April 22, 2009

லிப்கோ பாலாஜி

தெருவிலோ,பள்ளியிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பட்டப் பெயர் இல்லாதவர்களைப் பார்ப்பது அபூர்வமான ஒன்று. ஆனால் தன் பதினேழு வயதுவரை பட்டப்பெயர் இல்லாமல் தன் சொந்தப் பெயராலேயே அழைக்கப்படும் பாக்கியம் பெற்றவன் பாலாஜி.

அவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.

கப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான்.

முக்கியமாக நான் அப்படி இப்படி என்ற பீலாவும் இருக்காது. இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்.

அது குஷ்பூ, கவுதமி, பானுப்பிரியா என்ற முப்பெரும் தேவியர் தமிழக இளைஞர்களின் கனவில் ஆட்சி செய்த காலம். நாங்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு காலை மதியம் கிரிக்கெட், மாலை சினிமா, இரவு அரட்டை என திரிந்த காலம். அரட்டையில் அதிகம் அடிபடுவது தெருப்பெண்களே. அதிலும் எங்கள் தெருவில் இருந்த கங்கா மரண கட்டை கேட்டகிரியில் இருந்ததால் அவளைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும்.

அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்குணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.

ஒருமுறை இம்மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது பாலாஜி சொன்ன விஷயம், பெரியாரே பெருமாள் கோவிலுக்கு போகச் சொன்னதைப் போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவன் சொன்னது இதுதான் “ நான் இந்த தெருவில லவ் பண்ணறது வாணியதாண்டா”. அதிர்ச்சிக்கு காரணம் வாணி இரண்டாம் வகுப்பு. அதற்கு அவன் சொன்ன காரணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழில இருந்து பத்து வயசு வரைக்கும் வித்தியாசம் இருந்தாத் தாண்டா நல்லா இருக்கும். அதனாலதாண்டா அந்தக் காலத்தில எல்லாம் அது மாதிரி பண்ணியிருக்காங்க. எனக்கு முப்பதாகும் போது வாணிக்கு இருபதாகும். நான் நல்லா செட்டில் ஆயிருப்பேன். லைப் சூப்பரா இருக்கும். அவன் சொன்னது லாஜிக்கலாக இருந்தாலும் எங்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.

செட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். என்னடா இவன் சரியான அகராதியா இருப்பான் போலிருக்கே என்று ஒருவன் சொல்ல, ஆகா கிடைச்சதுடா பாலாஜிக்கு ஒரு பட்டப் பெயர் என்று துள்ளிக் குதித்தேன். நேரடியாக அகராதி என்று சொல்ல முடியாததால் அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கில அகராதியான லிப்கோவின் பெயரையே அவனுக்குச் சூட்டினேன்.

ரோஜா, மீனா, நக்மா முப்பெரும் தேவியராக இருந்த காலம். கல்லூரி இறுதியாண்டு நேரம். வழக்கம் போல நடந்த அரட்டையில் ஒருவன் சொன்னான். “ நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.

உடனே பாலாஜி, நான் கட்டுற பொண்ணுக்கு ஒரு கல்யாணமான அக்காவும், அண்ணனும் இருக்கணும் என்றான். அவன் சொன்ன காரணம்,

ஏற்கனவே அக்காகாரி தன் புகுந்த வீட்டிலே இப்படி கொடுமை அப்படி கொடுமைன்னு புலம்பி, ரெண்டாவது பொண்ணு புகுந்த வீட்டு பிரச்சினக்கு மனசளவில தயாரா இருப்பா.

அண்ணனுக்கு கல்யாணாமாகி இருந்து அண்ணி வீட்டில இருந்தா இன்னும் விசேஷம். முணுக்குண்ணா கண்ணக் கசக்கி, மூக்கைச் சீந்தி, பெட்டிய தூக்கிட்டு கிளம்பாம. நம்ம வீட்டிலேயே இருப்பாங்க என்று முடித்தான். எல்லோருக்கும் தலையைச் சுற்றியது.

