January 19, 2010

2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.

70களில் அறிமுகமான (நாயகர்களாக) கமல்ஹாசனும்,ரஜினிகாந்தும் 80,90,1 என 3 தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஸ்டெடியாக இருக்கிறார்கள். 70களின் இறுதியில் வந்த விஜயகாந்தும் இந்த மூன்று தசாப்தங்களில் நின்று காண்பித்து விட்டார். பாக்யராஜ் 80களின் இறுதிவரை நிலைத்து நின்று தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் பீல்ட் அவுட் ஆனார்.

80களில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்தர்,மோகன்,ராமராஜன்,பாண்டியராஜன் ஆகியோர் தொண்ணூறுகளில் பீல்ட் அவுட் ஆனார்கள். கார்த்திக் 90களின் இறுதிவரை நிலைத்தார். பிரபு 90களின் பாதிவரை. முரளியும் 90களின் இறுதிவரை தாக்காட்டினார். சத்யராஜ் நிலைத்து நின்றாலும் மூன்றாம் வரிசை நாயகனாகவே உள்ளார். இதன் இறுதியில் அறிமுகமானவர்களில் இப்பொது வரை ஸ்டெடியாக இருப்பவர் விக்ரம் மட்டுமே. அர்ஜூன்,சரத்குமார் தள்ளாட்டம், பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார்.

90களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி கோடி ரூபாய் சம்பளத்தை முதலில் தொட்ட ராஜ்கிரணும் அந்தப் பத்தாண்டு இறுதிக்குள்ளேயே அமைதியாகி விட்டார். விஜய்,அஜீத் மற்றும் இறுதியில் அறிமுகமான சூர்யாவும் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வாய்ப்புடன் இருக்கிறார்கள். அரவிந்த்சாமி, அப்பாஸ் போன்றோர் அஸ்தமித்தே விட்டார்கள். நெப்போலியன் மந்திரியாகிவிட்டார். மகேந்திரனிடம் பாராட்டுப் பெற்ற பிரபுதேவாவும் நடிகராக பத்தாண்டுகளைத் தாண்ட முடியவில்லை. அருண்விஜய்யை எப்படி சொல்வது என்றே குழப்பமாக உள்ளது.

சரி, இந்தப் பத்தாண்டில் அறிமுகமானவர்களில் யார் யார் அடுத்த இரு பத்தாண்டுகள் வரை நிலைத்திருப்பார்கள்?

1.மாதவன்

அலைபாயுதே, மின்னலே,ரன் போன்ற வெற்றிப்படங்கள், அன்பே சிவம்,ஆய்த எழுத்து,நளதமயந்தி,தம்பி போன்ற வித்தியாச கதாபாத்திரங்கள் என நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றவர். இந்தியில் ரங் தே பசந்தி, 13 பி, த்ரீ இடியட்ஸ் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றவர். இப்போதைக்கு தமிழில் அதிக கவனம் செலுத்தாததால் அடுத்த அரவிந்த்சாமி ஆகிவிடுவாரோ என எண்ணத் தோன்றுகிறது.


2. தனுஷ்

அண்ணனுடையான் அறிமுகத்துக்கு அஞ்சான். ஆனாலும் அடுத்தவர்களின் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றாகி விட்டது. கடைசி நாலு படங்கள் ஹிட். கல்லூரியில் படித்த அல்லது படிக்காத சேட்டை செய்யும் வாலிபன் என்னும் வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான வேடங்கள். உடல் அமைப்பு அப்படி. ஆனால் இப்படியே இருந்தால் எப்படி? உடலைத் தேற்றி பல பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும்படி மாறினால் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிநடை போடலாம்.


3.சிலம்பரசன்


நடிப்பு மட்டுமில்லாமல், இயக்குநர்,பாடகர் என தன்னை நிரூபித்து விட்டவர். இப்போதுதான் கௌதம் மேனன், கே வி ஆனந்த் என பெரிய இயக்குநர்களிடம் அட்டாட்ச் ஆகியுள்ளார். பொடென்ஷியல் உள்ள ஆள் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.

4. ஜெயம் ரவி

அண்ணனைத் தவிர மற்றவர்களின் படங்களில் எடுபடுவதில்லை என்னும் கூற்று தற்போது பேராண்மை மூலம் உடைந்திருக்கிறது. தெலுங்கு பட உலகமும் (ஆந்திராவா? டெலுங்கானாவா?) அண்ணனும் உள்ளவரை அவ்வப்போது ஹிட் கொடுத்து ஓரளவு நிலைத்து நின்று விடுவார். குரல் மட்டும் இன்னும் மெச்சூர் ஆனால் நன்றாக இருக்கும்.

