October 05, 2009

பத்தாண்டுகளில் 99ன் அறிமுக இயக்குநர்கள்

தமிழ்சினிமாவைப் பொறுத்த மட்டில் பல பிரபல இயக்குநர்களின் முக்கிய படங்கள் எல்லாம் அவர்கள் அறிமுகமான 10 ஆண்டுகளுக்குள்ளேயே இயக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதர், மகேந்திரன்,துரை,பாலுமகேந்திரா,பாரதிராஜா,பாக்யராஜ்,மணிரத்னம் ஆகியோரின் முக்கிய படங்களெல்லாம் அவர்களின் 10 ஆண்டுகளுக்குள் வந்தவையே.

1999 ஆம் ஆண்டில் பல புதிய இயக்குநர்கள் நம்பிக்கையூட்டும் வகையில் அறிமுகமானார்கள். அவர்கள் இந்த தங்க பத்தாண்டில் என்ன சாதித்தார்கள்? என்று பார்ப்போம்.

சேது – பாலா

ஆண்டின் கடைசியில் வந்த முதல் ரகப் படம். விக்ரம்,சூர்யா என இரு நடிகர்கள், ஆர்யாவுக்கு ஒரு அப்பரெண்டிஷிப், கருணாஸ் என்ற காமெடி,குணச்சித்திர நடிகர், அமீர்,சசிகுமார் என்னும் பிரகாச இயக்குநர்கள் என தமிழ் திரைக்கு பாலாவிடம் இருந்து நல்ல பங்களிப்பு. இன்னும் நீராவி தீர்ந்துவிடவில்லை. இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்த வண்டி ஓடுமென்று எதிர்பார்க்கலாம்.


எதிரும் புதிரும் – வி சி ரமணி


தரணி என்று சொன்னால்தான் இப்போது நமக்கு பிடிபடும். திருட்டு விசிடி வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து வெளியானது இந்த வீரப்ப காவியம். ஆனாலும் படம் சொல்லிக்கொள்ளும் படி ஓடி தரணிக்கு அறிமுகத்தைக் கொடுத்தது. தில்,தூள்,கில்லி என அசுர வேகத்தில் பறந்த இந்த விமானம், பங்காரம் (தெலுங்கு) படத்தால் திசை மாறி குருவியால் விபத்துக்குள்ளானது. வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கண்டு மேடேறிய தரணி, மீண்டும் வருவார்.


வாலி – எஸ் ஜே சூரியா


வாய்க்கொழுப்பு நடிகராக அஜீத் அறியப்பட்ட காலத்தில் வந்த படம். இந்தப் படம் வந்து வெற்றியடைந்த 10 நாட்களில் அஜீத் சொன்னது இது

“நான் செத்தா டிவில நியூஸ் சொல்லும் போது, இந்தப் பட கிளிப்பிங்ஸ்தான் போடுவாங்க”

இதன்பின் எஸ் ஜே சூர்யா குஷி (தமிழ்,தெலுங்கு,இந்தி) இயக்கிவிட்டு, நியூ என்ற நீதிமன்றத்தால் தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் படத்தை இயக்கி நடித்தார். பின்னர் அ ஆ. பின் நடிகராக சில படங்கள். பாகிஸ்தான் டீம் போல திடீரென கலக்குவார் என எதிர்பார்க்கிறார்கள் தற்போது.

துள்ளாத மனமும் துள்ளும் – எழில்

விஜய்க்கு நல்ல வெற்றிப்படம். பின்னர் எழில் பிரபுதேவா, சரத்தை வைத்து இயக்கிய பெண்ணின் மனதை தொட்டு ஓரளவு வெற்றி. விவேக்குக்கு இந்தப் படம் நல்ல திருப்புமுனை என்று சொல்லலாம். அடுத்து அஜீத், ஜோதிகா காம்பினேசனில் பூவெல்லாம் உன் வாசம் தோல்வி. சமீபத்தில் ஜெயம் ரவி, பாவனா காம்பினேஷனில் வந்த தீபாவளி மியூசிக் சேனல்களுக்கு தீபாவளியாய் அமைந்தது. ஒரே பேட்டர்னில் படம் பண்ணுகிறார். கஷ்டம்தான்.


