October 08, 2009

மயில் சாமி – ஒரு பார்வை

ஒருமுறை நாங்கள் கிரிக்கெட் லீக் மேட்சில் தோற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ்ஸ்டாப்பை நோக்கி நடக்கையில் வழக்கத்துக்கு மாறான உற்சாகம். ஏதோ நாங்கள்தான் வென்றதைப் போல ஒரு மிதப்பு.

அப்போது ஒருவர்

“ என்னப்பா ஜெயிச்சிட்டு வரும்போது கூட இவ்வளோ சிரிப்ப பார்த்ததில்ல” என்று கேட்டார்.

“ஆமா, ஈக்வல் டீம்கிட்ட தோத்தா கவலைப்படலாம். சப்பை டீம் கிட்ட தோத்தோமினா ஆத்திரப்படலாம், நம்ம விட நல்ல டீம், நல்லா பைட் பண்ணினோம் அவ்வளோதான், என அந்த அணியை சிலாகிக்கத் தொடங்கி பேச்சு வளர்ந்தது.

இதேபோலத்தான் ஒரு காலத்தில வெஸ்ட் இண்டீஸ் டீம் கூடத் தோத்தாக்கூட யாரும் கவலைப்படமாட்டாங்களாம் என பேச்சு வந்தது. உடனே அந்த பியர்சம் போர்சம் பற்றி அணியின் சீனியர் சிலாகித்தார்.

“ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜியோல் கார்னர், மால்கம் மார்ஷல், இப்படி இனிமே எந்த டீமுக்கும் செட் அமையாது”

அப்போது இன்னொருவர் ஆரம்பித்தார்.

“ இதே டைம்ல அங்க இன்னும் கூட நல்ல பௌலர்லாம் இருந்திருப்பாங்க. இவங்களைக் காட்டிலும் ஒரு 5% எபெக்டிவ்நெஸ் கம்மியா இருந்திருப்பாங்க”

அவங்கல்லாம் பாவம், இந்த செட்டை உடைச்சு உள்ள வரமுடியாம அப்படியே மங்கிப்போயிருப்பாங்க. இவங்க வெளியே வரும்போது அவங்க மாரல்,பார்ம் எல்லாம் காலியாயிருக்கும்.” என்று முடித்தார்.


இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று. அப்போதைய ”ஸ்டேட் ஆப் தி ஆர்ட்” திறமையை விட உச்சத்திறமை இருந்தால் வாய்ப்பு தானாகக் கிடைக்கும். ஆனால் 1% குறைவான திறமை இருந்தால் கூட வாய்ப்பு அதோகதிதான்.

தமிழ்சினிமாவில் 80களில் மூன்று காமெடி நடிகர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய பட்ஜெட்,பெரிய நாயகர்களின் படங்களில் ஜனகராஜ்; மீடியம் பட்ஜெட், மீடியம் ஹீரோ,கிராமிய கதையைப்பு உள்ள படங்களில் கவுண்டமணி; திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,விஜயகாந்த்,டிஆர், ராமநாராயணன் போன்றோரது படங்களில் எஸ் எஸ் சந்திரன் என ஒரு அமைப்பு இருந்தது.

இந்த காலகட்டத்தில் அறிமுகமான காமெடி நடிகர்களால் இவர்களைத் தாண்டி பெரிய அளவில் வரமுடியவில்லை. சின்னி ஜெயந்த், சார்லி போன்றோர் கல்லூரி நாயகனின் நண்பன் போன்ற வேடங்களில் நடித்து சமாளித்துக் கொண்டிருந்தனர். 85ஆம் ஆண்டு கன்னிராசி படத்தில் தன் 20 வயதில் அறிமுகமான மயில்சாமிக்கு அதுவும் வாய்க்கவில்லை.

கன்னிராசியில், கவுண்டமணியின் வீட்டுக்கு மளிகைச்சாமான் கொண்டு வரும் சிறிய காட்சியில் அறிமுகமான இவர் பின்னர் கமலின் நட்பைப் பெற்றதால் அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா போன்ற படங்களில் சிறிய வேடம் கிடைக்கப் பெற்றார்.