5.விஷால்

இன்னொரு வாரிசு என்றாலும், உதவி இயக்குநராகப் போய் அர்ஜூனின் மாறுபட்ட கோணப் பார்வையால் நடிகரானவர். தொடர்ந்து ஹிட் கொடுத்து இப்போது ஆப் ஆகியுள்ளார். இருண்டு கிடந்த விக்ரமையும், மங்கலாக இருந்த சூர்யாவையுமே பிரகாசமாக்கிய பாலா சும்மா விடுவாரா? திராவிட நிறம் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.


6. ஆர்யா

மறைந்த ஜீவாவின் கண்பட்டு கதாநாயகனான ஆர்யா அடுத்த அப்பாசோ என நினைத்த வேளையில் பாலா மூலம் அகோரியானார். வரும் படங்களை வைத்துத்தான் இவரை கணிக்க முடியும்.

7.ஷாம்

குஷி படத்தில் விஜய்யின் நண்பர் குழாமில் ஒருவராக அறிமுகமானாலும் அப்பட கேமராமேன் ஜீவா மூலம் 12 பி யில் அறிமுகமானார். குறைந்த காலத்திலேயே சிம்ரன்,ஜோதிகா,சினேகா,திரிஷா,மீரா ஜாஸ்மின் போன்ற தேவதைகளோடு நடித்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் கண்பார்வை படவில்லை. இப்போது இரண்டாம் கதாநாயகனாக இவர் நடிக்கும் தில்லாலங்கடியைப் பொறுத்தே இவர் எதிர்காலம்

8. ஜீவா

இன்னொரு வாரிசு. ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசம் காட்டினாலும் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டார். வரும் படங்கள் தான் உரைகல். இவராவது பரவாயில்லை இவர் சகோதரர் ஜித்தன் ரமேஷ் பாவம்.

9. கார்த்தி

பராசக்திக்குப் பிறகு இவ்வளவு ஸ்ட்ராங்காக அறிமுகமான நடிகர் இவர்தான் என்பது இண்டஸ்ட்ரி வாக்கு. நல்ல நடிப்புத் திறமை, பின்புலம். பத்தாண்டு கேரண்டி.

10. சித்தார்த்

பாய்ஸ்,ஆய்த எழுத்து என பெரிய இயக்குநர் படங்கள். கிளிக் ஆகாததால் தெலுங்குக்குப் போய்விட்டார். இங்கு இடமிருக்காது என்பதே தற்போதைய நிலவரம்.

11. பரத்

பாய்ஸில் அறிமுகமானாலும் செல்லமே, காதல் திருப்புமுனை. பேரரசு வரை இறங்கவும் முடியும் கண்டேன் காதலை என இயல்பாக நடிக்கவும் முடியும் என்பது பலம். ஆனால் பட்சி இதெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றே சொல்கிறது.

12. நகுல்

ஷங்கர் செய்ய முடியாததை நாக்க முக்க செய்து விட்டது. ஆனாலும் நீடிப்பது கஷ்டமே.


13. ஜே கே ரித்தீஸ்


சரத்குமார், நெப்போலியன், ராமராஜனுக்கெல்லாம் பல ஆண்டுகள் ஆனது. நாயகனுக்கு ரெண்டே படம் தான் எம்பி ஆகிவிட்டார். அதிமுகவில் இப்படி யெல்லாம் நடக்கும் என்று அங்கலாய்ப்புகள் வேறு. சாம் ஆண்டர்சனை தனியாக விட்டு விட்டு போனதுதான் சோகம்.


14. சுந்தர் சி

இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.

15 சேரன் / தருண்கோபி

முடியல அடுத்த பதிவில தொடருகிறேன்

23 comments:

ஜோ/Joe said...

//இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார். //
:))))))

முரளிகண்ணன் said...

Thanks Joe

தண்டோரா ...... said...

கருணாஸ் கூட ஹீரோவாக நடித்திருக்கிறார் முரளி.

முரளிகண்ணன் said...

தலைவா அதுக்குத்தான் உஷாரா தொடர்கிறேன்னு போட்டு வச்சேன். அடுத்த பார்ட்டுல கவர் பண்ணிடுவேன்.

குசும்பன் said...

15 சேரன் / தருண்கோபி

குமுறி குமுறி முதுகை காட்டிக்கிட்டு அழ எங்க தானே தலைவன் சேரனை தட்டிக்க யாரும் இருக்காங்களா?:)

அக்பர் said...