தொடரும் – ரமேஷ் கண்ணா


பல ஆண்டுகள் கே எஸ் ரவிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவே இருந்து அஜீத், தேவயானி, ஹீராவை வைத்து இந்தப் படத்தை இயக்கினார். தோல்வி. பின் கே எஸ் ஆரிடமே அடைக்கலமாகி விட்டார். தீபாவளிக்கு வெளியாகப் போகும் ஆதவனில் கதை இவர் தான். கூடுதலாக இணை இயக்கமும்.

பூ மகள் ஊர்வலம் – மதுரவன்.

பிரசாந்த்,ரம்பா,லிவிங்ஸ்டன் நடிக்க ஆள் மாறாட்டக் குழப்பத்தை வைத்து எடுத்த படம். சுமார் ரகம். பின் சில ஆண்டுகள் கழித்து ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு பாண்டி, மாயாண்டி குடும்பத்தார் என்ற சுமார் ரகப் படங்கள். பெரிய நம்பிக்கை இல்லை.

கனவே கலையாதே – கௌதமன்

ககரத்தில் தொடங்கும் காதல் படங்களை எடுத்து கல்லா கட்டி வந்த சிவசக்தி பாண்டியனின் கனவைக் கலைத்த படம். முரளி,சிம்ரன் ஜோடி. பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி நல்ல பெயரை பெற்றிருக்கிறார் கௌதமன். பெரிய திரை வாய்ப்பு மீண்டும் அமையுமா?

நீ வருவாயென – ராஜகுமாரன்.

பார்த்திபன்,தேவயானி,அஜீத் நடிப்பில் வெற்றி. ஆனால் சேதுவில் ஜெயித்த விக்ரமை எப்படியோ கவிழ்த்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை எடுத்தார். இது தேவயானிக்கு மூன்று கோடி செலவில் நான் எழுதிய காதல் கடிதம் என்பது இவரின் ஸ்டேட்மெண்ட். கடிதம் எழுது ஆனா அதை ஏன் என் காசில எழுதுனே? என்று தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கோபப்படும் படி ஆனது பட ரிசல்ட். ஆனாலும் தேவயானி மனைவியானதால் காதலுடன் என்ற அடுத்த படமும் கிடைத்தது. தேவயானியை கவலையுடன் நிற்க வைத்தது. இப்போதும் ஒரு படம் தேவயானி தயாரிக்கப் போகிறாராம். கோலம் போட்டு கொண்டு வரும் காசை அலங்கோலப் படுத்தாமல் இருந்தால் சரி.


மானசீக காதல் - பி எஸ் ராமன்


இவர் வேறு யாருமில்லை. பழைய வெள்ளி விழா பட நடிகர் ரவி சந்திரன் தான். தன் மகன் அம்சவிர்தனுக்காக தன் சொந்தப் பெயரில் படம் இயக்கி தயாரித்தார். முடியவில்லை. தற்போது நடிப்போடு நிறுத்திக்கொண்டார்.

அன்புள்ள காதலுக்கு – மோகன்

இவரும் வெள்ளி விழா பட நடிகர் தான். இவர் எய்ட்ஸ் வந்து இறந்து விட்டதாக 98ல் ஒரு புரளி கிளம்பியது. பின் 99ல் இந்தப் படத்தை இயக்கினார். 69ல் வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். பின் சுட்ட பழம் ரேஞ்சுக்கு இறங்கியும் ஜெயமில்லை.


சுந்தரி நீயும் சுந்தரன் நானும் – ஏ என் ராஜகோபால்


பல ஆண்டுகள் உதவி இயக்குநராகவே இருந்து பின் பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் இந்தப் படத்தை எடுத்தார். படம் சுமார். பின் எந்த தகவலும் இல்லை.

நேசம் புதுசு – வேல் முருகன் (கார்த்திக்)

ரஞ்சித்,பிரியா ராமன் இணை. வடிவேலுவின் ”என்னா கையப் பிடிச்சு இழுத்தயா” காமெடி. படம் சுமார். இப்போது பெயர் மாற்றி இருக்கிறாரா எனத் தெரியவில்லை.