95 ஆம் ஆண்டுவரையிலும் பெரிய பிரேக் கிடைக்காமல் கிக்கிரி பிக்கிரி என மிமிக்ரி பண்ணியே சமாளித்து வந்தார். 96 வாக்கில் காமெடி நடிகர்களை வைத்தே நீலக்குயில் என்னும் படம் தயாரானது. அதில் சொல்லிக் கொள்ளும் படியான வேடம். என்றாலும் படம் ஓடாததால் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விவேக்கின் அசுர வளர்ச்சி ஆரம்பமான 2000ல் மயில்சாமிக்கும் அவரால் நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. பெண்ணின் மனதைத் தொட்டு, கண்டேன் சீதையை (டப்பிங் படம், காமெடி டிராக் மட்டும் புதியது),பாளையத்தம்மன் போன்ற படங்களில் நல்ல காம்பினேஷன் சீன்கள் கிடைத்தன. பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் காட்சி கலக்கலாக இருக்கும்.

பாளையத்தம்மனில் விவேக் யாகவா முனிவராகவும், மயில்சாமி டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவாகவும் வந்து மோதும் காட்சி அசத்தலாக இருக்கும். அதில் பாபாவை இமிடேட் செய்து ஆடுவதும், விவேக்கை சிரித்தே டென்ஷன் ஆக்குவதுமாய் அசத்தியிருப்பார்.


பின் 2001ல் வெளியான தில், 12 பி ஆகிய படங்களிலும் விவேக்கின் ட்ரூப் ஆளாக வந்து மக்கள் மனதில் பதிய ஆரம்பித்தார்.

2002 ஆம் ஆண்டு மயில் சாமிக்கு திருப்புமுனையான ஆண்டு. இந்த ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நாயகன் மனோஜுக்கு காதலுக்கு ஐடியா கொடுக்கும் முழு நீள வேடம். பெண்களில் சைக்காலஜியை விளக்குவதும், டி ராஜேந்தரை இமிடேட் செய்வதும் மக்களால் நன்கு ரசிக்கப் பட்டாலும் படத் தோல்வி இவரை பெரிய அளவுக்கு கொண்டு செல்லவில்லை.

ஆனால் சன் டிவியின் அப்பொதைய ஹிட் புரோகிராமான காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மயில் சாமிக்கு கிடைத்தது. இது தமிழ் மக்கள் அனைவரிடமும் மயில்சாமியை கொண்டு சேர்த்தது.

2003ல் வெளியான தூள், மிலிடரி, ஜெயம் போன்ற படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள். தூளில் சந்திரபாபு நாயுடு லட்டுக்குப் பதில் ஜிலேபியை மாத்திட்டாரு காமெடியும், ஜெயம் படத்தில் அடிக்கும் டைமிங் ஜோக்குகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இயக்குநர் பூபதி பாண்டியன் இவருக்கு தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை ஆகிய படங்களில் நல்ல வேடம் கொடுத்தார்.

இயக்குநர் சுராஜின் தலைநகரம், படிக்காதவன் படங்களிலும் நல்ல வேடம். சுந்தர் சி யின் ரெண்டு,கிரி ஆகிய படங்களிலும் நடித்து நம்மை சிரிக்க வைத்தார்.

நல்ல டைமிங் சென்ஸ் உள்ள நடிகர் மயில்சாமி. அதனால் தான் விவேக்,வடிவேல் போன்றோரும், பூபதி பாண்டியன், சுராஜ், சுந்தர் சி போன்ற நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர்களும் இவரை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரு காமெடி நடிகருக்குத் தேவையான டைமிங் சென்ஸ், அடுத்தவரின் வசனத்துக்கு செய்ய வேண்டிய ரியாக்‌ஷன், டயலாக் டெலிவரி என அனைத்து திறமைகளும் மயில்சாமியிடம் கொட்டிக் கிடக்கின்றன. இதை அவர் தொடர்ந்து தன் படங்களில் நிரூபித்துக் கொண்டு வருகிறார். இருந்தும் அவரால் முதல் வரிசை காமெடி நடிகராக முடியவில்லையே? ஏன்?

அறிமுகமான பொழுதில் முடியாவிட்டாலும், விவேக் வடிவேலுவின் எழுச்சிக்கு முன் ஒரு கேப் இருந்ததே, அதைப் பயன்படுத்தி முண்ணனிக்கு ஏன் அவரால் வர முடியவில்லை?