ரம்பாவின் மவுசு குறைந்து சிம்ரன், ஜோதிகா கனவை ஆக்ரமித்த காலம். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு காலம் தள்ளிய காலம். நல்ல வசதியான வீட்டில பொண்ணக் கட்டணும் என்று ஒரு குரூப்பும், வசதியில்லாத வீட்டில பொண்ணக் கட்டினா நமக்கு அடங்கி இருப்பாங்க என்று ஒரு குரூப்பும் வாக்குவாதத்தில் ஈடு பட்டிருந்தபோது பாலாஜி வாயைத் திறந்தான்.

“பரம்பரை பணக்காரங்க நமக்கு பொண்ணு தரமாட்டாங்க. புது பணக்கார வீட்டு பொண்ணுக தான் அதிகமா ராங்கி பண்ணும். வசதி இல்லாத வீட்டு பொண்ணு அடங்கி இருக்கும்னு சொல்லுறதெல்லாம் தப்பு. பொண்டாட்டிங்கிற பதவி கிடைச்சுட்டாலே எந்தப் பொண்ணா இருந்தாலும் ஆட்டம் காண்பிப்பாங்க. இவள்ளாம் நம்மளை அதிகாரம் பண்ணுறாளேன்னு நமக்கு கடுப்புதான் அதிகமாகும்.

அப்ப நீ என்னதாண்டா சொல்ல வர்றே என்று கடுப்பாக கேட்டோம்.

வாழ்ந்து கெட்ட குடும்பத்துப் பொண்ணத் தாண்டா கட்டனும் என்றவன் அதற்க்கு சொன்ன காரணம். “ அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.

அசின்,திரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா,பாவனா என பல தேவதைகள் இருந்தாலும் யாரும் கனவில் வராத காலம். செட்டில் பாலாஜியைத் தவிர அனைவரின் குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காதுகுத்து முடிந்திருந்த காலம். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்த காலம். எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் தற்போது பாலாஜிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

என்ன சொல்றான் பாலாஜி? என்றேன் அவரிடம்.

அவர் புலம்பத் தொடங்கினார். கல்யாணம்கிறதே ஒரு காம்பிரமைஸ்தான். மாப்பிள்ளை வீட்டில மொதோ ஆரம்பிக்கும் போது, பொண்ணு ஒல்லியா,சிவப்பா,களையா,வசதியா இருக்கணும்னு ஆரம்பிப்பாங்க. அதேபோல பொண்ணு வீட்டிலயும் மாப்பிள்ளைக்கு நல்ல வேளை இருக்கணும், அக்கா தங்கச்சி இருக்கக்கூடாதுன்னு ஆரம்பிப்பாங்க.

ஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்கி வந்துருவாங்க. ஆனா உங்க பிரண்டு சரியான அகராதிப்பா. ஒவ்வொருதடவை பார்க்கும் போதும் ஒரு படி மேல ஏறிக்கிட்டே இருக்கான். என்ன பண்ணுறதன்னே தெரியல என சலித்துக் கொண்டே முடித்தார்.

அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மனசு துடித்தாலும், அலுவலக,வீட்டு வேலைகள் கழுத்தைப் பிடிப்பதால் சின்னத் திரையில் பார்த்து மனசை தேற்றிக் கொள்ளும் காலம். அடுத்த வாரம் ஊரில் என் இரண்டாவது குழந்தைக்கு காதுகுத்து. பாலாஜியை நேரில் சந்தித்து அழைக்க சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்ன சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் சொன்னபிறகு அப்டேட் செய்கிறேன்.

60 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹாய் முரளி,

நீங்க சொன்ன பாலாஜி க்களை போன்று நிறைய பேர் அகராதி பிடிச்சி போய் அலைறாங்க ! ம்ம்! என்னத்த சொல்ல....

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான்.

சென்ஷி said...

சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..

நிறைய்ய எழுதுங்க முரளி.. படிக்க ஆர்வமா இருக்குது.

முரளிகண்ணன் said...

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி சென்ஷி

சென்ஷி said...

//ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்காணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.//

என்னாமா யோசிச்சுருக்கீங்க :-))

anujanya said...

:)))

பாலாஜி கொடுத்து வைத்தவர்.

