October 11, 2009

1976 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – ஒரு பார்வை

சுதந்திரத்திற்க்குப் பின் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளான 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜூன் 75 முதல் மார்ச் 77 வரை அமலில் இருந்த அவசர நிலை பிரகடனம், அதன் விளைவுகள் ஆகியவை தமிழ்சினிமாவில் எங்காவது ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. (இருவர் திரைப்படம் இதை ஊறுகாய் போலவே தொட்டுச் சென்றிருந்தது).

விடுதலைக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுமை கொண்ட தலைவர்களில் பெரியார் மற்றும் காமராஜரை வைத்து மட்டுமே திரைப்படங்கள் வந்துள்ளன. வ உ சி, பாரதியார் பற்றிய படங்கள் வந்திருந்தாலும் அவர்கள் சுதந்திரத்திற்க்கு முன்னரே மறைந்தவர்கள். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றினை திமுகவோ அதிமுகவோ தயாரித்திருக்கலாம்.

இணையத்தில் அண்ணா என்று தேடினாலே ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிக்காவின் படங்களும்,செய்திகளும் தான் வருகின்றன என்ற ஆதங்கத்தில் தனியார் சிலர் அண்ணா பற்றிய ஆவணப் படத்தை தயாரித்தனர். தற்போது அரசும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்தது. ஆனால் அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை கருணாநிதி பற்றி படமெடுத்தால் இந்தி எதிர்ப்பும், ஸ்டாலின் பற்றி படமெடுத்தால் மிசாவும் ஆவணப்படுத்தப் படலாம்.

அவசரநிலை விலக்கப்பட்டவுடன் ஜனதா கட்சியின் ஆட்சி சில ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் கூட, மிசா கொடுமைகளைப் பற்றிய எந்த பதிவும் தமிழ்படங்களில் அப்போது வரவில்லையே என நான் நினைத்தது உண்டு. பின் செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் பாஜக ஆட்சியில் கூட பல ட்ரிப்யூனல்களில் பந்தாடப்பட்டதைப் பார்த்த போதுதான் உண்மை நிலவரம் விளங்கியது. இந்திரன்கள் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லையே.

1976 ஆம் ஆண்டு அவசரநிலை உச்சத்தில் இருந்த ஆண்டு. அரசுக்கு எதிராக யாரும் தமிழ்சினிமாவில் தும்மக்கூட இல்லை. எனவே பெரும்பாலும் அரசியல் கலப்பில்லாத பொழுது போக்கு படங்களே வந்தன. அதில் சில படங்களைப் பார்ப்போம்.

அன்னக்கிளி

இளையராஜா அறிமுகமான படம். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் சிவகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன் நடிதத படம். அறிமுகமாகி அடுத்த 16 ஆண்டுகளுக்கு தனிகாட்டு ராஜாவாய் விளங்கியவருக்கு ஆரம்பமே அட்டகாசம் தான். ஆனால் அவரது இசைக்கேற்ப காட்சிகளை பல இயக்குநர்கள் அமைக்கவில்லை. அதனால்தான் அந்தப் பாடல்களை கேட்க முடிந்தாலும் பாடல் காட்சிகளை பார்க்க முடியவில்லை.

மன்மதலீலை

கமலுக்கு காதல் இளவரசன் என்னும் பட்டத்துக்கு அதி பயங்கர அடித்தளம் போட்ட படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கமல் படமா? அசிங்கமா இருக்கும் பார்க்கக்கூடாது என தடை உத்தரவு அளிக்க ஒரு காரணமாய் இருந்த படம். பத்தாண்டுகள் கழித்தும் ரஜினி-கமல் ரசிகர் மோதலில், கமலின் மீது கடைசி பிரம்மாஸ்திரமாக உபயோகிக்கப்படும் பொம்பளைப் பொறுக்கி என்னும் வசவுக்கு ஒரு காரணமாய் இருந்த படம்.
நான் கல்லூரியில் படித்த நாலு ஆண்டுகளும் (91-95) இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் ரீ ரிலிஸ் ஆவதும், மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆட்டத்திற்க்கு சேர்ந்து செல்வதும் சம்பிரதாயமாக நடந்த ஒன்று என்பதில் இருந்தே இந்தப் படத்தின் பொடென்சியலை அறியலாம். இப்போதும் இது ஜீவன்,ஜீவா மற்றும் சிம்புவுக்கு ஏற்ற ரீமேக் படம்.