தமிழ்சினிமாவில் கமர்சியல் வேல்யு ஒரு கதாநாயகனுக்கு வர வேண்டுமென்றால் அவன் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அவனை மக்கள் ஏற்றுக் கொண்டதாக திரைத் துறையினர் ஒத்துக் கொள்வார்கள். (சரத்குமார்- சூரியன், விஷால் – சண்டகோழி என பல உதாரணங்கள் உண்டு). அது போல ஒரு முண்ணனி காமெடி நடிகனாக வேண்டுமெனில் அவன் ஒரு படத்தில் காமெடி டிராக்கில் கலக்கியிருக்க வேண்டும்.

கவுண்டமணி முண்ணனிக்கு வந்தது பயனங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் மூலம். வடிவேலுக்கு கண்ணாத்தாளும், நேசம் புதுசும் பெரிய லிஃப்டைக் கொடுத்தது. விவேக்குக்கு நான் பேச நினைப்பதெல்லாம் மற்றும் திருநெல்வேலி.

சரி, அது போல மயிலும் ஏதாவது படத்தில் டிராக்கில் கலக்க ஏன் முடியாமல் போனது? இத்தனைக்கும் வின்னர் பட காமெடி டிராக் எழுதிய பூபதி பாண்டியன் தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கிறாரே?

விஷயம் இதுதான். ஒரு படத்தின் முழு காமெடி டிராக்கையும் கையாள ஒரு தனி பாணி இருக்க வேண்டும். கவுண்டமணி எல்லோரும் புனிதமாக நினைப்பதைக் கேள்வி கேட்பது, அலட்சியமாக யாரையும் இறக்கிப் பேசுவது, நாம் கேள்வி கேட்டு கிண்டல் செய்ய வேண்டும் என நினைப்பதை செய்வது என ஒரு பாணியை வைத்திருந்தார். வடிவேலு உதார் விட்டு அடி வாங்கும் பாணி, விவேக்குக்கு சமுதாய சட்டயர். ஆனால் மயில்சாமி தனக்கென ஏதும் தனி பாணியை வகுக்க வில்லை. இதுவே அவருக்கு முண்ணனி நகைச்சுவை நடிகனாகும் வாய்ப்பைக் கெடுதத்து.

ஆனாலும் படத்திற்க்கு மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் எல்லாரையும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். எல்லாத் திறமைகள் இருந்தாலும், அடுத்தவர்களை விட வேறுபடுத்தி தன்னைக் காட்டிக் கொள்ளவில்லையென்றால் பெரிய உயரத்திற்கு செல்ல முடியாது என்பதற்கு மயில்சாமி ஒரு உதாரணம்.

வரும் காலங்களில் எ கட் அபொவ் தி ரெஸ்டாக தன்னை மாற்றிக் கொண்டு உச்சத்துக்கு செல்ல மயில்சாமியை வாழ்த்துவோம்.

52 comments:

kanagu said...

first!!! :)

kanagu said...

nalla padhivunganna.. enakkum mayilsamiyai romba pidikkum...

aanal neengal sonnathu thani oruvaraaga avaral oru padathin comedy trackai nagarthi sella mudiyavillai...

avar thiramaikku melum angigaram seekiram kedaikum ena nambukiren..

avar seithathilaye migavum pidithathu thool than.... vivekudan sernthu kalakki iruppar..

முரளிகண்ணன் said...

வருகைக்கு மிக்க நன்றி கனகு.

பிரபாகர் said...

//ஆனால் மயில்சாமி தனக்கென ஏதும் தனி பாணியை வகுக்க வில்லை. இதுவே அவருக்கு முண்ணனி நகைச்சுவை நடிகனாகும் வாய்ப்பைக் கெடுதத்து. //

முரளி, அற்புதமான அலசல்... மிகச் சரியான காரணம். அசத்துகிறீர்கள்... அருமை.

நிறைய எழுதுங்கள்.

பிரபாகர்.

Mahesh said...

நல்லா இருக்கு முரளி... நான் கூட நினைச்சதுண்டு.. .நல்லாத்தானெ பண்றாரு இவுரு... ஆனாலும் ஷைன் ஆகலயேன்னு...

"சிரிப்போ சிரிப்பு" காமெடி கேசட் கூட இவரை மக்கள் கிட்ட கொண்டு சேத்துதுன்னு சொல்லலாம்.

நீங்க்ச் சொன்ன மாதிரி தனி பாணி கொண்டு வரணும்னா அவருக்கு மெயின் காமெடி காரெக்டர் குடுத்துப் பாத்தாத்தான் தெரியும். இது வரைக்கும் காமெடியனுக்கு 'செகண்ட் ஃபிடிலா'வே ஓட்டீட்டாரு.