கண்ணு பட போகுதய்யா – பாரதி கணேஷ்


விஜயகாந்த், சிம்ரன் இணை. இவரையும் காணவில்லை

என்றென்றும் காதல் – மனோஜ் பட்னாகர்

மனோஜ்- கியான் என இரட்டையர்களாக ஊமை விழிகள் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்கள். பின் மனோஜ் பிரிந்து சமீரா ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து மனோஜ் பட்நாகராக மாறி இந்த பப்படத்தை விஜயை வைத்து இயக்கினார். நஷ்டத்தில் இருந்த குஞ்சுமோன் இந்தப் படத்தை வாங்கி இன்னும் நஷ்டமானார். பின் பட்நாகர் பிரசாந்த்,ரியா சென் நடிப்பில் குட்லக் என்னும் படத்தை எடுத்தார். பேட்லக் எல்லோருக்கும்.



இது தவிர இரண்டு துடிப்பான தமிழர்கள் இயக்குநர்களாக தெலுங்கில் அறிமுகமானார்கள்.


கணேஷ் – திருப்பதிசாமி


ஜூனியர் விகடன் மாணவ நிருபர். நம் வலையுலக மூத்த பதிவர் கௌதமின் ஜுவி பேட்ச்மேட். பின் இயக்குநர் அவதார மெடுத்தவர். வெங்கடேஷ், ரம்பா இணையில் ரேவதி குணச்சித்திர வேடத்தில் நடிக்க படம் மெகா ஹிட். அரசு ஆஸ்பத்திரி ஊழல்களைப் பேசிய படம். அடுத்த படம் நாகார்ஜூனா, பிரகாஷ் ராஜ் காம்பினேஷனில் குருஷேத்ரம். பம்பர் ஹிட். பின் தமிழில் தடம் பதிக்க வந்தார். விஜயகாந்தின் நரசிம்மா, படம் முடியுமுன் வாகன விபத்தில் பலியானார். பெரும் உயரத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர்.

ஆனந்த மழை – கருணாகரன்

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி நடித்த மெல்லிய காதல் படம். ரசனையான படம். வெற்றி. ஆனால் அடுத்த படத்திலேயே சறுக்கி விட்டார்.

இதே ஆண்டில் காதலர் தினம் மூலம் அறிமுகமான குணால் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அறிமுகமாகி கலக்கிய நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட்டும் அகால மரணமடைந்தார்.

இந்த ஆண்டில் தான் சிவாஜி கணேசனின் கடைசிப் படம் பூப்பறிக்க வருகிறோம் வெளியானது.

51 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காத்திருந்து போட்டமில்ல மீத ஃபர்ஸ்டு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பூவெல்லாம் கேட்டுப் பார் மூலம் யுவன் சங்கர் ராஜா //


அரவிந்தன்??

முரளிகண்ணன் said...

ஆஹா. நன்றி டாக்டர். ஒரு குழப்பத்தில் எழுதி விட்டேன். திருத்தி விடுகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கண்ணு பட போகுதய்யா//

இதில் விஜய காந்த் பேசும் வசனங்கள் அவருக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்தது.

இல்லையென்றால் பில்லா படத்தில் வரும் டி.எஸ்.பி ரோலில் விஜயகாந்த் தான் நடித்திருப்பார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி நான் தான் முதல்ல கமெண்ட் போட நினைத்தேன் . அதுக்குள்ளே சுரேஷ் முந்தி விட்டார் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி நான் தான் முதல்ல கமெண்ட் போட நினைத்தேன் . அதுக்குள்ளே சுரேஷ் முந்தி விட்டார் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளி நான் தான் முதல்ல கமெண்ட் போட நினைத்தேன் . அதுக்குள்ளே சுரேஷ் முந்தி விட்டார் .

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான். அதுக்காக அஞ்சு கமெண்டா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வாய்க்கொழுப்பு நடிகராக அஜீத் அறியப்பட்ட காலத்தில் வந்த படம்.//

குஷியில் கூட விஜய் எஸ்.ஜே சூர்யா வசனம் பேசுவது போலவே பேசுவார். ஆனால் வாலியில் அஜித் அதை அழகாக தவிர்த்திருப்பார்

முரளிகண்ணன் said...

நன்றி டி வி ஆர் சார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சேது –//

காவேரில் மூணு நாள் ஓடிச்சு. அதை தூக்கிட்டு பிரபு-மீனா நடிச்ச ஒரு புதுப் படடத்தைப் போட்டாங்க.