ஊரில் இல்லையா முரளி இல்ல ஆணி?

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

வாங்க அனுஜன்யா. குடும்ப ஆணி அதான் தலை காட்ட முடியல.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹா .... ஹா......


தல.....


கௌதமி காலத்து ஆட்களையெல்லாம் மக்கள் ரிஜக்டட் பீஸ் ல சேர்த்திருவாங்களே....


ரஜினி மாதிரி எதையாவது செய்து இளமையோடு கரெக்ட் பண்ணச் சொல்லுங்க.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்கி வந்துருவாங்க. //


விடுங்க பிரதர்....





அவர சீக்கிரமா தொழிலதிபர் ஆகச் சொல்லுங்க

ஸ்ரீ.... said...

மிகச் சிறந்த பதிவு. நகைச்சுவையும், நட்பும் சரியான விகிதத்தில் தந்திருக்கிறீர்கள். நன்றி.

ஸ்ரீ....

Mahesh said...

ஸ்ரீ... வழிமொழிகிறேன் !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. //

இது வீட்டுல தெரிஞ்சா கஞ்சிதான் கிடைக்கும் முரளி.. கொஞ்ச நாளா ஆளைக் காணோம்னு பார்த்தேன்.. நல்ல நகைச்சுவையான பதிவு..

தராசு said...

வெவ்வேறு கால கட்டங்களுக்காக தந்திருக்கும் ரெபரன்ஸ் இருக்கே, சூப்பர் தல, படிச்சுகிட்டே இருக்கணும் போல இருக்கு.

ஆமா, எங்க போனீங்க, கடை ரொம்ப நாளா பூட்டியே இருந்தது?????

ஆயில்யன் said...

//செட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். //

அவ்வ்வ்வ்வ்

கெட்ட பழக்கமாச்சே :)

ஆயில்யன் said...

//நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.
//

ரொம்ப டீடெயில்லாத்தான் ஃபீல் பண்ணியிருக்கீங்கோ....! :)))

ஆயில்யன் said...

//அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.
//

இந்த அப்ரோச் எனக்கு நொம்ப்ப புடிச்சிருக்கு :)

சின்னப் பையன் said...

ஏகப்பட்ட நடிகைங்க பேர்களை மட்டும் சொல்லிட்டு, ஒரு படம் கூட போடாமே விட்டுட்டீங்க... அவ்வ்வ்...

முரளிகண்ணன் said...

சுரேஷ் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி.

ஸ்ரீ, மகேஷ் மிக்க நன்றி.

வாங்க கார்த்திகைபாண்டியன். கஞ்சிக்குப் பயந்தா கதை கிடைக்குமா?

முரளிகண்ணன் said...

தராசு மிக்க நன்றி. வீட்டில் வேலை அதிகம். அதான் அடிக்கடி தலை காட்ட முடியல.

ஆயில்யன், புரோட்டா வாங்கிக் கொடுத்து புறணி கேட்கிறது நம்ம பாலிசி.

அந்த அப்ரோச் பிடிச்சிருக்கா?

சின்னப்பையன், முடியல (படம் போட)

கார்க்கிபவா said...

சூப்பர் தல..

வரிக்கு வரி அட்டகாசம்..

சினிமா டேட்டாபேஸ்னு இதுலயும் சொல்றீங்க.. :))

முரளிகண்ணன் said...

நன்றி கார்க்கி

முரளிகண்ணன் said...

நன்றி கார்க்கி

அக்னி பார்வை said...

நல்ல் பதிவு முரளி

முரளிகண்ணன் said...

நன்றி அக்னிபார்வை

narsim said...

முரளி அருமை..மரணகட்டை,வாழ்ந்து கொட்ட பெண்ணிற்கான காரணங்கள் என அதகளம்..

நல்லா எழுதி இருக்கீங்க முரளி.. கம் பேக்.

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே.

Cable சங்கர் said...

நைஸ்..

அறிவிலி said...

மிகவும் ரசித்த பதிவுகளில் ஒன்று.