UNGALODU NAAN said...

திமிரு படத்தில் போதையில் வடிவேலு தோளில் சாய்ந்து லிப்ட் கேட்பது நல்ல காமெடி இது போல் நிறைய சின்ன சின்ன காமெடி சீன் எல்லாம் நல்லா இருக்கும்

அத்திரி said...

தல வழக்கம் போல் அருமை

வெங்கிராஜா | Venkiraja said...

தூள் படத்துல சூப்பரா பண்ணியிருப்பாப்ல:

விவேக்: நாம படிக்கற காலத்துல சி ஃபார் கேட்ச் தானடா?
மயில்: அதனால தான் பாஸ் நீங்க ஃபெயில் ஆயிட்டீங்க LMAo

வடிவேலு: திரிஷா கெடைக்கலைன்னா திவ்யா
மயில்: அப்ப திரிஷாவோட வாழ்க்கை? ROTFL
வடிவேலு: டேய்... நாம எப்படா திரிஷாவோட வாழ்ந்தோம்? ஒண்ணு கெடைக்கலைன்னா இன்னொண்ணை தேத்திட்டு போகணும்டா
மயில்: அப்ப திரிஷா கெடைக்கலைன்னா?
வடிவேலு: உன்னைய கொல்ல வேண்டியிருக்கும்
மயில்: ஆ... திரிஷா கெடைக்கும் கெடைக்கும்! LOL

எம்.எம்.அப்துல்லா said...

வழக் கலக் :)

Romeoboy said...

தல ஏன் மயில்சாமி முக்கா வாசி படங்களில் தண்ணி அடித்து கொண்டே இருக்கிறார் என்றே தெரியவில்லை. இப்பொது வரிசையாக நடித்த படம் எல்லாம் தண்ணி அடிப்பதை போன்றே கட்சிகள் வருகிறது ..

அறிவிலி said...

அசத்தல் அலசல்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நான் 12 வது கமெண்ட்

உள்ளேன் ஐயா

வெண்பூ said...

அருமையான அலசல் முரளிகண்ணன்.. பதிவுகளுக்கு நடுவே சம்பந்தப்பட்டவர்களின் படங்களையும், அவர்கள் நடித்த படங்களின் காட்சிகளுடைய படங்களையும் இணைத்தால் பதிவு இன்னும் லைவ்லியாக & லவ்லியாக இருக்கும் என்பது என் சஜஷன்..

நாடோடி இலக்கியன் said...

மீண்டும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க நல்ல அலசல் முரளி..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// வரும் காலங்களில் எ கட் அபொவ் தி ரெஸ்டாக தன்னை மாற்றிக் கொண்டு உச்சத்துக்கு செல்ல மயில்சாமியை வாழ்த்துவோம். ////

repeateeee ....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான தொகுப்பு

ஆயில்யன் said...

சிரிப்போ சிரிப்பு மூலம் மிக பிரபலமான மயில்சாமி திரைத்துறையில் ஆங்காங்கே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் தான் இன்னும் என்னும்போதே ஏதோ ஒரு புள்ளியில் வாய்ப்பினை தவறவிடுகிறார் என்று புரிபடுகிறது - அருமையான பதிவு மயில்சாமியினை பற்றி ! :)

ஆயில்யன் said...

//பாளையத்தம்மனில் விவேக் யாகவா முனிவராகவும், மயில்சாமி டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவாகவும் வந்து மோதும் காட்சி அசத்தலாக இருக்கும்.///

செம கலக்கல் காமெடியாக இருந்தது அந்த காட்சி ஜஸ்ட் சிரிச்சுக்கிட்டே இருக்கற மயில்சாமி! :)))

ஆயில்யன் said...

//நல்ல டைமிங் சென்ஸ் உள்ள நடிகர் மயில்சாமி.//

மலைக்கோட்டையில்,பாஸ் கையை புடிச்சு இழுக்கறது ரவுடியிசத்துக்குள்ளதானே வரும் டெரரரிசம் இல்லியே! அட்டாக் பண்ற காட்சிகளும் கலக்கல் !

ஆயில்யன் said...