அப்புறம் ஒரு மாதம் கழித்து அனுபல்லவில ரீ ரீலீஸ்

அப்புறம் ஒருமாதம் கழித்து பல்லவிக்கோ தானத்திற்கு இடம் பெயர்ந்த படம்

முரளிகண்ணன் said...

டாக்டர், அந்தப் படம் மனம் விரும்புதே உன்னை, சிவசந்திரன் இயக்கம்.

காவேரியில முதல் வெள்ளி சேதுவும், அடுத்த வாரம் மனம் விரும்புதே உன்னையும் பார்த்தேன்.

அப்போ நான் டாடாபேட்.

சேது மத்த ஊர்ல பிக்கப் ஆன பின்னாடி அனு பல்லவி. பிளாட் ரேட் 50 ரூபாய்க்கு ஓட்டினாங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த இயக்குனர்கள் அறிமுகத்தோடு சரி . அவர்கள் எடுத்த மற்றவை சுமார் தான் .

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு டவுன்பஸ் நிறைய ஆள் வந்தாலே ஹவுஸ் ஃபுல் ஆகும் அளவுதான் அனுபல்லவி அப்புறம் பிளாக் 50 போகாமல் என்ன செய்யும்?

இதே கால கட்டத்தில் பிரியமுடன் படத்தை நண்பன் ஒருவன் புண்ணியத்தில் 50 டிக்கட்டில் பார்த்தேன்.

Nat Sriram said...

யுவன் ஷங்கர் ராஜா அறிமுகமானது "அரவிந்தன்" திரைப்படத்தில். அப்படத்தின் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகவும் சரத்குமார் "என் படங்களில் பாடல் காசெட்டுகள் அதிகம் விற்றது இந்த படத்திற்கு தான்" என்று பேட்டி அளித்தார்.

அப்புறம், எழில் பூவெல்லாம் உன்வாசத்திற்கு பிறகு "ராஜா" (இப்போவும் சன் டிவி, கே டிவி மதிய காட்சிகளில் ரெகுலர்) என்று அஜீத் - ஜோதிகா ஜோடியில் எடுத்தார். இது விடுபட்டுபோய்விட்டது தங்கள் லிஸ்டில்.

கண்ணு பட போகுதையா அப்படி ஒன்னும் தோல்வி படம் இல்லையே. அப்படியும் இருந்தும் இந்த பாரதி கணேஷ் வேற படம் எடுத்த மாத்ரி தெரியலையே. Infact, இதுவும் வானத்த போலவும் பேக் டு பேக் ரிலீஸ் ஆகி ரெண்டுமே விஜயகாந்துக்கு பாசிடிவ் ரிசல்ட் தான். அதில் "மூக்குத்தி பல்லழகு" பாடலில் விஜயகாந்த் டான்ஸ்-ஐ(!) சிலாகிப்பார்கள் (நெஜமாங்க).

Starjan (ஸ்டார்ஜன்) said...

முரளியின் வருகை தரமான வருகை

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜான். அதேதான் நான் சொல்ல வந்தது.

வாங்க நட்ராஜ். யுவனின் முதல் படம் அரவிந்தன் தான். நாங்கள் மிகவும் யுவனை சிலாகித்து கேட்டது பூவெல்லாம் கேட்டுப் பாரில். அதை சொல்ல நினைத்து குழப்பி விட்டேன்.

ஆமாம் எழிலின் ராஜா மிஸ் ஆகி விட்டது. அதுவும் சுமார் ரகமே.

முரளிகண்ணன் said...

நட்ராஜ்,

கண்ணு பட போகுதய்யா, தாம்பரம் தாண்டி நல்ல வெற்றியே.
மூக்குத்தி பல்லழகு மறக்க முடியும்மா?

கை விரலால் உருட்டி உருட்டி காண்பிப்பாரே?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எழில் பிரபுதேவா, சரத்தை வைத்து இயக்கிய பெண்ணின் மனதை தொட்டு ஓரளவு வெற்றி.//


என்ன மாதிரியே நீயும் ரவுடியாகாதே என்று பிரபு தேவாவைப் பார்த்து அடிக்கடிச் சொல்லுவார்.