கே பாலசந்தர் இயக்கத்தில், எம் எஸ் விஸ்வனாதன் இசையில், கமல்,ஆலம்,ஹேமா,ஒய் ஜி பி,ஒய் ஜி எம், ஒய் விஜயா,ராதாரவி ஆகியோர் நடித்த படம். கமல் திருமணத்துக்குப் பின்னும் திருந்தாமல் உமனைசராக அலைகிறார். இளாம்பெண்கள் மட்டுமின்றி, அறிமுகமானவர்களின் மனைவிகளையும் விட்டு வைப்பதில்லை. இதைக்கண்டு வருந்தும் அவரது மனைவி விவகாரத்துக்கு மனு செய்கிறார். பிரிந்திரிக்கும் நேரத்தில் தந்திரமாக வந்து அவரை கருத்தரிக்க செய்துவிடுகிறார் கமல். ஆனால் பின்னர் நடக்கும் சில சம்பவங்களால் மனம் திருந்தி விடுகிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், ஹலோ மைடியர் ராங் நம்பர், நாதமெனும் கோவிலிலே போன்ற அருமையான பாடல்கள் நிறைந்த படம்.

உணர்ச்சிகள்

கமல் அரங்கேற்றம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது உருவாக்கிய கதை. இதை தன் ஆப்த நண்பர் ஆர் சி சக்திக்கு இயக்க கொடுத்தார். இந்தப் படத்தில் கமலின் வசனப் பங்களிப்பும் உண்டு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கமலின் எல்டாம்ஸ் ரோடு (வரும் நாட்களில் டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாறப் போகும்) இல்லத்திலேயே எடுக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் ஸ்டியோவுக்குள் இருந்த கேமிராவை அவுட்டோருக்கு ஓரளவு மாற்றிய படம் எனலாம். பாரதிராஜா அடுத்த ஆண்டில் 16 வயதினிலே மூலம் கிராமத்துக்கே அதைத் தூக்கிச் சென்றுவிட்டார்.
இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பிரபல கேரள இசை அமைப்பாளார் ஷ்யாம் அவர்கள். இவர் ஆர் சி சக்தியின் அடுத்த படமான மனிதரில் இத்தனை நிறங்களா படத்துக்கும் இசை அமைத்தார். மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா என்ற அழியாப் பாடலை அந்தப் படத்தில் கொடுத்தார். ஒரு சி பி ஐ டைரி குறிப்பு, நேரறியான் சி பி ஐ போன்ற படங்களில் இவர் அமைத்த தீம் மியூசிக் மிகப் பிரபலம்.

மூன்று முடிச்சு

கமல்,ரஜினி ஸ்ரீதேவி என்னும் டிரீம் காம்பினேஷன் அமைந்த படம். கே பாலசந்தர் இயக்கம், எம் எஸ் விஸ்வனாதன் இசை. கமல்,ஸ்ரீதேவி காதலர்கள். ரஜினி கமலின் நண்பர். ஆனால் ஸ்ரீதேவியை லுக் விடுகிறார். ஸ்ரீதேவி இதை அறிந்து கமலிடம் எச்சரிக்கை செய்கிறார். கமல் நண்பனை நம்புகிறார். ஒருமுறை மூவரும் பிக்னிக் போகிறார்கள். படகு சவாரி செய்யும்போது கமல் தவறி ஏரியில் விழுந்து விட, ரஜினி காப்பாற்றாமல் பன்ச் சாங் பாடுகிறார். கமல் இறக்கிறார். ஸ்ரீதேவிக்கு மேலும் ஒரு இடியாக அவரது அக்காவுக்கு தீயில் முகம் வெந்து போகிறது.