//உச்சத்துக்கு செல்ல மயில்சாமியை வாழ்த்துவோம்.//

கண்டிப்பாக மிக நிதானத்துடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் மயில்சாமிக்கு பெரும் வெற்றி கிட்டாமலா போய்விடும் வாழ்த்துக்கள் மயில்சாமிக்கும் - அவரை பற்றிய செய்திகளோடு முன்னேற்றம் குறித்து அலசிய உங்களுக்கும் ! :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு,

பாலகுமார் said...

நல்ல காமெடி நடிகர்.. நல்ல அலசல்...மயில்சாமிக்கு மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

நன்றி பிரபாகர்

நன்றி மகேஷ்

நன்றி உங்களோடு நான்

நன்றி அத்திரி

நன்றி வெங்கிராஜா

நன்றி அப்துல்லாண்ணே

நன்றி ரோமியோபாய்

நன்றி அறிவிலி

நன்றி ஸ்டார்ஜான்

முரளிகண்ணன் said...

நன்றி வெண்பூ

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி ஆயில்யன்

நன்றி சுரேஷ்

நன்றி பாலகுமார்

தண்டோரா ...... said...

முரளி..நல்ல அலசல்..சீனு படமும்,சாணக்யாவும் கூட அவர் கலக்கிய படங்கள்..

Cable Sankar said...

என்னை பொருத்தவரை மயில் சாமி ஒரு அண்டர் எஸ்டிமேட்ட நடிகர்.. அவரை நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் அவரின் பாடி லேங்குவேஜில் பின்னுவார்.

ஆ.ஆ சிக்னலில் சூர்யா நிலா செய்யும் ரகளையும், அதற்கு மயில் செய்யும் ரியாக்‌ஷன்களும்.. சும்மா பின்னி எடுக்கும்.

முரளிகண்ணன் said...

நன்றி தண்டோரா

நன்றி கேபிள்ஜி

தராசு said...

அருமையான அலசல் தலைவரே.

வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் தனிச்சிறப்பு,

மறுபடியும் ஃபார்முக்கு வந்துட்டீங்க.

பரிசல்காரன் said...

//பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் காட்சி கலக்கலாக இருக்கும்.
//

கரெக்ட்! நான் எப்போதும் ரசிப்பது!

பரிசல்காரன் said...

மயில்சாமி பற்றி உங்களைப் பதிவு எழுதச் சொல்ல வேண்டும் என்று வெகுநாள் நினைத்ததுண்டு!

எனக்கு மயில்சாமியை நினைத்தால் சட் டென ஞாபகத்துக்கு வருவது.. (படங்கள் ஞாபகமில்லை)

# இலங்கைத்தமிழை சென்னைத்தமிழாக மொழிபெயர்ப்பது (பெ.ம.தொ)

# பார் ஒன்றில் டைடல் பார்க் ஆசாமியாக வருவாரே (தனுஷ்) அது

# தூள் - ஜிலேபி

# டாக்டராக இருப்பார்.. நர்ஸ் ஒருத்தி அடிக்கடி அதான் நான் இருக்கேன்ல என்று சொல்லிக் கொண்டே இருப்பாரே அது...

# தலைநகரம் - திவ்யா கெடைக்கும் பாஸ்...

# யாகவா - சிவசங்கர் பாபா சீன்ஸ்..

முரளிகண்ணன் said...

நன்றி தராசு

நன்றி பரிசல்காரன். டைடல் பார்க் காமெடி - பொல்லாதவன்

Nataraj said...

மிக மிக தெளிவான அலசல் தலைவரே.
எனக்கு இந்த விஷயம் வேறொரு கோணத்தில் தோன்றியது போன வாரம். விஜய் டிவியில் லியோனியின் பாட்டு ப்ரோக்ராமில் ஒல்லியாக, சரியாக சொன்னால் ஓய்ந்து பொய் மூர்த்தி என்றொருவர் வருவார். அவரும் மயில்சாமியும் தான் சிரிப்போ சிரிப்பு கேசட் போட்டார்கள். மயில்சாமி அங்கிருந்து தட்டு தடுமாறி ஓரளவுக்கு ஜெயித்து பேர் தெரிகிற மாதிரி ஒரு செலிப்ரிட்டி ஆகிவிட்டார். அந்த மூர்த்தி இன்னும் தடுமாறித்தான் கொண்டிருக்கிறார். மூர்த்திக்கு எப்படி இருக்கும் என்ன நினைத்து பாருங்கள். May be, மூர்த்தியை போல் தேங்காமல் இந்த மட்டுக்கு முன்னேறினோமே என்று மயில்சாமி ஆறுதலும் அடைந்திர்க்கலாம்.
முன்னேற்றம் என்பதே ஒரு comparitive perspective தானே..