இந்த முறை நையாண்டி தூக்கலாக இருந்தது முரளி.


அருமை.

துபாய் ராஜா said...

வழக்கம் போல அருமை.

D.R.Ashok said...

இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.

இதான் எனக்கும் புடிச்சது.. முரளி

KarthigaVasudevan said...

//பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார். //
//அரவிந்த்சாமி, அப்பாஸ் போன்றோர் அஸ்தமித்தே விட்டார்கள். //

// சுந்தர் சி
இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.//

//சேரன் / தருண்கோபி

முடியல அடுத்த பதிவில தொடருகிறேன் //

சரி காமெடி முரளிக்கண்ணன்.முடியலைனாலும் அடுத்த பதிவையும் தொடருங்கள்.சிரிச்சு முடியலை .

kanagu said...

/*தெலுங்கு பட உலகமும் (ஆந்திராவா? டெலுங்கானாவா?)*/

kalakkal :D :D

sundhar.c kum, Ritheesh-kum vandha commentugal topo topu.. :) :) kalakkunga anna.. :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான அறிமுகங்கள்

இதில் ஜொலித்தது சில பேர் மட்டுமே

Cable Sankar said...

சுந்தர் சிக்கான கமெண்ட் சூப்பர்..

செந்தில் நாதன் said...

//இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.
//

ஹி ஹி

♠ ராஜு ♠ said...

\\பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார்.\\\

அது ஒரே ஒரு கிரகம்தான்..!

♠ ராஜு ♠ said...

1.மாதவன்- கட்டாயம் அடுத்த அரவிந்த்சாமிதான்.

2. தனுஷ்-100% கேரண்டி.

3.சிம்பு-ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது.

4.ரவி-ராஜா இருக்க பயமேன்..?

5.விஷால்-பாலாவுக்கு முன்னாடி சன் பிக்ஸர்ஸ் கடைக்கண் பார்த்தாச்சு..! கியாரண்டி.

6.ஆர்யா-பாஸ்கரனில் பார்ப்போம்..!

7.ஷாம்-தெலுங்கு ”கிக்” நல்லா போச்சோமே தலைவரே..!

8.ஜீவா-எதிர்காலம் உண்டு

9.ஜித்தன் ரமேஷ்-காமெடி பீஸ்.

10.கார்த்தி-கொஞ்சம் மதுரைய விட்டு வெளிய வாங்க பாஸு.

11.சித்தார்த்-கோதாவரி, கிருஷ்ணா நதிக் கரையோரம் தஞ்சமாகிவிட்டார்.

12.பரத்-அடுத்தும் பேரரசாமே..(இசையமைப்பாளரும் அவரே..)

13. நகுல்-இவருக்கு மட்டும் எப்ப்டி வலுவான் தயாரிப்பாளர்கள் கிடைக்குறாங்க..? (கல்பாத்தி)

14.ஜே.கே.ஆர்-நோ கமெண்ட்ஸ்.

15.சுந்தர்.சி-குருசிஷ்யன் தேறிரும்.

16.சேரன்/தருண் பார்க்கலாம்.

ஜோ/Joe said...

//ஆனால் பட்சி இதெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றே சொல்கிறது//

பரத் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு நடிகர் ..சமீபத்தில் அவரின் படத்தேர்வில் சறுக்கல்.

ஜோ/Joe said...

//நாயகனுக்கு ரெண்டே படம் தான் எம்பி ஆகிவிட்டார்//
தேர்தலில் போட்டியிட்ட போது பரபரப்பாக பேசப்பட்டார் ..எம்.பி.ஆன பிறகு பேச்சு மூச்சே இல்லையே!

மோகன் குமார் said...

தல இந்த லிஸ்டில் JKரித்தீஷ் எல்லாம் சேக்கணுமா என்ன?

அதிஷா said...

சசிக்குமார்,ஜெய் பத்தி ஒன்னும் சொல்லலியே!

அதி பிரதாபன் said...

அருமை அண்ணே.

//மோகன் குமார் said...
தல இந்த லிஸ்டில் JKரித்தீஷ் எல்லாம் சேக்கணுமா என்ன?//
பிரச்சனை ஆயிரும்...

அதி பிரதாபன் said...
This comment has been removed by the author.
ஜெட்லி said...

தலைவரே...சூப்பர்......
ஈரம் ஆதி பத்தி கொஞ்சம் சொல்லுங்க.....
அப்புறம் சிவகிரி பத்தி சொல்லவே இல்லை!!

சென்ஷி said...

கடைசி மூணு எக்சலண்ட் :)