January 18, 2010

1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை

ஒரே ஆண்டில் சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஐந்துக்கும் மேற்பட்ட பெரு வெற்றிப்படங்களும் 10 வெற்றிப்படங்களும் அமைவது எப்போதாவதுதான் நடைபெறும். 1989ல் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது (அபூர்வ சகோதரர்கள், வருஷம் 16, ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், புதியபாதை, புதுப்புது அர்த்தங்கள், மாப்பிள்ளை, பாண்டி நாட்டுத்தங்கம்.....). அது போல 1996லிம் அப்படி பெரு வெற்றி பெற்ற படங்கள் வந்தன.

1.இந்தியன்
2.அவ்வை ஷண்முகி
3.உள்ளத்தை அள்ளித்தா
4.பூவே உனக்காக
5.காதல்கோட்டை

ஆகிய ஐந்து படங்கள் பெருவெற்றி பெற்றன.

கோகுலத்தில் சீதை, நாட்டுப்புறபாட்டு,கோபாலா கோபாலா, சுந்தரபுருஷன், வான்மதி, காதல்தேசம் போன்ற பல படங்கள் நல்ல வெற்றி பெற்றன.


இந்த ஆண்டில் இரண்டுபேருக்கு பெரிய திருப்புமுனை அமைந்தது. ஒன்று விஜய் (பூவே உனக்காக), பிரகாஷ்ராஜ் (கல்கி).

கவுண்டமனிக்கு இந்த ஆண்டு செமையான அறுவடை. (இந்தியன், அவதார புருஷன்,கோயம்புத்தூர் மாப்ளே, டாட்டா பிர்லா,மேட்டுக்குடி, சேனாதிபதி,ஞானப்பழம்,கட்டப் பஞாயத்து, பூவரசன், மகாபிரபு,பரம்பரை).

பெரிய இயக்குநர்களுக்கு மரண அடி (பாரதிராஜா - அந்திமந்தாரை, தமிழ்செல்வன்: பாலசந்தர் - கல்கி: பாக்யராஜ் - ஞானப்பழம்)


ரஹ்மான் இசையில் இந்தியன்,காதல்தேசம், மிஸ்டர் ரோமியோ மற்றும் லவ்பேர்ட்ஸ் ஆகியவை வந்தன. இந்த நான்கும் முறையே ஏ எம் ரத்னம், கே டி குஞ்சுமோன், ஆர் பி சௌட்த்ரி மற்றும் பிரமிட் நடராஜன் ஆகிய பெருங்கைகளின் தயாரிப்பில் வந்தது. இந்த நால்வரில் ஆர் பி சவுத்ரி மட்டுமே இப்போதும் படம் தயாரிக்கும் நிலையில் உள்ளார். லவ்பேர்ட்ஸ் படம் ரஹ்மான் இசையமைக்க எடுத்துக் கொண்ட நாட்கள் கூட ஓடாமல் அடிவாங்கியது. ஆனால் இதே லைனை வைத்து ராகேஷ் ரோஷன் தன் மகன் ரித்திக் ரோஷனை அறிமுகப்படுத்தி எடுத்த கஹோ நா பியார் ஹை பெருவெற்றி பெற்றது.

ஆர் கே செல்வமணி பினாமியாக டைரெக்ட் செய்த கர்ணன் டைப் படமான ராஜாளி, ராஜ்கிரணுக்கு தோல்விப்பாதை அமைத்துக் கொடுத்த மாணிக்கம் , விஜய்,அஜீத் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே , பிரசாந்த், அஜீத் இணைந்து நடித்து பூஜாபட் தமிழில் அறிமுகமான கல்லூரி வாசல், லிசா ரே தமிழில் அறிமுகமான் நேதாஜி என பல தோல்விப்படங்களும் இந்த ஆண்டில் உண்டு.

விஜயகாந்தை அலெக்சாண்டரும், சரத்குமாரை மகாபிரபுவும் காப்பாற்றினார்கள்.

விஜய்க்கு செல்வா, மாண்புமிகு மாணவன், ராஜாவின் பார்வையிலே மற்றும் வசந்தவாசல் ஆகிய படங்களின் தோல்வியை பூவே உனக்காக சரிகட்டியது .

21 comments:

அத்திரி said...

தல இவ்ளோ நாள் எங்க போயிருந்தீங்க..........

தலைக்கு காதல் கோட்டை ஒரு பெரிய திருப்பு முனை ஆச்சே

tamiluthayam said...