நர்சிம் said...

அருமை தல.மிக சுவாரஸ்யம்.

முரளிகண்ணன் said...

நன்றி நட்ராஜ்

நன்றி தலைவரே

jackiesekar said...

நல்லா எழுதி இருக்கிங்க முரைளி டேட்ா பேஸ் எங்க கலெக்ட் பண்றிங்கன்னு தெரியலை..

உங்கள் உழைப்பிற்க்கு எனது நன்றிகள்...

ஜெட்லி said...

இப்போ வர வர இவருக்கு குடிகாரன் கேரக்டர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
மனுஷன் பின்னுகிறார்

முரளிகண்ணன் said...

நன்றி ஜாக்கி சேகர்

நன்றி ஜெட்லீ

" உழவன் " " Uzhavan " said...

அருமையான ஆய்வுகளோடு நல்ல ரசனையான தொகுப்பு.

முரளிகண்ணன் said...

நன்றி உழவன்

வெண்ணிற இரவுகள்....! said...

இப்படி பின்னாடி இருக்கும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் கலைஞனை பாராட்ட மனம் வேண்டும் தோழரே

Statistics said...

நல்ல பதிவு பாஸ்
ஒரு சின்ன திருத்தம்
டைடல் பார்க் காமெடி- அது திருவிளையாடல் ஆரம்பம்

முரளிகண்ணன் said...

நன்றி வெண்ணிற இரவுகள்.

நன்றி ஸ்டாடிடிக்ஸ். டைடெல் பார்க் காமெடி பொல்லாதவன் என்றே நினைக்கிறேன். எதற்க்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மோதிவிளையாடு கந்தசாமி சிந்தனை செய் மாயாண்டி குடும்பத்தார் எல்லாமே அருமை. ஆமா ஏன் மயில்சாமிக்கு குடிகாரன் வேசமாவே கிடைக்குது.

தமிழ்ப்பறவை said...

நல்ல அலசல் முரளி சார்...
நடராஜ் சொன்னதும் ஒருவித வியூ...
பரிசல் சொல்லிய ‘அதான் நான் இருக்கேன்ல சார்’ நல்ல காமெடி...
டைடல் பார்க் காமெடி -’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில்...

முரளிகண்ணன் said...

நன்றி சத்தியமா ரொம்ப நல்லவரான ரமேஷ்.

நன்றி தமிழ்பறவை. மாற்றி விடுகிறேன்

புருனோ Bruno said...

அசத்தல் முரளி

மயில் சாமி பற்றி மட்டும்மல்ல

நீங்கள் கூறிய பிற விஷயங்களும் அருமை :) :)

பல விஷயங்களை இந்த இடுகையில் கூறியுள்ளீர்கள்

கானா பிரபா said...

கவுண்டருக்கு பின் நான் அதிகம் ரசிப்பது மயில்சாமியின் நகைச்சுவை நடிப்பை, கலக்கல் பதிவு

RaviSuga said...

மயில்சாமி பற்றி கூட இவ்வளவு அழகாக ஆழமாக பதிவு பண்ண முடியும் என்று உணர்த்திவிட்டீர்கள். நான் முதலில் மயில்சாமி அண்ணாதுரை பற்றியோ என்று எண்ணினேன்.
ரவி சுகா
@RaviSuga

முரளிகண்ணன் said...

நன்றி புருனோ

நன்றி கானாபிரபா

நன்றி ரவிசுகா

நேசன்..., said...

நண்பர் நர்சிம் அவர்களின் மூலமாக நீங்கள் மயில்சாமி அவர்களிடம் பேசியதாக தனது இடுகையில் நர்சிம் எழுதியிருந்தாரே!அவர் என்ன சொன்னார்!.....உங்களின் கருத்துக்களை அவர் எப்படி எடுத்துக் கொண்டார்!......Any updates?...(அவரை எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் ஒரு சின்ன ஆர்வம்)

முரளிகண்ணன் said...

அன்பு நேசன்

மயில்சாமி, அனைத்து பின்னூட்டங்களையும் ரசித்து மகிழ்ந்தார்.

நான் எழுதிய சிலவற்றுக்கு விரைவில் விளக்கமளிப்பதாகக் கூறினார்.

இணையத்தில் தனக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.

Mega said...

Super Anna

Mega