இதப் பார்த்துதான் பிற்காலத்தில் ஏய் பார்த்துக்க நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் டயலாக் உருவாகி யிருக்குமோ

கோபிநாத் said...

அண்ணன் வந்தாச்சி ;))

Romeoboy said...

நல்ல அலசல்..

இந்த சைடு கொஞ்சம் வந்துட்டு போங்க ..
பதிவாளர் சந்திப்பில் உங்களை பார்த்து பேசியது நினைவாக உள்ளது .
ராஜராஜன் இப்பொழுது -Romeoboy

kanagu said...

ungaloda pazhaya cinema padhivugala ellam padichitu eppa neenga pudhu padhivu onnu poduveenga nu paathute irundhen... nalla vela seekrame pottuteenga anna.. :))

nalla alasal... thirupadhisami-yin izhappu perusu than :(

apram epdi ovvoru varusha padam, iyakkunar ellathayum nyabagam vachi irukeenga.. naan meranduten..

ungaloda kaarthik pathina padhivu super.. enaku kaarthik-ah romba pidikkum.. :)

முரளிகண்ணன் said...

வாங்க டாக்டர், காட்டேஜ் போட்டு யோசிக்கிறீங்களே?

வாங்க கோபிநாத். நன்றி.

ரோமியோ பாய்,

ராஜராஜன் என்னும் அருமையான பெயரை மாத்திட்டீங்களே.

புது பெயரும் கேட்சியாத் தான் இருக்கு.


கனகு,
தங்களின் வருகைக்கு நன்றி.

சில விஷயங்கள் மறந்தது இணையத்தில் தேடி எடுப்பதும் உண்டு. நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிப்பதும் உண்டு.

கார்த்திக் பதிவு பாராட்டுக்கு நன்றி.

பிரபாகர் said...

வாங்க முரளிகண்ணன்... நல்ல தகவல்களோட கொடுத்திருக்கீங்க... இனிமேல் நிறைய பதியுங்கள்....

பிரபாகர்.

முரளிகண்ணன் said...

நன்றி பிரபாகர்

எம்.எம்.அப்துல்லா said...

வெல்கம்பேக் முரளிண்ணா.

//ஆர்யாவுக்கு ஒரு அப்பரெண்டிஷிப் //

அப்ரசெண்டின்னு தமிழ்ல எழுதுங்க :)


//இந்த ஆண்டில் தான் சிவாஜி கணேசனின் கடைசிப் படம் பூப்பறிக்க வருகிறோம் வெளியானது //

அண்ணா பிரபு அப்பாவோட கடைசிப் படம் படையப்பா இல்லை??

சரவணகுமரன் said...

பெயர் மாற்றிய இயக்குனர்களை பற்றி நிறைய அறியாத தகவல்கள். நல்ல பதிவு.

முரளிகண்ணன் said...

நன்றி அப்துல்லாண்ணே.

படையப்பா - ஏப்ரல் 10

பூ பறிக்க வருகிறோம் - செப்டெம்பர் மாத வாக்கில் வெளியானது.


நன்றி சரவணகுமரன்

நன்றி தமிழினி. இணைத்து விடுகிறேன்

Cable சங்கர் said...

குட் கம்பேக்

Raju said...
This comment has been removed by the author.
Raju said...

அண்ணே, குணால் இறந்துட்டாரா...?
எனக்கு இது புது தகவல்.
அப்பறம்,வெல்கம் பேக் அண்ணே.

கார்க்கிபவா said...

போதும் போதும்.. எவ்வளவு விஷயத்தைத்தான் நாங்க மனசுல வச்சுகிறது?

இந்த வருடம் தான் கே.விஷ்வனாத்தின் உதவியாளர் இயக்கி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டைம் வந்தது. வந்ததும் போனது.

மேலும், அஜித்,விஜய், விக்ரம் என மூவருக்கும் வாழ்நாளின் சிறந்த படங்கள் இந்த வருடம் வெளியானது தனிச்சிறப்பு. சூர்யா மட்டும் பூவெல்லாம் கேட்டுப்பாரில் சறுக்கினார்.

சூப்பர்ஸ்டாருக்கும் படையப்பா வந்து படையெடுத்தது. ஹேராமில் மூழ்கியதால் கமல் மட்டும் தலைமறவைனார்.