நடிகைகளை வைத்து வருடங்களை சொன்னது, மரண கட்டை,லிஃப்கோ லாஜிக்ஸ் எல்லமே பிரமாதம்.

அத்திரி said...

/எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை //

ஹிஹிஹிஹி

தல அசத்தல் பதிவு...

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர், அறிவிலி, அத்திரி வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி

ஷண்முகப்ரியன் said...

அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்காணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.///

உங்கள் கதையின் ,மன்னிக்கவும் உங்கள் படைப்பின் மிகப் பெரிய பலம் கேரக்டர் ஸ்டடி.அதுதான் வெறும் கதையை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது.
இந்தக் கதையை வெறுமனே அருமை என்று சொல்வது என் வார்த்தைகளின் வெறுமை,முரளி கண்ணன்.

thamizhparavai said...

உங்கள் வலைத்தள தலைப்பு போல் தெளிவான நடை. அருமை...
இது போன்ற கதைகளை,(கட்டுரைகளை) அவ்வப்போது வெளியிடவும் முரளி சார்..
குறை சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். மூன்றாவது பாராவிலுள்ள விஷயங்கள் படிக்கையில் உங்கள் சொந்த விருப்பு , வெறுப்புகள் வ்ந்து விடுகிறது. உங்கள் பழைய புனைவுகளிலும் இதிலுள்ள விஷய்ங்கள் இடம் பெற்றமையால்...

தமிழன்-கறுப்பி... said...

சத்தமே இல்லாம வந்து அசத்துறிங்க முரளி அண்ணன் கலக்கல்...

தமிழன்-கறுப்பி... said...

அதேன் தரகர் மேல
அப்படியொரு கோபம்.. :)

கோபிநாத் said...

அண்ணாச்சி அடிச்சி பின்னிட்டிங்க ;-))

காலங்கள் அனைத்தும் காலகாலத்திற்க்கும் மனதில் இருக்குற மாதிரி எழுதியிருக்கிங்க.

அந்த மரண கட்டைக்கு ஒரு ஸ்பெசல் ஓ ;-)

முரளிகண்ணன் said...

ஷண்முகப்ரியன் சார்,

தங்களின் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி. தங்களின் பின்னூட்டம் புத்துணர்வு ஊட்டுகிறது.

தமிழ்பறவை, வருகைக்கு நன்றி.

\\மூன்றாவது பாராவிலுள்ள விஷயங்கள் படிக்கையில் உங்கள் சொந்த விருப்பு , வெறுப்புகள் வ்ந்து விடுகிறது\\

இனி கவனமாக இருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

தமிழன் கறுப்பி, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கோபிநாத், மரணகட்டை ரசிப்புக்கு நானும் ஒரு ஓ போட்டுக்குறேன்

பட்டாம்பூச்சி said...

//பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை//

ஹா .... ஹா...... :)))
சிறந்த பதிவு.

வெட்டிப்பயல் said...

தல,
கதை அருமை.

ஆனா ஒரு நாலஞ்சி சிறுகதையை ஒட்டுகா படிச்சா ஒரே மாதிரி (நடை) இருக்கற மாதிரி ஃபீல் வருது தல. கொஞ்சம் வித்தியாசம் கொடுங்களேன்.

Raju said...

\\அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்காணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.\\

ஒத்துக்குறேங்க நீங்க யூத்து.!
ஒத்துக்குறேங்க நீங்க யூத்து.!
ஒத்துக்குறேங்க நீங்க யூத்து.!
ஒத்துக்குறேங்க நீங்க யூத்து.!
ஒத்துக்குறேங்க நீங்க யூத்து.!

நீங்க சினிமா பத்தியும் ஒரு Ph.D பண்ணலாம்....

தீப்பெட்டி said...

நான் கூட ஏதோ சினிமா பதிவுனு நெனச்சு படிச்சேன்.

பதிவு நன்றாக இருந்தது.

முரளிகண்ணன் said...

பட்டாம் பூச்சி வருகைக்கு நன்றி.

வெடிப்பயல், நன்றி. நான் எல்லாக் கதைகளையும் தன்னிலை ஒருமையிலேயே எழுதுவதால் அப்படி வருகிறது என நினைக்கிறேன். நானும் இதை பீல் செய்தேன்.

