதுங்க...

கோபிநாத் said...

படித்தவுடன்...என்ன கொடுமைங்க இதெல்லாம்ன்னு தோணவச்சிட்டிங்க ;))

பை.காரன் சொல்வது யாருன்னை தெரியல பட் யோசனை சூப்பரு...தொடங்குங்க அண்ணாச்சி ;)))

ஜியா said...

நல்லா இருந்துச்சு... ஆனா...

முரளிகண்ணன் said...

பரிசல்காரன்,ஆதிமூலகிருஷ்ணன்,புருனோ வருகைக்கு நன்றி.

கிரி,தமிழன் கறுப்பி புனைவு எழுத முயற்சிக்கிறேன்

கோபிநாத் மிக்க நன்றி

நசரேயன் தொடரும் ஆதரவுக்கு நன்றி

ஜி, என்னாச்சு? கிளைமாக்ஸ் சொதப்பலா?

தராசு said...

வர்ணனைகள் கலக்கல் தல,

பலமுறை படித்தேன். ஒரு பாத்திரத்தை இவ்வளவு பக்கத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்த முடியுமா!!!!!!!

வார்த்தைகளை அருமையாக பின்னியிருக்கிறீர்கள்.

படித்து நிறைய படித்துக்கொள்ளவேண்டிய பதிவு.

வெட்டிப்பயல் said...

//ஜி said...
நல்லா இருந்துச்சு... ஆனா...//

:-)

thanjai gemini said...

//அந்த ஊரில் எல்லோரும் பழைய லைப்பாய் சோப்பை இரண்டாக வெட்டித்தான் குளிக்க உபயோகப் படுத்துவார்கள்.//
அட்டகாசமான வர்ணனை
பைத்தியக்காரனை வழிமொழிகிறோம்
.

narsim said...

ஏழு முறை வாசித்தேன் தலைவா. கதாபாத்திர அமைப்பும் காட்சிகள் விரியும் தன்மையும் அழகு என்பதை விட பலம்.

narsim said...

//கிராமத்தில் கிடா வெட்டிப் போடப்படும் விருந்துகளில் எப்பொழுதும் ஒரு ஓரத்தில்தான் அமர்ந்து கொள்வார். சேவாக் மாதிரி, சாப்பிட்டமா எந்திரிச்சு போனமான்னு இருப்பார்னு நினச்சுறாதீங்க. அவர் டிராவிட் மாதிரி.//

அடி வெளுப்பதுன்னா இதுதான் தல

முரளிகண்ணன் said...

@ தராசு, மிக்க நன்றி.

@வெட்டிப்பயல், தலைவா கருத்தச் சொல்லுங்க.

@ தஞ்சை ஜெமினி, மிக்க நன்றி

@ நர்சிம். மிக்க நன்றி தலைவரே.

புரபைல் போட்டோ சூப்பர்

வெட்டிப்பயல் said...

2003 World Cup matchls Indian team kodutha mananilaiyai intha kathai kodukuthu boss...

முரளிகண்ணன் said...

வெட்டி,

நீங்க சொல்ல வர்றது புரியுது. திருத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்

கருத்துக்களுக்கு நன்றி

Sambath said...

மிகவும் நகைச்சுவையாக உள்ளது முரளி.
கலக்குங்க
சம்பத்

Anonymous said...

'லைப்பாய் சோப்', அமெரிக்க பாஸ்கெட்பால் வீரர்கள், டிராவிட், டயர் செருப்பு, இலையைத் தூக்க நாலு பேர் ha ha ha.......