மனைவியை இழந்த, குழந்தைகளை பராமரிக்க மணப்பெண் தேடும் ஒரு பணக்காரரை மணந்து கொள்கிறார் ஸ்ரீதேவி. அவர் யாருமல்ல ரஜினியின் தந்தை தான். பிற்பாதியில் ரஜினி, ஸ்ரீதேவி மோதல் காட்சிகள் சுவராசியம். இந்தப் படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்த கல்கத்தா விஸ்வனாதன் 2002ல் பாபாவிலும் ரஜினிக்கு தந்தையாக நடித்தார்.

ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்த கால நதிகளிலே போன்ற அருமையான பாடல்கள் கொண்ட படம்.

நீதிக்கு தலை வணங்கு

தன் 59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம். இணை லதா. ஒரு விபத்தில் தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக பணக்கார வீட்டுப் பிள்ளை, தன் வீட்டை விட்டு அங்கு சென்று அவர்களை காப்பாற்ற கஷ்டப்படும் கதை. (தவசி படம் ஞாபகம் வருகிறதா?). அவர்களைக் காப்பாற்றும் முயற்சியாக இன்னொரு வீட்டில் பணியாளராக இருப்பார். இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப் பூவினில் என்னும் அருமையான பாடல் உண்டு. இந்தப் படத்தின் சேஸிங் காட்சிகளை படம் பிடித்தவர் காமிரா மேதை கர்ணன்.

உத்தமன்

சிவாஜிகணேசன், மஞ்சுளா நடித்த படம். காஷ்மீரில் இருவரும் சந்தித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சிவாஜி பனிப் பிரதேசத்தில் காய்ச்சலால் குளிரில் அவதிப்பட, அவர் உடல் சூடானால் பிழைப்பார் என்னும் நிலையால் அவருக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் தருகிறார் மஞ்சுளா. டிரீட்மெண்டால் சிவாஜி குணமடைய மஞ்சுளா கர்ப்பமாகிறர். சுய நினைவில்லாமல் இருந்த சிவாஜிக்கு இது தெரியாது. பின் இருவரும் தமிழ்நாடு வந்து விடுகிறார்கள். பின் மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்து, வளர்ந்த பின் உண்மை தெரிந்து இருவரும் இணைகிறார்கள். படகு படகு ஆசைப் படகு என்னும் ரிதமான பாடலும் உண்டு.

துணிவே துணை

ஒரு கிராமத்தில் குற்றங்களே பல ஆண்டுகளாக நடை பெறவில்லை. அந்தக் கிராம தெய்வம் யாரையும் குற்றம் செய்யவிடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே அங்குள்ள காவல் நிலையத்தை காலி செய்து விட்டார்கள் என உளவுத்துறைக்கு அறிக்கை வருகிறது. இதை நம்பாத உளவுத்துறை அந்த மர்மத்தைக் கண்டறிய அதிகாரி விஜயகுமாரை அனுப்புகிறது. அந்த ஊரில் வெளியாட்கள் தங்கினால் சாமி ஒத்துக் கொள்ளாது என்று பயமுறுத்தப் படுகிறார். தொடரும் விசித்திர சம்பவங்களால் அதிர்ச்சியிலேயே ரத்தம் கக்கி இறக்கிறார். இதனால் வருத்தமடையும் அவர் தம்பி ஜெய்சங்கர் (இவரும் அதிகாரி) துப்பறிய அந்த ஊருக்கு வருகிறார்.