வரும் கதைகளில் தேர்ட் பெர்சன் அல்லது உரையாடல் வடிவம் போன்ற மாற்று நடைகளை கையாள முயற்சிக்கிறேன்.

முரளிகண்ணன் said...

டக்ளஸ்ஸண்ணா வணக்கம்னா.

தீப்பெட்டி அடுத்தது ஒரு சினிமா பதிவுதான். வந்து சிறப்பிக்கவும்

புருனோ Bruno said...

//அவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.

கப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்க்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான். //

தமிழகத்தின் டான் பிரவுன் ஆகி கொண்டிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள் :) :)

புருனோ Bruno said...

//அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்காணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை. //

உங்கள் கதைகள் மூலம் பல பொது அறிவு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. (டான் பிரவுன், மைக்கைல் கிரைட்டன் போல்)

புருனோ Bruno said...

நடிகைகளை வைத்து காலத்தை கொண்டு சென்றது நன்றாக இருந்தது ...

நையாண்டி நைனா said...

super X super X Super X Super X 1000000000000000000 raised to the power of 100000000000000000

வெண்பூ said...

அருமையான புனைவு முரளி.. பாராட்டுகள்

Thamira said...

செமையா எழுதறீங்க தல.. பாலாஜியின் கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன..

எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. // நேர்ல பார்த்தும் சும்மாவா விட்டீங்க அந்த படுபாவிய.. நானும் கொலவெறியோடு உள்ளேன் சிலர் மீது.

வெட்டிப்பயல் said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
செமையா எழுதறீங்க தல.. பாலாஜியின் கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன..
//

Krish,
Entha Balaji? Lifco Balaji or Vetti Balaji? ;)

ஜியா said...

//செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை//

Sema.. kathaiyum nalla flow.. thodarnthu ezuthunga :))

முரளிகண்ணன் said...

புருனோ வருகைக்கு நன்றி. (டான் பிரவுனா? - இது உங்களுக்கே அதிகமா தெரியல?)

நையாண்டி நைனா, நீங்கள் சொன்ன அதே இலக்க அளவு நன்றிகள்.

வெண்பூ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆதி, வாங்க வாங்க. கூல்.


பாலாஜி, அவர் லிப்கோ பாலாஜியத்தான் சொல்றாருன்னு நினைக்கிறேன். :-))

முரளிகண்ணன் said...

ஜி தங்கள் வருகைக்கு நன்றி

கிரி said...

//இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்//

:-)))))

மரண கட்டை விளக்கம் நல்லா இருக்கு

ஷாமிளியே வந்துட்டாங்க :-)))

முரளிகண்ணன் said...

வாங்க கிரி. ஷாமிலிய பின்னர் உபயோகப் படுத்திக்கலாம்

பிராட்வே பையன் said...

அருமை. நிறைய எழுதுங்கள் முரளி.
மாலை மெரீனாவில் சந்திப்போம்..

ஹஸன் ராஜா.

Raju said...

\\வாங்க கிரி. ஷாமிலிய பின்னர் உபயோகப் படுத்திக்கலாம்\\
அய்யயோ..என்ன சொல்றீங்க..!
எனக்கு சத்தியமா புரியல...
நான் இந்த பின்னூட்டத்தை மட்டும் படிக்கவே இல்லையாக்கும்...!

முரளிகண்ணன் said...

நன்றி ஹசன்ராஜா. தவிர்க்க முடியாத சூழலால் பதிவர் சந்திப்புக்கு வர இயலவில்லை.


டக்ளஸண்ணே, மதுரை குறும்பு அப்படியே உங்ககிட்ட இருக்குண்ணே.

புருனோ Bruno said...

//இந்தக் கதையை வெறுமனே அருமை என்று சொல்வது என் வார்த்தைகளின் வெறுமை,//

அசத்தல் :)

விக்னேஷ்வரி said...

ஐ, நல்ல வித்தியாசமான ஸ்டோரி. நல்லாருக்குங்க.