மணிஜி said...

நல்வரவு முரளி..அப்புறம் நான் சொன்ன மயில்சாமி மேட்டரை....

மாதவராஜ் said...

தொடருங்கள், முரளிக்கண்ணன். இன்ன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதலாமோ...?

நர்சிம் said...

welcome back..very well come back.

துபாய் ராஜா said...

அழகான தொகுப்பு.

அருமையான தகவல்கள்.

வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

சிங்கம் களம் இறங்கிடுச்சே...

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள்ஜி

நன்றி ராஜு. காதல்-கள்ளக்காதல் பிரச்சினை என பல தகவல்கள் வந்தன. தற்கொலை என்றும் சொன்னார்கள். இறுதி தீர்ப்பு தெரியவில்லை.

முரளிகண்ணன் said...

கார்க்கி
\\எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டைம் வந்தது\\

15 நாளில் சன் டிவியில் போடுமளவுக்கு. இதே ஆண்டில் முன்னால் வந்த சங்கமம் 23 நாளீல் சன் டிவியில்.

\\மேலும், அஜித்,விஜய், விக்ரம் என மூவருக்கும் வாழ்நாளின் சிறந்த படங்கள் இந்த வருடம் வெளியானது தனிச்சிறப்பு\\

என்ன சகா விஜய் து ம து மைவிட நல்ல படம் இனி நடிக்க மாட்டாரா?


நன்றி தண்டோரா. விரைவில் மயில்சாமி.

நன்றி மாதவராஜ் சார். அடுத்த பகுதிகள் விரிவாக எழுதுகிறேன்.

முரளிகண்ணன் said...

நன்றி நர்சிம்

நன்றி துபாய் ராஜா

நன்றி நையாண்டி நைனா

கிரி said...

இதில் பாலா மற்றும் சூர்யாவே எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்..பார்ப்போம்.. அதிலும் பாலா டாப்

முரளிகண்ணன் எப்படி இருக்கீங்க? நான் ஊருக்கு வந்து இருந்த போது உங்களை அழைத்து இருந்தேன்..ஆனால் ரிங் போய் கொண்டே இருந்தது ....

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கிரி.

அலைபேசி மின்கலம் அப்போது பழுதடைந்திருந்தது.

சந்திப்பை தவற விட்டு விட்டேனே.

Gokul said...

முரளிக்கண்ணன்,

மீண்டும் மீண்டும் எல்லோரும் சொல்வதே சொல்ல தோன்றுகிறது, எப்படி இவ்வளவு தகவல்களை திரட்ட முடிகிறது ,

" நீங்க பிலிம் நியூஸ் ஆனந்தனோட வாரிசு என்று சொன்னால் அது 'மிகையாகாது' "(கலைஞர் குரலிலேயே படித்துக்கொள்ளவும்!)

Toto said...

Welcome back Murali..

I can easily refer your site for any doubts in Tamil cineme. Pls do continue posting.

-Toto
www.pixmonk.com

பாலா said...

//////அலைபேசி மின்கலம் அப்போது பழுதடைந்திருந்தது. ///////

சார்.. என்ன இது..??? :) :) :) :)

அழகா.. பேட்டரின்னு தமிழ்ல சொன்னா என்னவாம்??

ஆமா.. அது பேட்டரிதானே??

முரளிகண்ணன் said...

நன்றி கோகுல்

நன்றி டோடோ

நன்றி பாலா. அது பேட்டரியேதான்.

thamizhparavai said...

வார்ம் வெல்கம்...
நைஸ் ஆர்ட்டிகிள்...

Bruno said...

மீண்டும் முரளி

வாழ்த்துக்கள் !!

Bruno said...

//திருட்டு விசிடி வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து வெளியானது இந்த வீரப்ப காவியம்.//

:) :) :)

அந்த கால கட்டத்தில் அது போல் பல படங்கள் வந்ததாக ஞாபகம்

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ்பறவை

நன்றி டாக்டர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//"மூக்குத்தி பல்லழகு" பாடலில் விஜயகாந்த் டான்ஸ்-ஐ(!) சிலாகிப்பார்கள் (நெஜமாங்க).//


aamaam corecttu