அவருக்கும் அதே மாதிரியான விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் அவர் தப்பிக்கிறார். குக்கிராமத்தில் சிக்கன் நூடுல்ஸ், பிரைட் ரைஸ் கிடைப்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் தான் தெரிய வருகிறது, ஒரு பெரிய கடத்தல் கூட்டம், அந்த கிராம பெரிய மனிதர்களுக்கு பணத்தாசை காட்டி தங்கள் புகலிடமாக அந்தக் கிராமத்தை பயன் படுத்துவது. பல்வேறு திருப்பங்களுக்குப் பின் ஜெய்சங்கர் கடத்தல் கூட்டத்தை பிடிக்கிறார். முதல் 45 நிமிடங்களுக்கு பரபரப்பாக செல்லும் படம், கடத்தல் கூட்டம் பிண்ணனியில் இருப்பது தெரியவந்ததும் சுருதி இறங்கி வழக்கமான வேகத்தில் செல்லத் தொடங்கி விடும். ஹெலிகாப்டர் சேசிங் போன்ற காட்சிகளும் உண்டு. ராஜ சுலோசனா, அசோகன், சுருளி ராஜன் எனப் பலரும் நடித்த படம். இயக்கம் எஸ் பி முத்துராமன்.

33 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the first

Starjan (ஸ்டார்ஜன்) said...

துணிவே துணை ஒரு அருமையான படம் ...

ஜெய்சங்கருக்கு ஒரு பிரேக் கொடுத்த படம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

மூன்று முடிச்சு நல்ல கதைஅம்சம் உள்ள படம்

ரஜினி ஸ்ரிதேவி நடிப்பு சூப்பர்

Mahesh said...

//59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம்//

அடேங்கப்பா....

//உத்தமன்//

ரொம்ப உத்தமமான படம் போல இருக்கே... ட்ரீட்மெண்டா குடுக்கறாங்க?

இராகவன் நைஜிரியா said...

91-95 கல்லூரி படிப்பு படித்த நீங்க, 1976 படங்களைப் பற்றி இவ்வளவு ஆராய்ந்து சொல்லியுள்ள விசயம் மிகவும் போற்றுதலுக்குரியது.

உங்கள் அலசல் என்னை பிரமிக்க வைக்கின்றது. கீப் இட் அப்.

butterfly Surya said...

Welcome back & keep it up.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தன் 59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம்.//

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக காட்சி வந்ததாகத் தெரியவில்லை. கல்லூரிச் செல்லும் காலத்திற்கு முன்பே நடந்த நிகழ்வுகள் போலத்தால் தெரிகின்றன.

குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அவரது தாயார் பாடும் தாலாட்டுப் பாடல். பள்ளி மாணவராக என்பதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

இதற்குப் பின் வந்த ஒரு படத்தில் (அநேகமாக மீனவ நண்பன் அல்லது நீதிக்கு தலைவணங்குதானா? சரியாக தெரியவில்லை. ஆனால் நாயகி லதாதான்), பத்தாம் வகுப்பில் நம்பியார் மதிப்பெண் குறைவாக வாங்கி மதிப்பெண் பட்டியலைத் திருத்தும் காட்சிகள் எல்லாம் வரும்.

butterfly Surya said...

3/3 நான் தான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஜெய்சங்கருக்கு ஒரு பிரேக் கொடுத்த படம்//

அதற்கடுத்த ப்ரேக் முரட்டுக்காளை தானே தல

பாலா said...

தல... ஒரு பதிவையாவது மோசமா எழுதுங்க...!

இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான்.. சூப்பர்.. சூப்பர்.. சூப்பர், ஃபெண்டாஸ்டிக், அருமை, பின்னீட்டீங்க, கலக்கல், இன்ஃபர்மேட்டிவ்-ன்னே..

நாங்க எல்லாம் பின்னூட்டம் போட்டுகிட்டே இருக்கறது? :)

பிரபாகர் said...

முரளிக்கண்ணன்.... அருமையான தகவல்கள். எம்.ஜி.ஆர் பற்றிய தகவல் நகைச்சுவை.

நிறைய எழுதுங்கள்... ஓட்டும் போட்டாச்சு... 5/5

பிரபாகர்.

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான்.

நன்றி மகேஷ்

நன்றி ராகவன் நைஜீரியா

நன்றி சூர்யா

நன்றி டாக்டர். செமை பன்ச் குடுத்தீங்க. கல்லூரிக்கு போகிறேன் என்று ஒரு வரி வசனம் எம்ஜியார் இதில் பேசுவார்.