2004 வரை தமிழ் திரையுலகம் நன்றாக தான் இருந்தது. இனி தமிழ் சினிமா குறித்து மலரும் நினைவுகள் தான்.

முரளிகண்ணன் said...

Thanks Aththiri

Thanks tamiluthayam

யுவகிருஷ்ணா said...

வெல்கம் பேக் முரளி!

அவ்வை சண்முகி, 97 தீபாவளியில் வந்ததாக நினைவு. கொஞ்சம் சரிபார்க்கவும்.

முரளிகண்ணன் said...

மிக்க நன்றி லக்கி.

இந்தியன் 96 தேர்தல் முடிந்தவுடனும், அவ்வை ஷண்முகி அதே ஆண்டு தீபாவளியிலும் வெளிவந்தது. மிக விரைவாக படமாக்கப்பட்ட படம்.

இது குறித்து கமல் அளித்த பேட்டி ஒன்றில், சைக்கிள் ஓட்ட பழகுறதுதான் கஷ்டம் பேலன்ஸ் பண்ணிப் பழகியாச்சுன்னா அடுத்து ட்ரை சைக்கிள் ஓட்டுவது ஈஸியா வந்துவிடும் என்று சொன்னார். (இந்தியன் - சைக்கிள், அவ்வை- ட்ரை சைக்கிள்).

யுவகிருஷ்ணா said...

நன்றி முரளிகண்ணன்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாங்க வாங்க முரளி

வெல்கம் பேக் , குட் ஓபனிங்

1996 ல் நான் +2 படித்துக் கொண்டிருந்தேன் . அப்போ வந்த படங்கள் .. படம் பாக்க தியட்டருக்கு போனது ஞாபகத்துக்கு வந்தது ...

எங்க வீட்டுல டேப் ரிக்கார்டர் வாங்கிய சமயம் , பாடல் கேசட் வாங்கி கேட்டது மறக்க முடியாது .

நீங்க சொன்ன அத்தனை படங்களும் சூப்பர்ஹிட் .

முரளிகண்ணன் said...

மீள் வருகைக்கு நன்றி லக்கி.

நன்றி ஸ்டார்ஜான்

அக்பர் said...

வாங்க முரளி,

வழக்கம் போலவே அதிக விவரங்களுடன் ரசனையான சினிமா பார்வை.

நீங்க ஒரு சினிமா நூலகம்.

முரளிகண்ணன் said...

நன்றி அக்பர்

kanagu said...

vaanga anna... romba naal kalichu vandhurukeenga.. :) :)

unga area kulla summa athara vachuteenga.. :)

mettukudi vetripadam illaya???

சங்கர் said...

காதல கோட்டை எப்பிடி

butterfly Surya said...

welcome back..

அடிச்சு ஆடுங்க..

புருனோ Bruno said...

//அவ்வை சண்முகி, 97 தீபாவளியில் வந்ததாக நினைவு. கொஞ்சம் சரிபார்க்கவும்.
//

இல்லை பாஸ்

அது 1996 தீபாவளி தான் ( மிஸ்டர் ரோமியோ போல்)

புருனோ Bruno said...

சிறைச்சாலை எந்த வருடம் வந்தது !

முரளிகண்ணன் said...

கனகு : மேட்டுக்குடி 75 நாள் படம். அப்போது அது ஆவரேஜ்
சங்கர் : காதல் கோட்டை நன்கு ஓடி வசூல் கொடுத்த படம்.

நன்றி பூச்சியார்,

நன்றி டாக்டர்

♠ ராஜு ♠ said...

அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட வர்றவங்களுக்கு அளவுச்சாப்பாடு கொடுக்குறீங்களே தலைவரே..!?

முரளிகண்ணன் said...

Raju - Time constraint. Will be back after some time.

Thanks for your regards.

மோகன் குமார் said...

கலக்கல் தலைவா. தொடர்ந்து எழுதுங்க. இந்த ஆயிரத்தில் ஒருவன் பத்தி பெரிய சண்டையே நடுக்குது. உங்கள மாதிரி ஆள் பாத்துட்டு தீர்ப்பு சொன்னா புண்ணியமா போகும்

பாலாஜி said...

புருனோ Bruno said...
சிறைச்சாலை எந்த வருடம் வந்தது !1996வருடம் வந்தது

இது தாய் பிறந்த தேசம்
நம் தந்தை ஆண்ட தேசம்
இது நாம் வணங்கும் தேசம்
உயிர் நாடி இந்த தேசம்

கவிஞர் அறிவுமதி எழுதியது

Anbazhagan Ramalingam said...

அருமை