நன்றி ஹாலிவுட் பாலா.

நன்றி பிரபாகர்.

kanagu said...

கலக்கல் பதிவு அண்ணா... :)

எப்பூடி எல்லா வருஷ படத்தையும் ஞாபகம் வச்சி இருக்கீங்க..??

/*//59 வயதில் கல்லூரி மாணவனாக எம் ஜி ராமசந்திரன் நடித்த படம்//

அடேங்கப்பா....*/

repeatuuuuuuuuu/...

நான் துணிவே துணை மட்டும் தான் பாத்து இருக்கேன். எனக்கு புடிச்சி இருந்துது...

முரளிகண்ணன் said...

நன்றி கனகு. வருட சந்தேகம் வரும் போது அவ்வப்போது இணையத்தில் சரிபார்த்துக் கொள்வதுண்டு.

M.G.ரவிக்குமார்™..., said...

நம்ம மக்கள் தான் என்னமா யோசிச்சிருக்காங்க அந்தக் காலத்துலயே!...மஞ்சுளா ட்ரீட்மென்ட்டைத் தான் சொல்றேன்!

முரளிகண்ணன் said...

நன்றி நேசன்

அது ஒரு கனாக் காலம் said...

//ஒருவேளை கருணாநிதி பற்றி படமெடுத்தால் இந்தி எதிர்ப்பும், ஸ்டாலின் பற்றி படமெடுத்தால் மிசாவும் ஆவணப்படுத்தப் படலாம். //

அங்க தான் நீங்க நிக்கறீங்க ...

பதிவு சூப்பர், நான் 79-82 கல்லூரி போனவன், நீங்க சொல்றது எல்லாமே சரி...தகவல் களஞ்சியமா இருக்கீங்க

முரளிகண்ணன் said...

நன்றி அது ஒரு கனாக் காலம்

கோபிநாத் said...

யப்பா...இம்புட்டு விபரமாக தொகுத்து கலக்குறிங்க அண்ணே ;)

Kasthuri said...
This comment has been removed by the author.
selventhiran said...

தகவல்களால் கட்டியெழுப்பப்பட்ட கட்டுரை. ரசித்து படித்தேன். நன்றி முரளி!

துபாய் ராஜா said...

அருமையான தகவல்கள் கொண்ட நல்லதொரு பதிவு.

வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத் அண்ணாச்சி

வாங்க கஸ்தூரி. என்ன பிரச்சினை? கமெண்டை நீக்கி விட்டீர்கள்?

நன்றி செல்வேந்திரன்

நன்றி துபாய்ராஜா

thamizhparavai said...

நல்ல தொகுப்பு முரளி சார்....

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ்பறவை

Romeoboy said...

\\இணையத்தில் அண்ணா என்று தேடினாலே ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிக்காவின் படங்களும்,செய்திகளும் தான் வருகின்றன//

எனக்கு இத படிக்கும் போது சிரிப்புதான் வருது ..

முரளிகண்ணன் said...

நன்றி ரோமியோ பாய்

மணிஜி said...

துணிவே துணை எனக்கு மிகவும் பிடித்த படம் முரளி..விரைவில் இந்த தொகுப்பை புத்தகமாக வெளியிடலாம்

முரளிகண்ணன் said...

நன்றி தண்டோரா

அருண்மொழிவர்மன் said...

துணிவே துணை தமிழ்வாணன் தயாரித்த படம் என்று நினைக்கின்றேன்...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அருன்மொழிவர்மன்

SELVA THE GHILLI said...

"ஸ்ரீதேவிக்கு மேலும் ஒரு இடியாக அவரது தங்கைக்கு தீயில் முகம் வெந்து போகிறது. "

MURALI,

Y vijaya charecter is not Sridevi's yonger sister... it is her elder sister....

முரளிகண்ணன் said...

நன்றி செல்வா.

திருத்தி விடுகிறேன்.